PDA

View Full Version : எங்கள் பாப்பா பள்ளிக்கு வந்த அப்துல் கலாம்...

இன்பக்கவி
08-01-2010, 03:48 AM
http://thebollywoodactress.com/wp-content/uploads/2009/07/15450ka.jpg

குழந்தைகளின் ஜனாதிபதி...
நூறு சதவீத உண்மை...

அப்துல் கலாம் அருமையான மனிதர்....

அவரை பற்றி என்ன சொல்ல??

நாங்கள் சென்னையில் இருப்பதால் அதுவும் கவர்னர் மாளிகைக்கு அருகில் இருப்பதால் அன்றாடம் சில அரசியல்வாதிகளை பார்க்க நேரிடும்...(போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு எரிச்சலாய் திட்டிக் கொண்டு நிற்போம்)

ஒரு முறை அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது பார்க்க நேரிட்டது...அது மட்டும் அல்லாமல் அவர் ஜனாதிபதியாக இருந்த போது குழந்தைகளை அன்றாடம் சந்திப்பார் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்...

மேலும் பள்ளி விழாக்களில் கலந்து கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடுவர் என்று பத்திரிகைகளிலும் நாளிதழ்களிலும் படித்து இருக்கிறேன்..

ஆனால் அதனை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு வரும் என்று நினைத்துக் கூட பார்த்தது இல்லை...கனவு காணுங்கள் என்றார்..அவரை பார்பதே பெரிய கனவுதான் என்னை பொறுத்தவரையில்...

6 -1 -2010 எங்கள் வாழ்கையில் மறக்க முடியாத நாட்களாய் மாறியது...
எங்கள் பாப்பா தீக்க்ஷிதா(எங்கள் வீட்டு ஓவியர்) ஆறாம் வகுப்பு படிகின்றாள்...

ஒரு பெரிய ஆங்கிலோ இந்தியன் பள்ளி...அந்த பள்ளியின் 75 ஆம் ஆண்டு விழாவிற்கு தான் அப்துல் கலாம் வருகை தந்தார்...
அழகை அலங்கரிக்க பட்ட பள்ளிக்குள் முதல் முறையாக நாங்கள் வரிசையில் சென்றோம்.. பலத்த பாதுகாப்பு போட பட்டிருந்தது..
அவரை பார்க்கவே அத்தனை கூட்டம்..

அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்க பட்டனர்...
சரியாக 4 மணி அளவில் வரிசையாக கார்கள் வர அழகாய் வந்து இறங்கினார்...

அவரை கண்டதும் பெற்றோர் கூட ஒரு நொடியில் பிள்ளைகளாக மாறி "ஓ" வென்று கத்தினோம்...பிள்ளைகளும் ஓ என்று கத்தி பலத்த கைதட்டல்...சொல்ல முடியாத தருணம் அது... கைதட்டல் நிற்க நீண்ட நேரம் ஆனது...

அவர் பேசிய சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...
குழந்தைகளை அவர் எவ்வாறு வழி நடத்த நினைக்கிறார் என்பதற்கு ஒரு சில சான்றுகள் தான் இவைகள்...

முதலில் அவர் பெற்றோரையும், குழந்தைகளுக்கும் தனி தனியாக உறுதி மொழி எடுக்க சொன்னார்...
எல்லோரையும் மை டியர் பிரெண்ட்ஸ் என்று அவர் அழைத்த விதமே அவ்வளவு ஆனந்தமாக இருந்தது...

குழதைகளுக்கான உறுதி மொழி:
நான் என் வீட்டில் ஒரு 25 புத்தகளை கொண்ட ஒரு நூலகம் அமைப்பேன்...
தினமும் புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை கடைபிடிப்பேன்...

பெற்றோகளுக்கான உறுதி மொழி..
என் குழந்தையின் நூலகத்தை ஒரு பெரிய நூலகமாக மாற்றி தருவேன்.. குறைந்தது 500 புத்தகமாவது இருக்கும் வகையில் அமைப்பேன்...தினமும் ஒரு நூலை படிப்பதை வழக்கமாக்கி கொள்வேன்...

இதை படிக்கச் சிறு விஷயமாக தோன்றினாலும் அவருடைய சிந்தனை எங்களை வியக்க வைத்தது..
நாங்கள் அனைவரும் வாய் விட்டு கூறி இந்த உறுதி மொழிகளை சொன்னோம்....

மேலும் சிறு உதாரணங்களை குழந்தைகளுக்காக சொன்னார்..
ஒரு முறை அவரை பார்க்க பார்வை இல்லாத பத்தாம் வகுப்பு படித்த மாணவன் ஸ்ரீகாந்த் வந்து இருந்தானாம்...

அப்போது அந்த மாணவன் கலாமை பார்த்து நீங்கள் இது வரை என்ன சாதனை செய்து இருக்கீங்கள் என்று கேட்டானாம்..
அதற்கு அப்துல் கலாம்...ஒரு விஞ்ஞானி ஜனாதிபதியாக வந்ததே சாதனை தானே என்று சொன்னாராம்...

பதிலுக்கு நீ என்ன சாதனை செய்ய போகிறாய் என்று கேட்க...
அந்த மாணவன் முதல் முதலாக பார்வை இல்லாத ஜனாதிபதி நான் தான் என்று சொல்ல வைப்பேன் என்றானாம்...

அவனை தட்டி கொடுத்து நிச்சயம் வருவாய் என்று சொல்லி, அவனுக்கு இருக்கும் தனம்பிகையை கூறும் பொழுது குழந்தைகளிடம் இருந்து பலத்த கைதட்டல் காண முடிந்தது...

அவர் தான் ஆசிரியர் சொல் படித்தான் படிக்கவேண்டிய பாடத்தை கூட தேர்வு செய்தார் என்றும்..ஒவோருவற்கும் தாய் தந்தைக்கு பிறகு அடுத்த கடவுள் ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் தான் என்றும் கூறினார்...

பிறகு பிள்ளைகள் கேள்வி கேட்க ஒவோன்றுக்கும் அழகாக பதில் சொன்னார்...

நிலவில் குடியேற முடியுமா?? இங்கு படித்து வெளிநாட்டிற்கு சென்றால் தான் நோபெல் பரிசு கிடைக்குமா?? இங்கு இருக்கும் இந்தியருக்கு கிடைக்காதா??
நதிகள் இணைப்பு போன்ற நிறைய கேள்விகளுக்கு அருமையாக பதில் அளித்தார்...
அவர் நகைச்சுவையாகவும் பேசி எங்களையும் பிள்ளைகளையும் சிரிக்க வைத்தார்..

எல்லோரையும் வருங்கலத்தில் என்னவாக வர ஆசை படுகிறீர்கள் என்று கைகளை உயர்த்த சொல்லி மகிழ்ந்தார்..
அவர் எங்களோடு இருந்த 2 மணி நேரம் எங்கள் வாழ்கையில் மறக்க முடியாதது..

எல்லோரும் நம் வீட்டில் நூலகம் அமைப்போம்..:icon_b:

விரைவில் படங்களும் ...அந்த வீடியோ தொகுப்பையும் இங்கு பதிவு செய்கிறேன்...

ஓவியன்
08-01-2010, 04:45 AM
உயர்ந்த உன்னதமான மனிதருடன் நல்லதோர் அனுபவம்...

வாத்துகள் கவிதா123,

நம்முடன் உங்கள் சந்தோசமான தருணங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்..!!

செல்வா
08-01-2010, 05:41 AM
குழந்தைகளின் எதிர்காலமே நாட்டினதும் எதிர்காலம்
என்று கூறிச் செல்லும் அப்துல்கலாம் அவர்களின்
சந்திப்பு உண்மையிலேயே உணர்ச்சி பூர்வமானது.

வீட்டிற்கொரு புத்தகசாலை என்பது கண்டிப்பாக எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒன்று.

அறிவு என்பதே அனுபவங்களின் தொகுப்பு தான்.
அவற்றைத் தொகுத்து வைத்திருப்பவை தான் புத்தகங்கள்.

இங்கே அண்ணாவின் வீட்டிற்கொரு புத்தகசாலை என்ற வானொலி உரையையும் நினைவுகூர்கின்றேன்.

பகிர்வுக்கு நன்றி...

கா.ரமேஷ்
08-01-2010, 05:59 AM
கேள்வி படுவதற்கே இனிமையான மனிதரை நேரிலே கண்டு அவரது அறிவுறைகளையும் கேட்டு மகிழ்வுற்றிறுக்கிறீர்கள் ....

ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய அறிவுறைகள்தான்...

பகிர்வுக்கு நன்றி...

இன்பக்கவி
08-01-2010, 02:39 PM
உயர்ந்த உன்னதமான மனிதருடன் நல்லதோர் அனுபவம்...

வாத்துகள் கவிதா123,

நம்முடன் உங்கள் சந்தோசமான தருணங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்..!!

நன்றிகள் ஓவியன்...
இனி இப்படி ஒரு தருணம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்

இன்பக்கவி
08-01-2010, 02:41 PM
குழந்தைகளின் எதிர்காலமே நாட்டினதும் எதிர்காலம்
என்று கூறிச் செல்லும் அப்துல்கலாம் அவர்களின்
சந்திப்பு உண்மையிலேயே உணர்ச்சி பூர்வமானது.

வீட்டிற்கொரு புத்தகசாலை என்பது கண்டிப்பாக எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒன்று.

அறிவு என்பதே அனுபவங்களின் தொகுப்பு தான்.
அவற்றைத் தொகுத்து வைத்திருப்பவை தான் புத்தகங்கள்.

இங்கே அண்ணாவின் வீட்டிற்கொரு புத்தகசாலை என்ற வானொலி உரையையும் நினைவுகூர்கின்றேன்.

பகிர்வுக்கு நன்றி...
ஆமாம்...
பிள்ளைகளை சரியாக வழி நடத்தவேண்டும் என்பது தான் அவருடைய ஆவல்..
எனக்கும் நூலகம் அமைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது...
கட்டாயம் அமைப்பேன்..

இன்பக்கவி
08-01-2010, 02:44 PM
கேள்வி படுவதற்கே இனிமையான மனிதரை நேரிலே கண்டு அவரது அறிவுறைகளையும் கேட்டு மகிழ்வுற்றிறுக்கிறீர்கள் ....

ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய அறிவுறைகள்தான்...

பகிர்வுக்கு நன்றி...

பலத்த கைதட்டல், ஒ வென்ற சத்தம் இரெண்டும் இன்னும் என் காதுகளில் ஒலித்து கொண்டு தான் இருக்கிறது...அந்த நொடியில் நிஜமாய் என்னையும் அறியாமல் மகிழ்ச்சியில் கண் கலங்கியது...
ஆனந்தமான தருணம்...

பாரதி
08-01-2010, 02:46 PM
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.
அவரை மீண்டும் குடியரசுத்தலைவராக அமர்த்தக்கூடிய வாய்ப்பை சில அரசியல் காரணங்களால் இழந்தோம்.
அவரைப்பற்றி அவ்வப்போது கேள்விப்படுபவை நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடியவை. அவர் இதுவரையிலும் நாட்டிற்காக ஆற்றிய பணி தன்னிகரில்லாதது. உங்களின் இப்பதிவும் அதை நிரூபிக்கிறது, மகிழ்ச்சியை ஊட்டுகிறது. மிக்க நன்றி.

இன்பக்கவி
08-01-2010, 03:41 PM

பாரதி நன்றிகள்...
இதுவரை நான் நினைத்து கூட பார்க்காத ஒன்று நடந்த சந்தோசம்

அக்னி
08-01-2010, 05:10 PM
இந்தியக்குடியரசின் தலைவர்களில்,
என்றும் நினைவில் நிற்கத்தக்க, மகத்தான, அனைவருக்கும் பிடித்தமான தலைவர் என்றால்,
அப்துல் கலாம் அவர்களைத்தான் அனைவரும் கூறுவார்கள்.

அப்படியான ஒரு மனிதரைச் சந்திக்கக் கிடைத்த தருணங்களை,
மிக அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்.

அவரின் உறுதிமொழியைச் செயற்படுத்தினால்,
வாழ்க்கையில் சாதிக்‘க்லாம்’.

வாத்துகள் கவிதா123,
கவிதா என்ற அழகான பெயரை,
‘வாத்துக்கவிதா’ என மாற்றிய ஓவியனை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இன்பக்கவி
08-01-2010, 05:24 PM

நன்றிகள் அக்னி அவர்களே....
அவரை போல இனி ஒரு ஜனாதிபதி கிடைக்க மாட்டார்
ஆஹாஹா ...:lachen001:
அது எழுத்து பிழை இதுக்கு எல்லாம் கண்டிக்கலாமா???

அக்னி
08-01-2010, 05:36 PM
கண்டிக்கலாமா???
ஓவியன்: இல்லீங்க... ‘அப்துல்கலாம்’ :rolleyes:

இன்பக்கவி
08-01-2010, 05:39 PM
ஓவியன்: இல்லீங்க... ‘அப்துல்கலாம்’ :rolleyes:

ஐயோ இது என்ன??? எனக்கு புரியல...:traurig001:
ஓவியன் தான் உங்களுக்கு பதில் சொல்லணுமோ???:icon_ush:
இருங்க ஓவியன் வரட்டும்...:lachen001::lachen001:

சிவா.ஜி
09-01-2010, 08:44 AM
நல்லதொரு பகிர்வு கவிதா. அற்புதமான மனிதர் அவர். நல்ல நூல் என்பது நல்ல ஆசிரியரைப் போன்றது. குழந்தைகளுக்கு சிறுவயது முதலே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிவிட்டால், சிந்தனையில் தெளிவு கிடைக்கும்.

ஆனால் இப்போதுள்ளக் குழந்தைகள் நிச்சயம் தமிழ் புத்தகங்கள் படிக்கமாட்டார்கள். என்ன செய்வது?

பகிர்வுக்கு நன்றி கவிதா.

இன்பக்கவி
09-01-2010, 09:04 AM

நன்றிகள்..
மறக்கவே முடியாத நிகழ்வு..
நீங்கள் சொல்லுவது போல தமிழ் பாட புத்தகத்தை எங்க பாப்பாவை படிக்க வைக்க நாங்கள் பட்டபாடு சொல்லி மாளாது.,
இப்போது நன்றாக படிக்கின்றாள்...

அக்னி
09-01-2010, 10:34 AM
ஆனால் இப்போதுள்ளக் குழந்தைகள் நிச்சயம் தமிழ் புத்தகங்கள் படிக்கமாட்டார்கள். என்ன செய்வது?

ஓவியன்: அப்போ துள்ளாதீங்க...

அமரன்
09-01-2010, 10:01 PM
கலாம்..

கலாமா...?
என்ற யோசனைக்கே முற்றுப் புள்ளி வைச்ச
காலன்.

இயலாமையை இல்லாதொழித்த கொடுங்கோலன்.

குழந்தைகளின், இளைஞர்களின்,முதியோரின் தோழன்.

அவருடன் நீங்கள் அளாவளாவிய மணிகள் விலைமதிப்பறுந்தவை.

நூலகம்..

இஷ்டம்தான்..

ஆனாலும் இருக்குமிடத்தில் கஷ்டம்தான்..

அனைத்துக்கும் சேர்த்து திருக்குறளும் மன்றமும்.

அமரன்
09-01-2010, 10:03 PM
ஓவியன்: இல்லீங்க... ‘அப்துல்கலாம்’ :rolleyes:

கலாமின் ஊர் உனக்குத் தெரியலைங்கிறதை இப்படியா வெளிப்படையா ஒப்புக்கிறது்:)

பா.ராஜேஷ்
14-01-2010, 02:23 PM
அருமையான பகிர்வு. பதிந்தமைக்கு மிக்க நன்றி. விரைவில் புகைப் படங்களையும் பதியுங்கள் !

பா.சங்கீதா
06-04-2010, 01:56 PM
இது போல் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று நான் வருத்த படுகிறேன்..................
பகிர்ந்தமைக்கு நன்றி:)