PDA

View Full Version : தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்



muthuvel
09-01-2010, 11:43 AM
தமிழகம் முழுவதும் நாளை நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போலியோவை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழக அரசு சார்பில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாக நாளை மற்றும் அடுத்த மாதம் 7 ஆம் தேதி ஆகிய 2 தினங்கள் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.

இந்த போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் கருணாநிதி, நாளை காலை 8 மணிக்கு தம்து கோபாலபுர இல்லத்தில் தொடங்கி வைக்கிறார்.

இந்த போலியோ சொட்டு மருந்து முகாமையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன