PDA

View Full Version : நாய் காதல் போன்றது இந்த நகரத்துக்காதல்



Ravee
03-01-2010, 03:46 AM
நாய் காதல் போன்றது இந்த நகரத்துக்காதல்

( என் நீண்ட நாள் ஆசை, வசன நடையில் ஒரு கதை கவிதை எழுத . இன்று அந்த ஆசை நிறைவேறியது. உங்கள் பின்னூட்டங்கள் என்னை சீராக்கும் )


http://www.youngexplorers.net/Dogs/disco.jpg


நமது நாயகன் ஒரு
மேலாண்மை திறன்
பகுதி நேர பயிற்சியாளர்
ஊருக்கு உபதேசம்
வயிற்று பிழைப்புக்கு ஒரு வழி

காலையில் ஏழு மணி
கை உதறி கால் உதறி
கண்ணாடி முன் நின்று
கணநேரம் தலை கோதி
முகவாய் கட்டை சொரிந்து
முள்ளான தாடி வழித்து
பார்க்கையிலே மணி எட்டு
அவசரமாய் குளித்து
அணிந்து கொள்ள சட்டைகளை
மெல்ல முகம் சுளிக்க
முகர்ந்து பார்த்து ஒன்றுக்கு
மனமாய் சென்ட் அடித்தான்
பைக் எடுத்த பத்தே நிமிசத்தில்
காத்திருந்த இடமோ பஸ் ஸ்டாப்


கதாநாயகன் காத்திருக்க
கவிதையின் நாயகியை பார்ப்போம்
அழகான முகம் இருக்க
அவதாரமாய் வண்ணம் பூசி
ஆடி அசைந்து வந்தாள்
எத்தனை பேர் தன்னை
ஏற இறங்க பார்த்தார் என்று
கை கண்ணாடி வழி
கணக்காக கணக்கெடுத்தாள்
பல்சர் பைக்கையும் பல் இளிக்கும் பையனையும்
பார்த்தும் பார்க்காமல் வரும்
பஸ் பார்த்து திரும்பி நின்றாள்


வந்த பஸ்ஸில் வாசல்
படி வரை கூட்டம்
வழி இல்லாமல் ஏறி இறங்க
அறுந்தது செருப்பு
வந்தான் நம் நாயகன்
நான் அந்த வழிதான் போறேன்
வாங்க என வழிந்தான்
வழி இல்லை நாயகி ஏறிக்கொண்டாள்
கொடி மெதுவாய் கொம்பில் படர்ந்தது
அலுவலகம் வந்தவுடன்
அரை மனதாய் பிரிய,
கடமையாய் செருப்பு என்றான் அவன்
பார்த்துக்கொள்கிறேன் என்றாள் அவள்
அலுவலகத்தில் அழகுக்கு
அடிமைகள் இருக்க மாட்டார்களா என்ன ?

அலுவல் முடிந்து திரும்பி வந்தாள்
வாசலில் அவன் !!!
சுற்றிலும் எட்டு பத்து சிகரெட்டுகள்
கனநேரம் காத்து இருந்தான் போலும்
இந்த முறை அவன் சொல்லாமலே
ஏறிக்கொண்டாள் அவள் - உரிமையாய்
ஒருவாரம் இந்த பணி
தொடர்கதையாய் தொடர்ந்தது
பின்னர் நிரந்தரம் ஆனது


அன்று மாலை திரும்பும் நேரம்
அவசரமாய் போகனுமா - அவன்
அவசியம் இல்லை - அவள்
காற்று வாங்க இருவரும் கடற்கரையில்
கைகள் இணைந்தன
அவன் கன்னத்தை தொட்ட போது
திடீர் என வெட்கப்பட்டாள்
வாழ்க்கையில் முதல் முறையாய்


தன் கை விரல் மோதிரத்தை
அவள் கைகளில் போட்டு விட்டு
காதலிக்கிறேன் உன்னை என்றான்

" நீ என் வாழ்வில் வந்த புது வசந்தம்
எப்படி நீ என்னுள் வந்தாய் " என்றான்.


மோதிரத்தை வாங்கிக்கொண்டாள்
பதில் வரவில்லை - தன்
தொலை பேசி எண் கொடுத்தாள்
உன் முழு விவரம் சொல்
பார்க்கலாம் என்றாள்
இரவில் ஆரம்பித்த பேச்சு
விடிந்ததும் ஒரு முடிவுக்கு வந்தது
காதலிப்போம் என்று ..........


ஒரு மாதம் சாட்டிங்
ஒரு மாதம் டேட்டிங்
ஒரு மாதம் மேட்டிங்
முடிவு நர்சிங் ஹோமில்
மொத்தமாய் பணம் கொடுத்தான்
எல்லாச்செலவுகளுக்கும்
பின்னர் ஒரு மாதமாய்
காணவில்லை அவளை
அவள் தொலை பேசியில்
எப்போது அழைத்தாலும் ஒரே பதில்
நீங்கள் அழைத்த எண் உபயோகத்தில் இல்லை


ஒருநாள் மாலை
நட்சத்திர விடுதி ஒன்றில்
அலுவல் வேலையாய் போனபோது
அங்கே கண்டான் அவளை
அருகே ஐம்பது வயதில் ஒருவர்
ஆடம்பரமாய் ஒரு கார்
அழகு பதுமையாய் அவள்
அவனை பார்த்தவுடன் அருகே வந்தாள்
நல்லா இருக்கியா ஒரு கேள்வி கேட்டாள்
பதிலுக்கு அவன் கேட்கவில்லை
பார்வையிலே தெரிந்தது
அவள் மிக நன்றாய் இருந்தாள்
என்ன இதெல்லாம் என்றான்
இனி இதுதான் என் வாழ்க்கை என்றாள்
இதெல்லாம் முடியுமா உன்னால் என்றாள்
கைகள் வைர மாலையை
தடவிக்கொண்டு இருந்தது
அப்போது நான் என்றான்
என் வாழ்க்கையில் விடுபட்ட பக்கம் என்றாள்


நொந்து போனான் மனம் வெந்து போனான்
உண்மைகளை அவருக்கு சொல்வேன் என்றான்
சிரித்தாள் - அவருக்கு நான் ஒன்றும்
முதல் பத்தினி இல்லை
அவருக்கு உண்மைகள் தேவையும் இல்லை
நாகரிக சமுதாயத்தில்
அழகான கார் ஆடம்பரமான உடுப்பு
அழகான பெண் இது எல்லாம் அவசியம்


அவள் பேசிக்கொண்டு இருக்கும்போதே
விழுந்தது ஒரு அடி கன்னத்தில்
விளைவு வீதியில் எறியப்பட்டான் அவன்
அடுத்த அரை மணி நேரத்தில்
அவன் மேலாளரிடம் இருந்து அழைப்பு
அவன் வேலை போனது
அவன் நடத்தையால்

ஒரு மாதமாக கடற்கரையை அளந்தான்
எல்லா மதுபானங்களுக்கும் அறிமுகம் ஆனான்
அவன் நிழல் கூட இரவில் இருப்பதில்லை
புகை எப்போதும் உடன் இருக்கும்
இப்படியாக போனது அவன் வாழ்க்கை


புயல் கடந்த பூமியில் புதியவள் வரும்வரை
புதியவளை கண்டான் ஒரு நாள் ரயிலடியில்
இப்போது கடமையாக குளித்து
உடை மாற்றி காத்திருக்கிறான்
புதியவள் வரும் ரயிலுக்காக
இன்றைக்கு எப்படியும் சொல்லி விடுவான்

" நீ என் வாழ்வில் வந்த புது வசந்தம்
எப்படி நீ என்னுள் வந்தாய் "

என்று................


காதல் போய் காதல் வருவது
நகரத்து வாழ்வில் சகஜம்
பருவத்தில் இணை சேர
பல்லை காட்டி, வாலாட்டி
விஷயங்கள் முடிந்த பின்னே
ஆளுக்கொரு திசையாய் போகும்

நாய் காதல் போன்றது இந்த நகரத்துக்காதல்.

Ravee
11-01-2010, 02:44 PM
ம்ம், இதில் ஏதோ குறை உள்ளது போலத்தெரிகிறது, ஒருவேளை தலைப்பு யாரையும் காயப்படுத்தியதோ.

சிவா.ஜி
11-01-2010, 03:49 PM
குறையொன்றுமில்லை ரவீ. கவிதைக் கதையல்லவா...ஆர அமர வாசித்து பின்னூட்டமிடுவார்கள். ஒருமாதம் சாட்டிங், ஒருமாதம் டேட்டிங், ஒருமாதம் மேட்டிங் முடிந்துவிட்டு காதலி வயிற்றைக் கழுவிய காதலன், மீண்டும் எந்த தகுதியில் அவளை அடைய எண்ணினான்.

முதல் முயற்சிக்கு வாழ்த்துகள் ரவீ. இன்னும் கனமான கருவை எடுத்துக்கொண்டு கையாண்டீர்களானால் இன்னும் அருமையாக இருக்கும்.

Ravee
11-01-2010, 04:42 PM
ம்ம் உண்மை தான் சிவா , இப்போது நம் நகரங்களில் தனக்கு மாற்றுப்பால் சிநேகிதம் இல்லாவிட்டால் ஒரு குறையாய் புலம்பும் ஒரு மனநிலை நம் இளைய சமுதாயத்திடம் வந்து விட்டது. இன்னும் கொஞ்ச காலத்தில் தன் பிள்ளைகளுக்கு மாற்றுப்பால் நண்பர்கள் இல்லையே என்று வருத்தப்படும் மேற்க்கத்திய மனப்பான்மை பெற்றவர்களுக்கும் வந்து விட கூடாது.

jayashankar
11-01-2010, 09:36 PM
மிகவும் அருமையான கம்பாஸிடர் கவிதை.

நல்ல கரு இருந்தும், அதற்கேற்ற தலைப்பிருந்தும், கொண்டு சென்ற வார்த்தை ஜாலங்கள் சரிவர இருந்தும். கருத்துகள் கோர்வையாக இருந்தும், ஒரு வழக்கமான மிகவும் எளிமையான பாணியாக இயற்றியிருப்பதால் இந்தக் கவிதை வரவேற்பை பெறவில்லையோ என்று எண்ணுகின்றேன்.

மிகவும் உண்மை. இன்றைய நகரக் காதல் நாய்க்காதலைப் போல சீசன் காதலாகத்தான் மாறிபோய் விட்டது.

அதுவும் மேலை நாட்டு மோகம் அவர்களின் நல்ல விசயங்களை கடைப்பிடிக்காமல் , சில சாக்கடை எண்ணங்களை ஏன் இன்றைய சில இளைய சமுதாயங்கள் கடைபிடிக்கின்றன என்றுதான் தெரியவில்லை.

ஆனால் பல இளைஞர்கள் இப்படியில்லை. தங்களின் தராதரம் அறிந்து வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது அதுவும் மற்ற நாட்டுக்காரர்களைப் போலில்லாமல் தனி பாணி அமைத்து முன்னேற முயன்று வெற்றியும் பெற்று வருகின்றார்கள்...

எனினும். அடுத்த முறை முயலுங்கள். நிச்சயம் வெற்றி உங்கள் கையில்.

இது கன்னிமுயற்சியாகவே தெரியவில்லை. மிகவும் அருமை.

இப்படிப்பட்ட கம்பாஸிடர் கவிதைகளில் தாக்கம் அதிகமிருக்க வேண்டும். ஏனெனில், உரைநடையை திரித்து கவிதையாக்குவதால், தாக்கமில்லாதிருப்பின் இப்படிப்பட்ட கவிதைகளை ரசிக்க முடியாமல் போகக்கூடும்..

நன்றிங்க ரவி....

Ravee
12-01-2010, 01:47 AM
ம்ம் உண்மை ஜெயசங்கர்,

பலர் பார்க்கும் தின பிரச்சனை இது என்பதால் பலருக்கு இது சாதாரணமாக போய் இருக்கலாம். ஆனால் இதன் சீர்கேடு அதிகம். மிக விரைந்து ஒரு கலாச்சாரத்தை அழிக்கும் ஒரு நஞ்சுக்கொடி போன்றது இத்தகைய மனப்போக்கு.

இன்பக்கவி
23-01-2010, 03:38 PM
ரவி அண்ணா
எங்க காணாம போய்டீங்கள்...:mad:
வந்து ஒழுங்கா கவிதை போடுங்கள்