PDA

View Full Version : மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்!



muthuvel
05-01-2010, 08:10 AM
ஒரே மாதிரியான செயல்களாலும், அனுபவங்களாலும் வாழ்க்கை சலிப்படைந்து விடாமல் இருக்க
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை
உருவாக்கிக் கொள்ளுங்கள்.
***************
உங்களது அன்றாட
நிகழ்வுகளைக்கூட சிற்சில மாறுதல்களுடன்
வெவ்வேறு விதமாக பதிவு செய்யுங்கள்.
***************
எப்பொழுதும் சுறுசுறுப்பாக எதாவது ஒரு செயலைச்
செய்து கொண்டிருங்கள்.அந்தப் பழக்கம் உங்களை சலிப்படையாமல் இருக்கச் செய்யும்.
***************
ஒரெ மாதிரியான செயல்கள் உங்களை போரடிக்கச் செய்யாமல் இருக்க இடையிடையே வெவ்வேறு வேலைகளின் பக்கமும் கவனம் செலுத்துங்கள்.
***************
நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசியுங்கள்.
***************
நகைச்சுவை உணர்வுடன் சந்தோஷமாகப் பேசுங்கள்.
***************
நல்ல நகைச்சுவைப் புத்தகங்களைப் படித்து மனம் விட்டுச் சிரியுங்கள்.
***************
மன இறுக்கத்தையும் சோர்வினையும் மாற்றிக்கொள்ளுங்கள்.
***************
மகிழ்ச்சி உங்கள் வசமாகும்.
***************
நன்றி நாகை.எஸ்.பாலமுரளி.சென்னை.

ஜனகன்
05-01-2010, 08:51 PM
அனைத்து வார்த்தைகளும் அர்த்தமுள்ளது. தாங்கள் படித்து பயன்பெற்ற வற்றை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

aren
06-01-2010, 03:48 AM
அனைத்தும் நல்ல விஷயங்கள். முயன்று பார்ப்பவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.

மஞ்சுபாஷிணி
06-01-2010, 04:36 AM
அருமையான பகிர்வு நன்றிகள் முத்துவேல்...

ஆன்டனி ஜானி
27-10-2010, 04:35 AM
உங்களுக்கு ரொம்ப நன்றி.. நானும் செய்து பார்க்கிறேன். ரொம்ப நன்றி இனியவரே!

பூங்குழலி
28-10-2010, 10:38 AM
வாழ்க்கை இனிக்க கூறிய வழிகள் அனைத்தும் மிகச் சிறப்பானவையே. பகிர்வுக்கு நன்றி! நண்பரே.

வல்லம் தமிழ்
28-10-2010, 01:09 PM
நகைச்சுவை உணர்வு அவசிய தேவை தான் ஆனால் மனம் துன்பத்தில் மூழ்கி இருக்கும் போது எப்படி சிரிப்பது?அந்த வித்தை கற்று கொடுத்தால் நலம்

sures
17-11-2010, 03:24 PM
மகிழ்ச்சியாக வாழ சில வழிகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.