PDA

View Full Version : கல்லூரி பிரிவு உபசார விழா -



muthuvel
13-01-2010, 08:43 AM
மறுபிறவி பிறக்க வேண்டும் ,
அதில் ,உன்னோடு படிக்க வேண்டும் ,
உன் தோழமையை நெஞ்சில் சுமக்க வேண்டும் ,
பொய் இல்லாத நட்பு ,நமக்குள் வேண்டும் ,
மன நிறைவோடு வாழவேண்டும் ,
நிறைந்த செல்வம் நாம் பெறவேண்டும் ,
நிறை கொண்ட பிள்ளைச் செல்வம் வேண்டும்
நீண்ட ஆயுள் வரம் வேண்டும் ,
பாரினில் உள்ளோர் நம்மை போற்ற வேண்டும் ,
உனக்கு முன்னால் நான் இறக்க வேண்டும் ,
உன் விழிகள் ,எனக்காக கண்ணீர் சிந்த வேண்டும் ,

jayashankar
13-01-2010, 09:14 AM
ஏனுங்க, இந்த தலைப்பில் இருக்கும் கல்லூரி வாழ்க்கைக் கல்லூரிதானே...

அது என்னங்க அப்புடி எழுதிப்பூட்டீங்க...

உனக்கு முன்னாடி நான் சாவனும் அதப்பாத்து நீ அழுவனும்னு.

இவ்வளவு அன்பச் சொன்ன நீங்க இப்படி அவங்கள அழ வைக்கலாமா...

இருந்தாலும் குறைந்த வரிகளில் நிறைவான கவிதையை படைத்துள்ளமை பாராட்டுக்குரியது. ஒருவன் தன் அடுத்த ஜென்மம் எப்படியிருக்க வேண்டும் என்பதை மிக அழகாக அதிக சுயநலத்தோடு கொடுத்திருக்கீங்க முத்து...


நன்றிங்க

muthuvel
28-01-2010, 02:39 AM
பாராட்டுக்கு நன்றி