PDA

View Full Version : அன்பு -என் கவிதை



muthuvel
05-01-2010, 08:49 AM
உன் நெஞ்சம் நிறைந்த அன்பை பிறருக்கு காமி,
அந்த அன்பால் ,மலர்ச்சி பெரும் இந்த பூமி,
தேவை இல்லை தெருக்கு தெரு சாமி ,....

செல்வா
05-01-2010, 10:11 AM
அன்பு - என் கவிதை
என்ற தலைப்பே கவிதையாக...
அன்பு அனைவரின் கவிதையாகட்டும்...

காதல் கவிதைகளில்
கை(க)வரப் பெற்ற வார்த்தைகள்...
விளையாடிவிட்டாதாய் தோன்றுகிறது...
இன்னும் கொஞ்சம்
முயற்சிக்கலாமோ....?

வாழ்த்துக்கள்... முத்துவேல்...

மஞ்சுபாஷிணி
06-01-2010, 04:38 AM
அன்பில் நனைந்து
அன்பில் அமிழ்த்தி
அன்பில் நித்தம்
அன்பாய் மலர்ந்து
அன்பே சிவமாகும்
புத்தம் புதியதாக்கும்
யுத்தமுள்ள இப்பூமி

அருமையான வரிகள் நன்றிகள்

muthuvel
06-01-2010, 07:11 AM
அன்பில் நனைந்து
அன்பில் அமிழ்த்தி
அன்பில் நித்தம்
அன்பாய் மலர்ந்து
அன்பே சிவமாகும்
புத்தம் புதியதாக்கும்
யுத்தமுள்ள இப்பூமி

அருமையான வரிகள் நன்றிகள்

நன்றி சகோதரி

ஜனகன்
06-01-2010, 08:18 AM
அருமை, குறிகிய வரிகளில் உணர்வை தொடும் கருத்துக்கள்.தொடருங்கள் வாழ்த்துகிறேன் முத்துவேல்.

அக்னி
06-01-2010, 09:09 AM
கொடுக்கத்தாலும் பெற்றாலும்
திகட்டாத உணர்வுகளில்
முதன்மையானது அன்பு.

அன்பூ மலர்ந்தால்,
வன்முறைகள் அற்றுப்
பூமி மாண்பு பெறும்.

தெருவுக்குத் தெரு,
சாமியே ஆசாமிகளைத் தேடி வருவார்.

பாராட்டுக்கள் முத்துவேல் அவர்களே...

muthuvel
29-01-2010, 03:00 AM
பாராட்டிய அனைவர்க்கும் நன்றி