PDA

View Full Version : வீடியோ கட்டர் .



நூர்
12-01-2010, 05:19 AM
வீடியோ கட்டர்
~~~~~~~~~~


வீடியோ காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அல்லது திரைப்படங்களை ரசிக்கையில், சில காட்சிகளை மட்டும் தனியே ஒரு பைலாக எடுத்து வைத்தால் நல்லது என்று எண்ணுவோம்.

குறிப்பாக ஒரு நடனக் காட்சி அல்லது காமெடி நம்மைக் கவரலாம். அப்போது எப்படி ஒரு குறிப்பிட்ட அளவில் உள்ள காட்சியை மட்டும் தனியே பிரித்து பைலாகக் கொள்வது என்ற பிரச்சினை உங்களுக்கு ஏற்படும்.

இந்த பிரச்சினயைத் தீர்க்க வீடியோ கட்டர் http://www.freevideocutter.com/ என்ற புரோகிராம் இலவசமாக என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்த பின் புரோகிராமினை இயக்கவும்.

பின் "Open Video" என்ற கட்டளையைக் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் வீடியோ பைலைத் தேர்ந்தெடுக்கவும். இந்த புரோகிராம் அந்த வீடியோவின் பார்மட், பிட் ரேட், பிளே ஆக எடுத்துக் கொள்ளும் நேரம் ஆகியவற்றைப் படித்தறிந்து, வீடியோ தம்ப்நெயில் படங்களை ஸ்லைடுகளாக உருவாக்கும்.

ட்ரேக் பாரில் இடது பக்கம் எந்த ஸ்லைடிலிருந்து கட் செய்திட வேண்டும் என்பதனைக் குறிக்கவும். வலது பக்கம் முடிந்திடும் ஸ்லைடைத் தேர்ந்தெடுக்கவும். பின் சேவ் செய்திட விரும்பும் பார்மட்டைத் தேர்ந்தெடுக்கவும். பின் சேவ் வீடியோ கட்டளை கொடுக்கவும். MPEG4, DivX, MP3, FLV, WMV என்ற பார்மட்கள் அனைத்தையும் இது கையாள்கிறது.

நீங்கள் பதிய விரும்பும் பார்மட்டினையும் இதில் முடிவு செய்திடலாம். பின் நீங்கள் குறிப்பிடும் பைல் பெயரில், தேர்ந்தெடுத்த பார்மட்டில் வெட்டப்பட்ட வீடியோ காட்சி பைலாகக் கிடைக்கும். ஆடியோ மட்டும் வேண்டும் என்றாலும், அதனை எம்பி3 பைலாக சேவ் செய்திடலாம்.

நன்றி.தினமலர்.11/01/10

சிவா.ஜி
12-01-2010, 05:38 AM
உபயோகமான தகவலுக்கும், தளத்தின் முகவரிக்கும் மிக்க நன்றி நூர்.

சரண்யா
12-01-2010, 06:55 AM
நன்றிகள் நூர் அவர்களே...

jayashankar
12-01-2010, 10:10 AM
மிக்க நன்றி நூர் அவர்களே..

மிகவும் பயனுள்ள மென்பொருள்...

ஆர்.ஈஸ்வரன்
18-01-2010, 09:30 AM
உபயோகமான தகவலுக்கும், தளத்தின் முகவரிக்கும் மிக்க நன்றி

ஜனகன்
18-01-2010, 11:06 AM
கணணி சம்பந்த மான புதிய முறைகளை மன்றத்தில் அறிமுகம் செய்து எங்களை ஊக்குவிப்பதில் நிகரற்றவர். பகிர்வுக்கு நன்றி நூர்.

நூர்
18-01-2010, 12:07 PM
கருத்திட்ட அனைவருக்கும் நன்றி


கணணி சம்பந்த மான புதிய முறைகளை மன்றத்தில் அறிமுகம் செய்து எங்களை ஊக்குவிப்பதில் நிகரற்றவர். பகிர்வுக்கு நன்றி நூர்.

நன்றி. இது ரொம்ப ஓவர். எங்கேயோ படிக்கும் ,எனக்கு பிடித்த விஷயத்தை இங்குபதிவு இடுகின்றேன். அவ்வளவுதான்.

வெற்றி
18-01-2010, 01:22 PM
நன்றி. இது ரொம்ப ஓவர். எங்கேயோ படிக்கும் ,எனக்கு பிடித்த விஷயத்தை இங்குபதிவு இடுகின்றேன். அவ்வளவுதான்.

விடுங்க நூர்..நம்ம உறவுகள் எப்பவுமே இப்படி தான்.. ரொம்ப புகழுவாங்க,,, (இது போல் ஒன்றை தேடிக்கொண்டு இருந்தேன் தந்தமைக்கு நன்றி என நான் சொல்லவா ? வேண்டாமா ??:D:D:D:D )

sunson
23-01-2010, 02:57 PM
வீடியோ கட்டர் – சாப்ட்வேர் மிகவும் அருமையாக இயங்குகிறது. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

தங்கவேல்
27-02-2010, 12:17 PM
நூர், லேட்டாக வந்து விட்டேன். சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீட்டு விழா வீடியோவில் ஒரு பகுதியை கட் செய்ய எத்தனையோ விதமான சாஃப்ட்வேர் பயன்படுத்தியும் முடியவில்லை. உங்களின் இந்தப் பதிவினைப் பார்த்ததும் அன்றைக்கு அழித்த மணித்துளிகள் நினைவுக்கு வருகின்றன. திரும்பி வரவா போகின்றன அவைகள்...?

reader
01-03-2010, 07:28 AM
தங்களின் இந்த உதவிக்கு நன்றி

thanemiya_m
30-11-2010, 06:14 AM
நன்றி. மேலும் பல தகவல்களை அளியுங்கள்

g.r.senthil kumar
10-08-2011, 12:36 PM
நன்றி நூர் ,மிக்க நன்றி

vasishta
15-12-2011, 04:56 AM
சரியான வீடியோ கட்டர் கிடைக்காமல் தேடி அலைந்து... நம் தமிழ் மன்றத்தை திறந்தால் அட அருமையான வீடியோ கட்டர். நன்றி நூர்.