PDA

View Full Version : உங்கள் வலைபதிவை திருடுவதை தடுப்பது எப்படி?



நூர்
10-01-2010, 05:22 AM
உங்கள் வலைபதிவை திருடுவதை தடுப்பது எப்படி?
--------------------------------------------------


காப்பி அடிப்பவர்கள் இரண்டு வழிகளில் காப்பி செய்வார்கள் . முதலாவது மவுஸ் கர்சரால் எல்லாவற்றையும் செலக்ட் செய்து பின்னர் ரைட் கிளிக் செய்து Copy , Past செய்வார்கள் . இரண்டாவது Ctrl+C , Ctrl+V மூலமாக காப்பி செய்வார்கள். இவை இரண்டையும் உங்கள் பதிவுகளை திருடுபவர்களோ அல்லது உங்கள் பதிவுகளை படிப்பவர்களோ செய்யாமல் தடுக்கும் வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.

1.முதலில் உங்கள் பிளாக்கர் கணக்கினுள் உள்நுழையுங்கள்.

2. Layout என்பதை கிளிக் செய்யுங்கள்.

3.Page Elements என்பதில் add a Gadget என்பதை கிளிக் செய்யுங்கள்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/addgadget_thumb1.png

4.அடுத்ததாக HTML/JavaScript ஐ கிளிக் செய்யவும்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/add-html_thumb2.png

5. புதிதாக தோன்றும் பெட்டியில் கீழுள்ள ஜாவாஸ்கிரிப்ட் கோட்களை சேர்க்கவும் .

முதலில் உங்கள் வலைப்பூவில் ரைட் கிளிக் செய்வதை தடுக்க கீழுள்ள கோட்களை சேர்க்கவும் . இது உங்கள் வலைப்பூவில் யாராவது ரைட் கிளிக் செய்தால் எச்சரிக்கை செய்தியை அனுப்பும்.
---------------------------------------------------------------------

<script language="JavaScript">
<!--

//Disable right mouse click Script
//By Maximus (honey_tamil@ymail.com) w/ mods by Honey Tamil
//For full source code, visit http://www.honeytamilonline.co.cc

var message="Are U Copy My Posts???";

///////////////////////////////////
function clickIE4(){
if (event.button==2){
alert(message);
return false;
}
}

function clickNS4(e){
if (document.layers||document.getElementById&&!document.all){
if (e.which==2||e.which==3){
alert(message);
return false;
}
}
}

if (document.layers){
document.captureEvents(Event.MOUSEDOWN);
document.onmousedown=clickNS4;
}
else if (document.all&&!document.getElementById){
document.onmousedown=clickIE4;
}

document.oncontextmenu=new Function("alert(message);return false")

// -->
</script>


--------------------------------------------------

இனி உங்கள் வலைப்பதிவில் எழுத்துக்களை செலக்ட் செய்வதினை மட்டும் தடுக்க விரும்பினால் கீழுள்ள கோட்களை சேர்க்கவும்.
-----------------------------------------------------------------


<script type="text/javascript">

/***********************************************
* Disable Text Selection script
* This notice MUST stay intact for legal use
* Visit http://www.honeytamilonline.co.cc/ for source code
***********************************************/

function disableSelection(target){
if (typeof target.onselectstart!="undefined") //IE route
target.onselectstart=function(){return false}
else if (typeof target.style.MozUserSelect!="undefined") //Firefox route
target.style.MozUserSelect="none"
else //All other route (ie: Opera)
target.onmousedown=function(){return false}
target.style.cursor = "default"
}

//Sample usages
//disableSelection(document.body) //Disable text selection on entire body
//disableSelection(document.getElementById("mydiv")) //Disable text selection on element with id="mydiv"

</script>



-------------------------------------------------
அவ்வளவுதான் இனி செவ் செய்து வெளியேறிவிட்டு உங்கள் வலைப்பூவில் ரைட் கிளிக் செய்து பாருங்கள்.

நன்றி.http://www.honeytamilonline.co.cc/2009/07/blog-post.html

aren
10-01-2010, 05:25 AM
நல்ல உதவி செய்திருக்கிறீர்கள் நூர். இது நம் மன்ற உறுப்பினர்கள் பலருக்கு உதவியாக இருக்கும்.

சரண்யா
10-01-2010, 06:12 AM
நன்றிகள் நூர் அவர்களே....பயனுள்ள பதிவு...
செய்து பார்த்தேன் ctrl+c.ctrl+v அழுத்தினால் பதிவுகள் வருகிறதே...
உங்களுக்கும் சரியாக வேலை செய்கிறதா பாருங்கள்...

சூரியன்
16-01-2010, 03:54 AM
நிச்சயம் இது பயனுள்ள தகவல்.
நன்றி.

நூர்
16-01-2010, 05:31 AM
நன்றிகள் நூர் அவர்களே....பயனுள்ள பதிவு...
செய்து பார்த்தேன் ctrl+c.ctrl+v அழுத்தினால் பதிவுகள் வருகிறதே...
உங்களுக்கும் சரியாக வேலை செய்கிறதா பாருங்கள்...


ஆமாம் சகோதரி. சரி வேறு ஒன்று தேடிப்பார்க்கின்றேன்.

சரண்யா
17-01-2010, 02:41 AM
நன்றி நூர் அவர்களே...

அன்புரசிகன்
17-01-2010, 05:17 AM
நீங்கள் திருட்டை தவிர்க்க முடிவது கடினம். காரணம் சாணக்கியர்கள் view source என்பதினூடு கவ்விவிடுவார்கள்... :D

praveen
17-01-2010, 06:22 AM
எனக்குத்தெரிந்து பாதி வலைப்பதிவர்கள், வெளியே இருந்து அடுத்தவர் உழைப்பை திருடித்தான் தங்களது போல பதிக்கிறார்கள். அதாவது பாஸ்வேர்டு புரடெக்டடு தளத்தில் இருந்தோ அல்லது, யாரும் கவனிக்காத சில புதியவர் ப்ளாகில் இருந்தோ எடுத்து பதிக்கிறார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் இமெயிலில் வந்தவற்றை கூட பதிக்கிறார்கள்.


பிச்சைக்காரனிடம் பிச்சை எடுத்த கதையாக இம்மாதிரி திருடி பதிக்கும் பிளாக்-களில் திருடி, சிலர் வேறு சில ப்ளாக் தொடங்குகிறார்கள். அல்லது பாஸ்வேர்டு புரடெக்டடு தளத்திலே மூலம் குறிப்பிடாமல் தங்கள் சொந்தப்பதிப்பு போல பதிக்கிறார்கள்.

ப்ளாக்-ல் உள்ளதை காப்பியடிப்பதை ஏன் தடை செய்யவேண்டும், ப்ளாக் என்பதே அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியதற்காகத்தானே, எல்லோரும் பார்க்கனும் ஆனால் காப்பி செய்யக்கூடாது என்று நினைப்பது மிக வேடிக்கையான எண்ணம். உண்மையிலே அநேக நண்பர்களை உங்கள் பதிவு சென்று சேர வேண்டும் என்று நினைத்தால், ஒவ்வொரு பதிப்பிலுமோ அல்லது உங்கள் ப்ளாக்கிலோ, இதனை நகலெடுத்து பதிப்பவர் தயவு செய்து என் கைதட்டச்சை/உழைப்பை சிறப்பிக்கும் வகையிலே நகலெடுத்து பதிக்கும் இடத்தில் இந்த ப்ளாக்-ல் இருந்து எடுக்கப்பட்டது என்று பதியுங்கள் என்று கோரிக்கை வையுங்கள்.

கண்டவர் திருடக்கூடாது என்று நினைப்பவர், தனது தளத்திற்கு அனுமதிக்கப்பட்டவர் மட்டும் பார்வையிட வேண்டும் என்ற வழிமுறை செய்தல் தான் நியாயம்.

ஒரு விசயம் அநேகர்(தளம் வைத்திருப்பவர்கள் தான்) மறந்து விடுகிறார்கள். ஜாவா ஸ்கிரிப்ட் மூலம் புரடெக்ட் செய்து வைத்திருக்கும் தளத்தை மாற்று வழியில் சென்று லாகின் ஆகாமலோ அல்லது அங்கு தடுக்கப்பட்டவைகளையோ தாராளமாக பார்வையிடலாம் என்பதே.

நான் பல தமிழ் (கட்டணஞ் செலுத்தித்தான் பார்க்க வேண்டும் என்ற தமிழ் சஞ்சிகை) வெப் சைட்களை இந்த முறையிலே இன்றுவரை பார்த்து வருகிறேன் என்பது கூடுதல் தகவல் :)

நேசம்
17-01-2010, 07:03 AM
இது மிகப்பெரிய விசயமாக இருக்க வில்லை என்று மற்றவர்கள் பதிவுகளை படிக்கும் போது தெரிகிறது.நாம் தான் நிறைய தெரிந்து கொள்ல வேண்டும் போலிருக்கு

நூர்
17-01-2010, 09:35 AM
ஒரு விசயம் அநேகர்(தளம் வைத்திருப்பவர்கள் தான்) மறந்து விடுகிறார்கள். ஜாவா ஸ்கிரிப்ட் மூலம் புரடெக்ட் செய்து வைத்திருக்கும் தளத்தை ஒபேரா பிரவுசர் மூலம் சென்று ஜாவா ஸ்கிரிப்ட் டிசேபில் செய்து விட்டு லாகின் ஆகாமலோ அல்லது அங்கு தடுக்கப்பட்டவைகளையோ தாராளமாக பார்வையிடலாம் என்பதே.

நான் பல தமிழ் (கட்டணஞ் செலுத்தித்தான் பார்க்க வேண்டும் என்ற தமிழ் சஞ்சிகை) வெப் சைட்களை இந்த முறையிலே இன்றுவரை பார்த்து வருகிறேன் என்பது கூடுதல் தகவல் :)

தகவலுக்கு நன்றி. அட ஆமா! குமுதம் நல்ல வருதுங்க.

venkatesan1985
02-04-2010, 04:30 PM
நான் ஒரு வலைப்பதிவிடுகிறேன்.எனக்கு அவ்வளவு கணிப்பொரி ஞானம் இல்லை.என்னுடைய ஒவ்வொரு பதிவையும் அதன் கீழே PDF பைலாக வைக்க விரும்புகிறேன்.அதற்கு நான் என்ன செய்யவேண்டும்

nrs.rajkumar
26-04-2010, 11:15 AM
தகவலுக்கு நன்றி. திரு.பிரவீன் தங்கள் கருத்துக்கள் அருமை. தகவல்களைத் திரட்டுவதில் தவறில்லை திருடுவதுதான் குற்றம். திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. எழுத்துக்களை சொந்தமாக எழுதினாலும், வேறொரு தளத்திலிருக்கும் படங்களை சங்கிலிப்(லிங்க்) படுத்துவது சுலபமாய்த் தான் இருக்கிறது.