PDA

View Full Version : நெல்லை அருகே சப் - இன்ஸ்பெக்டர் வெட்டிக் கொலை



muthuvel
08-01-2010, 03:55 AM
திருநெல்வேலி அருகே காவல் துறை சப் - இன்ஸ்*பெக்டர் ஒருவரை மர்மக்கும்பல் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தது.

திருநெல்வேலி மாவட்டம் , ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் எஸ்.ஐ. ஆக பணியாற்றி வருபவர் வெற்றிவேல்.

தமிழக அமைச்சர்கள் மைதீன்கான் மற்றும் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று, நெல்லையில் பரவி வரும் மர்ம காய்ச்சல் குறித்து ஆய்வு செய்வதற்காக அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்வதாக இருந்ததால், அவர்கள் செல்லும் வழியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.

ஆம்பூர் அருகே அவர் ஒரு பாலத்தில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று திடீரென இவர் மீது வெடிகுண்டுகளை வீசியது. தொடர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

இதில் படுகாயம் அடைந்து அவர் துடித்துக்கொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மைதீன்கான், கலெக்டர் ஜெயராமன் ஆகியோர் மீட்டு மருத்துவமனைகக்கு அனுப்பி வைத்தனர்.

அமைச்சருக்கு பாதுகாப்புக்கு சென்ற பாதுகாப்பு படை காவலர்கள், வெடிகுண்டு வீசிய கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். ஆனால் அந்தக் கும்பல் தப்பி ஓடிவிட்டது.

பாளையங்கோட்டை மருத்துவானையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.ஐ. வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி இறந்தார். இக்கொலைக்கான காரணம் குறித்துகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக காக்கநல்லூர*ை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓவியன்
08-01-2010, 04:10 AM
கவலையான செய்தி,
உயிர் நீத்த காவலருக்கு என் அஞ்சலிகள்...

இந்த விடயத்தில் தமிழக அரசு உடனடி விசாரணையை நடாத்தி, குற்றவாளிகளை தண்டனைக்குட்படுத்த வேண்டும்...

இன்பா
08-01-2010, 05:01 AM
அந்த வீடியோவை பார்த்துவிட்டு, மிகவும் கஷ்ட்டமாக இருக்கிறது... என்ன ஜனங்களோ...?

செல்வா
09-01-2010, 02:55 AM
இதில் படுகாயம் அடைந்து அவர் துடித்துக்கொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மைதீன்கான், கலெக்டர் ஜெயராமன் ஆகியோர் மீட்டு மருத்துவமனைகக்கு அனுப்பி வைத்தனர்.



அமைச்சர்களின் உதாசீனம் தான் அவரது இறப்புக்கு காரணம் என்று
என்.டி.டிவி. செய்தி கூறுகிறது.

அமைச்சர்களின் பொறுப்பற்ற தன்மை மீது கடும் கண்டனங்களும் விவாதங்களும் நடைபெற்று வருகிறது.

http://www.ndtv.com/news/india/callous_ministers_show_no_remorse_stay_away_from_cops_last_rites.php


http://www.ndtv.com/convergence/ndtv/new/forums/readforum.aspx?trdid=2999