PDA

View Full Version : புத்தாண்டுக் கனவு (கனவுக்கு ஹிட்லரே சிரிப்பார்)



M.Rishan Shareef
07-01-2010, 02:56 AM
புத்தாண்டுக் கனவு (கனவுக்கு ஹிட்லரே சிரிப்பார்) (http://rishanshareef.blogspot.com/2010/01/blog-post_05.html)

நிறைந்த கனவுகளின் பாரம் தாங்காது
மனப் பொதி ஒரேயடியாக வெடித்து
அதிர்ஷ்டத்தின் குறியுடனான ஒரு கனவு
கவிதையொன்றுக்கு மழையெனப் பெய்யும்

நாசிக்கடியில் குறு மீசைக்குப் பதிலாக
மீசை வளர்த்துக் கொண்ட ஹிட்லர்
*நீலப் படைகளுக்கு இடையிலும்
*சிவப்புப் படைகளுக்கு இடையிலும்
ஒரே நேரத்தில் நடமாடுவார்

ஒரே இடத்தில் சுழலும் ரூபாய் நாணயத்தில்
தலைப் பக்கத்திலும்
பூ பக்கத்திலும்
மீசை முறுக்கும் ஹிட்லர்
குப்புறக் கவிழ்ந்து
கனவுக்கு மெலிதாகச் சிரிப்பார்

*நீல வர்ணத்தை வானமும் வெறுக்கும்
**பச்சை வர்ணத்தை மரம்,கொடிகள் வெறுக்கும்
*சிவப்பு வர்ணத்தை குருதி வெறுக்கும்
கனவுக்கு ஹிட்லரே சிரிப்பார்

புது வருடத்துக்கு
புதிதாகக் காணும் கனவு
எத்தனை மென்மையானது?

பழைய கனவுக்கு உரித்தானவன் நான்
எவ்வளவு முரடானவன் ?

மூலம் - மஞ்சுள வெடிவர்த்தன (சிங்களமொழி மூலம்) 20091230
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

*நீலமும், சிவப்பும் - இலங்கையில் எதிர்க்கட்சிகளாக இருந்து ஒன்றாகிய தற்போதைய ஆளுங்கட்சியின் நிறங்கள்
** பச்சை - இலங்கையில் எதிர்க்கட்சியின் நிறம்.


நன்றி
# உயிர்மை
# இனியொரு
# நவீன விருட்சம்

jayashankar
10-01-2010, 09:36 PM
இனப்படுகொலைக்கு வித்திட்ட ஹிட்லரை மையப்படுத்தி இலங்கையின் இனப் படுகொலையை ஆட்சியாளர்களின் நிறத்தைக் கொண்டே வெளிப்படுத்திய விதம் அருமை.

ஆம். இந்த நிறங்களின் உண்மையை கூறியிருக்காவிட்டால் இது ஒரு ஹிட்லரைச் சாடும் சாதாரணக் கவிதையாகியிருக்கும்.

அதனை நிறத்தின் வேறுபாட்டை உணர்த்தி சமீப இனப்படுகொலையின் தாக்கத்தை நம் மனதில் ஒரு வடுவாக உணர்த்தியுள்ள கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தனவுக்கும், அதனை அருமையாக மொழொ பெயர்த்துத் தந்த ரிஷான் அவர்களுக்கும் நன்றிகள் பல...

M.Rishan Shareef
20-01-2010, 04:35 AM
அன்பின் ஜெயஷங்கர்,

//இனப்படுகொலைக்கு வித்திட்ட ஹிட்லரை மையப்படுத்தி இலங்கையின் இனப் படுகொலையை ஆட்சியாளர்களின் நிறத்தைக் கொண்டே வெளிப்படுத்திய விதம் அருமை.

ஆம். இந்த நிறங்களின் உண்மையை கூறியிருக்காவிட்டால் இது ஒரு ஹிட்லரைச் சாடும் சாதாரணக் கவிதையாகியிருக்கும்.

அதனை நிறத்தின் வேறுபாட்டை உணர்த்தி சமீப இனப்படுகொலையின் தாக்கத்தை நம் மனதில் ஒரு வடுவாக உணர்த்தியுள்ள கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தனவுக்கும், அதனை அருமையாக மொழொ பெயர்த்துத் தந்த ரிஷான் அவர்களுக்கும் நன்றிகள் பல...//

கவிதையை மிகச் சரியாகப் பொருளுணர்ந்திருக்கிறீர்கள்.
ஹிட்லர் இழைத்த அநீதிகளுக்குக் குறையாத அநீதிகள் ஈழத்திலும் இழைக்கப்பட்டன.

கருத்துக்கு நன்றி நண்பரே!