PDA

View Full Version : தமிழர்களை கொடூரமாக கொன்றது உண்மை : ஐ.நா., உயர் அதிகாரி தகவல்



muthuvel
09-01-2010, 03:31 PM
யூயார்க் : "இலங்கை ராணுவத்தினர், தமிழர்களை கொடூரமாக கொலை செய்தது தொடர்பாக வெளியான வீடியோ டேப், உண்மையானது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை அரசு, நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும்' என ஐ.நா., உயர் அதிகாரி தெரிவித்தார்.


இலங்கையில், அந்நாட்டு ராணுவ வீரர், தமிழ் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவரை துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்லும் டேப் ஒன்று, கடந்த ஆகஸ்ட் மாதம், பிரிட்டன் "டிவி' சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. இந்த டேப் உண்மை என, அதை ஆய்வு செய்த ஐ.நா., குழு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து ஐ.நா., அதிகாரி பிலிப் ஆல்ஸ்டன் கூறியதாவது: இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக வெளியான டேப் உண்மையானது என, நிபுணர்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, இரு தரப்பிலும் நடந்த, இது போன்ற சம்பவங்கள் குறித்து, நேர்மையான முறையில் விசாரணை நடத்த, தனி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். இவ்வாறு பிலிப் ஆல்ஸ்டன் கூறினார். இந்த வீடியோ டேப் போலியானது என, இலங்கை அரசு ஆரம்பத்தில் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, தடயவியல் உட்பட பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து, சம்பந்தப்பட்ட வீடியோ டேப் ஆய்வு செய்யப்பட்டது. இதில், அந்த டேப் உண்மையானது என்பது நிரூபிக்கப் பட்டுள் ளது. இதைத் தொடர்ந்தே, இக் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என, ஐ.நா., அதிகாரி தெரிவித்துள்ளார்.

aren
09-01-2010, 03:53 PM
அது உண்மையென்றால் ஐ.நா நேரடியாக ஆக்ஷன் எடுக்கவேண்டியதுதானே.

அமரன்
09-01-2010, 09:39 PM
அதிகாரியின் நாணில்
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டாலெனும்
பாட்டுக்கோட்டை அதிர்வு.

பாராட்டுகள் அதிகாரிக்கு!

அன்புரசிகன்
09-01-2010, 09:45 PM
சீனாவுக்கு ஐநாவில் இருக்கும் பலம் இந்தியா பாக்கிஸ்தான் ஆகியோரின் கண்மூடித்தனமான பக்கபலம் ஆகிய பலங்களுடன் இருக்கும் இலங்கைக்கு எந்த விசாரணைகளும் எந்த குற்றச்சாட்டுக்களுக்கும் அசராது... இன்னொரு பிரபாகரன் முளைத்தால் மட்டுமே...