PDA

View Full Version : என் முதல் கதை முயற்சி

சசிதரன்
07-01-2010, 04:32 PM
இது என் முதல் சிறுகதை முயற்சி நண்பர்களே... முதல் முதலாய் மன்றத்தில்தான் பதிவிடுகிறேன் என்பதில் மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்களுக்காய் ஆவலுடன்...

சென்னை கோயம்பேடு தனியார் பஸ் நிலையம்.

இரவு 9.30 நாகர்கோவில் பேருந்து புறப்பட தயாராய் இருந்தது. ஆபீஸ் விஷயமாக போக வேண்டி இருந்தது. எப்படியும் ஒரு மாதம் வேலை இருக்கும். என்ன வேலைன்னு கேட்கறீங்களா.. பெரிய பெரிய காற்றாலைகள் பாத்திருப்பிங்க... அதை தயாரிக்கற வேலை. அது சம்பந்தமாத்தான் இப்போ போறது. தனியே அவ்வளவாய் தொலைதூர பயணங்கள் போனதில்லை. பஸ் கிளம்பியது. என்னுடைய டைரியை எடுத்து கைகளில் வைத்துக் கொண்டேன். என் பக்கத்துக்கு இருக்காய் காலியாகவே இருந்தது. தாம்பரத்தில் ஏறுவார்களாயிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

சன்னலோர காற்றும்... நகரம் தாண்டிய இருள் சூழ்ந்த பாதையும் என... அழகாகவே இருந்தது.. டைரியின் பக்கங்களை புரட்டியபடி கிறுக்க தொடங்கினேன்.. தனிமை எப்பொழுதும் அவளைத்தான் நினைவுபடுத்தும். பின் கிறுக்கலும் அவளை பற்றிதானே இருக்கும்... அனிச்சையாய் இயங்கியது கைகள்...

"உன்னை ரசித்த ஆண்களின் கணக்கை
நீ அறிவாயோ தெரியாது...
நான் ரசித்த பெண்களின் கணக்கு
உன்னில் தொடங்கி... உன்னோடு முடிகிறது."
முற்றுப்புள்ளி வைக்கும் நேரத்தில் கேட்டது அந்த குரல்...

"நீங்க எழுதின கவிதையா?"..

அப்பொழுதுதான் அவளை கவனித்தேன். என்னருகில் அவளை எதிர்பார்க்கவில்லை.. பச்சை நிற சுடிதார் அணிந்திருந்தாள். நல்ல அகன்ற நெற்றியில் மிக சின்னதாய் உற்று கவனித்தால் மட்டுமே தெரியும்படி ஒரு பொட்டு. சட்டென பார்த்தால் மச்சம் போலவே தோன்றியது. வட்டமான முகம்.. கவனிக்க வைக்கும் அதே புன்னகை இன்றும் அவளிடம் இருந்தது.

"என்ன கேட்டிங்க?"

"இல்ல... உங்க டைரில இருக்க கவிதை... நீங்க எழுதினதாணு கேட்டேன்.."

"ஆமா.. நான் எழுதினதுதான்." சுருக்கமாகவே முடித்துக் கொண்டேன்.
"ரொம்ப நல்லா இருக்கு"
"தேங்க்ஸ்.."
"நீங்களும் நாகர்கோவில்தான் போறீங்களா?"
"ஆமாம்."
"ஒரு வார்த்தைதான் பேசணும்னு எதாவது கொள்கை வேசுருக்கின்களா என்ன.." சிரித்துக் கொண்டே கேட்டாள்.
"உங்க கேள்விக்கு பதில் சொன்னேன்... வேற என்ன பண்ணட்டும்.."
"ஒன்னுமில்லைங்க.. தெரியாம பேசிட்டேன்.. சாரி.." சட்டென முகம் வாடி விட்டாள்..

நெடுநேரம் அவள் எதுவுமே பேசவில்லை. முகத்தை அந்த பக்கம் திருப்பியபடி அமர்ந்திருந்தாள். ச்சே.. தேவையில்லாமல் ஏன் கோபப்படுகிறோம் என்று தோன்றி விட்டது.

"சாரி....."
" ... "
"ஹலோ.. அதான் சாரி சொல்றேன்ல.."

சட்டென திரும்பினாள்... முகம் இன்னும் வாட்டத்தில்தான் இருந்தது.

"ஏதோ கோவம் இருந்தா.. அதுக்கு நான்தான் கெடச்சனா.."
"அட.. விடுங்க.. தப்புதான்.. ஒரு பிரெண்டா நெனச்சு விட்ருங்க.."
"ஹ்ம்ம்... மன்னிச்சு விடறேன் போங்க.." முகத்தில் பழைய உற்சாகம் வந்திருந்தது.
"ஹா ஹா... ரொம்ப நன்றிங்க.. உங்க பேரு..?"
"என் பேர் தீட்சண்யா. ஒரு ரிலேடிவ் கல்யாணத்துக்காக நாகர்கோவில் போறேன். அம்மா அப்பா முன்னாடியே போய்ட்டாங்க.. எனக்கு எக்ஸாம் இருந்தது. அதனால இப்போ போறேன்..." படபடவென சொல்லி முடித்தாள்.
"நீங்க பேச ஆரம்பிச்சா சீக்கிரத்துல முடிக்க மாட்டிங்க போல இருக்கே..." கேட்டே விட்டேன்.
"என் எல்லா பிரண்ட்ஸும் இதேதான் சொல்வாங்க..." சிரித்துக் கொண்டாள்.
"ஹா ஹா... தீட்சண்யா... நல்ல வித்தியாசமான பெயர். நான் எதிர்பார்க்கலை..."
"என்ன எதிர்பார்க்கலை..."
"இல்ல ஒண்ணுமில்லை..."
"சரி.. கேட்டா கோபப்பட மாட்டிங்களே?"
"மாட்டேன்... கேளுங்க.."
"இல்ல... உங்க கவிதையில காதல் கொஞ்சம் தூக்கலா இருந்ததே... யார் அந்த பொண்ணு..." ரொம்பவே ஆர்வமாக இருந்தாள்.

கொஞ்ச நேரம் அமைதியாக அவளையே பார்த்தேன்... ரொம்ப பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது..

"இப்போ கண்டிப்பா நீங்க தெரிஞ்சுக்கணும் இல்ல..." விளையாட்டாக கேட்டேன்...
"உங்களுக்கு விருப்பமிருந்த சொல்லுங்க... எப்படியும் இன்னும் 8 மணி நேரத்துக்கு மேல இருக்கு.. எனக்கு ராத்திரி டிராவலிங் தூக்கமே வராது. யாரவது பேச்சு துணைக்கு இருந்தா போதும். இன்னைக்கு நீங்கதான் சிக்கியிருக்கிங்க... அதான்.."
ரொம்பவே உற்சாகமாகி இருந்தாள்.

"சரி சொல்றேன்..." அவளிடம் மறைப்பதற்கு எந்த காரணமும் இல்லை எனக்கு.

"ஹய்... சூப்பர் சூப்பர்... சொல்லுங்க..." அவள் கிட்டத்தட்ட கதை கேட்கும் குழந்தை போல் மாறி விட்டிருந்தாள்.

"அவளை முதல் முதலா ஒரு அருவியிலதான் பார்த்தேன்.. பிரண்ட்ஸ் கூட மூணாறு டூர் போயிருந்தேன்... வர வழியில ஒரு அருவியிலதான் பார்த்தேன்....."
"அட... பேக்ரவுண்ட் நல்லாருக்கே..."
"ம்... அவளை தாண்டி எதையும் ரசிக்கல நான்...".. சொல்லும்போதே சிரிப்பு வந்து ஒட்டிக் கொண்டது உதடுகளில்.
"அடடா.. ஆரம்பமே இப்படியா... அவ்வளவு அழகா இருப்பாங்களா?"
"உங்களால அதிகபட்சம் எவ்வளவு அழகை கற்பனை பண்ண முடியுமோ... அதை விட கொஞ்சம் அதிகமாவே அழகா இருப்பா.."
"ஸோ க்யூட்.."

""பிரண்ட்ஸ் எல்லோரும் அவங்க போன், கேமரா எல்லாம் என்கிட்டே கொடுத்துட்டு குளிக்க போய்ட்டாங்க. ஒரு முப்பதடி தூரத்துல ஒரு பாறையில உட்கார்ந்திருந்தா... அருவியில இருந்து விழுந்த தண்ணி தேங்கி தேங்கி அவளை தாண்ட மனசில்லாம தாண்டிக்கிட்டு இருந்தது. கால் கொலுச தண்ணில நெனச்சுட்டு அவ இருந்த அழகு இப்போ நெனச்சாலும் மனசு சில்லுனு ஆயிடும்.." சன்னலோர காற்று முகத்தில் மோத... சில்லென ஒரு அருவி பாய தொடங்கியது என்னுள்.

"ஹலோ... கொஞ்சம் உலகத்துக்கு வாங்க சார்... பொறுமையா கனவு காணலாம்... சொல்லி முடிங்க முதல்ல..." குறும்பு கொப்பளித்தது அவள் குரலில்.

"எதோ போனா போகுதுன்னு சொன்னா... நக்கல் பண்றீங்களா.. நான் சொல்லல போங்க.." பொய்யாய் கோபம் காட்டி முகம் திருப்பிக் கொள்ள..

"அடடா... சும்மா கிண்டலுக்கு சொன்னேங்க.. சொல்லுங்க சொல்லுங்க... சோ இன்ட்ரஸ்டிங்.." என மீண்டும் குழந்தையானாள்.

"ஹ்ம்ம்... அவ மொத்த குடும்பமும் அங்க இருந்தது. நெறைய பேர் இருந்தாங்க.. எல்லோருமா கொண்டு வந்த சாப்பாட பிரிச்சு சாப்பிட ஆரம்பிச்சாங்க.. இவ அந்த பாறையில இருந்து நகரல.. தீவு மாதிரி இருந்த அந்த பாறையில இருந்துகிட்டு சின்ன குழந்தை மாதிரி வரமாட்டேன்னு அடம் பிடிச்சிட்டு இருந்தா. அவளோட மொத்த குடும்பமும் கெஞ்சிக்கிட்டு இருக்க, இவ வரவே இல்ல. ஒட்டு மொத்த குடும்பமும் அந்த பொண்ணு மேல அவ்வளவு அன்பா இருந்தாங்க... அதை விட வேற என்ன வேணும் ஒரு பொண்ணு தேவதையா மாற..."

"பயங்கரமா கவனிசிருக்கிங்க போல... கடைசியில அவ சாப்பிட்டாளா இல்லையா.."

"அதை ஏன் கேட்கறிங்க.. அவளோட அப்பாவே சாப்பாட எடுத்துட்டு போய் அவளுக்கு ஊட்டி விட்டார். அப்போ அவ வெட்கப்பட்டு சிணுங்குனதை பார்க்கணுமே.. இப்போ வரைக்கும்.. எந்த குழந்தை சாப்பிட அடம்பிடிக்கறதை பார்த்தாலும் அவதான் ஞாபகம் வருவா.."

"ரொம்ப உருகியிருக்கிங்களே... அவ கிட்ட போய் பேசுனீங்களா..?" எதிர்பார்ப்புடன் கேட்டாள்.

"ஏங்க.. என்னத்த போய் பேசறது... அவ மொத்த குடும்பமும் சேர்ந்து மொத்தி எடுத்துடுவாங்க.. கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம்... அவளோட ஒவ்வொரு அசைவையும் பார்த்திட்டு இருந்தேன். என்னவோ அன்னைக்கு பேசறதுக்கு தைரியம் வரல.. வந்துட்டேன். அதுக்கு பிறகுதான் என்னவோ உறைச்சது... மிஸ் பண்ணிட்டமோன்னு மனசு அடிச்சுகிச்சு..."

"அடச்சே.. வேஸ்ட் பண்ணிடிங்க.. பேசியிருக்கலாம்ல... அவளை லவ் பண்றிங்களா இல்லையா..."

"தெரியல... அப்படிதான் தோணுது. ஆனா அவளுக்கு இப்படி ஒருத்தன் இருந்தேன்றதே தெரியாது.. இதெல்லாம் சொன்னா எப்படி புரிஞ்சுப்பானே தெரியாது..."

"எனக்கென்னவோ உங்கள மறுக்க அவ கிட்ட எந்த காரணமும் இருக்கும்னு தோணலை... " மிகுந்த நம்பிக்கையோடு சொன்னாள்...

"என்னை விட நீங்க ரொம்ப நம்பிக்கையா இருக்கீங்க போல..." சிரித்துக் கொண்டே சொன்னேன்.

"நீங்க வேணும்னா பாருங்க.. நீங்க அவளை அடுத்த முறை மீட் பண்ணி இதெல்லாம் சொல்லும்போது நிச்சயம் ஏத்துப்பா... நான் சொன்னா நிச்சயம் நடக்கும்..."

"தேங்க்ஸ்..." மனம் ஏனோ மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.

சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். பின் சில நிமிடங்கள் பேசிவிட்டு அவள் தூங்கிப் போனாள். குளிரை ரசித்தபடியே நானும் உறங்கிப் போனேன்.

இரவு முடிந்து பகல் தொடங்கியிருந்தது. பேருந்து கோவில்பட்டியை கடந்திருந்தது. புது வருட டைரியின் முதல் பக்கம் போல் பளிச்சென விடிந்திருந்தது. அவளும் விழித்திருந்தாள்.

"என்ன.. ராத்திரி பூரா ஒரே கனவுதானா.." கண்சிமிட்டியபடி ஆரம்பித்தாள்.
"ஹா ஹா ஹா... அப்படியெல்லாம் இல்ல.."

பஸ் நாகர்கோவிலை நெருங்கிக் கொண்டிருந்தது.
"சரி.. அவளை பத்தி எந்த தகவலுமே உங்க கிட்ட இல்லையா..." அவளே தொடங்கினாள்.
"ஹ்ம்ம்... கேட்டுடிங்களா.. இருக்கு... அவளோட போட்டோ.. அருவியில மொத்தமா எடுக்கும்போது எடுத்தது. வெச்சுருக்கேன்..."
"கேடிதான் போங்க... வேற எதுவும் தெரியாதா..?"

"ஹ்ம்ம்... பேர் தெரியும்..."
"ஹேய்.. சொல்லவே இல்ல... என்ன பேரு..." என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"நேத்து வரைக்கும் பெயர் தெரியாத தேவதை தான்... இப்போ தெரியும்... அவ பேர் தீட்சண்யா.."

அதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. என்ன சொல்வதென்று தெரியாமல் மெளனமாக திரும்பிக் கொண்டாள். அதன் பிறகு அவள் எதுவுமே பேசவில்லை. பேருந்து நாகர்கோவில் நிறுத்தம் வந்து சேர்ந்தது. இருவரும் மெளனமாக இறங்கினோம்.. அவள் எதுவுமே பேசவில்லை.

"என்னங்க... எதுவுமே சொல்லாம போறீங்க.." விட்டாள் அழுது விடுவது போலிருந்தேன்.

"அதான் சொன்னனே.. உங்கள மறுக்க அவகிட்ட எந்த காரணமும் இருக்காதுன்னு.." குறும்பாய் சொல்லிவிட்டு அருகில் வந்து காதோரமாய் கிசுகிசுத்தாள்.. "என்னை தேவதையா மாத்தின அன்பான குடும்பம்னு சொன்னீங்களே... அந்த குடும்பத்துல வந்து பேசுங்க.. இந்த தேவதையோட விருப்பத்துக்கு யாரும் மறுப்பு சொல்ல மாட்டங்க..."

பேரிரைச்சலுடன் ஓர் அருவி சில்லென பாய தொடங்கியிருந்தது என்னுள்.

அமரன்
07-01-2010, 05:21 PM
ஆரம்பத்தில் எதிர்பார்ப்பைத் தூண்டி, முடிவில் திருப்பம் வைச்சு சிறுகதையிலும் உங்களால் சோபிக்க முடியும் என நிரூபித்து விட்டீர்கள் சசி. பஇப்படியே போனால் மனதைத் தொட்ட உங்கள் கவிதைகள் மறந்துவிடும் போலிருக்கு - தீட்சண்யா அருவிப் பயணத்தை மறந்தது போல..

பாராட்டுகள்

செல்வா
08-01-2010, 03:02 AM
நாகர்கோவில் செல்லும் பேருந்தில்...
நங்கை....

கதையுள் கவிதையாய்
கவிதையான கதை...

முடிவு ஊகிக்க முடிகிறது என்றாலும்

தள்ளாட்டமில்லாத அழகு நடை...

சுருக்கமாகச் சொன்னால்..

அருமையா வந்திருக்கு
உங்க முதல் காதல் க(வி)தை.

சிறப்பான வாழ்த்துக்கள்... சசி..

கா.ரமேஷ்
08-01-2010, 06:41 AM
ம்ம்ம் நல்லா இருக்கு சசி...

வாழ்த்துக்கள்...

ஜனகன்
08-01-2010, 07:37 AM
முதல் கதையே காதல் கதையா? நல்ல சகுனம்.
அழகான உணர்வுகளை சொல்லும் கதை.சிறந்த எழுத்தாளராக இக்கதை உங்களை படம் பிடிக்கிறது.மென்மேலும் வளர்ந்து, சிறக்க வாழ்த்துக்கள்.

சரண்யா
08-01-2010, 10:55 AM
உண்மையில் தீட்சண்யா இருக்காங்களா சசிதரன் அவர்களே....
வாழ்த்துகள் தங்கள் சிறுகதைக்கு...சசிதரன் அவர்களே...நல்லா நாகர்கோவில் போனோம் பேருந்தில்...
கதைக்கு ஒரு நல்ல தலைப்பு கொடுங்க.....

சிவா.ஜி
08-01-2010, 11:06 AM
மன்றம் வந்தப் புதிதில் அந்த அருவிப் பெண்ணின் முகம் மறைத்த படத்தைப் பதிந்திருந்தீர்கள்.

அதைத்தொடர்ந்து பல கவிதைகள் அருவியாய் கொட்டிக்கொண்டிருந்தது. இன்று கதையாகவும் மாறி அந்த அருவிப்பெண் உங்களை மொத்தமாய் ஆக்ரமித்துக்கொண்டதை சொல்கிறது.

முதல் கதை என சொல்ல முடியாதபடி தேர்ந்த எழுத்து நடை. இயல்பான உரையாடல்கள். செல்வா சொன்னதைப் போல எதிர்பார்த்த முடிவுதானென்றாலும், கொண்டு சென்ற விதம் அருமை. படபடப்பாய், வெள்ளந்தியாய் பேசும் ஒரு உற்சாகப் பெண்ணைக் கண் முன்னேக் காட்டிவிட்டீர்கள் சசி.

கவிதையில் கலக்குவதைப் போல கதையிலும் கலக்கி மேலும் உயரங்களை எட்ட இந்த அண்ணனின் அன்பான வாழ்த்துகள்.

பாரதி
08-01-2010, 03:36 PM
//கவனிக்க வைக்கும் அதே புன்னகை இன்றும் அவளிடம் இருந்தது.// - முதல் முறை கதையைப்படிக்கும் போது இந்த வரியின் முக்கியம் தெரியாமல் இருந்தது. இன்று இரண்டாம் முறையாக படிக்கும் போது தொடர்பு தெரிந்தது.

"ஹ்ம்ம்... மன்னிச்சு விடறேன் போங்க.." - இந்த வாக்கியம் அன்பே சிவம் படத்தில் தன்னை வெட்ட வருபவரிடம் கமல் சிரித்துக்கொண்டே கூறும் வாக்கியத்தை நினைவு கூர்ந்தது.

வாழ்க்கையில் சில நொடிகள், சில நிமிடங்கள், சில மணித்துளிகள் என்றைக்கும் மறக்க இயலாதவை. அதே போல கதையின் நாயகனுக்கும் நேர்ந்திருப்பது, கதையை தொய்வின்றி நடத்தி சென்றிருப்பது, கடைசியில் வைக்கும் சிறிய அழகிய முடிச்சு இப்படி நன்றாக இருக்கிறது சசி.

இராத்திரி பயணத்தில் தூக்கம் வராது என்ற நாயகி, கதை நாயகன் கதை கேட்டு சொக்கி விட்டாளோ...? ஹஹஹா....

முதல் முயற்சி ... இன்னும் தொடரப்போகும் பல கதைகளுக்கு வலுவான ஆதாரமாக விளங்குகிறது.

என்னைக் கவர்ந்த கவிஞர், மனம் கவர்ந்த கதையாசிரியராகவும் விளங்குவது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.

என் மனமார்ந்த பாராட்டு சசி. மன்றத்தில் முதன் முறையாய் பதித்தமைக்கும் மிக்க நன்றி.

இன்பக்கவி
08-01-2010, 03:47 PM
ரொம்ப நல்லா இருக்கு...
கவிதையில் தொடங்கிய கதை அருமை...
நல்லா எழுதி இருக்கீங்கள்....
வாழ்த்துக்கள்

கீதம்
08-01-2010, 10:10 PM
அழகிய காதல் கதை, உங்கள் கதையின் நாயகி போலவே. தொடர்ந்து எழுத வாழ்த்துகள் சசிதரன் அவர்களே.

சுகந்தப்ரீதன்
11-01-2010, 09:57 AM
எல்லோரும் சொன்னதுபோல் எதிர்பார்த்த முடிவுதான் என்றாலும் முதல்கதை என்று சொல்ல முடியாத அளவுக்கு எழுத்தில் காட்சிகளின் வர்ணிப்புகள் கண்முன் கொண்டு வந்து அருவியை வழிய விடுகின்றன...!!

ரசனையுடன் கூடிய கவித்தனம் கதை முழுதும்.. வாழ்த்துக்கள் கவிஞரே..!!

jayashankar
11-01-2010, 10:38 AM
சசிதரன் அவர்களே!

மிகவும் கவிதைத்துவம் நிரம்பிய காதல் கதை. இதை இப்படித்தான் சொல்லத் தூண்டுகின்றது.

ஒரு பஸ் பயணத்தில் தொடங்கும் கதை பயணத்தில் அமர்களமாக முடிகின்றது...

அப்புறம் கதைக்குத் தலைப்பே தரவில்லை நீங்கள்.

இப்போதுதான் ஒரிவருடைய கதையைப் படித்துவிட்டு, அதிக வசனம் சரியில்லை உங்கள் கதை களனுக்கு என்று கூறினேன்.

ஆனால் இந்தக் கதை களனில் வசனமே உயிர் மூச்சு. அதுவும் கவிதை வரிகளுடன் கூடிய வசனங்கள் அதிகம் இருக்க வேண்டும்.

உங்கள் முதல் கதையே முத்தான கதையாக வந்திருப்பது கண்டு பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.

இன்னும் எழுதுங்கள் சசி.

வாழ்த்துக்கள்

த.ஜார்ஜ்
12-01-2010, 02:28 PM
முதல் கதையில் நினைத்த காதல் கைகூடியதைப் போன்று, சிறுகதை எழுத்தாளராவதற்கு வாய்ப்புகளும் பிரகாசமாகவுள்ளது
தொடர்ந்து எழுதுங்கள்.

பா.ராஜேஷ்
13-01-2010, 09:54 AM
கவிதை நயத்துடன் எழுதிய கதை. மிக நன்றாக எழுதி உள்ளீர்கள் . பாராட்டுக்கள். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் !

கலையரசி
13-01-2010, 10:36 AM
உங்களின் முதல் கதை என்று நம்ப முடியாத அளவுக்கு மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுத வாழ்த்து.

சசிதரன்
16-01-2010, 01:08 PM
ஆரம்பத்தில் எதிர்பார்ப்பைத் தூண்டி, முடிவில் திருப்பம் வைச்சு சிறுகதையிலும் உங்களால் சோபிக்க முடியும் என நிரூபித்து விட்டீர்கள் சசி. பஇப்படியே போனால் மனதைத் தொட்ட உங்கள் கவிதைகள் மறந்துவிடும் போலிருக்கு - தீட்சண்யா அருவிப் பயணத்தை மறந்தது போல..

பாராட்டுகள்

ஹா ஹா... ரொம்ப நன்றி அமரன்... என் முதல் கதைக்கான முதல் பாராட்டு...:)

//இப்படியே போனால் மனதைத் தொட்ட உங்கள் கவிதைகள் மறந்துவிடும் போலிருக்கு - தீட்சண்யா அருவிப் பயணத்தை மறந்தது போல..//

நறுக்குன்னு குத்திட்டிங்களே அமரன்... இனி கவனமா இருக்கேன்...;)

சசிதரன்
16-01-2010, 01:15 PM
நாகர்கோவில் செல்லும் பேருந்தில்...
நங்கை....

கதையுள் கவிதையாய்
கவிதையான கதை...

முடிவு ஊகிக்க முடிகிறது என்றாலும்

தள்ளாட்டமில்லாத அழகு நடை...

சுருக்கமாகச் சொன்னால்..

அருமையா வந்திருக்கு
உங்க முதல் காதல் க(வி)தை.

சிறப்பான வாழ்த்துக்கள்... சசி..

ரொம்ப நன்றி செல்வா...:)

சசிதரன்
16-01-2010, 01:16 PM
ம்ம்ம் நல்லா இருக்கு சசி...

வாழ்த்துக்கள்...

நன்றி ரமேஷ்...:)

சசிதரன்
16-01-2010, 01:16 PM
முதல் கதையே காதல் கதையா? நல்ல சகுனம்.
அழகான உணர்வுகளை சொல்லும் கதை.சிறந்த எழுத்தாளராக இக்கதை உங்களை படம் பிடிக்கிறது.மென்மேலும் வளர்ந்து, சிறக்க வாழ்த்துக்கள்.

ரொம்ப நன்றி ஜனகன்...:)

சசிதரன்
16-01-2010, 01:17 PM
உண்மையில் தீட்சண்யா இருக்காங்களா சசிதரன் அவர்களே....
வாழ்த்துகள் தங்கள் சிறுகதைக்கு...சசிதரன் அவர்களே...நல்லா நாகர்கோவில் போனோம் பேருந்தில்...
கதைக்கு ஒரு நல்ல தலைப்பு கொடுங்க.....

கதைக்குள் வரும் கதை மட்டுமே உண்மை சரண்யா... மற்றவை கற்பனை மட்டுமே...:)

சசிதரன்
16-01-2010, 01:20 PM
மன்றம் வந்தப் புதிதில் அந்த அருவிப் பெண்ணின் முகம் மறைத்த படத்தைப் பதிந்திருந்தீர்கள்.

அதைத்தொடர்ந்து பல கவிதைகள் அருவியாய் கொட்டிக்கொண்டிருந்தது. இன்று கதையாகவும் மாறி அந்த அருவிப்பெண் உங்களை மொத்தமாய் ஆக்ரமித்துக்கொண்டதை சொல்கிறது.

முதல் கதை என சொல்ல முடியாதபடி தேர்ந்த எழுத்து நடை. இயல்பான உரையாடல்கள். செல்வா சொன்னதைப் போல எதிர்பார்த்த முடிவுதானென்றாலும், கொண்டு சென்ற விதம் அருமை. படபடப்பாய், வெள்ளந்தியாய் பேசும் ஒரு உற்சாகப் பெண்ணைக் கண் முன்னேக் காட்டிவிட்டீர்கள் சசி.

கவிதையில் கலக்குவதைப் போல கதையிலும் கலக்கி மேலும் உயரங்களை எட்ட இந்த அண்ணனின் அன்பான வாழ்த்துகள்.

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணா... மன்ற சொந்தங்களின் ஆதரவுடன் நிச்சயம் முயற்சிக்கிறேன்...:)

சசிதரன்
16-01-2010, 01:21 PM
//கவனிக்க வைக்கும் அதே புன்னகை இன்றும் அவளிடம் இருந்தது.// - முதல் முறை கதையைப்படிக்கும் போது இந்த வரியின் முக்கியம் தெரியாமல் இருந்தது. இன்று இரண்டாம் முறையாக படிக்கும் போது தொடர்பு தெரிந்தது.

"ஹ்ம்ம்... மன்னிச்சு விடறேன் போங்க.." - இந்த வாக்கியம் அன்பே சிவம் படத்தில் தன்னை வெட்ட வருபவரிடம் கமல் சிரித்துக்கொண்டே கூறும் வாக்கியத்தை நினைவு கூர்ந்தது.

வாழ்க்கையில் சில நொடிகள், சில நிமிடங்கள், சில மணித்துளிகள் என்றைக்கும் மறக்க இயலாதவை. அதே போல கதையின் நாயகனுக்கும் நேர்ந்திருப்பது, கதையை தொய்வின்றி நடத்தி சென்றிருப்பது, கடைசியில் வைக்கும் சிறிய அழகிய முடிச்சு இப்படி நன்றாக இருக்கிறது சசி.

இராத்திரி பயணத்தில் தூக்கம் வராது என்ற நாயகி, கதை நாயகன் கதை கேட்டு சொக்கி விட்டாளோ...? ஹஹஹா....

முதல் முயற்சி ... இன்னும் தொடரப்போகும் பல கதைகளுக்கு வலுவான ஆதாரமாக விளங்குகிறது.

என்னைக் கவர்ந்த கவிஞர், மனம் கவர்ந்த கதையாசிரியராகவும் விளங்குவது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.

என் மனமார்ந்த பாராட்டு சசி. மன்றத்தில் முதன் முறையாய் பதித்தமைக்கும் மிக்க நன்றி.

உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றிகள் பல பாரதி...:)

சசிதரன்
16-01-2010, 01:22 PM
ரொம்ப நல்லா இருக்கு...
கவிதையில் தொடங்கிய கதை அருமை...
நல்லா எழுதி இருக்கீங்கள்....
வாழ்த்துக்கள்

நன்றி இன்பகவி அவர்களே...:)

சசிதரன்
16-01-2010, 01:22 PM
அழகிய காதல் கதை, உங்கள் கதையின் நாயகி போலவே. தொடர்ந்து எழுத வாழ்த்துகள் சசிதரன் அவர்களே.

நன்றி கீதம்...:)

சசிதரன்
16-01-2010, 01:23 PM
எல்லோரும் சொன்னதுபோல் எதிர்பார்த்த முடிவுதான் என்றாலும் முதல்கதை என்று சொல்ல முடியாத அளவுக்கு எழுத்தில் காட்சிகளின் வர்ணிப்புகள் கண்முன் கொண்டு வந்து அருவியை வழிய விடுகின்றன...!!

ரசனையுடன் கூடிய கவித்தனம் கதை முழுதும்.. வாழ்த்துக்கள் கவிஞரே..!!

ரொம்ப நன்றி சுகந்தப்ரீதன்...:)

சசிதரன்
16-01-2010, 01:25 PM
சசிதரன் அவர்களே!

மிகவும் கவிதைத்துவம் நிரம்பிய காதல் கதை. இதை இப்படித்தான் சொல்லத் தூண்டுகின்றது.

ஒரு பஸ் பயணத்தில் தொடங்கும் கதை பயணத்தில் அமர்களமாக முடிகின்றது...

அப்புறம் கதைக்குத் தலைப்பே தரவில்லை நீங்கள்.

இப்போதுதான் ஒரிவருடைய கதையைப் படித்துவிட்டு, அதிக வசனம் சரியில்லை உங்கள் கதை களனுக்கு என்று கூறினேன்.

ஆனால் இந்தக் கதை களனில் வசனமே உயிர் மூச்சு. அதுவும் கவிதை வரிகளுடன் கூடிய வசனங்கள் அதிகம் இருக்க வேண்டும்.

உங்கள் முதல் கதையே முத்தான கதையாக வந்திருப்பது கண்டு பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.

இன்னும் எழுதுங்கள் சசி.

வாழ்த்துக்கள்

அருமையான பாராட்டிற்கு மிக்க நன்றி ஜெயசங்கர்...:) உங்கள் வார்த்தைகள் ஊக்கமளிக்கின்றன...:)

சசிதரன்
16-01-2010, 01:26 PM
முதல் கதையில் நினைத்த காதல் கைகூடியதைப் போன்று, சிறுகதை எழுத்தாளராவதற்கு வாய்ப்புகளும் பிரகாசமாகவுள்ளது
தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி ஜார்ஜ் அவர்களே...:) உங்களை போன்ற எழுத்தாளர்கள் பாராட்டு பெறுவதில் மிக்க மகிழ்ச்சி...:)

சசிதரன்
16-01-2010, 01:28 PM
கவிதை நயத்துடன் எழுதிய கதை. மிக நன்றாக எழுதி உள்ளீர்கள் . பாராட்டுக்கள். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் !

நன்றி ராஜேஷ்...:)

சசிதரன்
16-01-2010, 01:28 PM
நன்றி கலையரசி அவர்களே...:)

aren
19-02-2010, 02:05 PM
வாவ் அருமையான கதை சசீதரன். முதல் கதை என்று பொய்தானே சொல்றீங்க.

மின்னிதழுக்கு இந்தக் கதையை பரிந்துரை செய்கிறேன்.