PDA

View Full Version : மழையும்... ஒரு கோப்பை தேநீரும்...



சசிதரன்
05-01-2010, 02:06 PM
ஓர் பெருமழைக்கான அத்தனை
அறிகுறிகளுடனும்...
தூற துவங்கியிருந்தது...
அந்த மாலைப் பொழுது...

ஒரு கோப்பை தேநீரும்...
மழை ரசிக்கும் மனமுமாய்..
சன்னலோரமாய் அமர்ந்திருந்தேன்..

தூறல் வலுத்து...
பெருமழை தொடங்கிய சமயம்...

இதயத்தில் அதிர்வுகளை
ஏற்படுத்தியபடியே..
அலைபேசி திரையில்...
ஒளிர்ந்தது உன் பெயர்...

நீண்ட நெடு நாட்களுக்கு
பிறகான உன் அழைப்பு அது..

கனத்த மௌனம் சூழ்ந்த
என் தனிமையை...
உடைத்து..
பேச துவங்குகிறேன்.

என் மௌனங்களை...
உன் வார்த்தைகள்..
விழுங்கி கொண்டிருந்தன..

நீண்ட உரையாடலுக்கு பின்
சந்திக்க வேண்டுமென...
வார்த்தைகளை நிறுத்தினாய்..
இப்பொழுது மௌனம்...
இருவரையும் விழுங்கிக் கொண்டிருந்தது.

நீடித்த மௌனம்...
மிக தெளிவாய் உணர்த்தியது...
முடிவுக்கான முன்னுரை..
எழுதப்பட்டதை..

முடிவுரை எழுத...
இருவரும் நாள் குறித்தோம்...
பின் பேச ஏதுமற்று...
தொடர்பு துண்டிக்கப்பட்டது.

ஓர் பெருமழை ஓய்ந்திருந்தது.
சன்னல் கம்பிகளில்..
துளிர்த்திருந்த மழைத்துளிகளை...
விரல்களில் அழுந்த துடைத்து...
விலகி நடக்கிறேன்.

ஒரு கோப்பை தேநீர்...
அப்படியே இருக்கிறது

ஓவியன்
05-01-2010, 02:22 PM
வெளியே ஓய்ந்து போன மழை,
கவி நாயகனின் இதயத்திலிருந்து,
வாசகனான என்னைத் தொற்றியதில்
இந்தக் கவிதை வெற்றியடைகிறது....

அவ்வாறே கவிதை நாயகனின்
வாழ்க்கையும் வெற்றியடையட்டும்....

முடிவுக்கான முன்னுரை காலவதியாகி.......!!

ஜனகன்
05-01-2010, 03:11 PM
மழை ஓய்ந்தும், மனதில் பாரம் குறையவில்லை.
அருமையாக இருந்தது கவிதை.இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

செல்வா
05-01-2010, 04:08 PM
மேகம் மண்ணில் இறக்கி வைத்த பாரம்
பண்ணாகி இப்போது
என் மனதில் ....

ஓவியனின் இறுதிவரிகள் நிஜமாகட்டும்.

சுகந்தப்ரீதன்
12-01-2010, 11:57 AM
புரிந்து கொள்ளாமலே பிரிந்து போகும் உள்ளங்கள் அதனால் மறுத்து அல்லது மரித்து போகும் உணர்வுகள் அதை அழுந்த துடைக்கும் விரல்கள் மூலம் உணர்த்திய வரிகள் என்று வலியை உணர வைத்த கவிதை..!!

வலிகள் மென்மேலும் பரவாதிருக்கட்டும்..!!

பா.ராஜேஷ்
15-01-2010, 10:05 AM
அந்த மழை நேரம் வானத்தை தெளிவு படுத்தி உம்மனத்தில் மேக மூட்டத்தை உண்டு பண்ணியதோ!

சசிதரன்
16-01-2010, 01:03 PM
நன்றி ஓவியன், ஜனகன், செல்வா, சுகந்தப்ரீதன் மற்றும் ராஜேஷ்...[:)]

இன்பக்கவி
23-01-2010, 02:35 PM
உங்கள் கவிநயம் மிக்க வரிகள் உணர்த்தியது ஒரு பிரிவு
மனதில் வலியை உண்டாகுகிறது..
நன்றாக இருக்கு வாழ்த்துக்கள்..