PDA

View Full Version : விவாகரத்தை தடுக்க



muthuvel
10-01-2010, 07:08 AM
--------------------------------------------------------------------------------

குறை மட்டும் தெரிந்தால் போதாது ,
நிறைகள் ,அவர்களின் கண்களுக்கு ,நிரம்ப தெரியட்டும் ..


காதலை சொன்னால் மட்டும் போதாது ,
கை பிடித்தபின் கடுன்சொற்கள் ஒருவரை ஒருவர் தைக்காமல் இருக்கட்டும் ..

உடல் மட்டும் இணைந்தால் போதாது ,
அவர்களின் உள்ளங்கள் இணையட்டும் ..



பணி மட்டுமே என்றிருந்தால் போதாது ,
என்னில் பாதி அங்கே தனியே ,என்று நினைவிருகட்டும் ... ...


அறிவு நிரம்பி இருந்தால் போதாது,
அதில் , அகந்தை இருவருக்கும் தலை தூக்காமல் இருக்கட்டும் ..



எதிர்பார்ப்புகளோடு மட்டும் இருந்தால் போதாது ,
இருப்பதய் கொண்டு மனம் திருப்தி கொள்ளட்டும்...


பணம் மட்டும் என்றிருந்தால் போதாது,
அவர்களின் பாசம் ஒருவரை ஒருவர் நிரம்பி வழியட்டும் ...



தன் பெற்றோர் என்ற எண்ணம் இருந்தால் போதாது ,
நம் பெற்றோர் என்ற அன்பு பிறக்கட்டும் ...



சிறுக சேமித்து வீடு கட்டினால் போதாது ,
விட்டு கொடுப்பது என்ற நியதி மனதில் நிரம்பட்டும் ..

jayashankar
10-01-2010, 08:34 AM
முத்துவேல் அவர்களே!

கவிதை மிகவும் அருமை....

இல்லற வாழ்க்கையின் தலையாய அடிப்படை விசயங்களை கவிதை நயத்துடன் கொடுத்துருப்பது மிகவும் அருமை...

இப்படி வாழ்ந்தால் நிச்சயம் இன்றைய தமிழ் சமுதாயத்திலும் அதிகமாகிவரும் விவாகரத்தை முற்றிலும் தடுக்க நிச்சயம் முடியும்.

அதிலும் பல வரிகளைப் படித்தவுடன் மனதில் சென்று பதிவது அந்தக் கவிதை வரிகளின் தாக்கம்தான்.


பணி மட்டுமே என்றிருந்தால் போதாது ,
என்னில் பாதி அங்கே தனியே ,என்று நினைவிருகட்டும் ...

எதிர்பார்ப்புகளோடு மட்டும் இருந்தால் போதாது ,
இருப்பதய் கொண்டு மனம் திருப்தி கொள்ளட்டும்...

தன் பெற்றோர் என்ற எண்ணம் இருந்தால் போதாது ,
நம் பெற்றோர் என்ற அன்பு பிறக்கட்டும் ...

மிக்க நன்றிங்க முத்துவேல்.

இவ்வளவு அருமையாக இருந்தும் சில எழுத்துப்பிழைகள் இருப்பதை தவிர்த்திருக்கலாம். இதுபோல நாங்களும் செய்யறதுதாங்க. ஆனாலும், கவிதைகளில் இதனை தவிர்ப்பது நல்லது என்ற உணர்வில் தங்களுக்கு தெரிவிக்கின்றேன். என்னடா இப்பத்தான் வந்தான். வந்த உடனேயே இப்படி எழுதுறானேன்னு நினைக்க வேண்டாம். நன்றி.

ஜனகன்
10-01-2010, 09:45 AM
கவிதை மிகவும் அருமை முத்துவேல்.
சமுதாயத்தின் சிந்தனையுடன், விழிப்புணர்வையும் ஏற்படுத்திய விதம் அருமை.பாராட்டுக்கள்.

muthuvel
28-01-2010, 02:35 AM
பாராட்டு நன்றி

Akila.R.D
28-01-2010, 03:02 AM
அருமையான சிந்தனை... எழுத்துப்பிழைகளை தவிர்க்கலாமே...

அமரன்
28-01-2010, 05:29 AM
தேவையான சேவைக்கவிதை.

பாராட்டுகள் முத்துவேல்

muthuvel
29-01-2010, 07:06 AM
மிகவும் நன்றி

சிவா.ஜி
29-01-2010, 08:03 AM
விவாகரத்தை ரத்து செய்ய நல்ல வழிகள். அழகாய் கோர்த்திருக்கிறீர்கள்.

வாழ்த்துகள் முத்துவேல்.

அய்யா
29-01-2010, 08:32 AM
உடல்கள் மட்டும் இணைந்தால் போதாது; உள்ளங்களும் இணையட்டும் என்பது மிகச் சிறந்த அறிவுரை மற்றும் ஆலோசனை!

பாராட்டுக்கள் முத்துவேல்!!

samuthraselvam
29-01-2010, 09:22 AM
அருமையான கவிதை முத்துவேல்.... வாழ்த்துகள்....

ஆர்.ஈஸ்வரன்
29-01-2010, 09:40 AM
கருத்துக்கள் நிரம்பிய கவிதை வடிக்கும் முத்துவேலுக்கு வாழ்த்துக்கள்

muthuvel
30-01-2010, 05:06 AM
மிகவும் நன்றி

muthuvel
04-02-2010, 09:03 AM
விவாகரத்தை ரத்து செய்ய நல்ல வழிகள். அழகாய் கோர்த்திருக்கிறீர்கள்.

வாழ்த்துகள் முத்துவேல்.

விட்டு கொடுத்து இருந்தாலே பாதி விவாகரத்து தடைபடும்