PDA

View Full Version : இள வயதில்பணம்,



muthuvel
06-01-2010, 10:32 AM
இள வயதில் சம்பாதிக்கும் ,கை நிறைய பணம்,
அது தீனி போடும் இளமைக்கு தலைக்கணம்,
தலைக்கண கர்வத்தால் ,வார்த்தைகள் ஏற்படுத்தும் பிறர் மனதை ரணம் ,
எந்நேரமும் தவறான பாதையை தூண்டும் நம் உள்ளம் ,
அதை தடுத்து நிறுத்தி ,யோசிக்க வேண்டும் இக்கணம் ,
எப்பொழுதும் ,பிறரை மதிக்க வேண்டும் நம் மனம் ,
ஆணவத்தால் வாழ்ந்தால் அதுவே நம்மை ஆக்கிவிடும் பிணம் .....

rajarajacholan
06-01-2010, 11:46 AM
அப்படீன்னா இள வயதில் கைநிறைய சம்பாதிக்க கூடாதுன்னு சொல்றீங்களா? அது தப்பாச்செ.

muthuvel
06-02-2010, 09:28 AM
ஐயோ , கர்வத்தை பற்றி சொன்னேன்

ஆர்.ஈஸ்வரன்
06-02-2010, 09:39 AM
ஐயோ , கர்வத்தை பற்றி சொன்னேன்
பணத்தைச் சொல்லவில்லையா?

சிவா.ஜி
06-02-2010, 11:03 AM
முத்துவேல் சொன்னது சரிதான். மிக இளவயதில் சம்பாதிப்பது என்பது வேறு....அளவுக்கதிகமாய் சம்பாதிப்பது என்பது வேறு.

அப்படி சம்பாதிப்பவர்களில் ஆயிரத்தில் பத்துபேர்தான் அடக்கமாய் இருக்கிறார்கள். 100 ரூபாய் நோட்டை சுருட்டி சிகரெட் குடித்த மென்பொருள் ஊழியரை எனக்குத் தெரியும்.

aren
06-02-2010, 11:05 AM
பணம் சம்பாதிப்பது தவறா அல்லது கர்வத்துடன் இருப்பது தவறா?

பணம் சம்பாதிப்பது தவறு என்று நான் சொல்லமாட்டேன். அந்தப் பணம் திறமையினாலும் கிடைக்கலாமே.

சிவா.ஜி
06-02-2010, 11:08 AM
நிச்சயமாய் திறமைக்குத்தான் ஆரென் கிடைக்கிறது. ஆனால் அதைக் கையாளும் பக்குவம் அந்த வயதில் அவர்களுக்கு இருப்பதில்லை. பெரியவர்களை மதிப்பதில்லை. அதிக பணத்தால் கர்வம் அடைகிறார்கள்.

(வேணுன்னா தனியா ஒரு விவாத திரி தொடங்கலாமா?)

muthuvel
06-02-2010, 11:35 AM
அஞ்சு நட்சத்திரம் ஹோட்டலில் ஆடுவது யார் ?
டேடிங் போவது யார் ? என்பதை கொஞ்சம் யோசியுங்கள் ,