PDA

View Full Version : மரணத்தை கடந்து...சசிதரன்
05-01-2010, 02:08 PM
சிவப்பாய்... கருஞ்சிவப்பாய்...
பரவி கிடக்கும் குருதியிநூடே..
இறந்து கிடப்பவன்...
யாரென்று தெரியவில்லை.

"பையன் வந்தா சுத்தி போடணும்...
ஊர் கண்ணெல்லாம் கொட்டி கெடக்கு..."
மகனின் நலனுக்காய்..
பிராத்திக்கும் தாயோ...

"அண்ணன் வந்ததும் காட்டணும்.."
மருதாணியிட்டு சிவந்த கைகளோடு...
காத்திருக்கும் தங்கையோ...

அவனுக்கு பிடிக்குமென்று...
மல்லிகை பூச்சூடி..
அவன் வரவுக்கு..
பார்த்திருக்கும் மனைவியோ..

"அப்பா எப்போம்மா வருவார்"..
பதிலில்லாத கேள்வியை...
திரும்ப திரும்ப...
கேட்க போகும் குழந்தையோ...

இனி இவன் இல்லை என...
ஏற்றுக் கொள்ள முடியாமல்...
கதறி அழும் சில உறவுகள்...
வரக்கூடும்..
இன்னும் சில நொடிகளில்.

வாகனத்தின் வேகத்தை கூட்டி..
அவ்விடத்தை கடக்கையில்...

என்னுள் ஏற்படும்
ஒரு நிமிட வலி...
யாரோ சிலருக்கு..
வாழ்நாளுக்கான வலி.

பின்னொரு நாளில்..
பிறிதொரு சாலையில்..

சிவப்பாய்... கருஞ்சிவப்பாய்..
பரவி கிடக்கும் குருதியிநூடே..
இறந்து கிடக்கும் என்னை..
கடந்து போய்...
கவிதை எழுதக் கூடும்...
உங்களில் யாரேனும்.

செல்வா
05-01-2010, 04:14 PM
மனுஷ்ய புத்திரனின் கவிதைகளை நினைவூட்டும்
அழுத்த மான கவிதை...

ஒவ்வொருவரின் வலிக்கும் அமர்ந்து அழுது கொண்டிருந்தால்...

மனிதகுலம் இத்தகைய வளர்ச்சிக்கு வந்திருக்காது...

நம்மால் முடிந்தது அந்த ஒரு நிமிட வலிதான்..

எல்லா வலிகளுக்கும் காலம் தான் மருந்து..

வியாசன்
05-01-2010, 05:08 PM
கவிதை நன்றாக உள்ளது. காயங்கள்தான் வாழ்க்கையில் உயர்வதற்கான படிக்கட்டுக்கள். வலிகள்தான் வாழ்த்துக்கள் என்று எடுத்துக்கொண்டால்தான் வாழ்க்கையின் உயரத்தை அடைய முடியும்

கா.ரமேஷ்
06-01-2010, 03:16 AM
நிகழ்காலத்தில் அனைத்தையும் ஒரு அலட்சிய பார்வையோடு பார்ப்பதோடுதான் உலகம் சென்று கொண்டிருக்கிறது,தனக்கென்று எப்பொழுது ஒரு நிகழ்வு வருகிறதோ அப்பொழுதுதான் உலகம்,மனிதர்கள் பற்றிய சிந்தனை தோன்றுகிறது.மனிதநேயத்தை எப்பொழுது தொலைத்தோம் என நாம் ஆராய்வதை விட அதனை கொஞ்சமாவது நிலை நாட்ட முயற்ச்சிப்பதே சிறந்தது.

நல்லதொரு படைப்பை தந்ததற்க்கு பாராட்டுக்கள்.

மஞ்சுபாஷிணி
06-01-2010, 04:33 AM
வித்யாசமான சிந்தனை.... கவிதை வரிகள் படிச்சுக்கிட்டே வரும்போது இறுதி வரிகள் மனதை ஒரு கணம் வலிக்கச்செய்தது உண்மை... இயந்திர உலகில் இப்படித்தான் வாழ்க்கை மிக சாதாரணமாகி விடுகிறது எல்லோருக்குமே... நன்றிகள் சசிதரன்...

சுகந்தப்ரீதன்
13-01-2010, 08:05 AM
சமீபத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த படுகொலை சம்பவத்தை நினைவூட்டும் விதமாய் உங்களின் கவிதை அமைந்திருக்கிறது..!!

காலசுழற்ச்சியில் எதுவுமே கடந்து போகும்..!! இன்றைய யதார்த்த வாழ்வில் நேற்றைய மக்கள் இன்றைய மாக்களாகி நாளைய மனிதர்களாவார்கள் என்ற நம்பிக்கையுடன் நானும் கடந்து போகிறேன்..!!

நல்லதொரு கவிதை... வாழ்த்துக்கள் சசி..!!

பா.ராஜேஷ்
15-01-2010, 09:36 AM
ஆழமான அருமையான கவிதை. பாராட்டுக்கள்

சசிதரன்
16-01-2010, 12:56 PM
மனுஷ்ய புத்திரனின் கவிதைகளை நினைவூட்டும்
அழுத்த மான கவிதை...

ஒவ்வொருவரின் வலிக்கும் அமர்ந்து அழுது கொண்டிருந்தால்...

மனிதகுலம் இத்தகைய வளர்ச்சிக்கு வந்திருக்காது...

நம்மால் முடிந்தது அந்த ஒரு நிமிட வலிதான்..

எல்லா வலிகளுக்கும் காலம் தான் மருந்து..

மனமார்ந்த பாராட்டிற்கு நன்றிகள் பல செல்வா...[:)]

சசிதரன்
16-01-2010, 12:57 PM
கவிதை நன்றாக உள்ளது. காயங்கள்தான் வாழ்க்கையில் உயர்வதற்கான படிக்கட்டுக்கள். வலிகள்தான் வாழ்த்துக்கள் என்று எடுத்துக்கொண்டால்தான் வாழ்க்கையின் உயரத்தை அடைய முடியும்

நன்றி வியாசன்..[:)]

சசிதரன்
16-01-2010, 12:59 PM
நிகழ்காலத்தில் அனைத்தையும் ஒரு அலட்சிய பார்வையோடு பார்ப்பதோடுதான் உலகம் சென்று கொண்டிருக்கிறது,தனக்கென்று எப்பொழுது ஒரு நிகழ்வு வருகிறதோ அப்பொழுதுதான் உலகம்,மனிதர்கள் பற்றிய சிந்தனை தோன்றுகிறது.மனிதநேயத்தை எப்பொழுது தொலைத்தோம் என நாம் ஆராய்வதை விட அதனை கொஞ்சமாவது நிலை நாட்ட முயற்ச்சிப்பதே சிறந்தது.

நல்லதொரு படைப்பை தந்ததற்க்கு பாராட்டுக்கள்.

மிகவும் நன்றி ரமேஷ்...[:)]

சசிதரன்
16-01-2010, 01:00 PM
வித்யாசமான சிந்தனை.... கவிதை வரிகள் படிச்சுக்கிட்டே வரும்போது இறுதி வரிகள் மனதை ஒரு கணம் வலிக்கச்செய்தது உண்மை... இயந்திர உலகில் இப்படித்தான் வாழ்க்கை மிக சாதாரணமாகி விடுகிறது எல்லோருக்குமே... நன்றிகள் சசிதரன்...

நன்றி மஞ்சுபாஷிணி...[:)]

சசிதரன்
16-01-2010, 01:01 PM
சமீபத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த படுகொலை சம்பவத்தை நினைவூட்டும் விதமாய் உங்களின் கவிதை அமைந்திருக்கிறது..!!

காலசுழற்ச்சியில் எதுவுமே கடந்து போகும்..!! இன்றைய யதார்த்த வாழ்வில் நேற்றைய மக்கள் இன்றைய மாக்களாகி நாளைய மனிதர்களாவார்கள் என்ற நம்பிக்கையுடன் நானும் கடந்து போகிறேன்..!!

நல்லதொரு கவிதை... வாழ்த்துக்கள் சசி..!!

நன்றி சுகந்தப்ரீதன்... நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் பாராட்டுக்களை பெறுவதில் மிக்க மகிழ்ச்சி...[:)]

சசிதரன்
16-01-2010, 01:02 PM
ஆழமான அருமையான கவிதை. பாராட்டுக்கள்

நன்றி ராஜேஷ்...[:)]

இன்பக்கவி
23-01-2010, 02:42 PM
என்னுள் ஏற்படும்
ஒரு நிமிட வலி...
யாரோ சிலருக்கு..
வாழ்நாளுக்கான வலி.

இந்த கவிதையின் முழு அர்த்தம் எனக்கு மட்டுமே சரியாய் போனது...
மறுநாள் கிருஸ்துமஸ் விழா...இன்னும் அக்கா துணி எடுக்க வரவில்லையே என்று என் அக்காவிற்காக காத்துகிடக்க வந்ததோ ஒரு அதிர்ச்சி செய்து..
பத்து வருடம் கழிந்தும் மறக்க முடியவில்லை அவள் இழப்பை...
மீண்டும் என் அக்காவை நினைத்து அழவைத்து விட்டீர்கள்...
அக்கா எங்கே இருக்க நீ???.....????