PDA

View Full Version : கடவுளும் காதலும்...

செல்வா
08-01-2010, 02:47 AM
படைப்புத் தொழிலும் சலித்துப்போன பரமன்
படியிறங்கி ஒரு நாள்
பூலோகத்தில் நடக்கும்
புத்தகச் சந்தைக்கு வந்தான்

மாலையில் கோர்க்கப் பட்ட ஒழுங்கற்ற
முத்துகள் போல் அடுக்கப் பட்டிருந்த
கடைகளினூடு நடக்கத் துவங்கினான்

ஆருடப் புத்தகங்களை
நமட்டுச் சிரிப்புடன் கடந்தவன்

அறிவில் புத்தகங்களில் மலைத்தான்

அரசியல் புத்தகங்களைப் புரட்டியவன்
கண்களில் தேவலோகத்தில் தேர்தல்
பயம் விரிய வேகமாய் முடிவிட்டு கடந்தான்

தத்துவ நூல்களைப் பார்த்துத் தலைசுற்றியவன்

மத நூல்களைப் பார்த்ததும் மயங்கி விழுந்தான்.

சூழ இருந்தோர் மயக்கம் தெளிவிக்க

எழுந்தவன் சென்ற இடம்
கவிதைச் சந்தைக்கு

கவிதைகள் சாந்தத்தைத் தர
கடவுளுக்கும் வந்தது கவிதை எழுதும் ஆசை

வேகமாக ஓடி கவிதை எழுதுவது எப்படி ?
வாங்கினான்…
வார்த்தைகள் வசப்படாது
ஏங்கினான்….

“காதலித்தால் கவிதை வரும் கண்டு கொண்டேன் உன்னாலே”
கானம் கேட்டு பரவசமானவன்

காதலிப்பது எப்படி ?

புத்தகம் கேட்டு வாங்கினான்

காதலிப்பதற்கு காதலி வேண்டுமே…

தேடத்துவங்கினான் கடவுள்..

இப்போது கடவுளுக்கு

அவசரமாக ஒரு காதலி வேண்டும்

கவிதை எழுதிப் பழக...

rajarajacholan
08-01-2010, 04:02 AM
நல்லாருக்குன்ங்க

பாரதி
08-01-2010, 07:25 AM
கடவுள் மனிதாகப்பிறக்க வேண்டும்... பாடலைக் கேட்டிருக்கிறீங்களா செல்வா...?

அந்தக்கடவுளை உங்கள் கவிதையின் முதல்வரியை மறுபடியும் படிக்கச்சொல்லி நினைவு படுத்துங்க செல்வா. அதோடு புத்தகத்திருவிழாவுக்கு நீங்களும் போயிட்டு வாங்க.

சிவா.ஜி
08-01-2010, 07:47 AM
கடவுளுக்கும் கவிதை எழுதும் ஆசை வந்துவிட்டதா...? அவன் எழுதிய பிழையான கவிதைகளாக பலர் இந்த மண்ணில் உலாவும்போது....இனியாவது ஒரு காதலி கிடைத்து, நல்ல கவிதைகளைப் படைத்து, மண்ணில் உலாவ விடட்டும்.

கடவுளையும் கவிதை எழுத வைத்துவிட்டதற்காக பாராட்டுக்கள் செல்வா.

செல்வா
08-01-2010, 10:24 AM
நல்லாருக்குன்ங்க

நன்றி சோழரே

கடவுள் மனிதாகப்பிறக்க வேண்டும்... பாடலைக் கேட்டிருக்கிறீங்களா செல்வா...?

அந்தக்கடவுளை உங்கள் கவிதையின் முதல்வரியை மறுபடியும் படிக்கச்சொல்லி நினைவு படுத்துங்க செல்வா. அதோடு புத்தகத்திருவிழாவுக்கு நீங்களும் போயிட்டு வாங்க.

பார்த்தால் கண்டிப்பாகச் சொல்றேன் அண்ணா...

போகணும்னு தான் நெனச்சிருந்தேன் இப்போ முடியாது போலருக்கு... :traurig001::traurig001:

கடவுளுக்கும் கவிதை எழுதும் ஆசை வந்துவிட்டதா...? அவன் எழுதிய பிழையான கவிதைகளாக பலர் இந்த மண்ணில் உலாவும்போது....இனியாவது ஒரு காதலி கிடைத்து, நல்ல கவிதைகளைப் படைத்து, மண்ணில் உலாவ விடட்டும்.

கடவுளையும் கவிதை எழுத வைத்துவிட்டதற்காக பாராட்டுக்கள் செல்வா.

பாராட்டுகளுக்கு நன்றி அண்ணா.

உங்கள் பாதுகாப்பையும் நலனையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

சுகந்தப்ரீதன்
12-01-2010, 11:19 AM
செல்வா...அப்ப நீங்க இப்படியெல்லாம் கவிதை எழுத யார் காரணமாம்..?!

இப்போது பரமனின் படைப்பில் ஆணுக்கும் பெண்ணுக்குமான விகிதாச்சார வேறுபாட்டை நம் பூலோகத்தார் கூட்டிவிட்டார்களாம்.. ஆதலால் இங்கிருப்பவனுக்கே இப்போது எளிதில் காதலி கிடைப்பதில்லையாம்.. இந்த நிலைமையில கடவுளுக்கு காதலி கிடைச்சி அவரு கவிதை எழுதினார் போலத்தான் போங்கோ...?!

வாழ்த்துகள்... கடவுளுக்கே காதலி தேடும் உங்களுக்கு..!!

ஜனகன்
12-01-2010, 01:24 PM
எல்லோரும் எது எதுக்கோ எல்லாம் பெண்ணை தேடுவார்கள். இங்கே ஒருவன் (கடவுள்) கவிதை எழுதி பழக பெண்ணை தேடுகின்றான்.நல்லாய் இருக்கு கடவுளின் காதல்.சுப்பர் கவிதை பாராட்டுக்கள்.

பா.ராஜேஷ்
15-01-2010, 09:45 AM
கவிதை எழுத
காதலி அவசியமா!
கற்பனை ஒன்றே
போதாதா!?

வித்தியாசமான சிந்தனை ! வாழ்த்துக்கள் :)

இன்பக்கவி
23-01-2010, 03:22 PM
அரசியல் புத்தகங்களைப் புரட்டியவன்
கண்களில் தேவலோகத்தில் தேர்தல்
பயம் விரிய வேகமாய் முடிவிட்டு கடந்தான்இந்த வரிகள் படிக்கையில் சிரிப்பு...:lachen001:
நல்லா எழுதி இருகின்றீர்கள்
சூப்பர்-ஆ இருக்கு...:icon_b::icon_b:

செல்வா
29-01-2010, 03:15 PM
செல்வா...அப்ப நீங்க இப்படியெல்லாம் கவிதை எழுத யார் காரணமாம்..?!

கவிதைய வாசிச்சா அனுபவிக்கணும் ஆராயக் கூடாது....

வாழ்த்துக்கு நன்றிகள் சுபி.

எல்லோரும் எது எதுக்கோ எல்லாம் பெண்ணை தேடுவார்கள். இங்கே ஒருவன் (கடவுள்) கவிதை எழுதி பழக பெண்ணை தேடுகின்றான்.நல்லாய் இருக்கு கடவுளின் காதல்

நன்றி ஜனகன்

கவிதை எழுத
காதலி அவசியமா!
கற்பனை ஒன்றே
போதாதா!?

வைரமுத்துவைத் தான் கேட்க வேண்டும் :)

நன்றி கவி