PDA

View Full Version : உலகின் மிக உயர்ந்த கட்டடம் - துபாய்



அறிஞர்
05-01-2010, 02:27 PM
உலகின் மிக உயர்ந்த கட்டடம் துபாயில் இன்று திறப்பு

துபாய் : துபாயில் 160 தளங்களை கொண்ட உலகின் மிக உயரமான கட்டடம் இன்று திறக்கப்படுகிறது. நட்சத்திர ஓட்டல்கள், குடியிருப்புகள், வர்த்தக வளாகங்கள், பொழுது போக்கு மையங்கள் என பலதரப்பட்ட அம்சங்களை கொண்ட 160 அடுக்கு கொண்ட உலகின் மிக உயரமான கட்டடத்துக்கு பர்ஜ் துபாய் என்று பெயரிடப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த கட்டடத்தின் கட்டுமான பணிகள் முடிந்து இன்று திறப்பு விழா காண்கிறது. 2,684 அடி ( 818 மீட்டர்) உயரமுள்ள இந்த கட்டடத்தில் 57 லிப்டுகளும், எட்டு தானியங்கி படிகட்டுகளும் உள்ளன.

அமெரிக்காவின் 101 அடுக்குகள் கொண்ட எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உயரம் 381 மீட்டர்; தைவான் நாட்டில் உள்ள கட்டடத்தின் உயரம் 448 மீட்டர். தற்போது துபாயில் திறக்கப்பட உள்ள கட்டடத்தின் உயரம் 818 மீட்டர். எனவே, இந்த கட்டடம், உலகின் மிக உயர்ந்த கட்டடமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


http://images.businessweek.com/ss/06/03/dubai/image/1burj-dubai.jpg

ஓவியன்
05-01-2010, 02:41 PM
உலகின் மிக உயர்ந்த கட்டடம் துபாயில் இன்று திறப்பு

இன்று அல்ல நேற்றே திறக்கப்பட்டு விட்டது அண்ணா, இந்தக் கட்டடத்தின் பெயரை பேர்ஜ் துபாயிலிருந்து, பேர்ஜ் கலிபா என மாற்றி அறிவித்திருக்கின்றார் துபாயின் தற்போதைய ஷேக் முகமட்...

துபாயின் கனவுக் கட்டடங்களில் ஒன்றான இதன் பெயரை அபுதாபி ஷேக்கின் பெயரைக் கொண்டு அழைப்பதன் பின்னணிதான் விளங்கவில்லை... :)


http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/image020.jpg

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/image021.jpg

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/image022.jpg

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/image023.jpg

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/image024.jpg

ஜனகன்
05-01-2010, 03:25 PM
ஆமாம் உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடம் இதுதான்.நேற்று இக்கட்டடம் திறக்கப்பட்டது.இதில் 100 வது தளத்தை வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவர் சொந்தமாக வாங்கியுள்ளார்.இக்கட்டடத்தில் ஒரு சதுர அடி ஒரு இலட்சம் ரூபா அளவில் விலைபோகின்றதாம்.

மதி
05-01-2010, 03:58 PM
படங்கள் அட்டகாசமாக இருக்கிறது. மன்ற உறவுகள் யாராவது அங்கு வீடு வாங்கியிருந்தால் சொல்லுங்கள். அவரைப்பார்க்கிற சாக்கில் அங்கு போய் தங்கியிருந்துவிட்டு வரலாம்.. :)

அன்புரசிகன்
05-01-2010, 11:51 PM
துபாயின் கனவுக் கட்டடங்களில் ஒன்றான இதன் பெயரை அபுதாபி ஷேக்கின் பெயரைக் கொண்டு அழைப்பதன் பின்னணிதான் விளங்கவில்லை... :)
எல்லாம் மாறும் (b)பையா... எல்லாத்துக்கும் காசு தான் காரணம்.

aren
06-01-2010, 01:13 AM
அபுதாபியின் ஷேக் கலீபா பின் சையது அல் நஹ்யான் துபாய்க்கு பத்து பில்லியன் அமெரிக்க டாலர்களை போன மாதம் கொடுத்து துபாயின் மானத்தை காப்பாற்றியிருகிறார். அதற்கான நன்றிக்கடன் தான் புர்ஜ் கலீபா.

மஞ்சுபாஷிணி
06-01-2010, 05:02 AM
அருமையான படங்களுக்கும் (அறிஞர்) தெளிவான விளக்கங்களுக்கும் (ஆரென்) நன்றிகள்...

Mano.G.
06-01-2010, 05:36 AM
இதின் கட்டுமானத்தில் ஒரு மலேசிய
இந்தியரின் பங்கும் உள்ளது.
இந்த கட்டடத்தின் முழு எஃகு வேலைகள்
அனைத்தும் இந்த மலேசிய இந்தியரின் நிறுவனமே (Ever Sendai) எழுப்பியுள்ளது, அதோடு
உச்சி 260 மீட்டர் கட்டுமானம் இவரது
நிறுவனத்தின் உழைப்பே.
அந்த நிறுவனத்தின் உறிமையாளர்
டத்தோ A.K.நாதன்

http://www.b-i.biz/images/eversendai_web_version.pdf

http://www.emporis.com/application/?nav=company&id=118221&lng=3

http://4.bp.blogspot.com/_UHK0ePnj8sw/SVMB10XfpZI/AAAAAAAAAEM/bi5UCVMkPec/s320/Datoaknathaneversendai.jpg

மன்மதன்
06-01-2010, 05:46 AM
அபுதாபியின் ஷேக் கலீபா பின் சையது அல் நஹ்யான் துபாய்க்கு பத்து பில்லியன் அமெரிக்க டாலர்களை போன மாதம் கொடுத்து துபாயின் மானத்தை காப்பாற்றியிருகிறார். அதற்கான நன்றிக்கடன் தான் புர்ஜ் கலீபா.

இப்போ அந்த கட்டிடம் யாருக்கு சொந்தம்.:rolleyes::rolleyes:

aren
06-01-2010, 05:50 AM
இப்போ அந்த கட்டிடம் யாருக்கு சொந்தம்.:rolleyes::rolleyes:

அதை பலரும் வாங்கியுள்ளனர். ஒவ்வொரு மாடியிலும் பல அலுவலகங்கள் அமைக்கும் வகையில் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றை தனித் தனியாக விற்றிருக்கிறார்கள். பல இந்தியர்களும் அதை வாங்கியுள்ளனர். பலர் பின்னர் நல்ல விலைக்கு விற்கலாம் என்ற நினைப்பில் வாங்கியிருக்கிறார்கள். இப்பொழுது அதன் விலை இறங்கியுள்ளது, ஆகையால் இப்பொழுது அவர்கள் விற்றால் நஷ்டம்தான் ஏற்படும் ஆனால் சில வருடங்கள் கழித்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.

aren
06-01-2010, 05:51 AM
இதின் கட்டுமானத்தில் ஒரு மலேசிய
இந்தியரின் பங்கும் உள்ளது.
இந்த கட்டடத்தின் முழு எஃகு வேலைகள்
அனைத்தும் இந்த மலேசிய இந்தியரின் நிறுவனமே (Ever Sendai) எழுப்பியுள்ளது, அதோடு
உச்சி 260 மீட்டர் கட்டுமானம் இவரது
நிறுவனத்தின் உழைப்பே.
அந்த நிறுவனத்தின் உறிமையாளர்
டத்தோ A.K.நாதன்

வாவ் இது நல்ல செய்தி. இந்த கட்டடத்தில் பல இந்தியர்கள் வேலை செய்துள்ளனர்.

பாரதி
06-01-2010, 03:44 PM
ஷேக் ஜயீத் முக்கிய சாலையில் செல்லும் போதும் வரும் போதும் இக்கட்டிடத்தின் வேலைகளை கவனித்திருக்கிறேன். இத்தனை குறுகிய காலத்தில் இத்தனை பெரிய கட்டிடம் கட்டியதே ஒரு மாபெரும் சாதனையாக கருதுகிறேன். உழைப்பாளிகள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

நேசம்
07-01-2010, 03:38 AM
இதை சுற்றிப் பார்ர்க்க கட்டணம் வேற வசுலிக்கிறார்கள்.