PDA

View Full Version : எங்களை புதைக்காதீர்கள்!



அரசன்
08-01-2010, 01:46 PM
எங்களை புதைக்காதீர்கள்!
இரவோ, பகலோ
இதயமற்ற
சில மனித மிருகங்கள்
எங்களை தோண்டியெடுத்து,
பாலியல் பலாத்காரம்
செய்யக்கூடும்.
தயவுசெய்து
எங்கள் பிணங்களுடன்
எங்கள் உணர்வுகளையும்
சேர்த்து எரித்து விடுங்கள்!

சிவா.ஜி
11-01-2010, 03:42 PM
ஈழப்பெண்ணின் சோகக்கதறலாய் எனக்குத் தெரிகிறது. இறந்தபின்னும் நிம்மதியாய் இருக்கவிடாத அரக்கர்கள் நிறைந்திருக்கும்போது இப்படி அரற்றத்தானே இயலும்.

வாழ்த்துகள் அரசன்.

பா.ராஜேஷ்
15-01-2010, 10:45 AM
இறந்த பின் எந்த பாலரும் பிணமே!
இருப்பினும், இருக்கும் போதே இன்னல் தந்த
இரக்கமற்ற அரக்கர்கள் இருக்கும் வரை தொல்லைதான்...

இன்பக்கவி
23-01-2010, 03:00 PM
இறந்த பிணத்தையும் விட்டு வைக்காத மனித மிருகம்...
இவர்களை எல்லாம் என்ன செய்ய முடியும்...:fragend005::fragend005: