PDA

View Full Version : அதிக சந்தோஷமே தூக்கத்தில் தான் : ஆய்வில் தகவல்



muthuvel
10-01-2010, 07:10 AM
ஒருவரின் வாழ்க்கையில், இரவு நேரம் நன்றாக தூங்குவதே அதிகளவு சந்தோஷத்தை அளிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த 3,000 பேரிடம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில், ஒருவரின் வாழ்க்கையில் அதிகளவு சந்தோஷம் தரும் விஷயம் எது என்று கேட்கப்பட்டது. இதில், ஒரு நாளின் நெருக்கடிகள் அனைத்தையும் மறந்து இரவு நன்றாக தூங்கி, மறுநாள் மிகவும் புத்துணர்ச்சியுடன் எழுந்திருப்பதே அதிகளவு சந்தோஷத்தை தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பாக்கெட்டில் எப்போதும், பணம் இருப்பது அதிக சந்தோஷத்தை தரும் என, சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.




இதுகுறித்து, டெலிகிராப் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி: வாழ்க்கையில் அதிக சந்தோஷத்தை தருவது எது என்ற கேள்விக்கு, இரவு நன்றாக தூங்குவது என்பது முதலிடத் தையும், பாக்கெட்டில் பணம் இருப்பது இரண்டாம் இடத்தையும், படுக்கையில் துணையை கட்டிப்பிடிப்பது என்பது மூன்றாவது இடத்தையும், அழுகையுடன் சிரிப்பது நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. இவ்வாறு அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பிரிட்டனை சேர்ந்த சூப் நிறுவனத்தை சேர்ந்த ராப் ஸ்டாசி என்பவர் கூறுகையில்,"ஒரு நாள் முழுவதும் கடினமாக உழைத்த பின், படுக்கைக்கு சென்று ரிலாக்ஸ் செய்வதால் கிடைக்கும் உணர்வே அதிகளவு சந்தோஷத்தை கொடுக்கும்.

jayashankar
10-01-2010, 08:22 AM
நல்ல கருத்துக்கள் முத்துவேல் அவர்களே....

இருப்பினும், உண்மையான சந்தோசம் என்பது மன நிம்மதியில்தான் இருக்கின்றது. மேலே கூறியவை அனைத்தும் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், மன நிம்மதியிருந்தால் போதும் அதுவும் வாழ்க்கையை அதன் வழியில் வாழக் கற்றுக் கொண்டால் போதும், அனைத்தும் சந்தோசம்தான்.

பகிர்ந்தமைக்கு நன்றி

arun
15-01-2010, 10:47 PM
ஆம் நம்மில் பலர் கூட இதை உணர்ந்து பார்த்து இருப்பார்கள் ஆழ்நிலை தூக்கத்தில் எதை பற்றியும் கவலை படுவதில்லை அதுவே இதன் காரணம் என்று நினைக்கிறேன்