PDA

View Full Version : பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை மரணம்muthuvel
07-01-2010, 10:01 AM
FILEகொழும்பில் தனி இடமொன்றில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தந்தை *திருவேங்க*டம் வேலுப்பிள்ளை (86), இன்று காலை மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாகவே இறந்ததாகவும் இலங்கை இராணுவச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சமீபகாலமாக நோய்வாய்பட்டிருந்த வேலுப்பிள்ளைக்கு, எந்த வகையான மருத்துவ உதவிககள் அளிக்கப்பட்டது என்றோ, அல்லது எந்த நோயின் தாக்கம் காரணமாக அவர் இறந்தார் என்பது பற்றியோ இராணுவத் தரப்பு கூற மறுத்துள்ளது.

அவரது உடலை என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்தும் தெளிவாக எதுவும் கூறப்படவில்லை.

வேலுப்பிள்ளை தடுத்து வைக்கப்பட்ட அதே இடத்திலேயே பிரபாகரனின் தாயாரும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நிலையும் பெரும் சந்தேகத்திற்கிடமாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு எந்த வகையான மருத்துவ உதவிகள் கிடைக்கிறது அல்லது மருத்துவ உதவிகள் சரிவரக் கிடைக்கின்றனவா என்பதே மிகுந்த சந்தேகமாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

praveen
07-01-2010, 10:43 AM
இழப்பதற்கொன்றுமில்லை, என்றிருந்த நிலையில் இதற்குப்பிறகும் இனி இழப்பதற்கொன்றுமில்லை என்று நினைத்துகொள்ளவேண்டியது தான்.

அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்வதை தவிர வேறில்லை.

அவர் பிரபாகரனின் தந்தை என்ற ஒரு காரணத்திற்காகவே தடுத்து வைக்கப்பட்டிருந்தார், இனி அவரை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலை அடைந்து விட்டார். கடைசிகாலத்தில் அவரை என்னென்ன பாடுபடுத்தினார்களோ, அவை இனி பத்திரிக்கைகளுக்கு தீனி போடும். தேர்தல் நேரத்தில் இதுவும் அரசியலாக்கப்படும். இன்னும் அவர்கள் பிடியில் மீதம் இருக்கும் பிரபாகரனின் தாயார் அவர்களும், மாமியார் அவர்களும் தான் அடுத்த சோகம் என்பது மனதை கவ்வுகிறது.

எவ்வளவோ அப்பாவி தமிழர்கள் இறந்துபட்டனர், அதில் இவரும் அடக்கம்.

நூர்
07-01-2010, 10:55 AM
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.

அன்புரசிகன்
07-01-2010, 12:02 PM
உலகம் வியந்து பார்த்த தலைவனை படைத்தவர் அவர். அவரது சாவும் இப்படி அமைந்துவிட்டது என்பது தான் துயரத்திலும் துயர் தரும் செய்தி. அவர் இறந்த பின்னராவது நிம்மதியாக இருக்கட்டும். அவரது ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகளும்...

சிவா.ஜி
07-01-2010, 12:18 PM
அன்னாரது ஆத்மா சாந்தியடைய என் பிராத்தனைகளும்.

கலையரசி
07-01-2010, 12:29 PM
காட்டுமிராண்டிகளான சிங்களக் காடையர்களிடம் அகப்பட்டுக்கொண்டு சாவதற்கு முன் எப்படியெல்லாம் துன்பப்பட்டாரோ என்பதை எண்ணும் போது மனது கனக்கிறது. மரணம் அவருக்கு நிம்மதியையே கொடுக்கும்.

அமரன்
07-01-2010, 04:47 PM
வணங்குகிறேன்.

இளசு
07-01-2010, 06:23 PM
அஞ்சலியும் வீரவணக்கமும்!

பாரதி
07-01-2010, 06:37 PM
மிகவும் வருத்தமாக இருக்கிறது.
இனியும் இழக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் இருக்கும் உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Mathu
07-01-2010, 06:37 PM
அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்

ஒருமகனை அப்பாவி தமிழருக்கு சேவை செய்ய கொடுத்ததால்

தனக்கென்று எதுவும் இல்லாமல் பறிக்கப்பட்டவர்.

வணங்குகிறேன் தமிழனாய்

வியாசன்
07-01-2010, 06:39 PM
விடுதலைபற்ற அந்த ஆத்மாவின் சாந்திக்காக பிரார்த்திக்கின்றேன். வீரனை பெற்றவர் கடைசிகாலத்தில் அவல வாழ்க்கை வாழ்ந்தார்.

கீதம்
07-01-2010, 09:07 PM
சித்திரவதையிலிருந்து தப்பியவரைக்கும் நல்லதுதான். அவருக்கு என் அஞ்சலி.

என்னவன் விஜய்
08-01-2010, 12:54 AM
மாவீரனின் தந்தைக்கு என் வீரவணக்கங்கள், அஞ்சலிகள்.

அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Mano.G.
08-01-2010, 01:18 AM
மனம் கனக்கிரது,என்ன செய்ய,
மாவீரனை பெற்ற வீர தகப்பனுக்கு
எனது அஞ்சலி,

மனோ.ஜி

aren
08-01-2010, 01:52 AM
என்னுடைய அஞ்சலிகள்.