PDA

View Full Version : ஒரு ஈராக்கிய கதறல்.....!!!சிவா.ஜி
12-01-2010, 11:13 AM
எங்கள் நாட்டில்........

வாழைத்தோப்புகள் மட்டுமே இருந்திருந்தால்
வல்லரசு வல்லூறுகள்
வட்டமிட்டிருக்குமா.....
மக்களைக் கொல்ல
திட்டமிட்டிருக்குமா...?

எரி எண்ணை இருப்பது
எங்கள் குற்றமா?
எண்ணைவள நாட்டில்
என்னைப் பிறக்க வைத்த இறைவா...
எண்ணையைக் கண்டவர்கள்
என்னையும் ஏன் கண்டார்கள்...அவர்களின் பணப்பசிக்கு
என்னை ஏன் உண்டார்கள்....?


எண்ணைக் குழாய்களை எடுத்துக் கொள்ளுங்கள்
ஏன் எங்கள் ரத்தக்குழாய்களை அறுத்துக் கொல்கிறீர்கள்?
வீம்பாய் உள்நுழைந்து
விளைநிலங்களையெல்லாம், பிணங்கள்
விழும் நிலங்களாய் ஏன் மாற்றினீர்கள்?

உருவாக்கிய துப்பாக்கிகள்
துருவேறாமல் இருக்கவா
உபயோகிக்கிறீர்கள். எங்கள்
உயிரைப் பறிக்க.....?

இன்று நீங்கள் கொன்று குவித்த
எங்கள் சடலங்களும்
மண்ணோடு மக்கி
எண்ணையாகும் எதிர்காலத்தில்
அன்றும் வருவீர்களா ஆக்ரமிக்க?

குண்டுவெடிப்பு நிகழ்கிறது நித்தம்
நிலமெல்லாம் எம் மக்களின் ரத்தம்....

ரத்தக்குளியல் எங்களோடு போகட்டும்
மொத்தமாய் எங்களை எரித்துவிடுங்கள்
மக்கிப்போக உடல் இருக்காது...வருங்காலத்திலாவது
மக்கள் வாழ பயமிருக்காது!

jayashankar
12-01-2010, 11:27 AM
ஆஹா மிகவும் அருமையான கவிதை சிவா..

வாவ்...

படித்தவுடன் அசந்துதான் போனேன். ஒரு நாட்டின் தன்மையால், மற்ற நாடுகளின் ஊடுறுவலால், மக்கள் படும் அவஸ்தையை மிகவும் அழுத்தமான வரிகளை வாரியிறைத்து அறை கூவியிருக்கின்றீர்கள்.


வாழைத்தோப்புகள் மட்டுமே இருந்திருந்தால்
வல்லரசு வல்லூறுகள்
வட்டமிட்டிருக்குமா.....
மக்களைக் கொல்ல
திட்டமிட்டிருக்குமா...?


எரி எண்ணை இருப்பது
எங்கள் குற்றமா?
எண்ணைவள நாட்டில்
என்னைப் பிறக்க வைத்த இறைவா...
எண்ணையைக் கண்டவர்கள்
என்னையும் ஏன் கண்டார்கள்...
அவர்களின் பணப்பசிக்கு
என்னை ஏன் உண்டார்கள்....?


ரத்தக்குளியல் எங்களோடு போகட்டும்
மொத்தமாய் எங்களை எரித்துவிடுங்கள்
மக்கிப்போக உடல் இருக்காது...வருங்காலத்திலாவது
மக்கள் வாழ பயமிருக்காது!

இதை விட சிறப்பாக அம்மக்கள் மனங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்க முடியாது.

அருமையான கவிதை. வாழ்த்துக்கள் சிவா.

இப்படியே அமர்களமான கவிதைகளைப் படைக்க என் வாழ்த்துகள்

கா.ரமேஷ்
12-01-2010, 11:47 AM
வார்த்தைகள் இல்லை சொல்வதற்க்கு... உணர்வுகளை கோபத்தோடு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் மிகுந்த பாராட்டுக்கள்..

பா.ராஜேஷ்
12-01-2010, 11:53 AM
வழக்கம் போல் அசத்தி விட்டீர்கள் அண்ணா. தொடர்ந்து அசத்துங்கள் :)

சுகந்தப்ரீதன்
12-01-2010, 12:16 PM
வல்லூறுகள் வட்டமிட எண்ணெய் தேசமாய் இருக்க வேண்டுமென்பதில்லை... பனைக்காட்டிற்க்கும் பறந்து வருவார்கள் அவர்களுக்கு அங்கே ஆதாயமிருந்தால்..!!

ஒரு பக்கம் சமாதானம் மற்றும் மனிதாபிமானம்... மறுபக்கம் ஆயுத உற்பத்தி மற்றும் உயிர் பறிப்பு...!!

மறுத்துபோனது மண் மட்டுமல்ல... மனிதர்களின் மனங்களும்தான்..!!

உங்களின் எல்லையற்ற நேசத்தை உணர்த்துகிறது உங்கள் கவிதை...!! நன்றி..!!

சிவா.ஜி
12-01-2010, 12:24 PM
நன்றி ஜெய். ஒரு மின்னஞ்சலில், 2009 நிகழ்வுகளின் புகைப்பட தொகுப்பில் அந்த ஈராக்கிய இளம்பெண்ணின் புகைப்படம் பார்த்தேன். மனது வலித்தது. குண்டுவெடிப்பில் உயிரிழந்த அந்த உயிரைப் பார்த்த விளைவில் விளைந்த வரிகள் இவை.

சிவா.ஜி
12-01-2010, 12:26 PM
கோபத்தைவிட ஆற்றாமைதான் ரமேஷ் அதிகமாய் இருக்கிறது. அந்த ஆற்றாமையை சற்றாவது காட்ட சில வரிகள்.


மிக்க நன்றி ரமேஷ்.

சிவா.ஜி
12-01-2010, 12:29 PM
நன்றி ராஜேஷ்.

சிவா.ஜி
12-01-2010, 12:32 PM
வல்லூறுகள் வட்டமிட எண்ணெய் தேசமாய் இருக்க வேண்டுமென்பதில்லை... பனைக்காட்டிற்க்கும் பறந்து வருவார்கள் அவர்களுக்கு அங்கே ஆதாயமிருந்தால்..!!

ஒரு பக்கம் சமாதானம் மற்றும் மனிதாபிமானம்... மறுபக்கம் ஆயுத உற்பத்தி மற்றும் உயிர் பறிப்பு...!!

மறுத்துபோனது மண் மட்டுமல்ல... மனிதர்களின் மனங்களும்தான்..!!

உங்களின் எல்லையற்ற நேசத்தை உணர்த்துகிறது உங்கள் கவிதை...!! நன்றி..!!

உண்மைதான் சுபி. ஆதாயமிருந்தால் எங்கு வேண்டுமானாலும் தங்கள் மரண*ச்சிறகை விரிக்கும் வல்லூறுகள்தான் அவர்கள்.

மரத்துப்போன மனங்கள்....கறுப்பர் வந்தாலும், வெளுத்தோர் வந்தாலும் மாறாது ஒருநாளும்.

நன்றி சுபி.

Ravee
12-01-2010, 03:28 PM
"நீ ஆசையாய் வளர்த்தாய் என்னை
அந்தோ அறியேனே என்னை
பலி கொடுப்பாய் என்று"

இது தானே ஈராக்கின் சரித்திரம்
ஈரானுக்கேதிறாய் அவர்களை
வீழ்த்த ஈராக் தேவைப்பட்டது ஒரு நாள்.

பின்னர் தோழன் துரோகி ஆகிப்போனான்
வெள்ளை மன்றத்தில் என்றும் ஒரே தீர்ப்பு
"காரியம் ஆனதும் கருவேப்பிலையை தூக்கி ஏறி"

அதுதான் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு காரணம்
இந்த விசயத்தில் பின்லேடன் புத்திசாலி
வரம் கொடுத்தவன் தலையில் கைவைத்தவன்.

அமரன்
12-01-2010, 07:20 PM
ஆதிக்க வெறி பிடித்த சுயநல ஓநாய்களிடம் சிக்கிய ஆடுகளின் அவல ஓலம் கேட்டு நெஞ்சு நடுங்கும் உங்களைப் போன்றவர்களால்த்தான் மனிதம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இது எவரிடம் இல்லை. தனிமனிதனில் தொடங்கி பாரிய கட்டமைப்புகள் வரை எங்கும் வியாபித்துள்ளது. தனிமனித ஒழுக்கம் நெறிப்படுத்தப்பட்டால் எல்லாம் சுபமாகும்.

எண்ணையை எடுத்துப் போ என்னை உயிருடன் விட்டுப்ப் போ என்றவள் மன்றாட்டம் எக்காளச் சிரிப்பொலியில் கரைந்துதான் போகின்றது.

கவிதை வடிப்பதைக் காட்டிலும் என்னிடமும் உங்களிடமும் செய்ய எதுவுமில்லைச் சிவா - நாம் சரியாக இருப்பதைத் தவிர.

பாராட்டுகள் பாஸ்.

சிவா.ஜி
16-01-2010, 06:42 AM
மிகச்சரியான கருத்து அமரன். நாம் சரியாய் இருப்பததைத் தவிர நம்மால் என்ன செய்யமுடியும்...சாமான்யர்களாய்....!

ரொம்ப நன்றிங்க பாஸ்.

அக்னி
18-01-2010, 07:40 AM
வாழைத்தோப்புகள் மட்டுமிருந்திருந்தால்,
வல்லூறுக்குஞ்சுகள் வந்திருக்கும்.

இது வல்லரசுகளின் சூதாட்டம்...

நாடுகளின் வலிமைக்கேற்ப, வளமைக்கேற்ப
அரங்கேறும் சதிராட்டம்...

வெற்றி பெறப்போவது யாருமில்லை.
ஆனால், வெற்றி உருவாக்கப்படும்...

எக்காளமிடும்
இந்த வெற்றிக்குரல்களுக்குள்,
அவலங்களும், இழப்புக்களும்
அடக்கம் செய்யப்பட்டுவிடும்.

உயிரிழப்பும் பொருளிழப்பும்
உலகத்தையே புரட்டிப்போடும்.
அதன் தாக்கத்தைத்தான்
இப்போது அனுபவிக்கின்றது உலகம்...

ஒரு நாட்டின் வீழ்ச்சி,
இன்னுமொரு நாட்டிற்கு எழுச்சியாக அமைந்ததா...
என்றால் இல்லை...

உலகின் பொருளாதாரமே
ஆட்டம் கண்டது...

இதிலிருந்து மீளவும்
வல்லூறுகள் தேடுவது
இன்னுமொரு வளமையான நாட்டை...
என்பது,
செய்திகள் சொல்லும் செய்தி...

கதறல்களால் பயனேதும் இல்லை.
வல்லூறுகள் தாமாய்த்தான் நிறுத்தவேண்டும்
தம் குதறல்களை...

பாராட்டுக்கள் சிவா.ஜி...

சிவா.ஜி
18-01-2010, 07:52 AM
இருக்கும் பொருளாதாரம் இன்னும் மேம்பட, வல்லரசு வல்லூறுகள் நாடுகளைக் குதறுகின்றன....ஆனால்....ஆட்டம் கண்டுவிட்ட பொருளாதாரத்தைப் பார்த்தும், மீண்டும் இன்னொரு நாட்டைக் குறிவைக்கின்றன....

அருமையான வரிகள் அக்னி. வல்லூறுகள் வாழைத்தோப்பு மட்டுமிருந்தாலும் வரத்தான் செய்யும். ஆக்ரமிப்பு ஆசை, வெறியாய் மாறிவிட்ட நிலையில் வேறென்ன செய்வார்கள்.

நன்றி அக்னியாரே....

விக்ரம்
18-01-2010, 08:13 AM
கவிதை ரொம்ப, ரொம்ப அருமையா இருக்கு சிவாண்ணா.....


பின்லேடன் புத்திசாலி
வரம் கொடுத்தவன் தலையில் கைவைத்தவன்.
பின் லேடனும், அல்-ஜசிரா தொலைக்காட்சியும் புத்திசாலிகளல்ல..
வல்லரசுக்கு தேவைப்படும்போதெல்லாம் பயன்படுத்தும், சாவிக் கொத்து.


சதாம் உசேன் வீழ்ச்சிக்கு காரணம்
வல்லரசு மட்டுமே காரணமில்லை. அதன் அடிமைகளான அண்டை நாட்டு ராஜாக்கள்.

இளசு
19-01-2010, 07:42 PM
பிறர் வலியுணர்ந்து எழுத
மனம் விட்டு மனம் பாயும்
கவீந்திரம் கற்றிருக்க வேண்டும்..

அது அத்துபடியானபடியால்
இப்படி எழுத வாய்த்திருக்கிறது..


சிவாவுக்கு என் அன்பு..


அக்னியின் கவிதையூட்டம் இக்கவிதையின் வெற்றிக்கு பளிச்-சான்று!

நேசம்
20-01-2010, 11:18 AM
சிவா அண்ணா நீண்ட நாளைக்கு பிறகு உங்கள் கவிதை கண்ட போது மகிழ்ச்சியை விட ஈராக் மக்களின் துயரம் தான் கண் முன்னாள் வருகிறது.அந்தளவுக்கு உங்கள் வரிகள் அமைந்துள்ளன

சிவா.ஜி
20-01-2010, 02:02 PM
மிக்க நன்றி விக்ரம்....நீங்கள் ரவீக்கு சொன்னவை முற்றிலும் உண்மை.

சிவா.ஜி
20-01-2010, 02:07 PM
மிக்க நன்றி இளசு. இந்த வலிமையான வரிகள் நிறைந்த பின்னூட்டத்திற்காகத்தான் மன்றமே ஏங்கி கிடக்கிறது.....

கங்கணச் சூரியன் போல் அவ்வப்போது மறைந்துவிடாமல்.....நித்தம் வரும் சூரியனைப்போல.... வந்து வெளிச்சம் கொடுங்கள் அன்பு இளசு.

சிவா.ஜி
20-01-2010, 02:08 PM
உண்மைதான் நேசம். அந்த மக்களின் துயரம்தான் வலியைத்தருகிறது.

நேசம்
21-01-2010, 07:00 AM
வெற்றி பெறப்போவது யாருமில்லை.
ஆனால், வெற்றி உருவாக்கப்படும்...

எக்காளமிடும்
இந்த வெற்றிக்குரல்களுக்குள்,
அவலங்களும், இழப்புக்களும்
அடக்கம் செய்யப்பட்டுவிடும்.

..

நிதர்சனமான வரிகள் அக்னிஜி.சிவா அண்ணாவின் வரிகள் துயரத்தை கூறுகிறது என்றால் உங்கள் வரிகள் வல்லரசுவின் அக்கிரமத்தை சொல்கிறது.பாரட்டுகள்

Akila.R.D
21-01-2010, 11:00 AM
நெஞ்சை உருக்கும் கவிதை...

அக்னி
21-01-2010, 11:44 AM
பின்னூட்டத்தையும் தவறாது படித்துப் பாராட்டும் இளசு அண்ணலுக்கும்,
நேசம் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

கலையரசி
21-01-2010, 01:02 PM
படித்து முடித்தவுடன் மனதில் ஏதோ பாரம் ஏற்றி வைத்தாற் போல் ஓர் உணர்வு!
'குண்டுவெடிப்பு நிகழ்கிறது நித்தம்
நிலமெல்லாம் எம் மக்களின் ரத்தம்.... '
அருமையான வரிகள்.
ஈராக்கிய கதறல் மனதை நெகிழ்ச்சியுற செய்து விட்டது.

சிவா.ஜி
21-01-2010, 01:45 PM
நன்றி அகிலா. புதியவராயினும், கவிதைகளில் உங்களுக்குள்ள ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். உங்கள் படைப்புகளையும் விரைவில் காண ஆவல்.

சிவா.ஜி
21-01-2010, 01:48 PM
பின்னூட்டத்தையும் தவறாது படித்துப் பாராட்டும் இளசு அண்ணலுக்கும்,
நேசம் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

இது நமது மன்றத்துக்கே உள்ள தனிச்சிறப்பு அக்னி. அதிலும் இளசுவைப் பற்றி சொல்லவேண்டுமா?

சில சமயங்களில் பதித்த கவிதைக்காக இடும் பின்னூட்டக் கவிதை அதனினும் வலிமையாய் இருக்கும். உங்கள் பின்னூட்டக் கவிதைகள் அனைத்துமே அந்த ரகம்தான். படைப்புகளுக்கு பெருமையூட்டும் கவி எழுதும் உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.

நன்றி திறனாய்வு புலியே.

சிவா.ஜி
21-01-2010, 01:49 PM
மிக்க நன்றி கலையரசி அவர்களே. எந்த நாடாயிருந்தாலென்ன....பாதிக்கப்படுபவர்கள், பரிதாபத்துக்குரிய அப்பாவி மக்களே எனும்போது அவர்களின் வலி உணர முடிகிறது.

அக்னி
21-01-2010, 04:16 PM
இது நமது மன்றத்துக்கே உள்ள தனிச்சிறப்பு அக்னி. அதிலும் இளசுவைப் பற்றி சொல்லவேண்டுமா?
ஆமாம் சிவா.ஜி...
இது நம் மன்றத்தின் தனித்துவம்.

இளசு அண்ணாவின் வேகம் என்னை எப்போதுமே வியக்க வைப்பதுண்டு.
அண்ணல் வந்தாலே, மன்ற முகப்பில் புதியப் பதிவுகளில் அவர் பெயர்தான் அதிகமாக ஒளிரும்.
எல்லாப் பதிவுகளுமே மேலோட்டமான பாராட்டுக்களாக அன்றி, ஆழ்ந்து அவதானித்து பதிவுசெய்யப்படுவது, அவருக்கேயுரிய தனிச்சிறப்பு.


சில சமயங்களில் பதித்த கவிதைக்காக இடும் பின்னூட்டக் கவிதை அதனினும் வலிமையாய் இருக்கும். உங்கள் பின்னூட்டக் கவிதைகள் அனைத்துமே அந்த ரகம்தான். படைப்புகளுக்கு பெருமையூட்டும் கவி எழுதும் உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.
உங்கள் நிறைந்த பாராட்டுக்கு நான் அருகதையுடையவனாகில்,
அத்துணை பெருமையும் மன்றத்துக்கும், மன்ற உறவுகளுக்குமே உரித்தாகும்.

என் கையெழுத்து எப்போதும் இதற்குக் கட்டியம் கூறி நிற்கும்.

நன்றி சிவா.ஜி...

இன்பக்கவி
23-01-2010, 02:10 PM
எங்கள் நாட்டில்........

வாழைத்தோப்புகள் மட்டுமே இருந்திருந்தால்
வல்லரசு வல்லூறுகள்
வட்டமிட்டிருக்குமா.....
மக்களைக் கொல்ல
திட்டமிட்டிருக்குமா...?

எரி எண்ணை இருப்பது
எங்கள் குற்றமா?
எண்ணைவள நாட்டில்
என்னைப் பிறக்க வைத்த இறைவா...
எண்ணையைக் கண்டவர்கள்
என்னையும் ஏன் கண்டார்கள்...அவர்களின் பணப்பசிக்கு
என்னை ஏன் உண்டார்கள்....?


எண்ணைக் குழாய்களை எடுத்துக் கொள்ளுங்கள்
ஏன் எங்கள் ரத்தக்குழாய்களை அறுத்துக் கொல்கிறீர்கள்?
வீம்பாய் உள்நுழைந்து
விளைநிலங்களையெல்லாம், பிணங்கள்
விழும் நிலங்களாய் ஏன் மாற்றினீர்கள்?

உருவாக்கிய துப்பாக்கிகள்
துருவேறாமல் இருக்கவா
உபயோகிக்கிறீர்கள். எங்கள்
உயிரைப் பறிக்க.....?

இன்று நீங்கள் கொன்று குவித்த
எங்கள் சடலங்களும்
மண்ணோடு மக்கி
எண்ணையாகும் எதிர்காலத்தில்
அன்றும் வருவீர்களா ஆக்ரமிக்க?

குண்டுவெடிப்பு நிகழ்கிறது நித்தம்
நிலமெல்லாம் எம் மக்களின் ரத்தம்....

ரத்தக்குளியல் எங்களோடு போகட்டும்
மொத்தமாய் எங்களை எரித்துவிடுங்கள்
மக்கிப்போக உடல் இருக்காது...வருங்காலத்திலாவது
மக்கள் வாழ பயமிருக்காது!

உள் அர்த்தம் இல்லாமல்
ஒரு நாடும் உதவுவது இல்லை..
ஓடி வந்து உதவுவது
உன்னையே உன் நாட்டை விட்டு விரட்டும் தந்திரமோ??
கோடி கோடியாய் நிவாரண நிதி
பல மில்லியன்களை அள்ளுவதற்காக இருக்குமோ??

இன்று நீங்கள் கொன்று குவித்த
எங்கள் சடலங்களும்
மண்ணோடு மக்கி
எண்ணையாகும் எதிர்காலத்தில்
அன்றும் வருவீர்களா ஆக்ரமிக்க?
கண்ணீர் வர வைக்கும் வரிகள்

அருமையான கவிதை..
தாமதமாய் ஒரு வாழ்த்து...
நன்றிகள்..

சிவா.ஜி
23-01-2010, 02:23 PM
உண்மைதான் இன்பக்கவி...ஆதாயம் இல்லாமல் வல்லரசுகள் ஐந்து காசு கூட உதவமாட்டார்கள்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி.