PDA

View Full Version : ஹிந்தி இலக்கணம் நிறைவு பெற்றது!பாரதி
02-01-2010, 02:11 PM
அன்பு நண்பர்களே,

பல வருடங்களுக்கு முன்னர் மதிப்பிற்குரிய ஹிந்தி ஆசிரியர் இரா.சுதா அவர்கள் ஹிந்தியைக் கற்றுத்தரும் போது, இலக்கணத்தின் அவசியத்தைக்குறித்து பெரிதும் வலியுருத்துவார். வேலைக்கு சேர்ந்த பின்னர் நான் படித்தது என்னவோ வாரம் இருநாள் மாலை நேர வகுப்புதான் என்றாலும் கூட பெரிதும் சிரத்தை எடுத்து எங்களுக்கு பாடம் நடத்துவார். இந்த தருணத்தில் அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எந்த ஒரு மொழிக்கும் இலக்கணம் இன்றியமையாதது. முறையான இலக்கணப்படி அமையப்பெற்ற எந்த ஒரு படைப்பும் படிப்பதற்கு நன்றாக இருக்கும். இங்கு அவர் கற்றுத்தந்த முறையில் ஹிந்தி இலக்கணப்பாடங்களை தட்டச்சி வழங்கப்போகிறேன். ஹிந்தி இலக்கணத்தை ஓரளவுக்கு அறிந்து கொள்ள இது உதவும் என்று எண்ணுகிறேன்.

ஏறத்தாழ 60 பாடங்களை உடைய இப்பதிவை நேரம் கிடைக்கும் சமயத்தில் தட்டச்சி பதிவிடுவேன்.

தமிழ்மன்றத்தில் ஹிந்தியை கற்றுக்கொடுப்பதற்காக நண்பர் லியோ மோகனால் ஆரம்பிக்கப்பட்ட திரி : (முழுமை பெறவில்லை)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10370

தமிழ்மன்றத்தில் சமஸ்கிருதத்தை கற்றுக்கொடுப்பதற்காக நண்பர் லியோ மோகனால் ஆரம்பிக்கப்பட்ட திரி : (ஹிந்தி எழுத்துகளையும் உச்சரிப்பையும் காண உதவும்)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10137
http://www.tamilmantram.com/vb/photogal/images/83/large/1_hindi.JPG
நான் தட்டச்சுவதிலோ, கூறுவதிலோ பிழை இருப்பின் கூறுங்கள் நண்பர்களே. நன்றி.

ஓவியன்
02-01-2010, 02:50 PM
நல்ல முயற்சி, பலருக்கும் பயனாக இருக்கும் மனதார்ந்த வாழ்த்துகள் அண்ணா..!!

பாரதி
02-01-2010, 04:08 PM
ஊக்கத்திற்கு நன்றி ஓவியன்.
நண்பர் லியோமோகனின் திரியையும் பார்வையிடுங்கள்.

பாரதி
03-01-2010, 12:15 AM
கூட்டெழுத்துகளை உருவாக்குதல்
விதி : 1
ஒரு மெய்யெழுத்தின் கீழ் மற்றொரு மெய்யெழுத்தை எழுதினால் மேலுள்ள மெய்யெழுத்தை ஒற்றெழுத்தாகவும் கீழுள்ள மெய்யெழுத்தை உயிர்மெய் எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.
உதாரணம் :पक्का - பக்கா


விதி: 2
ஒரு மெய்யெழுத்தை செங்குத்து வசத்தில் முன்பாதியை மட்டும் எழுதினால் அதை ஒற்றெழுத்தாக உச்சரிக்க வேண்டும்.
உதாரணங்கள் :
ன் + த = न्त -ன்த
க்+ த = क्त க்த
த்+ய = ध्य த்ய

விதி : 3
“ र ” வை உயிர்மெய் எழுத்தாக உச்சரிக்காமல் ஒற்றெழுத்தாக உச்சரிப்பதற்கு உபயோகப்படுத்தும் குறியீட்டைப் பற்றி மிகத்தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். எத்தனை கூட்டெழுத்துகள் இருந்தாலும் “ர்”க்குறிய குறியீடுதான் முதலில் உச்சரிக்கப்பட வேண்டும்.
உதாரணம் :भर्स्ना - பர்ஸ்னா

விதி : 3அ
சில குறியீடுகளை சேர்ப்பதன் மூலமும் கூட்டெழுத்துகள் உருவாக்கப்படுகின்றன. இவைகள் பெரும்பாலும் அநேகமாக “र” க்காகவே உபயோகப்படுத்தப்படுகின்றன.
உதாரணங்கள் :
ம்+ர = म्र ம்ர
க்3+ர = ग्र க்3ர
க்4+ர = ध्र க்4ர
த்3+ர = द्र த்3ர


விதி : 4
முற்றிலும் புதிய எழுத்துகள் அமைப்பதன் மூலமும் கூட்டெழுத்துகள் உருவாக்கப்படுகின்றன.
உதாரணங்கள்:
த்+ய = द + य = द्य த்ய
ஜ்+ஞ = ज् + ञ = ञ्ज ஜ்ஞ
க்+ ஷ= क्+ ष = क्ष க்ஷ

மன்மதன்
03-01-2010, 05:36 AM
நல்ல முயற்சி .. பாராட்டுகள் பாரதி..

selkaps
03-01-2010, 10:04 AM
மிக நல்ல முயற்சி

பாரதி
03-01-2010, 02:26 PM
நன்றி மன்மதன். நன்றி செல்கப்ஸ்.

பாரதி
04-01-2010, 05:45 AM
IMPERATIVE MOOD SENTENCES
கட்டளை வினை வாக்கியங்கள்

கட்டளை வினை வாக்கியங்கள் II Person (முன்னிலை) அடிப்படையில் கற்கப்படுகின்றன.

II Person singular-க்கு அடிப்படை வினைச்சொல் அப்படியே உபயோகப்படுத்தப்படுகிறது.

உதாரணம்:
तू जा । - நீ போ(டா / டி)
तू लिख । - நீ எழுது (டா / டி)

II Person பன்மையில் तुम , आप ஆகிய இரண்டு பிரதி பெயர்சொற்களும் உபயோகப்படுத்தப்படுகின்றன.

1. “तुम” என்ற பிரதி பெயர்ச்சொல்லுக்கு அடிப்படை வினைச்சொல்லோடு “ओ” சேர்க்க வேண்டும்.

2. “आप”என்ற பிரதி பெயர்ச்சொல்லுக்கு அடிப்படை வினைச்சொல்லோடு “इए” அல்லது “इये”சேர்க்க வேண்டும்.

உதாரணம்:
आप जाइये ।
आप लिखिये ।

விதிவிலக்குகள்:
இந்த பன்மை வினைச்சொல் அமைப்புகளுக்கு சில விதிவிலக்குகள் இருக்கின்றன. அவையாவன:

1. ले – எடுத்தல் - तुम लो , आप लीजिये
2. दे - கொடுத்தல் – तुम दो, आप दीजिये
3. पी - குடித்தல் – तुम पिओ, आप पीजिये
4. कर - செய்தல் – तुम करो, आप कीजिये

leomohan
04-01-2010, 06:54 AM
அருமையான முயற்சி பாரதி அவர்களே. எத்தனை மொழி தெரிந்துக் கொண்டாலும் அத்துனையாலும் ஏதாவது ஒரு சமயம் கட்டாயம் நமக்கு கை கொடுக்கும். தொடருங்கள்.

சிவா.ஜி
04-01-2010, 08:31 AM
மிக நல்ல சேவை முயற்சி. அனைவருக்கும் பயனுள்ளதாய் நிச்சயம் இருக்கும்.

ஹிந்தி எழுத்துக்களை அடையாளம் காணும்வரை, உதாரணங்களுக்கும் தமிழ் உச்சரிப்பை அடைப்புக் குறிக்குள் இட்டால் ஹிந்தி எழுத்துக்களை வாசிக்க உதவியாக இருக்கும்.

தங்கள் மேலான நேரத்தை ஒதுக்கி இத்தகைய நல்ல பதிவை தொடங்கிய உங்களுக்கு நன்றிகள் மற்றும் தொடர்ந்து நடத்த வாழ்த்துகள் பாரதி.

பாரதி
04-01-2010, 12:11 PM
ஊக்கம் தரும் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி மோகன், சிவா.

இந்தத்திரியில் வெறும் இலக்கணத்தை, எனது ஆசிரியர் கற்றத்தந்த முறையில் மட்டுமே தருவதாக என் எண்ணம் சிவா. எனினும் உங்களின் வேண்டுகோள் சரியானதே. இயன்ற வரையில் தமிழிலும் எழுதுகிறேன்.

ஹிந்தி எழுத்துகளை உச்சரிப்பதற்கும் தமிழ் எழுத்துகளை உச்சரிப்பதற்கும் வேறுபாடு உண்டு என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். முன்னரே குறிப்பிட்டது போல் நண்பர் லியோ மோகனின் திரி ஹிந்தி எழுத்துகளை, அவற்றின் உச்சரிப்பை அறிந்து கொள்ள உதவும்.

பாரதி
05-01-2010, 02:44 AM
http://www.tamilmantram.com/vb/photogal/images/83/large/1_hindi_aux_verb.JPG

பாரதி
06-01-2010, 08:22 AM
SIMPLE PRESENT TENSE - சாதாரண நிகழ்காலம் – सामान्य वर्तमान काल

http://www.tamilmantram.com/vb/photogal/images/83/large/1_hindi_simple_present.JPGவிதி :
ஒரு வினைச்சொல்லை நிகழ்கால வினைச்சொல்லாக மாற்ற வினைச்சொல்லோடு ஆண்பால் ஒருமையாய் இருப்பின் ता (தா)– வும், ஆண்பால் பன்மையாய் இருப்பின் ते(தே) – யும், பெண்பால் ஒருமைக்கும், பன்மைக்கும் ती (தீ) – யும் சேர்க்க வேண்டும்.


உதாரணங்கள் :

I ஆண்பால் ஒருமை - मैं जाता हूँ । மை ஜாத்தா ஹூம்
I ஆண்பால் பன்மை - हम जाते हैं । ஹம் ஜாத்தே ஹைன்ங்
I பெண்பால் ஒருமை - मैं जाती हूँ । மை ஜாத்தீ ஹூம்

II பெண்பால் பன்மை - हम जाती हैं । ஹம் ஜாத்தீ ஹைன்ங்

II ஆண்பால் ஒருமை - तू जाता है । தூ ஜாத்தா ஹை
II ஆண்பால் பன்மை - तुम जाते हो । தும் ஜாத்தே ஹோ
II ஆண்பால் பன்மை - आप जाते हैं । ஆப் ஜாத்தே ஹைன்ங்

II பெண்பால் ஒருமை - तू जाती है । தூ ஜாத்தீ ஹை
II பெண்பால் பன்மை - तुम जाती हो । தும் ஜாத்தீ ஹோ
II பெண்பால் பன்மை - आप जाती हैं । ஆப் ஜாத்தீ ஹைன்ங்

III ஆண்பால் ஒருமை - वह जाता है । வஹ் ஜாத்தா ஹை
III ஆண்பால் பன்மை - वे जाते हैं । வே ஜாத்தே ஹைன்ங்
III பெண்பால் ஒருமை - वह जाती है । வஹ் ஜாத்தீ ஹை
III பெண்பால் பன்மை - वे जाती हैं । வே ஜாத்தீ ஹைன்ங்
III ஆண்பால் ஒருமை - यह जाता है । யஹ் ஜாத்தா ஹை
III ஆண்பால் பன்மை - ये जाते हैं । யே ஜாத்தே ஹைன்ங்
III பெண்பால் ஒருமை - यह जाती है । யஹ் ஜாத்தீ ஹை
III பெண்பால் பன்மை - ये जाती हैं । யே ஜாத்தீ ஹைன்ங்

இராசகுமாரன்
06-01-2010, 08:30 AM
ஹிந்தி இலக்கணப் பாடம் மிக நன்றாக உள்ளது.

பாரதி, உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

பாரதி
06-01-2010, 08:59 AM
ஹிந்தி இலக்கணப் பாடம் மிக நன்றாக உள்ளது.

பாரதி, உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

உங்களின் உற்சாகமான ஊக்கத்திற்கு மிக்க நன்றி இராசகுமாரன்.

இளசு
06-01-2010, 06:21 PM
அன்பு பாரதி

B4U movies என்ற சாளரம் எனக்கு இலவச இணைப்பாய் வருகிறது.

நம்மூர் சாளரவழி தொடர் அழுகைகள் இம்சை ஒவ்வொரு மாலையும்.

மேற்சொன்ன இலவச சாளரத்தில் ஒரு மணி நேரம்
அமுதமான பழைய இந்திப்பாடல்கள் பல நாட்கள் காணக் கிடைக்கின்றன.

இந்தி புரியாமல் ஏக்கமாய் ...

சில இணையத்தளங்களில் இந்தி கற்கத் தேடிச் சோர்வாய்..


இருந்த காலம் இது..
மருந்தாய் இத்திரி..
லியோமோகனின் திரிச் சுட்டிக்கும் சேர்த்து
இருவருக்கும் நன்றிகள்.

rajeshkrv
06-01-2010, 07:14 PM
அருமை .. மிகவும் பயனுள்ள திரி
நன்றி பாரதி. தமிழ் கவிஞன் ஹிந்தி கற்று தருகிறான்

பாரதி
07-01-2010, 06:46 PM
பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி அண்ணா, இராஜேஷ்.

அண்ணா... கஜல் பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா...? குலாம் அலி, பங்கஜ் உதாஸ் போன்றவர்களின் குரலும், பாடலின் கருத்தும் நம்மை மயக்கும். அதனை புரி்ந்து கொள்வதற்காகவே இன்னும் நன்றாக கற்க வேண்டும் என்று தோன்றும்.

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்... இல்லையா நண்பரே..? எனக்குத் தெரிந்த வரை ஆசிரியர் உரைத்ததை அப்படியே இங்கு தருவதே என் வேலை.

கீதம்
07-01-2010, 09:18 PM
மிகவும் நல்ல முயற்சி பாரதி அவர்களே. எனக்கும் மறந்துபோனவற்றை நினைகூர்ந்துகொள்ள நல்லதொரு வாய்ப்பாக இத்திரி பயன்படுகிறது. மிக்க நன்றி.

பாரதி
08-01-2010, 12:17 PM
நன்றி கீதம். பதிப்பில் பிழையிருப்பின் சுட்டிக்காட்டுங்கள்.

பாரதி
08-01-2010, 12:20 PM
பெயர் சொற்களை ஒருமையிலிருந்து பன்மையாக்கும் விதிகள் :1. ஆண்பால் சொற்கள்:

நெடில் “आ” (ஆ) வில் முடியும் ஆண்பால் ஒருமைச் சொற்களை பன்மையாக்குவதற்கு “आ”(ஆ)விற்கு பதிலாக “ए”(ஏ)சேர்க்க வேண்டும்.
எடுத்துக்காட்டு:
ஒருமை - பன்மை
लडका – लडके (லட்கா – லட்கே)

घोडा – घोडे (கோடா – கோடே)

நெடில் “आ” (ஆ)- வைத்தவிர மற்ற உயிரெழுத்துகளிலும் ஒற்றெழுத்துகளிலும் முடியும் ஆண்பால் சொற்களுக்கு ஒருமை உருவமும் பன்மை உருவமும் ஒன்றே.
எடுத்துக்காட்டு:
ஒருமை - பன்மை
आदमी – आदमी (ஆத்மி – ஆத்மி)
घर – घर (கர் – கர்)2. பெண்பால் சொற்கள்:

“आ” (ஆ)வில் முடியும் பெண்பால் சொற்களை பன்மையாக்குவதற்கு, அந்த வார்த்தைகளோடு “एं” (ஏங்(க்))சேர்க்க வேண்டும்.
எடுத்துக்காட்டு:
ஒருமை - பன்மை

माला – मालाएं (மாலா – மாலாயேங்க்)

ஒற்றெழுத்தில் முடியும் பெண்பால் சொற்களை ஒருமையிலிருந்து பன்மையாக்குவதற்கு “एं” (ஏங்(க்))சேர்க்க வேண்டும். ஆனால் அது இங்கு ஒற்றெழுத்தோடு கலந்து விடும்.
எடுத்துக்காட்டு:
ஒருமை - பன்மை

कलम- कलमें (கலம் – கலமேங்(க்)

குறில் “इ” (இ)– யில் முடியும் பெண்பால் சொற்களை பன்மையாக்குவதற்கு அவைகளோடு “यां” (யாங்(க்)சேர்க்க வேண்டும்.
எடுத்துக்காட்டு:
ஒருமை - பன்மை

जाति – जातियां (ஜாதி – ஜாதியாங்க்)

நெடில் “ई” (ஈ)- யில் முடியும் பெண்பால் சொற்களை பன்மையாக்குவதற்கு, அந்த நெடிலை குறிலாக்கி “यां” (யாங்(க்)சேர்க்க வேண்டும்.
எடுத்துக்காட்டு:
ஒருமை - பன்மை

लडकी – लडकियां (லட்கி – லட்கியாங்க்)

குறில் “उ” (உ) – வில் முடியும் பெண்பால் சொற்களை பன்மையாக்குவதற்கு அவைகளோடு நேரடியாக “एं” (ஏங்(க்))சேர்க்க வேண்டும்.
எடுத்துக்காட்டு:
ஒருமை - பன்மை

विपु – विपुएं (விபு – விபுஏங்க் (ஒரு கடல்வாழ் உயிரினம்)

நெடில் “ऊ” (ஊ)- வில் முடியும் பெண்பால் சொற்களை பன்மையாக்குவதற்கு, அந்த நெடிலை குறிலாக்கி “एं” (ஏங்(க்))சேர்க்க வேண்டும்.
எடுத்துக்காட்டு:
ஒருமை - பன்மை

बहू – बहुएं (பஹு – பஹூஏங்க்)

இதைத்தவிர வேறு எந்த உயிரெழுத்தில் முடிந்தாலும் “एं” ((ஏங்(க்))சேர்க்க வேண்டும்.
விதிவிலக்குகள்:

நெடில் “आ” (ஆ)வில் முடியும் உறவையும் பதவியையும் குறிக்கும் ஆண்பால் சொற்கள் பன்மையிலும் எந்த மாற்றமும் அடைவதில்லை.
எடுத்துக்காட்டு:
ஒருமை - பன்மை
राजा – राजा (ராஜா – ராஜா)
दादा – दादा (தாதா – தாதா)

பெண்பால் பெயர் சொற்கள்:
எடுத்துக்காட்டு:
ஒருமை - பன்மை
सिडिया – सिडियाँ (சிடியா – சிடியாங்(க்)

பா.ராஜேஷ்
12-01-2010, 10:26 AM
பஹுத் அச்சா ஜி ! பஹுத் ஷுக்ரியா!

சிவா.ஜி
14-01-2010, 06:20 AM
எளிமையான சொற்கள், அழகான விளக்கம்....விரைவில் பலரிங்கு பண்டிட்.

நல்ல பயனுள்ள பகிர்வு பாரதி. தன்யவாத்.

சரண்யா
14-01-2010, 12:34 PM
பயனுள்ள பதிவு...பாரதி அவர்களே..வாழ்த்துகள்...

பாரதி
16-01-2010, 11:05 AM
ஊக்கம் தரும் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி இராஜேஷ், சிவா, சரண்யா. எல்லாப்பெருமையும் என் ஆசிரியருக்கே.

பாரதி
16-01-2010, 11:09 AM
CASE ENDINGS – வேற்றுமை உருபுகள் – कारकचिन्ह
1. Nominative Case
தமிழில் : -
ஆங்கிலத்தில் : -
ஹிந்தியில் : ने (னே) [ சில கடந்த கால வினைச் சொற்களுக்கு மட்டும்]

2. Objective or Accusative Case
தமிழில் : ஐ
ஆங்கிலத்தில் : -
ஹிந்தியில் : को (கோ)

3. Instrumental Case
தமிழில் : ஆல், ஓடு, உடன்
ஆங்கிலத்தில் : by, with
ஹிந்தியில் : से (சே)

4. Dative Case
தமிழில் : க்கு, க்காக
ஆங்கிலத்தில் : to, for
ஹிந்தியில் : को (கோ)

5. Ablative Case
தமிழில் : இருந்து, விட
ஆங்கிலத்தில் : from, than
ஹிந்தியில் : से (சே)

6. Possesive Case
தமிழில் : உடைய
ஆங்கிலத்தில் : of, ‘s
ஹிந்தியில் : का, के, की (கா, கே, கீ) [விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது.]

7. Locative Case
தமிழில் : இல், மேல்
ஆங்கிலத்தில் : in, on
ஹிந்தியில் : में, पर (மே, பர்)

8. Vocative Case
தமிழில் : ஹே!
ஆங்கிலத்தில் : hey!
ஹிந்தியில் : हे ! (ஹே)

I . விளக்கம் :
- ஆறாம் வேற்றுமை உருபுகளான का, के, की ஆகியவற்றை அவைகளுக்குப் பின்னால் வரும் பெயர்ச்சொற்களினுடைய எண்ணுக்கும், பாலுக்கும் ஏற்ப உபயோகிக்க வேண்டும்.

எடுத்துக்காட்டு:
राम का लडका (ராம் கா லட்கா)
सीता का लडका (சீதா கா லட்கா)
இங்கு का என்ற ஆறாம் வேற்றுமை உருபு लडका என்ற ஆண்பால் ஒருமையைப் பொறுத்து அமைந்திருக்கிறது.

- राम के लडके (ராம் கே லட்கே)
सीता के लडके (சீதா கே லட்கே)
இங்கு के என்ற வேற்றுமை உருபு लडके என்ற ஆண்பால் பன்மைச்சொல்லைப் பொறுத்து அமைந்திருக்கிறது.

- राम की लडकी (ராம் கீ லட்கி)
सीता की लडकी (சீதா கீ லட்கி)
இங்கு என்ற की வேற்றுமை உருபு लडकी என்ற பெண்பால் ஒருமைச்சொல்லுக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.

- राम की लडकियां (ராம் கீ லட்கியா(ங்)
सीता की लडकियां (சீதா கீ லட்கியா(ங்)
இங்கு की என்ற வேற்றுமை உருபு लडकियां என்ற பெண்பால் பன்மைச்சொல்லுக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.

II. இந்த வேற்றுமை உருபுகள் பெயர்ச்சொற்களை அடுத்து வரும் போது தனியாக எழுத வேண்டும்.
எடுத்துக்காட்டு:
राम का (ராம் கா)
सीता का (சீதா கா)

ஆனால் பிரதிபெயர்ச்சொற்களாக வரும் போது சேர்த்து எழுத வேண்டும்.
எடுத்துக்காட்டு:
आपका (ஆப்கா)
हमको (ஹம்கோ)

பா.ராஜேஷ்
18-01-2010, 08:37 AM
மிக எளிமையான அருமையான விளக்கம். தவறுகளுடன் பேசும் என் போன்றோருக்கு மிக பயனுள்ளதாய் இருக்கும். ஹிந்தியில் பாலினம் புரிந்து பேசுவது இதன் மூலம் எளிதாகும். நன்றி பாரதி.

இளசு
19-01-2010, 07:37 PM
உன் ஆசானுக்கு என் நன்றி..
உனக்கு என் அன்பு - பாரதி.

நல்ல பணி இனிதே தொடர்க...

பாரதி
22-01-2010, 05:39 AM
கருத்துக்களுக்கு நன்றி இராஜேஷ், அண்ணா.

இப்போது பணியிடத்தில் இருப்பதால் அடுத்த பாடம் சில வாரங்களில் ...

பாரதி
18-02-2010, 11:00 AM
1. முதலாம் வேற்றுமை உருபு ने (னே)
यह+ने = इसने (இஷ்னே)
ये+ने = इन्होंने (இன்ஹோனே)
वह+ने = उसने (உஷ்னே)
वे+ने = उन्होंने (உன்ஹோனே)
तू + ने = तूने (தூனே)
तुम + ने= तुमने (தும்னே)
आप + ने = आपने (ஆப்னே)
मैं + ने = मैंने (மைனே)
हम + ने = हमने (ஹம்னே)
कौन + ने = किसने (ஒருமை – கிஷ்னே)
कौन + ने = किनहोंने (பன்மை – கின்ஹோனே)
जो + ने = जिसने (ஒருமை – ஜிஷ்னே)
जो + ने = जिनहोंने (பன்மை – ஜின்ஹோனே)

2 மற்றும் 4 ஆம் வேற்றுமை உருபு. को (கோ)
यह+को = इसको (இஷ்கோ)
ये+ को = इनको(இன்கோ)
वह+ को = उसको (உஷ்கோ)
वे+ को = उनको (உன்கோ)
तू + को = तूझको (துஜ்கோ)
तुम + को = तुमको (தும்கோ)
आप + को = आपको (ஆப்கோ)
मैं + को = मैंझको (முஜ்கோ)
हम + को = हमको (ஹம்கோ)
कौन + को = किसको (ஒருமை – கிஷ்கோ)
कौन + को = किनको (பன்மை – கின்கோ)
जो + को = जिसको (ஒருமை – ஜிஷ்கோ)
जो + को = जिनको (பன்மை – ஜின்கோ)

को (கோ) மற்றொரு வழி
यह+को = इसे (இசே)
ये+ को = इनसे (இன்சே)
वह+ को = उसे (உஷே)
वे+ को = उनसे (உன்சே)
तू + को = तूझे (துஜே)
तुम + को = तुमहें (தும்ஹே(ன்)
मैं + को = मैंझे (முஜே)
हम + को = हमें (ஹமே(ன்)
कौन + को = किसे (ஒருமை – கிஷே)
कौन + को = किन्हें (பன்மை – கின்ஹே(ன்)
जो + को = जिसे (ஒருமை – ஜிஷே)
जो+ को = जिन्हें (பன்மை – ஜின்ஹே(ன்)

3.மூன்றாம் வேற்றுமை உருபு से (சே)
यह+से = इससे (இஷ்சே)
ये+ से = इनसे (இன்சே)
वह+ से = उससे (உஷ்சே)
वे+ से = उनसे (உன்சே)
तू + से = तूझसे (துஜ்சே)
तुम + से = तुमसे (தும்சே)
आप + से = आपसे (ஆப்சே)
मैं + से = मैंझसे (முஜ்சே)
हम + से = हमसे (ஹம்சே)
कौन + से = किससे (ஒருமை – கிஷ்சே)
कौन + से = किनसे (பன்மை – கின்சே)
जो + से = जिससे (ஒருமை – ஜிஷ்சே)
जो+ से = जिनसे (பன்மை – ஜின்சே)

6.ஆறாம் வேற்றுமை உருபு का (கா)
यह+का = इसका (இஷ்கா)
ये+ का = इनका(இன்கா)
वह+ का = उसका (உஷ்கா)
वे+ का = उनका (உன்கா)
तू + का = तेरा (தேரா)
तुम + का = तुमहारा (தும்ஹாரா)
आप + का = आपका (ஆப்கா)
मैं + का = मेरा (மேரா)
हम + का = हमारा (ஹமாரா)
कौन + का = किसका (ஒருமை – கிஷ்கா)
कौन + का = किनका (பன்மை – கின்கா)
जो + का = जिसका (ஒருமை – ஜிஷ்கா)
जो + का = जिनका (பன்மை – ஜின்கா)

6.ஆறாம் வேற்றுமை உருபு के (கே)
यह+के = इसके (இஷ்கே)
ये+ के = इनके (இன்கே)
वह+ के = उसके (உஷ்கே)
वे+ के = उनके (உன்கே)
तू +के = तेरे (தேரே)
तुम +के = तुमहारे (தும்ஹாரே)
आप +के = आपके (ஆப்கே)
मैं +के = मेरे (மேரே)
हम +के = हमारे (ஹமாரே)
कौन + के = किसके (ஒருமை – கிஷ்கே)
कौन + के = किनके (பன்மை – கின்கே)
जो + के = जिसके (ஒருமை – ஜிஷ்கே)
जो + के = जिनके (பன்மை – ஜின்கே)

கலையரசி
18-02-2010, 03:53 PM
ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்பது என் நீண்ட நாள் அவா. பல முறைகள் முயன்று தோல்வியே கண்டிருக்கிறேன். உங்களது இந்தத் தொடர் என் நீண்ட நாள்
கனவை நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.
இன்று தான் படிக்கத் துவங்கியுள்ளேன். பயனுள்ள இந்தத் திரிக்கு என் நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.

இளசு
18-02-2010, 06:14 PM
தொடரும் இந்திப் பாடங்களுக்கு நன்றி பாரதி...

பாரதி
18-02-2010, 11:49 PM
ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்பது என் நீண்ட நாள் அவா. பல முறைகள் முயன்று தோல்வியே கண்டிருக்கிறேன். உங்களது இந்தத் தொடர் என் நீண்ட நாள்
கனவை நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.
இன்று தான் படிக்கத் துவங்கியுள்ளேன்.

இந்தத்திரியில் இலக்கணத்தை மட்டும் என் ஆசிரியர் எனக்கு கற்பித்த முறையில் தட்டச்சி தருவது என் எண்ணம். இந்தத்திரியில் சுட்டியிருக்கும் லியோமோகன் அவர்களின் பாடங்களும் உங்களுக்கு உதவும். முயன்றால் உறுதியாய் உங்களால் ஹிந்தி கற்றுக்கொள்ள முடியும். உங்கள் கனவு நிறைவேற, முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.


தொடரும் இந்திப் பாடங்களுக்கு நன்றி பாரதி...
தொடரும் ஊக்கத்திற்கு நன்றி அண்ணா.

பாரதி
19-02-2010, 10:09 AM
6. ஆறாம் வேற்றுமை உருபு की (கீ)
यह+की = इसकी (இஸ்கீ)
ये+ की = इनकी (இன்கீ)
वह+ की = उसकी (உஸ்கீ)
वे+ की = उनकी (உன்கீ)
तू + की = तेरी (தேரீ)
तुम + की = तुमहारी (தும்ஹாரீ)
आप + की = आपकी (ஆப்கீ)
मैं + की = मेरी (மேரீ)
हम + की = हमारी (ஹமாரீ)
कौन + की = किसकी (ஒருமை – கிஷ்கீ)
कौन + की = किनकी (பன்மை – கின்கீ)
जो + की = जिसकी (ஒருமை – ஜிஸ்கீ)
जो + की = जिनकी (பன்மை – ஜின்கீ)

7. ஏழாம் வேற்றுமை உருபு में (மே(ன்)
यह+में = इसमें (இஸ்மே)
ये+ में = इनमें (இன்மே)
वह+ में = उसमें (உஸ்மே)
वे+ में = उनमें (உன்மே)
तू + में = तझमें (துஜ்மே)
तुम + में = तुममें (தும்மே)
आप + में = आपमें (ஆப்மே)
मैं + में = मुझमें (முஜ்மே)
हम + में = हममें (ஹம்மே)
कौन + में = किसमें (ஒருமை – கிஸ்மே)
कौन + में = किनमें (பன்மை – கின்மே)
जो + में = जिसमें (ஒருமை – ஜிஸ்மே)
जो + में = जिनमें (பன்மை – ஜின்மே)

7.ஏழாம் வேற்றுமை உருபு पर (பர்)
यह+पर = इसपर (இஸ்பர்)
ये+ पर = इनपर (இன்பர்)
वह+ पर = उसपर (உஸ்பர்)
वे+ पर = उनपर (உன்பர்)
तू + पर = तझपर (துஜ்பர்)
तुम + पर = तुमपर (தும்பர்)
आप + पर = आपपर (ஆப்பர்)
मैं + पर = मुझपर (முஜ்பர்)
हम + पर = हमपर (ஹம்பர்)
कौन + पर = किसपर (ஒருமை – கிஸ்பர்)
कौन + पर = किनपर (பன்மை – கின்பர்)
जो + पर = जिसपर (ஒருமை – ஜிஸ்பர்)
जो + पर = जिनपर (பன்மை – ஜின்பர்)

பா.ராஜேஷ்
19-02-2010, 04:12 PM
க்யா ஜி ? ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துட்டு இப்படி சட்டுன்னு முடிச்சா எப்படி?

இஷ்னே வை விட இஸ்னே சரிதானே. இதே போல் ஷ் வருமிடம் அனைத்திலும் ஸ் இருந்தால் பேசுவதற்கு ஏற்றாற்போல் வரும் என்பது எனது எண்ணம்.

கூடவே தமிழில் அர்த்தமும் கொடுத்தால் ஒப்பிட்டு படிக்க ஏதுவாக இருக்கும் அல்லவா ...

பாரதி
20-02-2010, 02:58 AM
அன்பு இராஜேஷ்,
நான் தினமும்தான் வருகிறேன். ஹஹ்ஹஹா....
பாடங்கள் அவ்வப்போது தொடரும்.
நீங்கள் கூறிய விதம் ஸ் பயன்படுத்தப்பட்டது.
நேரம் கிடைக்குமென்றால் பொருள் தர இயலுமா என்று பார்க்கிறேன். எனினும் அது இந்தத்திரியின் குறிக்கோளில் அடங்காது.
பின்னூட்டத்திற்கு நன்றி.

பாரதி
20-02-2010, 03:00 AM
अनुस्वर - அனுஸ்வர்

क ख ग घ ङ ங
च छ ज झ ञ ஞ
ट ठ ड ढ ण ண
त थ द ध न ன, ந
प फ ब भ म ம

அனுஸ்வரம் அதாவது பிந்துவினுடைய உச்சரிப்பு அதை அடுத்து வரும் வல்லின வகை எழுத்தைச்சார்ந்த மெல்லின ஒற்றெழுத்தாகும்.

எடுத்துக்காட்டுகள்:
गंगा - கங்கா
पंजाप - பஞ்சாப்
ठंडा - டண்டா (குளிர்ந்த)

பாரதி
20-02-2010, 11:13 AM
अनुनासिक – அனுநாசிக்

கீழ்க்கண்ட சொற்களை மூக்கு மற்றும் அடித்தொண்டை உதவியுடன் உச்சரிக்க வேண்டும்.

हां – ஹான்(ங்)
कहां – கஹான்(ங்)
यहां – யஹான்(ங்)

பாரதி
21-02-2010, 03:32 PM
வேற்றுமை உருபுகளினால் ஏற்படும் மாற்றங்கள் :

வேற்றுமை உருபுகள் பிரதிபெயர்ச்சொற்களில் ஏற்படுத்தும் பாதிப்பை ஏற்கனவே நாம் படித்திருக்கிறோம். இந்த வேற்றுமை உருபுகள் இதைத்தவிர பெயர்ச்சொற்களிலும், அந்த பெயர்ச்சொற்களை தழுவுகின்ற பெயர் உரிச்சொற்களிலும் (Adjective) சில பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

இந்த பாதிப்புகள் Pronoun-களையும், “आ”வில் முடிகின்ற Adjective-களையும் கூட பாதிக்கின்றன. இந்த பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்பதை பின்வரும் எடுத்துக்காட்டுகள் மூலம் காண்போம்.

बडा कमरा - படா கம்ரா (பெரிய அறை)
बडा कमरा + को = बडा कमरे को படா கம்ரே கோ (பெரிய அறைக்கு, பெரிய அறையை)
बडे कमरे – படே கம்ரே (பெரிய அறைகள்)
बडे कमरे + को = बडे कमरों को படே கம்ரோ(ங்) கோ (பெரிய அறைகளுக்கு, பெரிய அறைகளை)

இங்கே ஏற்கனவே பன்மைக்காக மாறுதல் அடைந்த Adjective-ல் எந்தவித மாற்றமும் இல்லை என்பதையும், பன்மைக்காக மாறுதல் அடைந்த कमरे - कमरों என்று மாறி இருப்பதையும் காண்க.

वह बडा कमरा – வஹ் படா கம்ரா (அந்த பெரிய அறை)
वह बडा कमरा + को = उस बडे कमरे को – உஷ் படே கம்ரே கோ ( அந்தப் பெரிய அறைக்கு / அறையை)

இங்கு பெயர்ச்சொல் மட்டுமின்றி பெயர்ச்சொல்லுக்கு முன்னால் வந்த adjective-வும், அதற்கு முன்னால் வந்த demonstrative object- ஆன “वह”-ம் பாதிப்பு அடைந்திருக்கிறது.

சுருங்கக்கூறின் “आ”வில் முடிகின்ற ஆண்பால் ஒருமை பெயர்ச்சொற்களும் “आ”வில் முடிகின்ற ஆண்பால் பெயர் உரிச்சொற்களும் “आ, ए, ई” விதிக்கு உட்பட்டு பாதிப்பை அடைகின்றன. பன்மையில் அனைத்து பெயர்ச்சொற்களின் கடைசி எழுத்துகள் வேற்றுமை உருபினால் “ओं” என்று மாறும்.

எடுத்துக்காட்டுகள்:
बडे लडके + को = बडे लडकों को
बडी लडकियां + को = बडी लडकियां को

பாரதி
23-02-2010, 02:49 PM
ஆறாம் வேற்றுமை உருபுகளின் சிறப்பு பயன்பாடு:


ஆறாம் வேற்றுமை உருபுகளான “का, के, की” என்பவை அவைகளுக்கு பின்னால் வரும் பெயர்ச்சொற்களின் எண்ணுக்கும் பாலுக்கும் ஏற்ப அமையும் என்பது நமக்குத்தெரியும்.


ஆனால் அவைகளுக்கு ஒரு மிக முக்கியமான சிறப்பு பயன்பாடு இருக்கிறது. அதை சரிவர தெரிந்து கொண்டால்தான் ஹிந்தி மொழியை முறையாக கையாள முடியும்.


சில பெயர்ச்சொற்களோடு “कर” (கர்) என்ற வினைச்சொல்லை சேர்த்து கூட்டுவினை [compound verbs] களை உருவாக்குகிறோம்.

இவ்வாறு கர் என்ற வினைச்சொல்லை சேர்த்து உருவாக்கிய கூட்டுவினையை உபயோகிக்கும் போது, தமிழ் மொழியைப்போல இரண்டாம் அல்லது நான்காம் வேற்றுமை உருபுகளை பயன்படுத்தக்கூடாது. பதிலாக ஆறாம் வேற்றுமை உருபைத்தான் உபயோகிக்க வேண்டும். இந்த ஆறாம் வேற்றுமை உருபு கூட்டுவினையில் உள்ள பெயர்ச்சொல்லின் எண்ணுக்கும் பாலுக்கும் ஏற்ப அமையும்.

எடுத்துக்காட்டுகள்:

அவன் இராமனுக்கு உதவி செய்கிறான்.
वह राम को मदद करता है । தவறு
वह राम की मदद करता है । சரி

அவன் இராமனை எதிர்பார்க்கிறான்.
वह राम को इन्तजार करता है । தவறு
वह राम का इन्तजार करता है । சரி

அவன் அமெரிக்கா செல்ல அநேக முயற்சிகளை செய்கிறான்.
वह अमेरिका जाने को कई प्रयतन करता है । தவறு
वह अमेरिका जाने के कई प्रयतन करता है । சரி

பா.ராஜேஷ்
24-02-2010, 06:26 PM
இந்த வாக்கியங்களின் தமிழ் அர்த்தத்தை கூறி எதனால் தவறு என்று விளக்க இயலுமா? அதே போல் பெயர்ச்சொற்களின் பாலினங்களை அறிவது எவ்வாறு? உ.தா. நீங்கள் மேலே கூறிய வாக்கியத்தில் உதவி என்பது பெண் பாலினமாக வந்துள்ளது அல்லவா? அதை எளிதாக அறிந்து கொள்ள ஏதும் உபாயம் உள்ளதா?

பாரதி
25-02-2010, 01:47 AM
அன்பு இராஜேஷ்,சில பெயர்ச்சொற்களோடு “कर” (கர்) என்ற வினைச்சொல்லை சேர்த்து கூட்டுவினை [compound verbs] களை உருவாக்குகிறோம்.

இவ்வாறு கர் என்ற வினைச்சொல்லை சேர்த்து உருவாக்கிய கூட்டுவினையை உபயோகிக்கும் போது, தமிழ் மொழியைப்போல இரண்டாம் அல்லது நான்காம் வேற்றுமை உருபுகளை பயன்படுத்தக்கூடாது. பதிலாக ஆறாம் வேற்றுமை உருபைத்தான் உபயோகிக்க வேண்டும். இந்த ஆறாம் வேற்றுமை உருபு கூட்டுவினையில் உள்ள பெயர்ச்சொல்லின் எண்ணுக்கும் பாலுக்கும் ஏற்ப அமையும்.இதுதான் ஹிந்தி மொழியில் உள்ள விதி!

ஹிந்தி மொழியில் ஆண்பால், பெண்பால் என இருபால்கள் மட்டுமே உள்ளன. பலவின்பால் கிடையாது. நீங்கள் கேட்ட கேள்வி எனக்கும் முன்பே உண்டானது. ஹிந்தி இலக்கண முறையின்படி பாலினங்களை வேற்றுமை உருபு, பெயர் உரிச்சொல், வினைச்சொல்லின் உருவம் போன்றவற்றைக் கொண்டே கண்டு கொள்ள முடியும் என என் ஆசிரியர் கூறினார்.

என்னுடன் பணி புரிந்த சில வடநாட்டு நண்பர்களை வினவிய போது அவர்களாலும் போதுமான விடையை அளிக்க இயலவில்லை. பாலினத்தை எப்படிக் கண்டு கொள்வது குறித்து அடுத்த சில பதிவுகளில் எழுதுகிறேன். நன்றி.

பாரதி
25-02-2010, 10:36 AM
வேற்றுமை உருபினால் ஏற்படும் பாதிப்பை பற்றிய சிறப்புக்குறிப்பு:

வேற்றுமை உருபுகளினால் அவைகளுக்கு முன்னால் வருகின்ற Nouns, Pronouns, Adjectives ஆகியவற்றின் மீது ஏற்படும் பாதிப்பைப் பற்றி நாம் அறிவோம்.


இவைகளில் இரண்டாம் வேற்றுமை உருபான को–விற்கு மட்டும் அதை உயிரற்ற பொருட்களுக்குப்பின்னால் உபயோகிக்கக் கூடாது என்ற விதிவிலக்கு உண்டு. அவ்வாறு இரண்டாம் வேற்றுமை உருபை பயன்படுத்தாவிட்டால் Noun, Pronoun அல்லது Adjective-களில் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்பது நாமறிந்தது.


ஆனால் இரண்டாம் வேற்றுமை உருபான “को”வைத்தவிர மற்ற வேற்றுமை உருபுகள் வெளிப்படையாக பயன்படுத்தப்படாமல் தொக்கி நின்றாலும், அவைகள் வெளிப்படையாக பயன்படுத்தப்பட்டால் என்ன பாதிப்பு அவைகளுக்கு ஏற்படுமோ, அதே பாதிப்பு அவைகளுக்கு முன்னால் உள்ள Noun, Pronoun அல்லது Adjective-களில் ஏற்படும். பாதிப்பு இல்லாத வகையில் எழுதுவது தவறாகும்.


எடுத்துக்காட்டுகள்:
मैं राम के घर को जाता हूँ । மைன் ராம் கே கர் கோ ஜாத்தா ஹும் – சரி.
मैं राम के घर जाता हूँ । மைன் ராம் கே கர் ஜாத்தா ஹும் – சரி.
मैं राम का घर जाता हूँ । மைன் ராம் கா கர் ஜாத்தா ஹும் – தவறு.


[இங்கு மறைந்திருப்பது நான்காம் வேற்றுமை உருபான को என்பதை கவனிக்க மறக்க வேண்டாம். ]

பா.ராஜேஷ்
25-02-2010, 05:52 PM
நன்றி பாரதி. ஓரளவு பேசினாலும் இலக்கண பிழையை செய்கின்றேன். எனவேதான் அவ்வாறு கேட்டேன். இப்போதும் கூட பாதி புரிந்தும் பாதி குழம்பியும்தான் இருக்கிறேன். :confused:

பா.ராஜேஷ்
25-02-2010, 05:56 PM
வஹ் ராம் கா இந்தசார் கர்த்தா ஹை | இது சரி எனில்,
மேன் ராம் கா கர் ஜாத்தா ஹுன் | இது ஏன் தவறு?

கீதம்
26-02-2010, 12:10 AM
அருமையான விளக்கத்துடன் பாடம் நடத்திச் செல்கிறீர்கள். மிக்க நன்றி பாரதி அவர்களே.

ஒரு சிறிய சந்தேகம்; किसपर, किनपर, जिसपर, जिनपर இது போன்ற வார்த்தைகள் சற்று வேறுபட்டு வருகின்றனவே. தட்டச்சுப் பிழையாய் இருக்க வாய்ப்பில்லை. மென்பொருள் குறைபாடா?

புதிதாய்க் கற்பவர்கள் குழம்பிவிடலாம் என்பதால் கேட்கிறேன். தவறாய் நினைக்கவேண்டாம்.

பாரதி
26-02-2010, 01:03 AM
வஹ் ராம் கா இந்தசார் கர்த்தா ஹை | இது சரி எனில்,
மேன் ராம் கா கர் ஜாத்தா ஹுன் | இது ஏன் தவறு?இந்த வேற்றுமை உருபுகள் இதைத்தவிர பெயர்ச்சொற்களிலும், அந்த பெயர்ச்சொற்களை தழுவுகின்ற பெயர் உரிச்சொற்களிலும் (Adjective) சில பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

बडा कमरा - படா கம்ரா (பெரிய அறை)
बडा कमरा + को = बडा कमरे को படா கம்ரே கோ (பெரிய அறைக்கு, பெரிய அறையை)
बडे कमरे – படே கம்ரே (பெரிய அறைகள்)
बडे कमरे + को = बडे कमरों को படே கம்ரோ(ங்) கோ (பெரிய அறைகளுக்கு, பெரிய அறைகளை)

இங்கே ஏற்கனவே பன்மைக்காக மாறுதல் அடைந்த Adjective-ல் எந்தவித மாற்றமும் இல்லை என்பதையும், பன்மைக்காக மாறுதல் அடைந்த कमरे - कमरों என்று மாறி இருப்பதையும் காண்க.

वह बडा कमरा – வஹ் படா கம்ரா (அந்த பெரிய அறை)
वह बडा कमरा + को = उस बडे कमरे को – உஷ் படே கம்ரே கோ ( அந்தப் பெரிய அறைக்கு / அறையை)

இங்கு பெயர்ச்சொல் மட்டுமின்றி பெயர்ச்சொல்லுக்கு முன்னால் வந்த adjective-வும், அதற்கு முன்னால் வந்த demonstrative object- ஆன “वह”-ம் பாதிப்பு அடைந்திருக்கிறது.ஆறாம் வேற்றுமை உருபுகளான “का, के, की” என்பவை அவைகளுக்கு பின்னால் வரும் பெயர்ச்சொற்களின் எண்ணுக்கும் பாலுக்கும் ஏற்ப அமையும் என்பது நமக்குத்தெரியும்.


இவ்வாறு கர் என்ற வினைச்சொல்லை சேர்த்து உருவாக்கிய கூட்டுவினையை உபயோகிக்கும் போது, தமிழ் மொழியைப்போல இரண்டாம் அல்லது நான்காம் வேற்றுமை உருபுகளை பயன்படுத்தக்கூடாது. பதிலாக ஆறாம் வேற்றுமை உருபைத்தான் உபயோகிக்க வேண்டும். இந்த ஆறாம் வேற்றுமை உருபு கூட்டுவினையில் உள்ள பெயர்ச்சொல்லின் எண்ணுக்கும் பாலுக்கும் ஏற்ப அமையும்.

அவன் இராமனை எதிர்பார்க்கிறான்.
वह राम को इन्तजार करता है । தவறு
वह राम का इन्तजार करता है । சரிஇரண்டாம் வேற்றுமை உருபான “को”வைத்தவிர மற்ற வேற்றுமை உருபுகள் வெளிப்படையாக பயன்படுத்தப்படாமல் தொக்கி நின்றாலும், அவைகள் வெளிப்படையாக பயன்படுத்தப்பட்டால் என்ன பாதிப்பு அவைகளுக்கு ஏற்படுமோ, அதே பாதிப்பு அவைகளுக்கு முன்னால் உள்ள Noun, Pronoun அல்லது Adjective-களில் ஏற்படும். பாதிப்பு இல்லாத வகையில் எழுதுவது தவறாகும்.

मैं राम का घर जाता हूँ । மைன் ராம் கா கர் ஜாத்தா ஹும் – தவறு.
[இங்கு மறைந்திருப்பது நான்காம் வேற்றுமை உருபான को என்பதை கவனிக்க மறக்க வேண்டாம். ]

முதலாவது ஐயத்திற்கு மீண்டும் மேலே இருக்கும் விளக்கத்தைக் காணவும். "கர்" வரும் போது ஏற்படும் மாறுபாடு என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

கர் (கோ) ஜாத்தா ஹூம் என்பதில் கோ மறைந்திருக்கிறது. இந்த "கோ" பெயர் உரிச்சொல்லில் மாறுபாட்டை ஏற்படுத்துகிறது. அவ்வாறு வேறுபாடு இல்லாத வகையில் எழுதுவது தவறு.

பாரதி
26-02-2010, 01:46 AM
ஒரு சிறிய சந்தேகம்; किसपर, किनपर, जिसपर, जिनपर இது போன்ற வார்த்தைகள் சற்று வேறுபட்டு வருகின்றனவே. தட்டச்சுப் பிழையாய் இருக்க வாய்ப்பில்லை. மென்பொருள் குறைபாடா?

புதிதாய்க் கற்பவர்கள் குழம்பிவிடலாம் என்பதால் கேட்கிறேன். தவறாய் நினைக்கவேண்டாம்.

கருத்திற்கு நன்றி நண்பரே.
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகளில் பிழை எதுவும் இல்லை. அவை சரிதான்.

கெளன் + பர் = கெளன்பர் என்று எழுதக்கூடாது, அதை கிஸ்பர், கின்பர் என்றே எழுத வேண்டும், அதே போல ஜோ + பர் = ஜோப்பர் என்று எழுதாமல் ஜிஸ்பர், ஜின்பர் என்றே எழுத வேண்டும்.

ஒவ்வொரு மொழிக்கும் ஒருவிதமான இலக்கணம் இருக்கிறது. ஹிந்தியைப் பொறுத்த வரையில் இப்படித்தான் எழுத வேண்டும் என்பது இலக்கணம்.

நாம் பொதுவாக தமிழ் மற்றும் ஆங்கில இலக்கணத்தை ஒப்பிட்டு, அதை அப்படியே ஹிந்தியிலும் பயன்படுத்த நினைக்கும் போது சில நேரங்களில் ஐயமோ, குழப்பமோ வர வாய்ப்பிருக்கிறது. சில முறைகள் படித்தோமெனில் நம் மனதில் நிற்கும்.

ஐயங்களை கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை. கண்டிப்பாக உங்கள் வினாக்களைக் கேளுங்கள். எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். [நானும் ஹிந்தி மொழியில் அரிச்சுவடி மாணவன்தான்.பிழையிருப்பின் தயக்கமின்றி சுட்டுங்கள். திருத்திக்கொள்வேன்.] நன்றி.

பாரதி
26-02-2010, 10:24 AM
எதிர்கால வினைச்சொற்களை உருவாக்கும் விதிகள்:

தன்னிலை ஒருமைக்கு (1st person singular) அடிப்படை வினைச்சொல்லோடு “ऊँगा” (ஆண்பால்) அல்லது “ऊँगी”(பெண்பால்)சேர்க்க வேண்டும்.

வினைச்சொற்கள் जा (ஜா), लिख (லிக்) ஆகியவற்றைப் பயன்படுத்தி எடுத்துக்காட்டுகள்:

1st Person Singular – தன்னிலை ஒருமை
मैं जाऊँगा ।- மைன் ஜாவூங்கா – நான் போவேன்.
मैं जाऊँगी।-மைன் ஜாவூங்கீ – நான் போவேன்.

முன்னிலை ஒருமை (2nd person singular) மற்றும் படர்க்கை ஒருமைக்கு (3rd person singular) அடிப்படை வினைச்சொல்லோடு “एगा” (ஆண்பால்)அல்லது “एगी” (பெண்பால்)சேர்க்க வேண்டும். பதிலாக “येगा”(ஆண்பால்)அல்லது “येगी” (பெண்பால்)யும் சேர்க்கலாம்.

எடுத்துக்காட்டுகள்:
2nd person singular
तू जाएगा । तू जाएगी । (தூ ஜாயேகா / தூ ஜாயேகீ) – நீ போவாய்
तू लिखेगा । तू लिखेगी । (தூ லிகேகா / தூ லிகேகீ) – நீ எழுதுவாய்.

3rd person singular
वह जायेगा । (வஹ் ஜாயேகா) – அவன் போவான்.
वह जायेगी । (வஹ் ஜாயேகீ) – அவள் போவாள்
वह लिखेगा । (வஹ் லிகேகா) – அவன் எழுதுவான்.
वह लिखेगी ।(வஹ் லிகேகீ) – அவள் எழுதுவாள்.

“तुम” என்ற முன்னிலை பன்மைக்கு (நடைமுறை ஒருமை)(2nd person plural) அடிப்படை வினைச்சொல்லோடு “ओगे” (ஆண்பால்)அல்லது “ओगी” (பெண்பால்)சேர்க்க வேண்டும்.

எடுத்துக்காட்டுகள்:
तुम जाओगे । तुम जाओगी । (தும் ஜாவோகே / தும் ஜாவோகீ) – நீவீர் போவீர்.
तुम लिखोगे । तुम लिखोगी ।(தும் லிகோகே / தும் லிகோகீ) – நீவீர் எழுதுவீர்.

தன்னிலை பன்மை (1st person plural), முன்னிலை பன்மை (2nd person plural) மற்றும் படர்க்கை பன்மைகளுக்கு[आप] (3rd person plural) அடிப்படை வினைச்சொல்லோடு “एँगा”(ஆண்பால்)அல்லது “एँगी”(பெண்பால்)சேர்க்க வேண்டும்.

எடுத்துக்காட்டுகள்:
हम जाएँगे / जाएँगी– (ஹம் ஜாயேங்கே / ஜாயேங்கீ) – நாம் போவோம்.
आप जाएँगे / जाएँगी– (ஆப் ஜாயேங்கே / ஜாயேங்கீ) – நீங்கள் போவீர்கள்.
वे जाएँगे / जाएँगी– (வே ஜாயேங்கே / ஜாயேங்கீ) – அவர்கள் போவார்கள்.


हम लिखेँगे / लिखेँगी– (ஹம் லிகேங்கே / லிகேங்கீ) – நாம் எழுதுவோம்.
आप लिखेँगे / लिखेँगी– (ஆப் லிகேங்கே / லிகேங்கீ) – நீங்கள் எழுதுவீர்கள்.
वे लिखेँगे / लिखेँगी– (வே லிகேங்கே / லிகேங்கீ) – அவர்கள் எழுதுவார்கள்.

பா.ராஜேஷ்
26-02-2010, 11:27 AM
தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி பாரதி.
"வஹ்" என்பதின் பன்மையா "வே" ??

பாரதி
26-02-2010, 12:10 PM
"வஹ்" என்பதின் பன்மையா "வே" ??
ஆமாம் நண்பரே. இந்தத்திரியின் முதல் பக்கத்திலேயே அது குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதே போல "யஹ்" [இவன், இவள்"] என்பதற்கு பன்மை "யே" [இவர்கள்] என்பதாகும்.

பா.ராஜேஷ்
26-02-2010, 12:28 PM
திரியின் முதல் பக்கம் படித்து வெகு நாட்களாகி விட்டதால் மறந்து விட்டேன் போலும் :D ;)

நன்றி நண்பரே!

பா.ராஜேஷ்
26-02-2010, 12:28 PM
தானாகவே இருமுறை மேற்சொன்ன பதிவு பதிந்ததால் அதை நீக்குகிறேன்.

பாரதி
27-02-2010, 12:43 AM
எதிர்கால வினைச்சொற்களை உருவாக்கும் விதிகளில் இருந்து விதிவிலக்குகள்:


ले, दे,पी,हो, कर


ले – லே (எடு)
मैं लूँगा / लूँगी
तू लेगा / लेगी
वह लेगा / लेगी
हम लेंगे / लेंगी
तुम लोगे / लोगी
आप लेंगे / लेंगी
वे लेंगे / लेंगी


दे – தே (கொடு)
मैं दूँगा / दूँगी
तू देगा / देगी
वह देगा / देगी
हम देंगे / देंगी
तुम दोगे / दोगी
आप देंगे / देंगी
वे देंगे / देंगी


पी- பீ (குடி)
मैं पिऊँगा / पिऊँगी
तू पियेगा / पियेगी
वह पियेगा / पियेगी
हम पियेंगे / पियेंगी
तुम पिओगे / पिओगी
आप पियेंगे / पियेंगी
वे पियेंगे / पियेंगी


हो- ஹோ (ஆகு)
मैं हूँगा / हूँगी
तू होगा / होगी
वह होगा / होगी
हम होंगे / होंगी
तुम होगे / होगी
आप होंगे / होंगी
वे होंगे / होंगी


कर – கர் (செய்)
मैं करूँगा / करूँगी
तू करेगा / करेगी
वह करेगा / करेगी
हम करेंगे / करेंगी
तुम करोगे / करोगी
आप करेंगे / करेंगी
वे करेंगे / करेंगी

பாரதி
27-02-2010, 04:33 PM
Present Continuous Tense – தொடர் நிகழ்காலம் – तात्कालिक वर्तमान काल


ஒரு வாக்கியத்தை தொடர்நிகழ்காலமாக மாற்ற வினைச்சொல்லை அடுத்து,
ஆண்பால் ஒருமையாயின் “रहा” வும்,
ஆண்பால் பன்மையாயின் “रहे” வும்,
பெண்பால் ஒருமை மற்றும் பெண்பால் பன்மையாயின் “रही” யும் சேர்க்க வேண்டும்.


வினைச்சொல் जा – வைப்பயன்படுத்தி எடுத்துக்காட்டுகள்:
1st person singular - தன்னிலை ஒருமை:
मैं जा रहा हूँ ।
मैं जा रही हूँ ।


1st person plural - தன்னிலை பன்மை :
हम जा रहे हैं ।
हम जा रही हैं ।


2nd person singular முன்னிலை ஒருமை:
तू जा रहा है ।
तू जा रही है ।


2nd person plural - முன்னிலை பன்மை:
तुम जा रहे हो ।
तुम जा रही हो ।


आप जा रहे हैं ।
आप जा रही हैं ।


3rd person singular படர்க்கை ஒருமை:
वह जा रहा है ।
वह जा रही है ।


3rd person plural - படர்க்கை பன்மை:
वे जा रहे हैं ।
वे जा रही हैं ।

பாரதி
28-02-2010, 12:33 PM
Past Indefenite Tense – சாதாரண இறந்த காலம் – सामान्य भूत्काल


இறந்த கால வாக்கிய அமைப்புகளைப் பற்றி படிப்பதற்கு முன்னர் வினைச்சொல்லின் இரு முக்கிய வகைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். கீழே கொடுக்கப்படுகின்ற இரண்டு வாக்கியங்களையும் கவனிக்கவும்.

1. நான் மரத்திலிருந்து விழுந்தேன்.
2. நான் இராமனைப் பார்த்தேன்.

முதலாவது வாக்கியத்தில் “நான்” என்பது subject. “விழுந்தேன் என்பது verb.

இரண்டாவது வாக்கியத்தில் “நான்” என்பது subject “பார்த்தேன்” என்பது verb. “இராமனை” என்பது object.

இரண்டாவது வாக்கியத்திலிருப்பது போல முதலாவது வாக்கியத்திற்கு object–ஐ சேர்க்க முடியுமா என்று பார்த்தால் அது இயலாது என்பது விளங்கும். ஏனென்றால் “பார்த்தேன்” அல்லது “எதைப்பார்த்தேன்” என்ற கேள்வியைக் கேட்டால் “இராமனைப் பார்த்தேன்” என்ற பதில் “ஐ” என்ற இரண்டாம் வேற்றுமை உருபை உடைய ஒரு சொல் பதிலாகக் கிடைக்கிறது. ஆனால் முதலாவது வாக்கியத்தில் இத்தகைய கேள்வியைக் கேட்டால் இரண்டாம் வேற்றுமை உருபை உடைய ஒரு சொல் பதிலாக வராது.

எனவே “விழுந்தேன்” என்ற சொல்லுக்கு object – ஐ ஏற்கும் தகுதியில்லை. ஆனால் “பார்த்தேன்” என்ற சொல்லுக்கு object – ஐ ஏற்கும் தகுதி இருக்கிறது.

எனவே,


எந்த வினைச்சொல்லுக்கு object - ஐ ஏற்கும் தகுதி இருக்கிறதோ அது Transitive verb ஆகும். [ A verb which is capable of taking an object is a Transitive verb.)
எந்த வினைச்சொல்லுக்கு object- ஐ ஏற்கின்ற தகுதி இல்லையோ அது Intransitive verb ஆகும். [ A verb which is incapable of taking an object is an Intransitive verb.)


குறிப்பு:
இறந்தகால வாக்கிய அமைப்புகளில் வினைச்சொல்லின் உருவங்கள் அவைகளுடைய நிலைகளைப் பொறுத்து அமைவதால் இதைப்பற்றிய தெளிவான கருத்து நமக்கு வேண்டும்.

பா.ராஜேஷ்
28-02-2010, 08:57 PM
பஹுத் ஷுகிர்யா ஜி| ஆகே ச்சலோ |

கீதம்
28-02-2010, 10:58 PM
கருத்திற்கு நன்றி நண்பரே.
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகளில் பிழை எதுவும் இல்லை. அவை சரிதான்.

கெளன் + பர் = கெளன்பர் என்று எழுதக்கூடாது, அதை கிஸ்பர், கின்பர் என்றே எழுத வேண்டும், அதே போல ஜோ + பர் = ஜோப்பர் என்று எழுதாமல் ஜிஸ்பர், ஜின்பர் என்றே எழுத வேண்டும்.

ஒவ்வொரு மொழிக்கும் ஒருவிதமான இலக்கணம் இருக்கிறது. ஹிந்தியைப் பொறுத்த வரையில் இப்படித்தான் எழுத வேண்டும் என்பது இலக்கணம்.

நாம் பொதுவாக தமிழ் மற்றும் ஆங்கில இலக்கணத்தை ஒப்பிட்டு, அதை அப்படியே ஹிந்தியிலும் பயன்படுத்த நினைக்கும் போது சில நேரங்களில் ஐயமோ, குழப்பமோ வர வாய்ப்பிருக்கிறது. சில முறைகள் படித்தோமெனில் நம் மனதில் நிற்கும்.

ஐயங்களை கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை. கண்டிப்பாக உங்கள் வினாக்களைக் கேளுங்கள். எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். [நானும் ஹிந்தி மொழியில் அரிச்சுவடி மாணவன்தான்.பிழையிருப்பின் தயக்கமின்றி சுட்டுங்கள். திருத்திக்கொள்வேன்.] நன்றி.
விளக்கத்துக்கு நன்றி பாரதி அவர்களே.

பாரதி
01-03-2010, 11:45 AM
கருத்துகளுக்கு நன்றி இராஜேஷ், கீதம்.

பாரதி
01-03-2010, 11:48 AM
வினைச்சொல்லின் இறந்தகால உருவங்கள்


ஹிந்தி மொழியில் வினைச்சொல்லின் இறந்தகால உருவங்களை அமைப்பது மிகவும் எளிது.
ஒரு வினைச்சொல் உயிரெழுத்தில் முடிந்திருந்தால் அதோடு “ या ” சேர்க்க வேண்டும்.
எடுத்துக்காட்டுகள்:
आ – आया (ஆ – ஆயா) வருதல் - வந்தான்
सो – सोया (சோ – சோயா) உறங்குதல் - உறங்கினான்

ஒரு வினைச்சொல் ஒற்றெழுத்தில் முடிந்திருந்தால் அதோடு “आ” சேர்க்க வேண்டும்.
எடுத்துக்காட்டுகள்:
लिख – लिखा (லிக் – லிகா) எழுதுதல் - எழுதினான்
पढ- पढा (பட் – படா) படித்தல் – படித்தான்.

இவ்வாறு “या” அல்லது “आ” சேர்ந்து வருகின்ற உருவம் ஆண்பால் ஒருமை உருவமாகும். ஆண்பால் ஒருமைக்கு “आ” எனவும், ஆண்பால் பன்மைக்கு “ए” எனவும். பெண்பால் ஒருமைக்கு “इ”எனவும், பெண்பால் பன்மைக்கு “ईं” எனவும் அமையும் என்பதை நினைவில் கொள்க.

ஆண்பால் ஒருமை: आया (ஆயா) வந்தான்
ஆண்பால் பன்மை: आये (ஆயே) வந்தார்கள்
பெண்பால் ஒருமை: आयी (ஆயீ) வந்தாள்
பெண்பால் பன்மை: आयीं (ஆயீ(ங்)(ம்) வந்தார்கள்

விதிவிலக்குகள்:

जा – ஜா - செல்லுதல்
ஆண்பால் ஒருமை: गया (கயா) சென்றான்
ஆண்பால் பன்மை: गये (கயே) சென்றார்கள்
பெண்பால் ஒருமை: गयी (கயீ) சென்றாள்
பெண்பால் பன்மை: गयीं (கயீ(ங்)(ம்) சென்றார்கள்

ले – லே - எடுத்தல்
ஆண்பால் ஒருமை: लिया (லியா) எடுத்தான்
ஆண்பால் பன்மை: लिये (லியே) எடுத்தார்கள்
பெண்பால் ஒருமை: ली (லீ) எடுத்தாள்
பெண்பால் பன்மை: लीं (லீ(ங்)(ம்) எடுத்தார்கள்

दे – தே - கொடுத்தல்
ஆண்பால் ஒருமை: दिया (தியா) கொடுத்தான்
ஆண்பால் பன்மை: दिये (தியே) கொடுத்தார்கள்
பெண்பால் ஒருமை: दी (தீ) கொடுத்தாள்
பெண்பால் பன்மை: दीं (தீ(ங்)(ம்) கொடுத்தார்கள்

पी – பீ - குடித்தல்
ஆண்பால் ஒருமை: पिया (பியா) குடித்தான்
ஆண்பால் பன்மை: पिये (பியே) குடித்தார்கள்
பெண்பால் ஒருமை: पी (பீ) குடித்தாள்
பெண்பால் பன்மை: पीं (பீ(ங்)(ம்) குடித்தார்கள்

कर – கர்- செய்தல்
ஆண்பால் ஒருமை: किया (கியா) செய்தான்
ஆண்பால் பன்மை: किये (கியே) செய்தார்கள்
பெண்பால் ஒருமை: की (கீ) செய்தாள்
பெண்பால் பன்மை: कीं (கீ(ங்)(ம்) - செய்தார்கள்

हो – ஹோ - ஆகுதல்
ஆண்பால் ஒருமை: हुआ – (ஹுவா)ஆனான்
ஆண்பால் பன்மை: हुए – (ஹுவே)ஆனார்கள்
பெண்பால் ஒருமை: हुई – (ஹுயீ ) ஆனாள்
பெண்பால் பன்மை: हुईं – (ஹுயீ(ங்)(ம்) – ஆனார்கள்.

பாரதி
06-03-2010, 05:00 AM
PAST INDEFINITE TENSE – INTRANSITIVE VERB
சாதாரண இறந்தகாலம் – செயப்படுபொருள் குன்றிய வினை
सामान्य भूतकाल - अकर्मक क्रिया (சாமான்ய பூத்கால் – அகர்மக் க்ரியா)

Past indefenite tense வாக்கிய அமைப்பில் intransitive verb வரும் பொழுது வினைச்சொல்லின் subject-னுடைய எண்ணுக்கும் பாலுக்கும் ஏற்ப அமையும்.


தன்னிலை : 1st Person
ஆண்பால் ஒருமை: मैं आया – (மைன் ஆயா) நான் வந்தேன்
ஆண்பால் பன்மை: हम आये – (ஹம் ஆயே) நாங்கள் வந்தோம்
பெண்பால் ஒருமை: मैं आयी – (மைன் ஆயீ) நான் வந்தேன்
பெண்பால் பன்மை: हम आयीं - (ஹம் ஆயீ(ம்) – நாங்கள் வந்தோம்.


முன்னிலை : 2nd Person
ஆண்பால் ஒருமை: तू आया – (தூ ஆயா) நீ வந்தாய்
ஆண்பால் பன்மை: तुम आये – (தும் ஆயே) நீவீர் வந்தீர்
பெண்பால் ஒருமை: तू आयी – (தூ ஆயீ ) நீ வந்தாய்
பெண்பால் பன்மை: तुम आयीं - (தும் ஆயீ(ம்) – நீவீர் வந்தீர்.
ஆண்பால் பன்மை: आप आये – (ஆப் ஆயே) நீங்கள் வந்தீர்கள்
பெண்பால் பன்மை: आप आयीं - (ஆப் ஆயீ(ம்) – நீங்கள் வந்தீர்கள்.


படர்க்கை : 3rd Person
ஆண்பால் ஒருமை: वह आया – (வஹ் ஆயா) அவன் வந்தான்
ஆண்பால் பன்மை: वे आये – (வே ஆயே) அவர்கள் வந்தார்கள்
பெண்பால் ஒருமை: वह आयी – (வஹ் ஆயீ ) அவள் வந்தாள்
பெண்பால் பன்மை: वे आयीं - (வே ஆயீ(ம்) – அவர்கள் வந்தார்கள்.

பாரதி
07-03-2010, 03:33 AM
PAST INDEFINITE TENSE – TRANSITIVE VERB
சாதாரண இறந்தகாலம் – செயப்படுபொருள் குன்றா வினை
सामान्य भूतकाल - सकर्मक क्रिया (சாமான்ய பூத்கால் – சகர்மக் க்ரியா)
(i) Past indefenite tense வாக்கிய அமைப்பில் Transitive verb வரும் பொழுது Object வெளிப்படையாக் கூறப்படாவிட்டால், வினைச்சொல்லின் உருவம் படர்க்கை ஆண்பால் ஒருமையிலேயே (3rd person masculine singular )அமையும். Subject-உடன் கண்டிப்பாக “ने” சேர்க்க வேண்டும்.


தன்னிலை : 1st Person
ஆண்பால் ஒருமை: मैंने खाया – (மைனே காயா) நான் சாப்பிட்டேன்.
ஆண்பால் பன்மை: हमने खाया – (ஹம்னே காயா) நாங்கள் சாப்பிட்டோம்.
பெண்பால் ஒருமை: मैंने खाया – (மைனே காயா) நான் சாப்பிட்டேன்.
பெண்பால் பன்மை: हमने खाया - (ஹம்னே காயா) நாங்கள் சாப்பிட்டோம்.


முன்னிலை : 2nd Person
ஆண்பால் ஒருமை: तूने खाया – (தூனே காயா) நீ சாப்பிட்டாய்.
ஆண்பால் பன்மை: तुमने खाया – (தும்னே காயா) நீவீர் சாப்பிட்டீர்.
பெண்பால் ஒருமை: तूने खाया – (தூனே காயா ) நீ சாப்பிட்டாய்.
பெண்பால் பன்மை: तुमने खाया - (தும்னே காயா) நீவீர் சாப்பிட்டீர்.
ஆண்பால் பன்மை: आपने खाया - (ஆப்னே காயா) நீங்கள் சாப்பிட்டீர்கள்.
பெண்பால் பன்மை: आपने खाया - (ஆப்னே காயா) நீங்கள் சாப்பிட்டீர்கள்.


படர்க்கை : 3rd Person
ஆண்பால் ஒருமை: उसने खाया – (உஸ்னே காயா) அவன் சாப்பிட்டான்.
ஆண்பால் பன்மை: उन्होने खाया – (உன்ஹோனே காயா) அவர்கள் சாப்பிட்டார்கள்.
பெண்பால் ஒருமை: उसने खाया – (உஸ்னே காயா) அவள் சாப்பிட்டாள்
பெண்பால் பன்மை: उन्होने खाया – (உன்ஹோனே காயா) அவர்கள் சாப்பிட்டார்கள்.


(ii) Past Indefinite Tense வாக்கிய அமைப்பில் Transitive verb வரும் பொழுது Object வெளிப்படையாகக் கூறப்பட்டு, அதற்குப்பின்னால் இரண்டாம் வேற்றுமை உருபான “को” (கோ) வராவிட்டால் வினைச்சொல்லின் உருவம் object-னுடைய எண்ணுக்கும் பாலுக்கும் ஏற்ப அமையும். Subject-உடன் கண்டிப்பாக “ने” சேர்க்க வேண்டும்.


सामान्य भूतकाल - सकर्मक क्रिया – कर्म पुल्लिंग (एक वचन – एक फल )
தன்னிலை : 1st Person
ஆண்பால் ஒருமை: मैंने एक फल खाया – (மைனே காயா) நான் சாப்பிட்டேன்.
ஆண்பால் பன்மை: हमने एक फल खाया – (ஹம்னே காயா) நாங்கள் சாப்பிட்டோம்.
பெண்பால் ஒருமை: मैंने एक फल खाया – (மைனே காயா) நான் சாப்பிட்டேன்.
பெண்பால் பன்மை: हमने एक फल खाया - (ஹம்னே காயா) நாங்கள் சாப்பிட்டோம்.


முன்னிலை : 2nd Person
ஆண்பால் ஒருமை: तूने एक फल खाया (தூனே ஏக் ஃபல் காயா) நீ ஒரு பழம் சாப்பிட்டாய்.
ஆண்பால் பன்மை: तुमने एक फल खाया (தும்னே ஏக் ஃபல் காயா) நீவீர் ஒரு பழம் சாப்பிட்டீர்.
பெண்பால் ஒருமை: तूने एक फल खाया (தூனே ஏக் ஃபல் காயா ) நீ ஒரு பழம் சாப்பிட்டாய்.
பெண்பால் பன்மை: तुमने एक फल खाया (தும்னே ஏக் ஃபல் காயா) நீவீர் ஒரு பழம் சாப்பிட்டீர்.
ஆண்பால் பன்மை: आपने एक फल खाया (ஆப்னே ஏக் ஃபல் காயா) நீங்கள் ஒரு பழம் சாப்பிட்டீர்கள்.
பெண்பால் பன்மை: आपने एक फल खाया (ஆப்னே ஏக் ஃபல் காயா) நீங்கள் ஒரு பழம் சாப்பிட்டீர்கள்.


படர்க்கை : 3rd Person
ஆண்பால் ஒருமை: उसने एक फल खाया – (உஸ்னே ஏக் ஃபல் காயா) அவன் ஒரு பழம் சாப்பிட்டான்.
ஆண்பால் பன்மை: उन्होने एक फल खाया – (உன்ஹோனே ஏக் ஃபல் காயா) அவர்கள் ஒரு பழம் சாப்பிட்டார்கள்.
பெண்பால் ஒருமை: उसने एक फल खाया – (உஸ்னே ஏக் ஃபல் காயா) அவள் ஒரு பழம் சாப்பிட்டாள்.
பெண்பால் பன்மை: उन्होने एक फल खाया – (உன்ஹோனே ஏக் ஃபல் காயா) அவர்கள் ஒரு பழம் சாப்பிட்டார்கள்.

பா.ராஜேஷ்
07-03-2010, 12:03 PM
ஹம்னே காயேன்.. ஏன் வராது?
சாப்பிட்டேன் என்பதற்கு காயா என்றால், சாப்பிட்டோம் என்பதற்கு காயேன் என்பது தவறா?

இதோ வருகிறேன் என்பதற்கு அபி ஆயா. என்றுதானே சொல்கிறோம். ஆயா எதிர் காலத்திற்கும் பொருந்துமா?

பாரதி
07-03-2010, 12:23 PM
ஹம்னே காயேன்.. ஏன் வராது?
சாப்பிட்டேன் என்பதற்கு காயா என்றால், சாப்பிட்டோம் என்பதற்கு காயேன் என்பது தவறா?

வராது. காரணம் விதி: மீண்டும் ஒரு முறை விதியைப்பாருங்கள். விளங்கும்.

Past indefenite tense வாக்கிய அமைப்பில் Transitive verb வரும் பொழுது Object வெளிப்படையாக் கூறப்படாவிட்டால், வினைச்சொல்லின் உருவம் படர்க்கை ஆண்பால் ஒருமையிலேயே (3rd person masculine singular) அமையும். Subject-உடன் கண்டிப்பாக “ने” சேர்க்க வேண்டும்.

हमने खाया – (ஹம்னே காயா) நாங்கள் சாப்பிட்டோம். - இப்படி சொல்வதுதான் சரி.


இதோ வருகிறேன் என்பதற்கு அபி ஆயா. என்றுதானே சொல்கிறோம். ஆயா எதிர் காலத்திற்கும் பொருந்துமா?

இல்லை. அபி ஆத்தா ஹும். என்பதுதான் சரி.
அபி ஆயா என்றால் இப்போதுதான் வந்தேன் என்பது பொருள்.
ஆயா எதிர்காலத்திற்கு பொருந்தாது.

பாரதி
08-03-2010, 02:52 PM
सामान्य भूतकाल - सकर्मक क्रिया – कर्म - पुल्लिंग (बहु वचन – दो फल )
தன்னிலை : 1st Person
ஆண்பால் ஒருமை: मैंने दो फल खाये – (மைனே தோ ஃபல் காயே) நான் இரண்டு பழங்கள் சாப்பிட்டேன்.
ஆண்பால் பன்மை: हमने दो फल खाये – (ஹம்னே தோ ஃபல் காயே) நாங்கள் இரண்டு பழங்கள் சாப்பிட்டோம்.
பெண்பால் ஒருமை: मैंने दो फल खाये – (மைனே தோ ஃபல் காயே) நான் இரண்டு பழங்கள் சாப்பிட்டேன்.
பெண்பால் பன்மை: हमने दो फल खाये- (ஹம்னே தோ ஃபல் காயே) நாங்கள் இரண்டு பழங்கள் சாப்பிட்டோம்.


முன்னிலை : 2nd Person
ஆண்பால் ஒருமை: तूने दो फल खाये - (தூனே தோ ஃபல் காயே) நீ இரண்டு பழங்கள் சாப்பிட்டாய்.
ஆண்பால் பன்மை: तुमने दो फल खाये - (தும்னே தோ ஃபல் காயே) நீவீர் இரண்டு பழங்கள் சாப்பிட்டீர்.
பெண்பால் ஒருமை: तूने दो फल खाये - (தூனே தோ ஃபல் காயே) நீ இரண்டு பழங்கள் சாப்பிட்டாய்.
பெண்பால் பன்மை: तुमने दो फल खाये - (தும்னே தோ ஃபல் காயே) நீவீர் இரண்டு பழங்கள் சாப்பிட்டீர்.
ஆண்பால் பன்மை: आपने दो फल खाये - (ஆப்னே தோ ஃபல் காயே) நீங்கள் இரண்டு பழங்கள் சாப்பிட்டீர்கள்.
பெண்பால் பன்மை: आपने दो फल खाये - (ஆப்னே தோ ஃபல் காயே) நீங்கள் இரண்டு பழங்கள் சாப்பிட்டீர்கள்.


படர்க்கை : 3rd Person
ஆண்பால் ஒருமை: उसने दो फल खाये – (உஸ்னே தோ ஃபல் காயே) அவன் இரண்டு பழங்கள் சாப்பிட்டான்.
ஆண்பால் பன்மை: उन्होने दो फल खाये – (உன்ஹோனே தோ ஃபல் காயே) அவர்கள் இரண்டு பழங்கள் சாப்பிட்டார்கள்.
பெண்பால் ஒருமை: उसने दो फल खाये – (உஸ்னே தோ ஃபல் காயே) அவள் இரண்டு பழங்கள் சாப்பிட்டாள்.
பெண்பால் பன்மை: उन्होने दो फल खाये – (உன்ஹோனே தோ ஃபல் காயே) அவர்கள் இரண்டு பழங்கள் சாப்பிட்டார்கள்.

இளசு
08-03-2010, 08:02 PM
நன்றி பாரதி

நீவீர், நீங்கள்
தும்னே,ஆப்னே

கற்றேன். நன்றி.

சிவா.ஜி
09-03-2010, 05:51 AM
மிகத் தெளிவான விளக்கங்களுடன் நீங்கள் சொல்லித்தரும் முறை மிக அருமை பாரதி. நன்றாகப் பேசத் தெரியுமேத் தவிர, இலக்கணங்கள் தகறாருதான்...ஆனால் இப்போது அதுவும் தெளிவாகிறது.

தன்யவாத் குருஜி.

பாரதி
09-03-2010, 07:09 AM
ஊக்கம் தரும் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி அண்ணா, சிவா.

சிவா, நான் வெறுமனே தட்டச்சித் தருகிறேன். நான் ஆசிரியன் அல்லன். உங்களைப் போன்றே நானும் கற்பவனே.

பாரதி
09-03-2010, 07:12 AM
सामान्य भूतकाल - सकर्मक क्रिया – कर्म - स्त्रीलिगं (एह वचन – रोटी )
தன்னிலை : 1st Person
ஆண்பால் ஒருமை: मैंने एक रोटी खायी – (மைனே ஏக் ரோட்டி காயீ) நான் ஒரு ரொட்டி சாப்பிட்டேன்.
ஆண்பால் பன்மை: हमने एक रोटी खायी – (ஹம்னே ஏக் ரோட்டி காயீ) நாங்கள் ஒரு ரொட்டி சாப்பிட்டோம்.
பெண்பால் ஒருமை: मैंने एक रोटी खायी – (மைனே ஏக் ரோட்டி காயீ) நான் ஒரு ரொட்டி சாப்பிட்டேன்.
பெண்பால் பன்மை: हमने एक रोटी खायी - (ஹம்னே ஏக் ரோட்டி காயீ) நாங்கள் ஒரு ரொட்டி சாப்பிட்டோம்.


முன்னிலை : 2nd Person
ஆண்பால் ஒருமை: तूने एक रोटी खायी - (தூனே ஏக் ரோட்டி காயீ) நீ ஒரு ரொட்டி சாப்பிட்டாய்.
ஆண்பால் பன்மை: तुमने एक रोटी खायी - (தும்னே ஏக் ரோட்டி காயீ) நீவீர் ஒரு ரொட்டி சாப்பிட்டீர்.
பெண்பால் ஒருமை: तूने एक रोटी खायी - (தூனே ஏக் ரோட்டி காயீ) நீ ஒரு ரொட்டி சாப்பிட்டாய்.
பெண்பால் பன்மை: तुमने एक रोटी खायी - (தும்னே ஏக் ரோட்டி காயீ) நீவீர் ஒரு ரொட்டி சாப்பிட்டீர்.
ஆண்பால் பன்மை: आपने एक रोटी खायी - (ஆப்னே ஏக் ரோட்டி காயீ) நீங்கள் ஒரு ரொட்டி சாப்பிட்டீர்கள்.
பெண்பால் பன்மை: आपने एक रोटी खायी - (ஆப்னே ஏக் ரோட்டி காயீ) நீங்கள் ஒரு ரொட்டி சாப்பிட்டீர்கள்.


படர்க்கை : 3rd Person
ஆண்பால் ஒருமை: उसने एक रोटी खायी – (உஸ்னே ஏக் ரோட்டி காயீ) அவன் ஒரு ரொட்டி சாப்பிட்டான்.
ஆண்பால் பன்மை: उन्होने एक रोटी खायी – (உன்ஹோனே ஏக் ரோட்டி காயீ) அவர்கள் ஒரு ரொட்டி சாப்பிட்டார்கள்.
பெண்பால் ஒருமை: उसने एक रोटी खायी – (உஸ்னே ஏக் ரோட்டி காயீ) அவள் ஒரு ரொட்டி சாப்பிட்டாள்.
பெண்பால் பன்மை: उन्होने एक रोटी खायी – (உன்ஹோனே ஏக் ரோட்டி காயீ) அவர்கள் ஒரு ரொட்டி சாப்பிட்டார்கள்.

பாரதி
10-03-2010, 08:16 AM
सामान्य भूतकाल - सकर्मक क्रिया – कर्म - स्त्रीलिगं (बहु वचन – रोटियाँ )
தன்னிலை : 1st Person
ஆண்பால் ஒருமை: मैंने दो रोटियाँ खायीं – (மைனே தோ ரோட்டியா(ங்) காயீ(ம்) நான் இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டேன்.
ஆண்பால் பன்மை: हमने दो रोटियाँ खायीं – (ஹம்னே தோ ரோட்டியா(ங்) காயீ(ம்) நாங்கள் ஒரு ரொட்டி சாப்பிட்டோம்.
பெண்பால் ஒருமை: मैंने दो रोटियाँ खायीं – (மைனே தோ ரோட்டியா(ங்) காயீ(ம்) நான் ஒரு ரொட்டி சாப்பிட்டேன்.
பெண்பால் பன்மை: हमने दो रोटियाँ खायीं - (ஹம்னே தோ ரோட்டியா(ங்) காயீ(ம்) நாங்கள் ஒரு ரொட்டி சாப்பிட்டோம்.


முன்னிலை : 2nd Person
ஆண்பால் ஒருமை: तूने दो रोटियाँ खायीं (தூனே தோ ரோட்டியா(ங்) காயீ(ம்) நீ இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டாய்.
ஆண்பால் பன்மை: तुमने दो रोटियाँ खायीं (தும்னே தோ ரோட்டியா(ங்) காயீ(ம்) நீவீர் இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டீர்.
பெண்பால் ஒருமை: तूने दो रोटियाँ खायीं (தூனே தோ ரோட்டியா(ங்) காயீ(ம்) நீ இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டாய்.
பெண்பால் பன்மை: तुमने दो रोटियाँ खायीं (தும்னே தோ ரோட்டியா(ங்) காயீ(ம்) நீவீர் இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டீர்.
ஆண்பால் பன்மை: आपने दो रोटियाँ खायीं (ஆப்னே தோ ரோட்டியா(ங்) காயீ(ம்) நீங்கள் இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டீர்கள்.
பெண்பால் பன்மை: आपने दो रोटियाँ खायीं (ஆப்னே தோ ரோட்டியா(ங்) காயீ(ம்) நீங்கள் இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டீர்கள்.


படர்க்கை : 3rd Person
ஆண்பால் ஒருமை: उसने दो रोटियाँ खायीं – (உஸ்னே தோ ரோட்டியா(ங்) காயீ(ம்) அவன் இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டான்.
ஆண்பால் பன்மை: उन्होने दो रोटियाँ खायीं – (உன்ஹோனே தோ ரோட்டியா(ங்) காயீ(ம்) அவர்கள் இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டார்கள்.
பெண்பால் ஒருமை: उसने दो रोटियाँ खायीं – (உஸ்னே ஏக் தோ ரோட்டியா(ங்) காயீ(ம்) அவள் இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டாள்.
பெண்பால் பன்மை: उन्होने दो रोटियाँ खायीं – (உன்ஹோனே தோ ரோட்டியா(ங்) காயீ(ம்) அவர்கள் இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டார்கள்.

பா.ராஜேஷ்
10-03-2010, 02:51 PM
நன்றி பாரதி. அருமையான விளக்கங்கள்.

பாரதி
11-03-2010, 06:01 AM
ஊக்கத்திற்கு நன்றி நண்பரே.
------------------------------------------------

सामान्य भूतकाल – सकर्मक क्रिया - कर्म - (राम को)

III. past Indefenite tense அமைப்பில் transitive verb வரும் போது Object வெளிப்படையாக கூறப்பட்டு அதற்குப் பின்னால் 2-ஆம் வேற்றுமை உருபான को வந்தால் வினைச்சொல்லின் உருவம் 3rd Person masculine singular ஆக அமையும். Subject-உடன் கண்டிப்பாக ने சேர்க்க வேண்டும்.

தன்னிலை : 1st Person
ஆண்பால் ஒருமை: मैंने राम को देखा । – (மைனே ராம் கோ தேக்கா ) நான் ராமைப் பார்த்தேன்.
ஆண்பால் பன்மை: हमने राम को देखा । – (ஹம்னே ராம் கோ தேக்கா) நாங்கள் ராமைப் பார்த்தோம்.
பெண்பால் ஒருமை: मैंने राम को देखा । – (மைனே ராம் கோ தேக்கா) நான் ராமைப் பார்த்தேன்.
பெண்பால் பன்மை: हमने राम को देखा । - (ஹம்னே ராம் கோ தேக்கா) நாங்கள் ராமைப் பார்த்தோம்.


முன்னிலை : 2nd Person
ஆண்பால் ஒருமை: तूने राम को देखा । - (தூனே ராம் கோ தேக்கா) நீ ராமைப் பார்த்தாய்.
ஆண்பால் பன்மை: तुमने राम को देखा । - (தும்னே ராம் கோ தேக்கா) நீவீர் ராமைப் பார்த்தீர்.
பெண்பால் ஒருமை: तूने राम को देखा । - (தூனே ராம் கோ தேக்கா) நீ ராமைப்பார்த்தாய்.
பெண்பால் பன்மை: तुमने राम को देखा । - (தும்னே ராம் கோ தேக்கா) நீவீர் ராமைப் பார்த்தீர்.
ஆண்பால் பன்மை: आपने राम को देखा । - (ஆப்னே ராம் கோ தேக்கா) நீங்கள் ராமைப் பார்த்தீர்கள்.
பெண்பால் பன்மை: आपने राम को देखा । - (ஆப்னே ராம் கோ தேக்கா) நீங்கள் ராமைப் பார்த்தீர்கள்.


படர்க்கை : 3rd Person
ஆண்பால் ஒருமை: उसने राम को देखा । – (உஸ்னே ராம் கோ தேக்கா) அவன் ராமைப் பார்த்தான்.
ஆண்பால் பன்மை: उन्होने राम को देखा । – (உன்ஹோனே ராம் கோ தேக்கா) அவர்கள் ராமைப் பார்த்தார்கள்.
பெண்பால் ஒருமை: उसने राम को देखा । – (உஸ்னே ராம் கோ தேக்கா) அவள் ராமைப் பார்த்தாள்.
பெண்பால் பன்மை: उन्होने राम को देखा । – (உன்ஹோனே ராம் கோ தேக்கா) அவர்கள் ராமைப் பார்த்தார்கள்


படர்க்கை ஒருமை – ஆண்பால் (3rd person singular masculine)
राम ने सीता को देखा – (ராம் னே சீதா கோ தேக்கா ) – ராம் சீதாவைப்பார்த்தான்.

படர்க்கை ஒருமை – பெண்பால் (3rd person singular feminine)
सीता ने राम को देखा – (சீதா னே ராம் கோ தேக்கா ) – சீதா ராமைப் பார்த்தாள்.
सीता ने राम और भरत को देखा – (சீதா னே ராம் அவுர் பரத் கோ தேக்கா ) – சீதா ராமையும் பரத்தையும் பார்த்தாள்.
सीता ने कमला और विमला को देखा – (சீதா னே கமலா அவுர் விமலா கோ தேக்கா ) – சீதா கமலாவையும் விமலாவையும் பார்த்தாள்.

படர்க்கை பன்மை – ஆண்பால் : (3rd person plural masculine)
राम और भरत ने सीता को देखा – (ராம் அவுர் பரத் னே சீதா கோ தேக்கா ) – ராமும் பரத்தும் சீதாவைப்பார்த்தார்கள்.

படர்க்கை பன்மை – பெண்பால் : (3rd person plural feminine)
कमला और विमला ने सीता को देखा – (கமலா அவுர் விமலா னே சீதா கோ தேக்கா ) – கமலாவும் விமலாவும் சீதாவைப்பார்த்தார்கள்.


விதிவிலக்குகள் :
அடைதல் – पहुँच(பகுன்ச்) arrive

கொண்டு வருதல் – ला (லா) bring
சந்தித்தல் – मिल (மில்) meet
மறத்தல் – भूल (பூல்) forget
பேசுதல் – बोल (போல்) speak
முடியும் – सक (சக்) can
நிறைவு – चुक (சுக்) complete
ஆரம்பித்தல் – लग (லக்) start
இந்த வினைகள் வருமாயின் எழுவாயுடன் ने சேர்க்கலாகாது. இவை தம் எழுவாயின் எண், பாலின்படியே மாறும்.

பா.ராஜேஷ்
15-03-2010, 12:53 PM
கஹான் சலே கயே ஜி ??...

பாரதி
15-03-2010, 02:24 PM
அன்பு நண்பரே,
வேலைகள் அதிகமானதால் தட்டச்ச செய்ய இயலவில்லை. மன்னிக்கவும். தட்டச்சிய பாடங்கள் மன்றத்தில் பதிய சில வாரங்களாகும். பொறுத்தருளவும். நன்றி.

பா.ராஜேஷ்
15-03-2010, 02:54 PM
கோயி பாத் நஹி ஹை ஜி| ஆப் ஆராம் ஸே கரோ ||

பாரதி
15-03-2010, 03:43 PM
ஆப் ஆராம் ஸே கரோ ||
ஆப் ஆராம் ஸே கீஜியே - என்பதுதான் சரி.
அல்லது
தூ ஆராம் ஸே கரோ - என்று கூறுவதுதான் சரி.

பா.ராஜேஷ்
15-03-2010, 04:04 PM
மாப் கீஜியே ஜி|

அக்லே பார் டிக் லிகுங்கா... இது சரிதானே!?

பாரதி
15-03-2010, 04:29 PM
அக்லே பார் டிக் லிகுங்கா... இது சரிதானே!?

"அக்லே பார் சஹி தரஃப் லிக்கூங்கா" என்று எழுதுவது சிறப்பாக இருக்கும். "டீக் தரஃப் லிக்கூங்கா" என்று கூறுவதிலும் பிழையில்லை என எண்ணுகிறேன்.

பா.ராஜேஷ்
15-03-2010, 05:56 PM
டிக் ஹை ஜி |

பாரதி
05-05-2010, 04:06 PM
PRESENT PERFECT TENSE
INTRANSITIVE VERB


Intransitive verb-ஐஉடைய Present perfect tense வாக்கியங்களை அமைக்கும் போது முதலில் Past Perfect Tense வாக்கியத்தை அமைத்துக்கொண்டு, அதோடு அந்தந்த வாக்கியத்தின் Subject-ன் எண்ணுக்கும் பாலுக்கும் ஏற்ப நிகழ்கால துணை வினைச்சொல்லை இணைத்தல் வேண்டும்.

தன்னிலை : 1st Person
ஆண்பால் ஒருமை: मैं गया हूँ । (மைன் கயா ஹும்) நான் போயிருக்கிறேன்
ஆண்பால் பன்மை: हम गये हैं । (ஹம் கயே ஹைன்(ங்)) நாங்கள் போயிருக்கிறோம்
பெண்பால் ஒருமை: मैं गयी हूँ । (மைன் கயீ ஹூம்) நான் போயிருக்கிறேன்
பெண்பால் பன்மை: हम गयी हैं ।(ஹம் கயீ ஹைன்(ங்)) நாங்கள் போயிருக்கிறோம்

முன்னிலை : 2nd Person
ஆண்பால் ஒருமை: तू गया है । ( தூ கயா ஹை) நீ போயிருக்கிறாய்
ஆண்பால் பன்மை: तुम गये हो ।( தும் கயே ஹோ) நீவீர் போயிருக்கிறீர்
பெண்பால் ஒருமை: तू गयी हो ।( தூ கயீ ஹோ) நீ போயிருக்கிறாய்
பெண்பால் பன்மை: तुम गयी हो ।( தும் கயீ ஹோ) நீவீர் போயிருக்கிறீர்
ஆண்பால் பன்மை: आप गये हैं । (ஆப் கயே ஹைன்(ங்)) நீங்கள் போயிருக்கிறீர்கள்
பெண்பால் பன்மை: आप गयी हैं । (ஆப் கயீ ஹைன்(ங்)) நீங்கள் போயிருக்கிறீர்கள்

படர்க்கை : 3rd Person
ஆண்பால் ஒருமை: वह गया है । (வஹ் கயா ஹை) அவன் போயிருக்கிறான்
ஆண்பால் பன்மை: वे गये हैं । (வே கயே ஹைன்(ங்)) அவர்கள் போயிருக்கிறார்கள்
பெண்பால் ஒருமை: वह गयी है । (வஹ் கயீ ஹை) அவள் போயிருக்கிறாள்
பெண்பால் பன்மை: वे गयी हैं । (வே கயீ ஹைன்(ங்)) அவர்கள் போயிருக்கிறார்கள்

பா.ராஜேஷ்
07-05-2010, 04:06 PM
தோ மைனே கே பாத் ஆயே ஹைன் ஜி! ...இது சரியா??

ஷுக்ரியா...

பாரதி
09-05-2010, 11:42 PM
தோ மைனே கே பாத் ஆயே ஹைன் ஜி! ...இது சரியா??

நண்பரே,
ஆப் தோ மஹினே கே பாத் ஆயே ஹைன் ஜி! - வாக்கியம் சரி.

பா.ராஜேஷ்
11-05-2010, 02:10 PM
ஷுக்ரியா ஜி!

பாரதி
11-06-2010, 08:55 AM
PRESENT PERFECT TENSE
TRANSITIVE VERB


Transitive verb-ஐஉடைய Present perfect tense வாக்கியங்களை அமைக்கும் போது முதலில் Past Perfect Tense வாக்கியத்தை அமைத்துக்கொண்டு, பின்னர் வினைச்சொல்லினுடைய எண்ணுக்கும் பாலுக்கும் ஏற்ப நிகழ்கால துணை வினைச்சொல்லை இணைக்க வேண்டும்.

Transitive Verb வருகின்ற இந்த வாக்கிய அமைப்பில்“हूँ” அல்லது “हो” ஒருக்காலும் வராது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.Without Object


தன்னிலை : 1st Person

ஆண்பால் ஒருமை: मैंने खाया है । (மைனே காயா ஹை) நான் சாப்பிட்டிருக்கிறேன்.
ஆண்பால் பன்மை: हमने खाया है । (ஹம்னே காயா ஹை) நாங்கள் சாப்பிட்டிருக்கிறோம்.
பெண்பால் ஒருமை: मैंने खाया है । (மைனேகாயா ஹை) நான் சாப்பிட்டிருக்கிறேன்.
பெண்பால் பன்மை: हमने खाया है । ஹம்னேகாயா ஹை) நாங்கள் சாப்பிட்டிருக்கிறோம்.

முன்னிலை : 2nd Person

ஆண்பால் ஒருமை: तूने खाया है । ( தூனேகாயா ஹை) நீ சாப்பிட்டிருக்கிறாய்.
ஆண்பால் பன்மை: तमने खाया है । தும்னேகாயா ஹை) நீவீர் சாப்பிட்டிருக்கிறீர்.
பெண்பால் ஒருமை: तूने खाया है । தூனேகாயா ஹை) நீ சாப்பிட்டிருக்கிறாய்.
பெண்பால் பன்மை: तमने खाया है । தும்னேகாயா ஹை) நீவீர் சாப்பிட்டிருக்கிறீர்.
ஆண்பால் பன்மை: आपने खाया है । (ஆப்னேகாயா ஹை) நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்கள்.
பெண்பால் பன்மை: आपने खाया है । (ஆப்னே காயா ஹை) நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்கள்.

படர்க்கை : 3rd Person

ஆண்பால் ஒருமை: उसने खाया है । (உஷ்னேகாயா ஹை) அவன் சாப்பிட்டிருக்கிறான்.
ஆண்பால் பன்மை: उन्होंने खाया है । (உன்ஹோனேகாயா ஹை) அவர்கள் சாப்பிட்டிருக்கிறார்கள்.
பெண்பால் ஒருமை: उसने खाया है । (உஷ்னேகாயா ஹை) அவள் சாப்பிட்டிருக்கிறாள்.
பெண்பால் பன்மை: उन्होंने खाया है । (உன்ஹோனேகாயா ஹை) அவர்கள் சாப்பிட்டிருக்கிறார்கள்.

பாரதி
13-06-2010, 12:08 PM
PRESENT PERFECT TENSE


TRANSITIVE VERB – WITH OBJECT

எடுத்துக்காட்டு: ஆண்பால் ஒருமை - MASCULINE SINGULAR – ऎक फल
தன்னிலை : 1st Person
ஆண்பால் ஒருமை: मैंने एक फल खाया है । (மைனே ஏக் ஃபல் காயா ஹை) நான் ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறேன்.
ஆண்பால் பன்மை: हमने एक फल खाया है । (ஹம்னே ஏக் ஃபல் காயா ஹை) நாங்கள் ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறோம்.
பெண்பால் ஒருமை: मैंने एक फल खाया है । (மைனே ஏக் ஃபல் காயா ஹை) நான் ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறேன்.
பெண்பால் பன்மை: हमने एक फल खाया है । ஹம்னே ஏக் ஃபல் காயா ஹை) நாங்கள் ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறோம்.

முன்னிலை : 2nd Person
ஆண்பால் ஒருமை: तूने एक फल खाया है । ( தூனே ஏக் ஃபல் காயா ஹை) நீ ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறாய்.
ஆண்பால் பன்மை: तमने एक फल खाया है । தும்னே ஏக் ஃபல் காயா ஹை) நீவீர் ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறீர்.
பெண்பால் ஒருமை: तूने एक फल खाया है । தூனே ஏக் ஃபல் காயா ஹை) நீ ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறாய்.
பெண்பால் பன்மை: तमने एक फल खाया है । தும்னே ஏக் ஃபல் காயா ஹை) நீவீர் ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறீர்.
ஆண்பால் பன்மை: आपने एक फल खाया है । (ஆப்னே ஏக் ஃபல் காயா ஹை) நீங்கள் ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறீர்கள்.
பெண்பால் பன்மை: आपने एक फल खाया है । (ஆப்னே ஏக் ஃபல் காயா ஹை) நீங்கள் ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறீர்கள்.

படர்க்கை : 3rd Person
ஆண்பால் ஒருமை: उसने एक फल खाया है । (உஷ்னே ஏக் ஃபல் காயா ஹை) அவன் ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறான்.
ஆண்பால் பன்மை: उन्होंने एक फल खाया है । (உன்ஹோனே ஏக் ஃபல் காயா ஹை) அவர்கள் ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறார்கள்.
பெண்பால் ஒருமை: उसने एक फल खाया है । (உஷ்னே ஏக் ஃபல் காயா ஹை) அவள் ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறாள்.
பெண்பால் பன்மை: उन्होंने एक फल खाया है । (உன்ஹோனே ஏக் ஃபல் காயா ஹை) அவர்கள் ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறார்கள்.
PRESENT PERFECT TENSE

TRANSITIVE VERB – WITH OBJECT


எடுத்துக்காட்டு: ஆண்பால் பன்மை - MASCULINE PLURAL – दो फल

தன்னிலை : 1st Person
ஆண்பால் ஒருமை: मैंने दो फल खाये हैं । (மைனே தோ ஃபல் காயே ஹைன்) நான் இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறேன்.
ஆண்பால் பன்மை: हमने दो फल खाये हैं । (ஹம்னே தோ ஃபல் காயே ஹைன்) நாங்கள் இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறோம்.
பெண்பால் ஒருமை: मैंने दो फल खाये हैं । (மைனே தோ ஃபல் காயே ஹைன்) நான் இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறேன்.
பெண்பால் பன்மை: हमने दो फल खाये हैं । ஹம்னே தோ ஃபல் காயே ஹைன்) நாங்கள் இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறோம்.

முன்னிலை : 2nd Person
ஆண்பால் ஒருமை: तूने दो फल खाये हैं । ( தூனே தோ ஃபல் காயே ஹைன்) நீ இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறாய்.
ஆண்பால் பன்மை: तमने दो फल खाये हैं । தும்னே தோ ஃபல் காயே ஹைன்) நீவீர் இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறீர்.
பெண்பால் ஒருமை: तूने दो फल खाये हैं । தூனே தோ ஃபல் காயே ஹைன்) நீ இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறாய்.
பெண்பால் பன்மை: तमने दो फल खाये हैं । தும்னே தோ ஃபல் காயே ஹைன்) நீவீர் இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறீர்.
ஆண்பால் பன்மை: आपने दो फल खाये हैं । (ஆப்னே தோ ஃபல் காயே ஹைன்) நீங்கள் இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறீர்கள்.
பெண்பால் பன்மை: आपने दो फल खाये हैं । (ஆப்னே தோ ஃபல் காயே ஹைன்) நீங்கள் இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறீர்கள்.

படர்க்கை : 3rd Person
ஆண்பால் ஒருமை: उसने दो फल खाये हैं । (உஷ்னே தோ ஃபல் காயே ஹைன்) அவன் இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறான்.
ஆண்பால் பன்மை: उन्होंने दो फल खाये हैं । (உன்ஹோனே தோ ஃபல் காயே ஹைன்) அவர்கள் இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறார்கள்.
பெண்பால் ஒருமை: उसने दो फल खाये हैं । (உஷ்னே தோ ஃபல் காயே ஹைன்) அவள் இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறாள்.
பெண்பால் பன்மை: उन्होंने दो फल खाये हैं । (உன்ஹோனே தோ ஃபல் காயே ஹைன்) அவர்கள் இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறார்கள்.

பா.ராஜேஷ்
13-06-2010, 01:57 PM
இதுவே பழம் இல்லாமல் ரொட்டி என்றல் காயி ஹைன் வரும்... சரிதானே!!?
"ஏக்" எழுத்து பிழையோ!!?

பாரதி
13-06-2010, 02:15 PM
இதுவே பழம் இல்லாமல் ரொட்டி என்றல் காயி ஹைன் வரும்... சரிதானே!!?
"ஏக்" எழுத்து பிழையோ!!?

நண்பரே,
ரொட்டி என்றால் "ஹை" வரும். ரொட்டிகள் என்றால் மட்டுமே "ஹைன்" வரும்.

"ஏக்" பற்றி நீங்கள் கூறி இருப்பது எனக்கு சரியாக விளங்கவில்லை. "யேக்" என்று கூற வேண்டும் என்கிறீர்களா அல்லது பழத்தை குறிப்பிட ஆயுத எழுத்தைப் பயன்படுத்தினால் வரும் எழுத்தைக்கூறுகிறீர்களா..?

பா.ராஜேஷ்
13-06-2010, 02:21 PM
ஏக் "एक" என்றல்லவா வரும்... தாங்கள் "येक" என்று எழுதி உள்ளீர்களே அதை சொன்னேன்... மேலும் நான் கேட்டது காயே வருமா இல்லை காயி வருமா என்றறிந்து கொள்ளவே... நன்றி..

பாரதி
13-06-2010, 02:37 PM
ஏக் "एक" என்றல்லவா வரும்... தாங்கள் "येक" என்று எழுதி உள்ளீர்களே அதை சொன்னேன்.

சுட்டியமைக்கு மிக்க நன்றி நண்பரே. பிழையை திருத்தி இருக்கிறேன்.

பாரதி
15-06-2010, 10:11 AM
PRESENT PERFECT TENSETRANSITIVE VERB – WITH OBJECTஎடுத்துக்காட்டு: பெண்பால் ஒருமை - FEMININE SINGULAR – ऎक रोटी

தன்னிலை : 1st Person
ஆண்பால் ஒருமை: मैंने एक रोटी खायीहै– (மைனே ஏக் ரோட்டி காயீ ஹை) நான் ஒரு ரொட்டி சாப்பிட்டிருக்கிறேன்.
ஆண்பால் பன்மை: हमने एक रोटी खायीहै – (ஹம்னே ஏக் ரோட்டி காயீ ஹை) நாங்கள் ஒரு ரொட்டி சாப்பிட்டிருக்கிறோம்.
பெண்பால் ஒருமை: मैंने एक रोटी खायीहै – (மைனே ஏக் ரோட்டி காயீ ஹை) நான் ஒரு ரொட்டி சாப்பிட்டிருக்கிறேன்.
பெண்பால் பன்மை: हमने एक रोटी खायी है - (ஹம்னே ஏக் ரோட்டி காயீ ஹை) நாங்கள் ஒரு ரொட்டி சாப்பிட்டிருக்கிறோம்.

முன்னிலை : 2nd Person
ஆண்பால் ஒருமை: तूने एक रोटी खायीहै (தூனே ஏக் ரோட்டி காயீ ஹை) நீ ஒரு ரொட்டி சாப்பிட்டிருக்கிறாய்.
ஆண்பால் பன்மை: तुमने एक रोटी खायी है (தும்னே ஏக் ரோட்டி காயீ ஹை) நீவீர் ஒரு ரொட்டி சாப்பிட்டிருக்கிறீர்.
பெண்பால் ஒருமை: तूने एक रोटी खायीहै (தூனே ஏக் ரோட்டி காயீ ஹை) நீ ஒரு ரொட்டி சாப்பிட்டிருக்கிறாய்.
பெண்பால் பன்மை: तुमने एक रोटी खायीहै (தும்னே ஏக் ரோட்டி காயீ ஹை) நீவீர் ஒரு ரொட்டி சாப்பிட்டிருக்கிறீர்.
ஆண்பால் பன்மை: आपने एक रोटी खायीहै (ஆப்னே ஏக் ரோட்டி காயீ ஹை) நீங்கள் ஒரு ரொட்டி சாப்பிட்டிருக்கிறீர்கள்.
பெண்பால் பன்மை: आपने एक रोटी खायीहै (ஆப்னே ஏக் ரோட்டி காயீ ஹை) நீங்கள் ஒரு ரொட்டி சாப்பிட்டிருக்கிறீர்கள்.

படர்க்கை : 3rd Person
ஆண்பால் ஒருமை: उसने एक रोटी खायीहै – (உஸ்னே ஏக் ரோட்டி காயீ ஹை) அவன் ஒரு ரொட்டி சாப்பிட்டிருக்கிறான்.
ஆண்பால் பன்மை: उन्होने एक रोटी खायीहै – (உன்ஹோனே ஏக் ரோட்டி காயீ ஹை) அவர்கள் ஒரு ரொட்டி சாப்பிட்டிருக்கிறார்கள்.
பெண்பால் ஒருமை: उसने एक रोटी खायीहै – (உஸ்னே ஏக் ரோட்டி காயீ ஹை) அவள் ஒரு ரொட்டி சாப்பிட்டிருக்கிறாள்.
பெண்பால் பன்மை: उन्होने एक रोटी खायीहै – (உன்ஹோனே ஏக் ரோட்டி காயீ ஹை) அவர்கள் ஒரு ரொட்டி சாப்பிட்டிருக்கிறார்கள்.
PRESENT PERFECT TENSETRANSITIVE VERB – WITH OBJECTஎடுத்துக்காட்டு: பெண்பால் பன்மை - FEMININE PLURAL – दो रोटियाँ

தன்னிலை : 1st Person
ஆண்பால் ஒருமை: मैंने दो रोटियाँ खायी हैं । – (மைனே தோ ரோட்டியா(ங்) காயீ ஹைன்) நான் இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டிருக்கிறேன்.
ஆண்பால் பன்மை: हमने दो रोटियाँ खायीहैं । – (ஹம்னே தோ ரோட்டியா(ங்) காயீ ஹைன்) நாங்கள் ஒரு ரொட்டி சாப்பிட்டிருக்கிறோம்.
பெண்பால் ஒருமை: मैंने दो रोटियाँ खायीहैं ।– (மைனே தோ ரோட்டியா(ங்) காயீ ஹைன்) நான் ஒரு ரொட்டி சாப்பிட்டிருக்கிறேன்.
பெண்பால் பன்மை: हमने दो रोटियाँ खायीहैं ।- (ஹம்னே தோ ரோட்டியா(ங்) காயீ ஹைன்) நாங்கள் ஒரு ரொட்டி சாப்பிட்டிருக்கிறோம்.

முன்னிலை : 2nd Person
ஆண்பால் ஒருமை: तूने दो रोटियाँ खायीहैं । (தூனே தோ ரோட்டியா(ங்) காயீ ஹைன்) நீ இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டிருக்கிறாய்.
ஆண்பால் பன்மை: तुमने दो रोटियाँ खायीहैं । (தும்னே தோ ரோட்டியா(ங்) காயீ ஹைன்) நீவீர் இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டிருக்கிறீர்.
பெண்பால் ஒருமை: तूने दो रोटियाँ खायीहैं । (தூனே தோ ரோட்டியா(ங்) காயீ ஹைன்) நீ இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டிருக்கிறாய்.
பெண்பால் பன்மை: तुमने दो रोटियाँ खायीहैं । (தும்னே தோ ரோட்டியா(ங்) காயீ ஹைன்) நீவீர் இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டிருக்கிறீர்.
ஆண்பால் பன்மை: आपने दो रोटियाँ खायीहैं । (ஆப்னே தோ ரோட்டியா(ங்) காயீ ஹைன்) நீங்கள் இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டிருக்கிறீர்கள்.
பெண்பால் பன்மை: आपने दो रोटियाँ खायी हैं । (ஆப்னே தோ ரோட்டியா(ங்) காயீ ஹைன்) நீங்கள் இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டிருக்கிறீர்கள்.

படர்க்கை : 3rd Person
ஆண்பால் ஒருமை: उसने दो रोटियाँ खायी हैं ।– (உஸ்னே தோ ரோட்டியா(ங்) காயீ ஹைன்) அவன் இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டிருக்கிறான்.
ஆண்பால் பன்மை: उन्होने दो रोटियाँ खायी हैं ।– (உன்ஹோனே தோ ரோட்டியா(ங்) காயீ ஹைன்) அவர்கள் இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டிருக்கிறார்கள்.
பெண்பால் ஒருமை: उसने दो रोटियाँ खायीहैं ।– (உஸ்னே ஏக் தோ ரோட்டியா(ங்) காயீ ஹைன்) அவள் இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டிருக்கிறாள்.
பெண்பால் பன்மை: उन्होने दो रोटियाँ खायी हैं । – (உன்ஹோனே தோ ரோட்டியா(ங்) காயீ ஹைன்) அவர்கள் இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டிருக்கிறார்கள்.

பாரதி
16-06-2010, 12:19 PM
PRESENT PERFECT TENSETRANSITIVE VERB – WITH OBJECT
FOLLOWED BY CASE ENDING – “को”


தன்னிலை : 1st Person
ஆண்பால் ஒருமை: मैंने राम को देखा है। – (மைனே ராம் கோ தேக்கா ஹை) நான் ராமைப் பார்த்திருக்கிறேன்.
ஆண்பால் பன்மை: हमने राम को देखा है । – (ஹம்னே ராம் கோ தேக்கா ஹை) நாங்கள் ராமைப் பார்த்திருக்கிறோம்.
பெண்பால் ஒருமை: मैंने राम को देखा है । – (மைனே ராம் கோ தேக்கா ஹை) நான் ராமைப் பார்த்திருக்கிறேன்.
பெண்பால் பன்மை: हमने राम को देखा है । - (ஹம்னே ராம் கோ தேக்கா ஹை) நாங்கள் ராமைப் பார்த்திருக்கிறோம்.

முன்னிலை : 2nd Person
ஆண்பால் ஒருமை: तूने राम को देखा है । (தூனே ராம் கோ தேக்கா ஹை) நீ ராமைப் பார்த்திருக்கிறாய்.
ஆண்பால் பன்மை: तुमने राम को देखा है । (தும்னே ராம் கோ தேக்கா ஹை) நீவீர் ராமைப் பார்த்திருக்கிறீர்.
பெண்பால் ஒருமை: तूने राम को देखा है । (தூனே ராம் கோ தேக்கா ஹை) நீ ராமைப்பார்த்திருக்கிறாய்.
பெண்பால் பன்மை: तुमने राम को देखा है । (தும்னே ராம் கோ தேக்கா ஹை) நீவீர் ராமைப் பார்த்திருக்கிறீர்.
ஆண்பால் பன்மை: आपने राम को देखा है । (ஆப்னே ராம் கோ தேக்கா ஹை) நீங்கள் ராமைப் பார்த்திருக்கிறீர்கள்.
பெண்பால் பன்மை: आपने राम को देखा है । (ஆப்னே ராம் கோ தேக்கா ஹை) நீங்கள் ராமைப் பார்த்திருக்கிறீர்கள்.

படர்க்கை : 3rd Person
ஆண்பால் ஒருமை: उसने राम को देखा है । – (உஸ்னே ராம் கோ தேக்கா ஹை) அவன் ராமைப் பார்த்திருக்கிறான்.
ஆண்பால் பன்மை: उन्होने राम को देखा है । – (உன்ஹோனே ராம் கோ தேக்கா ஹை) அவர்கள் ராமைப் பார்த்திருக்கிறார்கள்.
பெண்பால் ஒருமை: उसने राम को देखा है । – (உஸ்னே ராம் கோ தேக்கா ஹை) அவள் ராமைப் பார்த்திருக்கிறாள்.
பெண்பால் பன்மை: उन्होने राम को देखा है । – (உன்ஹோனே ராம் கோ தேக்கா ஹை) அவர்கள் ராமைப் பார்த்திருக்கிறார்கள்.

...... தொடரும்.

பாரதி
20-06-2010, 06:09 AM
படர்க்கை ஒருமை – ஆண்பால் (3rd person singular masculine)
राम ने सीता को देखा है ।– (ராம் னே சீதா கோ தேக்கா ஹை) – ராம் சீதாவைப்பார்த்திருக்கிறான்.
राम नेसुंदर और भरत को देखा है ।– (ராம் னே சுந்தர் அவுர் பரத் கோ தேக்கா ஹை) – ராம் சுந்தரையும் பரத்தையும் பார்த்திருக்கிறான்.
राम ने कमला और विमला को देखा है ।– (ராம் னே கமலா அவுர் விமலா கோ தேக்கா ஹை) – ராம் கமலாவையும் விமலாவையும் பார்த்திருக்கிறான்.

படர்க்கை ஒருமை – பெண்பால் (3rd person singular feminine)
सीता ने राम को देखा है । – (சீதா னே ராம் கோ தேக்கா ஹை) – சீதா ராமைப் பார்த்திருக்கிறாள்.
सीता ने कमला को देखा है ।– (சீதா னே ராம் அவுர் பரத் கோ தேக்கா ஹை) – சீதா ராமையும் பரத்தையும் பார்த்திருக்கிறாள்.
सीता ने कमला और विमला को देखा है । – (சீதா னே கமலா அவுர் விமலா கோ தேக்கா ஹை) – சீதா கமலாவையும் விமலாவையும் பார்த்திருக்கிறாள்.

படர்க்கை பன்மை – ஆண்பால் : (3rd person plural masculine)
राम और भरत ने सुंदर को देखा है ।– (ராம் அவுர் பரத் னே சுந்தர் கோ தேக்கா ஹை) – ராமும் பரத்தும் சுந்தரைப் பார்த்திருக்கிறார்கள்.
राम और भरत ने सुंदर और मालिक को देखा है ।–(ராம் அவுர் பரத் னே சுந்தர் அவுர் மாலிக் கோ தேக்கா ஹை) – ராமும் பரத்தும், சுந்தரையும் மாலிக்கையும் பார்த்திருக்கிறார்கள்.
राम और भरत ने सीता को देखा है ।-(ராம் அவுர் பரத் னே சீதா கோ தேக்கா ஹை) – ராமும் பரத்தும் சீதாவைப் பார்த்திருக்கிறார்கள்.
राम और भरत ने सीता और विमला को देखा है ।–(ராம் அவுர் பரத் னே சீதா அவுர் விமலா கோ தேக்கா ஹை) – ராமும் பரத்தும், சீதாவையும் விமலாவையும் பார்த்திருக்கிறார்கள்.

படர்க்கை பன்மை – பெண்பால் : (3rd person plural feminine)
कमला और विमला ने सुंदर को देखा है ।– (கமலா அவுர் விமலா னே சீதா கோ தேக்கா ஹை) – கமலாவும் விமலாவும் சீதாவைப்பார்த்திருக்கிறார்கள்.
कमला और विमला ने सुंदर और मालिक को देखा है ।–(கமலா அவுர் விமலா னே சுந்தர் அவுர் மாலிக் கோ தேக்கா ஹை) – கமலாவும் விமலாவும் சுந்தரையும் மாலிக்கையும் பார்த்திருக்கிறார்கள்.
कमला और विमला ने सीता को देखा है । - (கமலா அவுர் விமலா னே சீதா கோ தேக்கா ஹை) – கமலாவும் விமலாவும் சீதாவைப் பார்த்திருக்கிறார்கள்.
कमला और विमला ने सीता और माला को देखा है । - (கமலா அவுர் விமலா னே சீதா அவர் மாலா கோ தேக்கா ஹை) – கமலாவும் விமலாவும், சீதாவையும் மாலவையும் பார்த்திருக்கிறார்கள்.

பா.ராஜேஷ்
20-06-2010, 11:01 AM
நன்றி அண்ணா... नेसुंदर என்று இரு இடங்களில் ஒட்டி வந்திருக்கிறது ... கவனியுங்கள் ...

பாரதி
23-06-2010, 05:49 AM
நன்றி இராஜேஷ். திருத்தி இருக்கிறேன்.

பாரதி
23-06-2010, 05:53 AM
PAST PERFECT TENSEINTRANSITIVE VERB


Past Present perfect tense வாக்கிய அமைப்பில் முதலில் Past indefinite Tense வாக்கியத்தை அமைத்துக்கொண்டு, பின்னர் தக்க இறந்தகால துணை வினைச்சொற்களான था, थे, थी, थीं இவைகளில் ஒன்றை இணைக்க வேண்டும்.

Intransitive verb ஆக இருந்தால் இந்த துணை வினைச்சொல் Subject-ன் எண்ணுக்கும் பாலுக்கும் ஏற்ப அமையும்.

Transitive verb ஆக இருந்தால் வினைச்சொல்லினுடைய எண்ணுக்கும் பாலுக்கும் ஏற்ப அமையும்.

தன்னிலை : 1st Person
ஆண்பால் ஒருமை: मैं गया था । (மைன் கயா தா) நான் போயிருக்கிறேன்.
ஆண்பால் பன்மை: हम गये थे । (ஹம் கயே தே) நாங்கள் போயிருக்கிறோம்.
பெண்பால் ஒருமை: मैं गयी थी । (மைன் கயீ தீ) நான் போயிருக்கிறேன்.
பெண்பால் பன்மை: हम गयी थीं ।(ஹம் கயீ தீம்) நாங்கள் போயிருக்கிறோம்.

முன்னிலை : 2nd Person
ஆண்பால் ஒருமை: तू गया था । ( தூ கயா தா) நீ போயிருக்கிறாய்.
ஆண்பால் பன்மை: तुम गये थे ।( தும் கயே தே) நீவீர் போயிருக்கிறீர்.
பெண்பால் ஒருமை: तू गयी थी ।( தூ கயீ தீ) நீ போயிருக்கிறாய்.
பெண்பால் பன்மை: तुम गयी थीं ।( தும் கயீ தீம்) நீவீர் போயிருக்கிறீர்.
ஆண்பால் பன்மை: आप गये थे । (ஆப் கயே தே) நீங்கள் போயிருக்கிறீர்கள்.
பெண்பால் பன்மை: आप गयी थीं । (ஆப் கயீ தீம்) நீங்கள் போயிருக்கிறீர்கள்.

படர்க்கை : 3rd Person
ஆண்பால் ஒருமை: वह गया था । (வஹ் கயா தா) அவன் போயிருக்கிறான்.
ஆண்பால் பன்மை: वे गये थे । (வே கயே தே) அவர்கள் போயிருக்கிறார்கள்.
பெண்பால் ஒருமை: वह गयी थी । (வஹ் கயீ தீ) அவள் போயிருக்கிறாள்.
பெண்பால் பன்மை: वे गयी थीं । (வே கயீ தீம்) அவர்கள் போயிருக்கிறார்கள்.
PRESENT PERFECT TENSETRANSITIVE VERB
Without Object

தன்னிலை : 1st Person
ஆண்பால் ஒருமை: मैंने खाया था । (மைனே காயா தா) நான் சாப்பிட்டிருக்கிறேன்
ஆண்பால் பன்மை: हमने खाया था । (ஹம்னே காயா தா ) நாங்கள் சாப்பிட்டிருக்கிறோம்
பெண்பால் ஒருமை: मैंने खाया था । (மைனேகாயா தா) நான் சாப்பிட்டிருக்கிறேன்
பெண்பால் பன்மை: हमने खाया था । ஹம்னேகாயா தா ) நாங்கள் சாப்பிட்டிருக்கிறோம்

முன்னிலை : 2nd Person
ஆண்பால் ஒருமை: तूने खाया था । ( தூனேகாயா தா) நீ சாப்பிட்டிருக்கிறாய்
ஆண்பால் பன்மை: तमने खाया था । தும்னேகாயா தா) நீவீர் சாப்பிட்டிருக்கிறீர்
பெண்பால் ஒருமை: तूने खाया था । தூனேகாயா தா) நீ சாப்பிட்டிருக்கிறாய்
பெண்பால் பன்மை: तमने खाया था । தும்னேகாயா தா) நீவீர் சாப்பிட்டிருக்கிறீர்
ஆண்பால் பன்மை: आपने खाया था । (ஆப்னேகாயா தா ) நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்கள்
பெண்பால் பன்மை: आपने खाया था । (ஆப்னே காயா தா) நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்கள்

படர்க்கை : 3rd Person
ஆண்பால் ஒருமை: उसने खाया था । (உஷ்னேகாயா தா) அவன் சாப்பிட்டிருக்கிறான்
ஆண்பால் பன்மை: उन्होंने खाया था । (உன்ஹோனேகாயா தா) அவர்கள் சாப்பிட்டிருக்கிறார்கள்
பெண்பால் ஒருமை: उसने खाया था । (உஷ்னேகாயா தா) அவள் சாப்பிட்டிருக்கிறாள்
பெண்பால் பன்மை: उन्होंने खाया था । (உன்ஹோனேகாயா தா) அவர்கள் சாப்பிட்டிருக்கிறார்கள்
PAST PERFECT TENSETRANSITIVE VERB – WITH OBJECT

எடுத்துக்காட்டு: ஆண்பால் ஒருமை - MASCULINE SINGULAR –एक फल

தன்னிலை : 1st Person
ஆண்பால் ஒருமை: मैंने एक फल खाया था । (மைனே ஏக் ஃபல் காயா தா) நான் ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறேன்.
ஆண்பால் பன்மை: हमने एक फल खाया था । (ஹம்னே ஏக் ஃபல் காயா தா) நாங்கள் ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறோம்.
பெண்பால் ஒருமை: मैंने एक फल खाया था । (மைனேஏக் ஃபல் காயா தா) நான் ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறேன்.
பெண்பால் பன்மை: हमने एक फल खाया था । ஹம்னேஏக் ஃபல் காயா தா ) நாங்கள் ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறோம்.

முன்னிலை : 2nd Person
ஆண்பால் ஒருமை: तूने एक फल खाया था । ( தூனேஏக் ஃபல் காயா தா) நீ ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறாய்.
ஆண்பால் பன்மை: तमने एक फल खाया था । தும்னேஏக் ஃபல் காயா தா) நீவீர் ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறீர்.
பெண்பால் ஒருமை: तूने एक फल खाया था । தூனேஏக் ஃபல் காயா தா) நீ ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறாய்.
பெண்பால் பன்மை: तमने एक फल खाया था । தும்னேஏக் ஃபல் காயா தா) நீவீர் ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறீர்.
ஆண்பால் பன்மை: आपने एक फल खाया था । (ஆப்னேஏக் ஃபல் காயா தா) நீங்கள் ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறீர்கள்.
பெண்பால் பன்மை: आपने एक फल खाया था । (ஆப்னே ஏக் ஃபல் காயா தா) நீங்கள் ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறீர்கள்.

படர்க்கை : 3rd Person
ஆண்பால் ஒருமை: उसने एक फल खाया था । (உஷ்னேஏக் ஃபல் காயா தா) அவன் ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறான்.
ஆண்பால் பன்மை: उन्होंने एक फल खाया था । (உன்ஹோனேஏக் ஃபல் காயா தா) அவர்கள் ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறார்கள்.
பெண்பால் ஒருமை: उसने एक फल खाया था । (உஷ்னேஏக் ஃபல் காயா தா) அவள் ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறாள்.
பெண்பால் பன்மை: उन्होंने एक फल खाया था । (உன்ஹோனேஏக் ஃபல் காயா தா) அவர்கள் ஒரு பழம் சாப்பிட்டிருக்கிறார்கள்.

PAST PERFECT TENSETRANSITIVE VERB – WITH OBJECT

எடுத்துக்காட்டு: ஆண்பால் பன்மை - MASCULINE PLURAL – दो फल

தன்னிலை : 1st Person
ஆண்பால் ஒருமை: मैंने दो फल खाये थे । (மைனே தோ ஃபல் காயே தே) நான் இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறேன்.
ஆண்பால் பன்மை: हमने दो फल खाये थे । (ஹம்னே தோ ஃபல் காயே தே) நாங்கள் இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறோம்.
பெண்பால் ஒருமை: मैंने दो फल खाये थे । (மைனேதோ ஃபல் காயே தே) நான் இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறேன்.
பெண்பால் பன்மை: हमने दो फल खाये थे । ஹம்னேதோ ஃபல் காயே தே) நாங்கள் இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறோம்.

முன்னிலை : 2nd Person
ஆண்பால் ஒருமை: तूने दो फल खाये थे । ( தூனேதோ ஃபல் காயே தே) நீ இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறாய்.
ஆண்பால் பன்மை: तमने दो फल खाये थे । தும்னேதோ ஃபல் காயே தே) நீவீர் இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறீர்.
பெண்பால் ஒருமை: तूने दो फल खाये थे । தூனேதோ ஃபல் காயே தே) நீ இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறாய்.
பெண்பால் பன்மை: तमने दो फल खाये थे । தும்னேதோ ஃபல் காயே தே) நீவீர் இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறீர்.
ஆண்பால் பன்மை: आपने दो फल खाये थे । (ஆப்னேதோ ஃபல் காயே தே) நீங்கள் இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறீர்கள்.
பெண்பால் பன்மை: आपने दो फल खाये थे । (ஆப்னே தோ ஃபல் காயே தே) நீங்கள் இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறீர்கள்.

படர்க்கை : 3rd Person
ஆண்பால் ஒருமை: उसने दो फल खाये थे । (உஷ்னேதோ ஃபல் காயே தே) அவன் இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறான்.
ஆண்பால் பன்மை: उन्होंने दो फल खाये थे । (உன்ஹோனேதோ ஃபல் காயே தே) அவர்கள் இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறார்கள்.
பெண்பால் ஒருமை: उसने दो फल खाये थे । (உஷ்னேதோ ஃபல் காயே தே) அவள் இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறாள்.
பெண்பால் பன்மை: उन्होंने दो फल खाये थे । (உன்ஹோனேதோ ஃபல் காயே தே) அவர்கள் இரண்டு பழங்கள் சாப்பிட்டிருக்கிறார்கள்.

பாரதி
23-06-2010, 01:03 PM
PAST PERFECT TENSETRANSITIVE VERB – WITH OBJECT

எடுத்துக்காட்டு: பெண்பால் ஒருமை - FEMININE SINGULAR – ऎक रोटी
தன்னிலை : 1st Person
ஆண்பால் ஒருமை: मैंने एक रोटी खायीथी ।– (மைனே ஏக் ரோட்டி காயீ தீ)
ஆண்பால் பன்மை: हमने एक रोटी खायीथी । – (ஹம்னே ஏக் ரோட்டி காயீ தீ)
பெண்பால் ஒருமை: मैंने एक रोटी खायीथी । – (மைனே ஏக் ரோட்டி காயீ தீ)
பெண்பால் பன்மை: हमने एक रोटी खायी थी । - (ஹம்னே ஏக் ரோட்டி காயீ தீ)

முன்னிலை : 2nd Person
ஆண்பால் ஒருமை: तूने एक रोटी खायीथी ।- (தூனே ஏக் ரோட்டி காயீ தீ)
ஆண்பால் பன்மை: तुमने एक रोटी खायी थी ।- (தும்னே ஏக் ரோட்டி காயீ தீ)
பெண்பால் ஒருமை: तूने एक रोटी खायीथी ।- (தூனே ஏக் ரோட்டி காயீ தீ)
பெண்பால் பன்மை: तुमने एक रोटी खायीथी ।- (தும்னே ஏக் ரோட்டி காயீ தீ)
ஆண்பால் பன்மை: आपने एक रोटी खायीथी ।- (ஆப்னே ஏக் ரோட்டி காயீ தீ)
பெண்பால் பன்மை: आपने एक रोटी खायीथी ।- (ஆப்னே ஏக் ரோட்டி காயீ தீ)

படர்க்கை : 3rd Person
ஆண்பால் ஒருமை: उसने एक रोटी खायीथी । – (உஸ்னே ஏக் ரோட்டி காயீ தீ)
ஆண்பால் பன்மை: उन्होने एक रोटी खायीथी । – (உன்ஹோனே ஏக் ரோட்டி காயீ தீ)
பெண்பால் ஒருமை: उसने एक रोटी खायीथी । – (உஸ்னே ஏக் ரோட்டி காயீ தீ)
பெண்பால் பன்மை: उन्होने एक रोटी खायीथी ।– (உன்ஹோனே ஏக் ரோட்டி காயீ தீ)
PRESENT PERFECT TENSETRANSITIVE VERB – WITH OBJECT

எடுத்துக்காட்டு: பெண்பால் பன்மை - FEMININE PLURAL – दो रोटियाँ
தன்னிலை : 1st Person
ஆண்பால் ஒருமை: मैंने दो रोटियाँ खायी थीं। – (மைனே தோ ரோட்டியா(ங்) காயீ தீங்(க்))
ஆண்பால் பன்மை: हमने दो रोटियाँ खायीथीं । – (ஹம்னே தோ ரோட்டியா(ங்) காயீ தீங்(க்))
பெண்பால் ஒருமை: मैंने दो रोटियाँ खायीथीं ।– (மைனே தோ ரோட்டியா(ங்) காயீ தீங்(க்))
பெண்பால் பன்மை: हमने दो रोटियाँ खायीथीं ।- (ஹம்னே தோ ரோட்டியா(ங்) காயீ தீங்(க்))

முன்னிலை : 2nd Person
ஆண்பால் ஒருமை: तूने दो रोटियाँ खायीथीं । (தூனே தோ ரோட்டியா(ங்) காயீ தீங்(க்))
ஆண்பால் பன்மை: तुमने दो रोटियाँ खायीथीं । (தும்னே தோ ரோட்டியா(ங்) காயீ தீங்(க்))
பெண்பால் ஒருமை: तूने दो रोटियाँ खायीथीं । (தூனே தோ ரோட்டியா(ங்) காயீ தீங்(க்))
பெண்பால் பன்மை: तुमने दो रोटियाँ खायीथीं । (தும்னே தோ ரோட்டியா(ங்) காயீ தீங்(க்))
ஆண்பால் பன்மை: आपने दो रोटियाँ खायीथीं । (ஆப்னே தோ ரோட்டியா(ங்) காயீ தீங்(க்))
பெண்பால் பன்மை: आपने दो रोटियाँ खायी थीं । (ஆப்னே தோ ரோட்டியா(ங்) காயீ தீங்(க்))

படர்க்கை : 3rd Person
ஆண்பால் ஒருமை: उसने दो रोटियाँ खायी थीं ।– (உஸ்னே தோ ரோட்டியா(ங்) காயீ தீங்(க்))
ஆண்பால் பன்மை: उन्होने दो रोटियाँ खायी थीं ।– (உன்ஹோனே தோ ரோட்டியா(ங்) காயீ தீங்(க்))
பெண்பால் ஒருமை: उसने दो रोटियाँ खायीथीं ।– (உஸ்னே ஏக் தோ ரோட்டியா(ங்) காயீ தீங்(க்))
பெண்பால் பன்மை: उन्होने दो रोटियाँ खायी थीं । – (உன்ஹோனே தோ ரோட்டியா(ங்) காயீ தீங்(க்))
PAST PERFECT TENSETRANSITIVE VERB – WITH OBJECTFOLLOWED BY CASE ENDING – “को”

தன்னிலை : 1st Person
ஆண்பால் ஒருமை: मैंने राम को देखा था । – (மைனே ராம் கோ தேக்கா தா)
ஆண்பால் பன்மை: हमने राम को देखा था । – (ஹம்னே ராம் கோ தேக்கா தா)
பெண்பால் ஒருமை: मैंने राम को देखा था । – (மைனே ராம் கோ தேக்கா தா)
பெண்பால் பன்மை: हमने राम को देखा था । - (ஹம்னே ராம் கோ தேக்கா தா)

முன்னிலை : 2nd Person
ஆண்பால் ஒருமை: तूने राम को देखा था । (தூனே ராம் கோ தேக்கா தா)
ஆண்பால் பன்மை: तुमने राम को देखा था । (தும்னே ராம் கோ தேக்கா தா)
பெண்பால் ஒருமை: तूने राम को देखा था । (தூனே ராம் கோ தேக்கா தா)
பெண்பால் பன்மை: तुमने राम को देखा था । (தும்னே ராம் கோ தேக்கா தா)
ஆண்பால் பன்மை: आपने राम को देखा था । (ஆப்னே ராம் கோ தேக்கா தா)
பெண்பால் பன்மை: आपने राम को देखा था । (ஆப்னே ராம் கோ தேக்கா தா)

படர்க்கை : 3rd Person
ஆண்பால் ஒருமை: उसने राम को देखा था । – (உஸ்னே ராம் கோ தேக்கா தா)
ஆண்பால் பன்மை: उन्होने राम को देखा था । – (உன்ஹோனே ராம் கோ தேக்கா தா)
பெண்பால் ஒருமை: उसने राम को देखा था । – (உஸ்னே ராம் கோ தேக்கா தா)
பெண்பால் பன்மை: उन्होने राम को देखा था । – (உன்ஹோனே ராம் கோ தேக்கா தா)

படர்க்கை ஒருமை – ஆண்பால் (3rd person singular masculine)
राम ने सीता को देखा था ।– (ராம் னே சீதா கோ தேக்கா தா)
राम नेसुंदर और भरत को देखा था ।– (ராம் னே சுந்தர் அவுர் பரத் கோ தேக்கா தா)
राम ने कमला और विमला को देखा था ।– (ராம் னே கமலா அவுர் விமலா கோ தேக்கா தா)

படர்க்கை ஒருமை – பெண்பால் (3rd person singular feminine)
सीता ने राम को देखा था । – (சீதா னே ராம் கோ தேக்கா தா)
सीता ने कमला को देखा था ।– (சீதா னே ராம் அவுர் பரத் கோ தேக்கா தா)
सीता ने कमला और विमला को देखा था । – (சீதா னே கமலா அவுர் விமலா கோ தேக்கா தா)

படர்க்கை பன்மை – ஆண்பால் : (3rd person plural masculine)
राम और भरत ने सुंदर को देखा था ।– (ராம் அவுர் பரத் னே சுந்தர் கோ தேக்கா தா)
राम और भरत ने सुंदर और मालिक को देखा था ।–(ராம் அவுர் பரத் னே சுந்தர் அவுர் மாலிக் கோ தேக்கா தா)
राम और भरत ने सीता को देखा था ।-(ராம் அவுர் பரத் னே சீதா கோ தேக்கா தா)
राम और भरत ने सीता और विमला को देखा था ।–(ராம் அவுர் பரத் னே சீதா அவுர் விமலா கோ தேக்கா தா)

படர்க்கை பன்மை – பெண்பால் : (3rd person plural feminine)
कमला और विमला ने सुंदर को देखा था ।– (கமலா அவுர் விமலா னே சீதா கோ தேக்கா தா)
कमला और विमला नेसुंदर और मालिक को देखा था ।–(கமலா அவுர் விமலா னே சுந்தர் அவுர் மாலிக் கோ தேக்கா தா)
कमला और विमला नेसीता को देखा था । - (கமலா அவுர் விமலா னே சீதா கோ தேக்கா தா)
कमला और विमला नेसीता और माला को देखा था । - (கமலா அவுர் விமலா னே சீதா அவர் மாலா கோ தேக்கா தா)

பாரதி
24-06-2010, 01:09 PM
ADJECTIVES AND ADVERBSபெயர் உரிச்சொற்களும் வினை உரிச்சொற்களும்.


எல்லா மொழிகளையும் போலவே ஹிந்தி மொழியிலும் பெயர் உரிச்சொற்கள் (Ajectives) வினை உரிச்சொற்களாக (Adverbs) பயன்படுத்தப்படுகின்றன. அப்பொழுது கீழ்க்கண்ட விதிகள் கவனிக்கப்பட வேண்டும்.

1. “आ”வில் முடியும் பெயர் உரிச்சொற்கள் வினை உரிச்சொற்களாகப் பயன்படுத்தப்படும் போது பொதுவாக அந்த சொற்களின் ஆண்பால் பன்மை உருவமே உபயோகப்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டுகள்:
1. वह कैसा लडका है ? - Adjective
2. वह कैसी लडकी है ? - Adjective
3. वे कैसे लडके हैं ? - Adjective
4. वे कैसी लडकियाँ हैं ? - Adjective

1. राम कैसे गाता है? - Adverb
2. सीता कैसे गाती है ? - Adverb
3. राम और रहीम कैसे गाते हैं? - Adverb
4. सीता और कमला कैसे गाती हैं?- Adverb
குறிப்பு:
முதல் நான்கு எடுத்துக்காட்டுகளில் “कैसा” பின்னால் வரும் பெயர்ச்சொல்லின் எண்ணுக்கும் பாலுக்கும் ஏற்ப மாறுபாடு அடைவதை கவனிக்கவும். ஆனால் அடுத்த நான்கு எடுத்துக்காட்டுகளில் “कैसे” என்ற வினை உரிச்சொல் அதற்கு பின்னால் வரும் வினைச்சொல்லின் எண்ணுக்கும் பாலுக்கும் ஏற்ப மாறுபாடு அடையாத நிலையைக் கவனிக்கவும்.

விதிவிலக்கு:
மேற்கூறிய விதிக்கு “अच्छा” மட்டுமே விதிவிலக்கு. வினைஉரிச்சொல்(Adverbial) உபயோகத்தில் “अच्छा” வின் உருவம் “अच्छा” வாகவே இருக்கும்.

எடுத்துக்காட்டுகள்:
As Adjectives:
1. राम अच्छा लडका है। ராம் அச்சா லட்கா ஹை.
2. सीता अचछी लडकी है । சீதா அச்சீ லட்கி ஹை.
3. राम और रहीम अच्छे लडके हैं। ராம் அவுர் ரஹீம் அச்சே லட்கே ஹைன்.
4. सीता और कमला अच्छी लडकियाँ हैं।சீதா அவுர் கமலா அச்சீ லட்கியாங் ஹைன்.

As Adverbs:
1. राम अच्छा गाता है।ராம் அச்சா காத்தா ஹை.
2. सीता अच्छा गाती है ।சீதா அச்சா காத்தீ ஹை.
3. राम और रहीम अच्छा गाते हैं।ராம் அவுர் ரஹீம் அச்சா காத்தே ஹைன்.
4. सीता और कमला अच्छा गाती हैं।சீதா அவுர் கமலா அச்சா காத்தீ ஹைன்.

பாரதி
25-06-2010, 11:47 AM
இடைச்சொற்கள் - Preposition – Postposition - सबंध बोधकஆங்கில மொழியில் இந்த இடைச்சொற்களை preposition என்று கூறுகின்றோம். ஏனென்றால் அவை சம்பந்தப்பட்ட பெயர்ச்சொற்களுக்கு முன்னால் அமைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டு: The book is on the table (preposition).

தமிழ்மொழியில் இந்த இடைச்சொற்கள் சம்பந்தப்பட்ட பெயர்சொற்களுக்குப் பின்னால் வைக்கப்படுகின்றன. பொதுவாக எல்லா இந்திய மொழிகளிலும் இதுவே நிலையாகும்.
எடுத்துக்காட்டு: அந்தப்புத்தகம் மேஜை மேல் இருக்கிறது. (postposition)

ஹிந்தி மொழியிலும் இந்த இடைச்சொற்கள் postposition-களாகத்தான் பயன்படுத்தப்படுகின்றன.
எடுத்துக்காட்டு:राम के पास दस रुपये हैं । (ராம் கே பாஸ் தஸ் ருப்யே ஹைன்.)

குறிப்பு:
வேற்றுமை உருபுகளைப் போலவே இந்த சொற்களும் அவைகளுக்கு முன்னால் வரும் பெயர்ச்சொற்கள், பிரதிபெயர்ச்சொற்கள் மற்றும் பெயர் உரிச்சொற்களின் மீது பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

எடுத்துக்காட்டு:
वह अचछा लडका + के पास = उस अचछे लडके के पास

ஒற்றெழுத்தில் வரும் பெயர் உரிச்சொற்களும் வினை உரிச்சொற்களும் எந்தவித மாறுபாடும் அடைவதில்லை.

பா.ராஜேஷ்
26-06-2010, 06:22 PM
உங்கள் அயராத முயற்ச்சியை கண்டு வியக்கிறேன்... உங்களுக்கு எனது மனதார்ந்த நல்வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்களது பங்களிப்பு...

பாரதி
27-06-2010, 04:03 AM
ஊக்கத்திற்கு நன்றி இராஜேஷ்.-------------------------------------------------------------
பால்


GENDER


लिगं

ஹிந்தி மொழியில் ஆண்பால் ( पुलिगं ) பெண்பால் ( स्त्री लिगं ) என இரு பால்கள் மட்டுமே உள்ளன. பலவின் பால் கிடையாது.

தற்சமயம் ஒரு வாக்கியத்திலுள்ள பெயர்ச்சொல் ஆண்பாலா அல்லது பெண்பாலா என்பதைக் கண்டுபிடிக்க என்னென்ன வழிகள் இருக்கின்றன என்பதைப் பற்றிக் காணலாம்.

1. ஆறாம் வேற்றுமை உருபுகளின் மூலமாக:
ஒரு வாக்கியத்தில் பெயர்ச்சொல்லுக்கு முன்னால் வரும் ஆறாம் வேற்றுமை உருபுகளான “ का, के , की” ஆகியவற்றில் ஏதாவது ஒன்று அமைந்திருந்தால் அதைக் கொண்டு அந்தப்பெயர்ச்சொல்லின் பாலை தெரிந்து கொள்ளலாம்.
எடுத்துக்காட்டுகள்:
यमुना के किनारे एक सगंमर्मर का मक्कान है । (मक्कान – ஆண்பால்)
यमुना के किनारे एक सगंमर्मर की हिमारत है । (हिमारत – பெண்பால்)


2. வினைஉரிச்சொற்கள்(ADJECTIVES) மூலமாக:
ஒரு பெயர்ச்சொல்லுக்கு முன்னால் आ- வில் முடியும் பெயர் உரிச்சொல்லின் ஏதாவது ஒரு உருவம் அமையுமானால் அதைக்கொண்டு அந்தப்பெயர்ச்சொல்லின் பாலை அறியலாம்.
எடுத்துக்காட்டுகள்:
वहाँ एक अचछा मक्कान है (मक्कान – ஆண் ஒருமை)
वहाँ एक अचछि हिमारत है । (हिमारत – பெண்பால்)
वहाँ अचछे मक्कान हैं । (मक्कान – ஆண் பன்மை)


3. பெயர் உரிச்சொற்களின் வேற்றுமை உருபை ஏற்காத பன்மை உருவங்களின் மூலமாக:
ஒருமை பன்மை விதிகளின் அடிப்படையில் ஒரு பெயர்ச்சொல்லின் வேற்றுமை உருபை ஏற்காத பன்மை உருவங்களின் மூலம் அதன் பாலையும் ஒருமையையும் அறியலாம்.

பன்மை உருவம் - பால் - ஒருமை உருவம்
लडके - ஆண் - लडका
घर - ஆண் - घर
हिमारतें - பெண் - हिमारत
मालाएँ - பெண் - माला
जातियाँ - பெண் - जाति
कुरसीयाँ - பெண் - कुरसी
वसतुएँ - பெண் - वसतु
बहुएँ - பெண் - बहू
नेता - ஆண் - नेता
दादा - ஆண் - दादा
चिडियाँ - பெண் - चिडिया


4. வினைச்சொற்களின் உருவங்கள் மூலமாக:

சில குறிப்பிட்ட இறந்தகால வாக்கியங்களைத் தவிர [ Past indefinite, Present Perfect, Past Perfect, doubtful past ] மற்ற கால வாக்கியங்களின் வினைச்சொல்லின் உருவத்தை வைத்து அந்த வாக்கியத்தின் எழுவாயின் பாலையும் எண்ணையும் கூட அறியலாம்.

எடுத்துக்காட்டுகள்:
यमुना के किनारे खूबसूरत हिमारत बनी हुई है । - பெண்பால்
यमुना के किनारे खूबसूरत मक्कान बना हुआ है । - ஆண்பால்

குறிப்பு:
மேலே குறிப்பிட்ட இறந்த கால வாக்கியங்களின் வினைச்சொற்களின் உருவம் மூலம் இரண்டாம் வேற்றுமை உருபான “को” வை ஏற்காத object-ன் பாலை அறியக்கூடும்.

எடுத்துக்காட்டுகள்:
शाहजहान ने यमुना के किनारे एक खूबसूरत हिमारत बन्वायी । - பெண்பால்
शाहजहान ने यमुना के किनारे एक खूबसूरत मक्कान बन्वाया । - ஆண்பால்

பாரதி
27-06-2010, 01:03 PM
ना - விகுதிச்சொற்கள்


அடிப்படை வினைச்சொல்லோடு “ना” என்ற விகுதியைச் சேர்ப்பதன் மூலம் ना விகுதிச்சொற்கள் உருவாகின்றன. இவைகளை வினையெச்சம் (Infinitive) என்றும் தொழிற்பெயர் (Gerund or Verbal noun) என்றும் இரு வகையாகப் பயன்படுத்துகிறோம்.


Root verb - Infinitive - Gerund
जा - जाना ( போக) - जाना (போதல்)
टहल - टहलना ( உலாவ) - टहलना (உலாவுதல்)

வினையெச்சத்தின் உபயோகங்கள்:
1. இந்த வினையெச்ச உருவம்தான் அகராதியில் வினைச்சொற்களை குறிப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது.(அடிப்படை வினைச்சொல் அல்ல.)
2. चाह என்ற வினைசொல்லுக்கு முன்னால் மட்டும் இது வினையெச்சமாக உபயோகப்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு:
मैं जाना चाहता हूँ ।
நான் போக விரும்புகிறேன்.
I want to go.

தொழிற்பெயரின் உபயோகங்கள்:
1. ना விகுதிச்சொல்லான தொழிற்பெயர் ஒரு வாக்கியத்தின் எழுவாயாக பயன்படுத்தப்படுகிறது. அது எந்த உருவ மாற்றமும் அடைவதில்லை.

எடுத்துக்காட்டு:
टहलना एक अचछा कसरत है ।
உலாவுதல் ஒரு நல்ல உடற்பயிற்சி.
Walking is a good exercise.

2. மற்ற வினைச்சொற்களுக்கு முன்னால் (चाह தவிர) இந்த ना விகுதிச்சொல் வேற்றுமை உருபு அல்லது இடைச்சொற்களை ஏற்ற தொழிற்பெயராகவே உபயோகப்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு:
मैं रोज शामको खेलने (के लिये) जाता हूँ ।
நான் தினந்தோறும் விளையாடுவதற்காக போகிறேன்.
Every evening I go for playing.

பாரதி
28-06-2010, 01:33 PM
PAST IMPERFECT TENSEமுற்றுப்பெறாத இறந்த காலம்अपूर्ण भूत काल


ஒரு நிகழ்கால வாக்கிய அமைப்பில் ( सामान्य वर्तमान काल ) உள்ள நிகழ்கால துணை வினைச்சொல்லை எடுத்து விட்டு அதற்கு பதில் சம்பந்தப்பட்ட இறந்தகால துணை வினைச்சொல்லை அமைத்தால் அப்போது அந்த வாக்கியம் முற்றுப்பெறாத இறந்த கால வாக்கியமாகிறது. இந்த வாக்கிய அமைப்பு ஒரு கடந்த கால வழக்கத்தைக் குறிப்பதற்காக பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு:
वह रोज मंदिर जाता है । அவன் தினமும் கோவிலுக்குப் போகிறான்.
वह रोज मंदिर जाता था । அவன் தினமும் கோவிலுக்கு சென்று வந்தான்.

பா.ராஜேஷ்
29-06-2010, 02:17 PM
அவள் தினமும் கோவிலுக்கு போகிறாள் என்பதை எப்படி சொல்வது?
वह रोज मंदिर जाती है | என்பது சரியா??

பாரதி
29-06-2010, 02:58 PM
அவள் தினமும் கோவிலுக்கு போகிறாள் என்பதை எப்படி சொல்வது?
वह रोज मंदिर जाती है | என்பது சரியா??
மிகவும் சரி.:icon_b:

பா.ராஜேஷ்
29-06-2010, 08:49 PM
ஷுக்ரியா ஜி

பாரதி
30-06-2010, 01:33 PM
चाह – ன் உபயோகம்


चाह என்பது அடிப்படையில் ஒரு Transitive verb ஆகும். மற்ற transitive verb-களைப்போலவே இதுவும் “ने का प्रयोग “ க்கிற்கு உட்பட்டது. பெயர்ச்சொற்களை மட்டுமின்றி “ना” விகுதிச் சொற்களையும் object - ஆக ஏற்கின்ற தகுதி இருக்கின்ற காரணத்தால் “चाह” ன் விதிகள் தனியாக தரப்படுகின்றன.

1. பெயர்ச்சொல் object ஆக இருக்கும் போது :
चाह– கிற்கு ஒரு பெயர்ச்சொல் நேரடியாக object ஆகலாம். ने का प्रयोग விதிக்கு ஏற்ப चाह- ம் உருவ மாற்றம் அடையும் (சம்பந்தப்பட்ட இறந்த காலங்களில்).

எடுத்துக்காட்டுகள்:
मैं एक फल चाहता हूँ ।
राम एक रोटटी चाहेगा ।
मैंने एक फल चाहा ।
मैंने दो फल चाहे ।
मैंने एक रोटटी चाही ।
मैंने दो रोटटियाँ चाहीं ।

2. ना - விகுதிச்சொல் object ஆக வரும் போது :
चाह என்ற வினைச்சொல்லுக்கு முன் வரும் ना - விகுதிச்சொல் ஒரு போதும் உருவமாற்றம் அடையாது. அதோடு ना - விகுதிச்சொல் (Infintive or verbal noun) எப்போழுதுமே ஆண்பால் ஒருமை என்பதை கவனிக்கவும். எனவே past tense –ல் ‘ ने का प्रयोग ‘ உபயோகத்தில் चाह –ன் உருவம் எப்போதும் चाहा என்றே அமையும்.

எடுத்துக்காட்டுகள்:
मैं जाना चाहता हूँ ।
राम खाना चाहता है ।
सीता खाना चाहती है ।
राम और भरत खाना चाहते हैं ।
सीता और कमला खाना चाहती हैं ।
राम ने खाना चाहा ।
सीता ने खाना चाहा ।

3. Transitive “ना” விகுதிக்கு முன் ஒரு object வரும் போது:
चाह – க்கு முன்னால் வரும் ना விகுதி சொல்லுக்கும் கூட ஒரு object இருக்கக்கூடும். அப்போது ना விகுதிச்சொல் चाह- ன் object ஆகவும், பெயர்ச்சொல் ना - விகுதிச்சொல்லின் object ஆகவும் கருதப்படும். எனவே “ने का प्रयोग” உள்ள இறந்த கால வாக்கியங்களில் அந்த வாக்கியத்தில் உள்ள பெயர்ச்சொல்லின் எண்ணாலும் பாலாலும் चाह –ன் உருவம் ஒரு போதும் பாதிக்கப்படாது.

எடுத்துக்காட்டுகள்:
मैं एक फल खाना चाहता हूँ ।
राम एक रोटटी खाना चाहता है ।
सीता पाचँ फल खाना चाहती है ।
कमला रोटटियाँ खाना चाहती है ।

राम ने एक फल खाना चाहा ।
राम ने दो फल खाना चाहा ।
राम ने एक रोटटी खाना चाहा ।
राम ने दो रोटटियाँ खाना चाहा ।

கீதம்
30-06-2010, 10:18 PM
ஹிந்தி மொழியின் பல நுணுக்கங்களை அறியச் செய்து, அழகாய்க் கற்றுத் தரும் உங்கள் முயற்சியைப் பெரிதும் பாராட்டுகிறேன், பாரதி அவர்களே. நான் படித்து வெகுநாட்களாகிவிட்டதாலும், யாரிடமும் அம்மொழியில் பேச வாய்ப்பில்லாததாலும் பல விஷயங்கள் மறந்துபோயிருக்கின்றன. அவற்றை மீட்க உதவும் உங்களுக்கு என் நன்றி.

பாரதி
01-07-2010, 08:02 AM
ஹிந்தி மொழியின் பல நுணுக்கங்களை அறியச் செய்து, அழகாய்க் கற்றுத் தரும் உங்கள் முயற்சியைப் பெரிதும் பாராட்டுகிறேன், பாரதி அவர்களே. நான் படித்து வெகுநாட்களாகிவிட்டதாலும், யாரிடமும் அம்மொழியில் பேச வாய்ப்பில்லாததாலும் பல விஷயங்கள் மறந்துபோயிருக்கின்றன. அவற்றை மீட்க உதவும் உங்களுக்கு என் நன்றி.

ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்கு நன்றி.
உங்களுக்கு ஒன்று தெரியுமா..? வேலைக்கு சேர்ந்த பின்னரே நான் ஹிந்தி மொழியை வாரமிருமுறை மாலை வகுப்பில் பயின்றேன். அப்போது எனது புத்தகத்தில் எழுதி வைத்தவையே இவை. அடுத்த பதினைந்தாண்டுகளுக்கு எனக்கு இது தேவைப்படவே இல்லை. ஆனால் இப்போது பணியிட மாற்றத்திற்கு பின்னர் நான் கற்ற கல்வி மிகவும் உதவியாக இருக்கிறது. நானும் ஒரு மீள்பார்வை பார்க்கும் முகமாகவும், இதை மன்றத்தில் வைப்பதன் மூலம் எதிர்காலத்திலும் யாருக்கேனும் பயனடைய முடியும் என்பதாலுமே இத்திரியைத் துவங்கினேன்.

பா.ராஜேஷ்
01-07-2010, 09:36 PM
உங்கள் உயரிய நோக்கம் நிச்சயம் உதவியாக இருக்கிறது... மேலும் பலருக்கும் இது நிச்சயம் பயன் பட்டிருக்கும்.. தொடருங்கள் நற்பணியை..

பாரதி
02-07-2010, 06:57 AM
ஊக்கத்திற்கு நன்றி இராஜேஷ்.

பாரதி
02-07-2010, 06:57 AM
सक, चुक - இன் உபயோகம்.


सक, चुक ஆகிய இரண்டு வினைச்சொற்களும் ஆங்கிலத்தில் உள்ள "can" போல தனித்தியங்க இயலாதவை. இவைகளோடு கட்டாயமாக ஒரு முக்கிய வினைச்சொல் வர வேண்டும்.

1. सक அல்லது चुक க்கு முன்னால் வருகின்ற முக்கிய வினைச்சொல் அதனுடைய அடிப்படை உருவத்தில் (root) இருக்க வேண்டும்.

2. सक, चुक ஆகிய இரண்டு வினைச்சொற்களும் ‘ने का प्रयोग ’விதிக்கு விலக்கானவை.

3. सक, चुक ஆகிய இரண்டும்தான் எல்லா tense-களிலும் மாற்றமடையுமே தவிர அவைகளுக்கு முன்னால் வரும் முக்கிய வினைச்சொல் தன்னுடைய அடிப்படை உருவத்திலிருந்து ஒரு போதும் மாற்றமடையாது.

குறிப்பு:मैं सकता हूँ என்றோ मैं चुकता हूँ என்றோ முக்கிய வினைச்சொல் இல்லாமல் எழுதுவது பெரும் தவறாகும்.

எடுத்துக்காட்டுகள்:
मैं जा सकता हूँ ।
हम जा सकेंगे ।
हम नहीं जा सके ।
हम पाठ पढ चुके ।
कल शाम तक मैं पाँच पाठ लिख चुकूंगा ।
मैं कल ही दस पाठ लिख चुका ।

குறிப்பு: பொதுவாக நிகழ்காலத்தில் चुक என்ற வினைச்சொல்லை உபயோகிப்பதில்லை. ஆயினும் சில விசேட தருணங்களில் அவ்வாறு பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டு:
मैं अभी अभी स्नान कर चुकता हूँ ।

பாரதி
05-07-2010, 07:15 AM
चाहिये – வின் உபயோகம்.


चाहिये என்ற சொல்லுக்கு வேண்டும் என்று பொருள். அதாவது ஒரு காரியத்தை செய்ய வேண்டிய நிலை இருக்கிறதென்று பொருள். ஆங்கிலத்தில் “have to” என்ற வினைத்தொடரை உபயோகிக்கிறோம்.

ஹிந்தியில் चाहिये என்ற வினைச்சொல் வரும் போது சம்பந்தப்பட்ட வாக்கியத்தின் எழுவாய் (subject) கண்டிப்பாக நான்காம் வேற்றுமை நிலையில்தான் இருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு:
मुझे एक फल चाहिये । - எனக்கு ஒரு பழம் வேண்டும் – I have to have a fruit.

चाहिये உபயோகத்திற்கு கீழ்க்கண்ட விதிகள் அவசியம்:
1. ஒரு பெயர்ச்சொல் चाहिये-வின் object ஆக இருக்கும் போது चाह போலவே चाहिये-விலும் ஒரு பெயர்ச்சொல் நேரடியாக object-ஆக இருக்கக்கூடும்.

எடுத்துக்காட்டுகள்:
मुझे एक फल चाहिये ।
राम को पाचँ फल चाहिये ।
सीता को एक रोटी चाहिये ।
सीता को पाचँ रोटियाँ चाहिये ।

2. ஒரு ना விகுதிச்சொல் மட்டும் चाहिये – வின் object ஆக வரும் போது:
இவ்வாறு ना விகுதிச்சொல் object ஆக வரும் போது அச்சொல் intransitive ஆக இருந்தாலும் அல்லது transitive ஆக இருந்து அதற்கும் முன்னால் வேறு பெயர்ச்சொல் object ஆக இல்லாமல் இருந்தாலும் ना விகுதிச்சொல் எந்தவித உருவ மாற்றமும் அடையாது.

எடுத்துக்காட்டுகள்:
मुझे आज मदरास जाना चाहिये।
राम को जलदी जाना चाहिये।
मुझे अब दौटना चाहिये ।
मुझे ठंडा पानि में नहाना चाहिये।
मुझे जलदी निकालना चाहिये।
मुझे देर तक पढना चाहिये।

3. नाவிகுதிச்சொல்லுக்கு முன்னால் object வெளிப்படையாக கூறப்படும் போது:
चाहिये – விற்கு முன்னால் வரும் ஒரு transitive விகுதிச்சொல்லுக்கு முன்னால் object வெளிப்படையாகக் கூறப்பட்டால் அப்போது नाவிகுதிச்சொல்லின் உருவம் object-னுடைய எண்ணுக்கும் பாலுக்கும் ஏற்ப ”आ, ए, ई” விதிக்கு உட்பட்டு மாற்றமடையும்.

எடுத்துக்காட்டுகள்:
राम को एक फल खाना चाहिये ।
सीता को दो फल खाने चाहिये।
राम को एक रोटी खानी चाहिये।
राम और रहीम को पाँच रोटियाँ खानी चाहिये।

4. Object –க்கு முன்னால் இரண்டாம் வேற்றுமை உருபான को வரும் போது:
[चाहिये – முன்னால் வரும் नाவிகுதிச்சொல்லுக்கு (transitive ना) முன்னால் வரும் object க்குப் பின்னால் இரண்டாம் வேற்றுமை உருபான को வந்தால் ना விகுதிச்சொல் எந்த மாற்றத்தையும் அடையாது.

எடுத்துக்காட்டுகள்:
मुझे राम को देखना चाहिये।
मुझे राम और भरत को देखना चाहिये।
मुझे सीता को देखना चाहिये।
मुझे सीता और कमला को देखना चाहिये।

முக்கிய குறிப்புகள்:
அ) चाहिये நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் குறிப்பதாகும். இந்நிலையில் இதற்கு எந்தவித உருவ மாற்றமும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆ) சில வேளைகளில் இதற்கு இறந்த கால பிரயோகமும் உண்டு. அப்போது இது चाहिये என்று உருவை ஏற்கும்.
எடுத்துக்காட்டு:
मुझे कल मदुरै जाना चाहिये था।
எனக்கு நேற்று மதுரை செல்ல வேண்டியதாயிருந்தது.

இ) Past Indefinite Tense- ல் விதிவிலக்காக உள்ள எட்டுச்சொற்களும் चाहिये பிரயோகத்தில் விதிவிலக்குகள் அல்ல.

பாரதி
05-07-2010, 07:18 AM
நண்பர்களே, அடுத்த பதிவு சில வாரங்களுக்குப் பின்னர் தொடரும். நன்றி.

பா.ராஜேஷ்
06-07-2010, 09:18 PM
நன்றி பாரதி அண்ணா... இந்த வாக்கியம் "मुझे राम कॉ देखना चाहिये।"

"मुझे राम को देखना चाहिये।" करके आना चाहिये ना!!?

பாரதி
09-08-2010, 06:47 AM
நன்றி இராஜேஷ். பிழையை திருத்தி விட்டேன்.

----------------------------------------------------------------------------------लग – ன் உபயோகம்


लग என்பது ஒரு Transitive verb ஆக இருந்தாலும் “ने का प्रयोग “ விதிகளுக்கு அப்பாற்பட்டது என்பது நமக்குத்தெரியும்.

लग என்ற சொல் பலவிதமான பொருள் கொடுக்கின்ற சொற்றொடர்களில் (Phrase) உபயோகப்படுத்தப்படும். இங்கே “ஆரம்பிக்க” என்ற பொருளில் மட்டுமே செய்கின்ற உபயோகத்தின் அடிப்படையில் விதிகள் கொடுக்கப்படுகின்றன.

1.सक , चुक இவைகளைப் போன்றேलग என்ற சொல்லும் தனியாக உபயோகப்படுத்தப்பட முடியாதது ஆகும். இதற்கு முன்னால் கண்டிப்பாக ஒரு முக்கிய வினைச்சொல் அமைய வேண்டும்.


2.இந்த முக்கிய வினைச்சொல்லின் உருவம் கண்டிப்பாக Verbal noun-ன் “ने” விகுதி உருவமாக இருக்க வேண்டும்.


எடுத்துக்காட்டுகள்:

मेरा बच्चा रात को एक बजे रोने लगा ।
पुलिश को देखकर चोर भागने लगा ।
बिलली रोटी खाने लगी ।

குறிப்பு:
लग-க்கு முன்னால் வருகின்ற “ने” விகுதிச்சொல் எவ்வித மாற்றமும் அடைவதில்லை. लग மட்டுமே subject-னுடைய எண்ணுக்கும் பாலுக்கும் person-க்கும் ஏற்ப மாற்றமடையும்.

பாரதி
10-08-2010, 07:07 AM
अपना – வின் உபயோகம்


अपना என்பது Reflexive pronoun ஆகும். ஹிந்தி மொழியில் தக்க இடத்தில் இதை உபயோகிப்பது அவசியமாகும். அவ்வாறு உபயோகிக்காவிடில் பல தவறான அர்த்தங்கள் ஏற்படும்.

ஒரு வாக்கியத்தின் subject-க்கு உடமையான பொருள் குறிப்படப்படும் போது मेरा, मेरी, मेरे, तुम्हारे, तुम्हारी, आपका, आपके, आपुअकी, उस्का, उस्के, उस्की, उन्का, उन्के, उन्की போன்ற pronoun-களுக்குப் பதில் अपना, अपने,अपनी ஆகியவற்றைத்தான் ஏற்றவாறு உபயோகப்படுத்த வேண்டும்.

अपना என்ற சொல்லுக்கு “ தன்னுடைய” என்று பொருள்.


எடுத்துக்காட்டு:
ராம் தன்னுடைய வீட்டிற்குச் சென்றான்.
राम अपने घर गया ।

இவ்வாறு குறிப்பதற்கு “ராம் அவனுடைய வீட்டிற்குச் சென்றான்” என்று கூறினால் அது தவறாகும். அதாவது ராம் தன்னுடைய வீட்டிற்குச் செல்லாமல் வேறு யாரோ ஒருவர் வீட்டிற்கு சென்றதாக பொருள்படும்.

ஹிந்தியில் वह अपने घर गया என்பது சரி. वह उस्के घर गया என்பது தவறாகும். ஆங்கில மொழியில் வேறு வழியில்லாததால் ”he went to his house” என்று கூறுகிறோம்.

வாக்கியத்தின் பேசுபவர் எழுவாயாக வராமல் தன்னுடைய உடைமையைப் பற்றி பேசும் போதுअपना போட வேண்டிய தேவையில்லை.


எடுத்துக்காட்டு:

यह मेरा घर है।
सीता उसकी बहन है।

poornima
10-08-2010, 02:33 PM
பாராட்டுகள்.. இப்போதுதான் இந்த திரியைக் கவனித்தேன். முழுமையாக ஒரு சுற்றுக்குப் பின் மீண்டும் வந்து பதிகிறேன்

பாரதி
11-08-2010, 03:32 AM
ஊக்கத்திற்கு மிக்க நன்றி. மீண்டும் வாருங்கள்.

பாரதி
11-08-2010, 03:34 AM
SUBJECTIVE MOOD SENTENCES – सभाव्य भविष्यत


Subjective mood வாக்கியங்கள் ஏழு வகையாகப் பயன்படுத்தப்படுகின்றன.

1. கட்டளை - order
2. நிபந்தனை - condition
3. நோக்கம் – purpose
4. அனுமதி - permission
5. விருப்பம் - wish
6. சந்தேகம் - doubt
7. அனுமானம் – supposition

இதற்குரிய வினைச்சொல்லின் உருவம் மிக எளிதாக உருவாக்கப்படுகிறது. நாம் ஏற்கனவே படித்திருக்கும் எதிர்கால வினைச்சொல் உருவங்களில் ஈற்றெழுத்துக்களாகிய “गा, गे, गी, गीं “ ஆகியவற்றை நீக்கி விட்டால் வருகின்ற உருவம்தான் சம்பந்தப்பட்ட எழுவாய்களுக்கு உரிய subjective mood வினைச்சொல் உருவங்களாகும்.

எடுத்துக்காட்டுகள்:
जाऊँगा – जाऊँ
जाएगी, जाएगा – जाए
जाओगी, जाओगे – जाओ
जाएँगी, जाएँगे – जाएँ

எனவே subjective mood வாக்கியங்களை அமைக்க வேண்டுமானால் மேற்கண்ட வினைச்சொல் உருவங்களைத்தான் பயன்படுத்த வேண்டும்.

பாரதி
12-08-2010, 12:01 AM
Doubtful present Tense
1.சந்தேகத்தைக் காட்டும் நிகழ்காலம்.


“வரலாம்” போன்ற வினைச்சொல் doubtful present ஆகவும் “வந்து கொண்டிருக்கலாம்” போன்ற வினைச்சொற்கள் doubtful present continuous ஆகவும் அமைகின்றன.

Doubtful present tense வினைச்சொல் அமையும் முறை:
சாதாரண present tense வாக்கியத்தை அமைத்துக்கொண்டு அதில் உள்ள நிகழ்காலத் துணை வினைச்சொற்களை எடுத்து விட்டு அதற்குப்பதிலாக பொருத்தமான எதிர்கால துணை வினைச்சொல்லை அமைத்தால் “ சந்தேகத்தைக் காட்டும் தொடர்நிகழ்காலம்” வாக்கியம் உருவாகும்.

எடுத்துக்காட்டுகள்:
मैं जाता हूँ । - நான் போகிறேன்.
मैं जाता हूँगा ।- நான் போகலாம்
हम जाते हैं । – நாங்கள் போகிறோம்
हम जाते होंगे । - நாங்கள் போகலாம்.

1st Person Singular – தன்னிலை ஒருமை
मैं जाता हूँगा ।- மைன் ஜாத்தா ஹுங்கா - நான் போகலாம்.
मैं जाती हूँगी।- மைன் ஜாத்தி ஹுங்கீ - நான் போகலாம்.

1st Person Plural - தன்னிலை பன்மை
हम जाते होंगे । - ஹம் ஜாத்தே ஹோங்கே - நாங்கள் போகலாம்.
हम जाती होंगी । ஹம் ஜாத்தி ஹோங்கீ - நாங்கள் போகலாம்.

2nd Person Singular - முன்னிலை ஒருமை
तू जाता होगा । தூ ஜாத்தா ஹோகா -நீ போகலாம்.
तू जाती होगी । தூ ஜாத்தி ஹோகீ -நீ போகலாம்.

2nd Person Plural - முன்னிலை பன்மை
तुम जाते होगे । தும் ஜாத்தே ஹோகே – நீவீர் போகலாம்.
तुम जाती होगी । தும் ஜாத்தி ஹோகீ – நீவீர் போகலாம்.
आप जाते होंगे । ஆப் ஜாத்தே ஹோங்கே – நீங்கள் போகலாம்.
आप जाती होंगी । ஆப் ஜாத்தி ஹோங்கீ – நீங்கள் போகலாம்.

3rd Person Singular – படர்க்கை ஒருமை
वह जाता होगा । வஹ் ஜாத்தா ஹோகா – அவன் போகலாம்.
वह जाती होगी । வஹ் ஜாத்தி ஹோகீ - அவள் போகலாம்.

3rd Person Plural – படர்க்கை பன்மை
वे जाते होंगे । - வே ஜாத்தே ஹோங்கே – அவர்கள் போகலாம்.
वे जाती होंगी । - வே ஜாத்தி ஹோங்கீ - அவர்கள் போகலாம்.

பாரதி
13-08-2010, 03:14 AM
சந்தேகத்தைக் காட்டும் தொடர்நிகழ்காலம்Doubtful Present Continuous Tense


சாதாரண தொடர்நிகழ்கால வாக்கியத்தை அமைத்துக்கொண்டு அதில் உள்ள நிகழ்கால துணைவினைச்சொல்லுக்குப் பதில் சம்பந்தப்பட்ட எதிர்கால துணை வினைச்சொல்லை அமைத்தால் அப்போது doubtful present continuous ஆக அமையும்.

எடுத்துக்காட்டுகள்:
मैं जा रहा हूँ । நான் போய்க்கொண்டிருக்கிறேன்.
मैं जा रहा हूँगा । நான் போய்க்கொண்டிருக்கலாம்.
हम जा रहे हैं । நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம்.
हम जा रहे होंगे । நாங்கள் போய்க்கொண்டிருக்கலாம்.

1st person singular - தன்னிலை ஒருமை:
मैं जा रहा हूँगा ।- நான் போய்க்கொண்டிருக்கலாம்.
मैं जा रही हूँगी ।- நான் போய்க்கொண்டிருக்கலாம்.

1st person plural - தன்னிலை பன்மை :
हम जा रहे होंगे ।- நாங்கள் போய்க்கொண்டிருக்கலாம்.
हम जा रही होंगी । - நாங்கள் போய்க்கொண்டிருக்கலாம்.

2nd person singular முன்னிலை ஒருமை:
तू जा रहा होगा ।- நீ போய்க்கொண்டிருக்கலாம்.
तू जा रही होगी ।- நீ போய்க்கொண்டிருக்கலாம்.

2nd person plural - முன்னிலை பன்மை:
तुम जा रहे होगे । - நீவிர் போய்க்கொண்டிருக்கலாம்.
तुम जा रही होगी ।- நீவிர் போய்க்கொண்டிருக்கலாம்.

आप जा रहे होंगे । - நீங்கள் போய்க்கொண்டிருக்கலாம்.
आप जा रही होंगी ।- நீங்கள் போய்க்கொண்டிருக்கலாம்.

3rd person singular படர்க்கை ஒருமை:
वह जा रहा होगा ।- அவன் போய்க்கொண்டிருக்கலாம்.
वह जा रही होगी । - அவள் போய்க்கொண்டிருக்கலாம்.

3rd person plural - படர்க்கை பன்மை:
वे जा रहे होंगे ।- அவர்கள் போய்க்கொண்டிருக்கலாம்.
वे जा रही होंगी ।- அவர்கள் போய்க்கொண்டிருக்கலாம்.

Alternative form of doubtful present continuous:
மேலே சாதாரண தொடர்நிகழ்காலத்தின் அடிப்படையில் சந்தேகத்தைக் காட்டும் தொடர்நிகழ்காலம் அமைப்பது பற்றி பார்த்தோம். இனி சாதாரண நிகழ்காலத்தின் அடிப்படையில் doubtful present continuous அமைப்பது பற்றி பார்ப்போம்.

இந்த அமைப்பில் சாதாரண நிகழ்காலத்தின் நிகழ்கால துணை வினைச்சொல்லை எடுத்து விட்டு அதற்கு பதிலாக “रह” என்ற சொல்லின் எதிர்கால உருவங்களை subject-ன் எண்ணுக்கும் பாலுக்கும் ஏற்ப அமைக்க வேண்டும்.

எடுத்துக்காட்டு:
मैं जाता हूँ । நான் போகிறேன்.
मैं जाता रहूँगा । நான் போய்க்கொண்டிருக்கலாம்.

குறிப்பு:
இந்த மாற்று முறை பொதுவாக ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
मैं जाता रहूँगा । - நான் போய்க்கொண்டே இருக்கலாம்.

பாரதி
12-10-2010, 04:55 PM
DOUBTFUL PAST TENSE


சந்தேகத்தைக் காட்டும் சாதாரண இறந்தகாலம்


Doubtful Past Tense வாக்கியம் அமைக்க முதலில் Past Indefinitive Tense வாக்கியத்தை அமைத்துக்கொண்டு, பின்னர் அந்த வாக்கியத்தின் வினைச்சொல் Intransitive Verb ஆக இருந்தால் Subject-ன் number, gender மற்றும் பாலுக்கு ஏற்ப எதிர்கால துணைச்சொல்லை அமைக்க வேண்டும்.

எடுத்துக்காட்டுகள் :

मैं गया – (மைன் கயா) நான் போனேன்.
मैं गयाहूँगा – (மைன் கயா ஹூங்கா) நான் போயிருக்கலாம்
आप गये – நீங்கள் போனீர்கள்
आप गये होंगे – நீங்கள் போயிருக்கலாம்
सीता गयी – சீதா போனாள்
सीता गयी होगी - சீதா போயிருக்கலாம்

ஆனால் Transitive verb ஆக இருந்தால் Past Indefinite tense வாக்கிய அமைப்பில் “ने” பயன்பாடு உண்டு என்பதால் இணைக்கப்பட வேண்டிய எதிர்கால துணை வினைச்சொல்லின் உருவம் முக்கிய வினைச்சொல்லின் எண்ணுக்கும் பாலுக்கும் ஏற்ப அமையும்.

எடுத்துக்காட்டுகள் :

मैंने खाया – (மைனே காயா) நான் சாப்பிட்டேன்
मैंने खायाहोगा – (மைனே காயா ஹோகா) நான் சாப்பிட்டு இருக்கலாம்
सीता ने खाया – ( சீதா னே காயா) சீதா சாப்பிட்டாள்
सीता ने खायाहोगा – (சீதா னே காயா ஹோகா) சீதா சாப்பிட்டு இருக்கலாம்
सीता ने एक फल खाया – ( சீதா னே ஏக் ஃபல் காயா)
सीता ने एक फल खायाहोगा – ( சீதா னே ஏக் ஃபல் காயா ஹோகா)
सीता ने पाँच फल खाये – ( சீதா னே பாஞ்ச் ஃபல் காயே)
सीता ने पाँच फल खायेहोंगे– ( சீதா னே பாஞ்ச் ஃபல் காயே ஹோங்கே)
राम ने एक रोटी खायी – (ராம் னே ஏக் ரோட்டி காயீ)
राम ने एक रोटी खायी होगी – (ராம் னே ஏக் ரோட்டி காயீ ஹோகீ)
राम और रहीम ने पांच रोटियाँ खायीं – (ராம் அவுர் ரஹீம் னே பாஞ்ச் ரோட்டியாங் காயீ(ம்)
राम और रहीम ने पांच रोटियाँ खायी होंगी – (ராம் அவுர் ரஹீம் னே பாஞ்ச் ரோட்டியாங் காயீ ஹோங்கீ)
सीता ने कमला को देखा – (சீதா னே கமலா கோ தேக்கா)
सीता ने कमला को देखा होगा – (சீதா னே கமலா கோ தேக்கா ஹோகா)

பாரதி
13-10-2010, 04:25 PM
CONDITIONAL PAST TENSEநிபந்தனையுடன் கூடிய இறந்த காலம்.हेतुहेतुमद्भूत काल


Conditional Past Tense வாக்கியங்களில் இரண்டு தனி வாக்கியங்கள் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. அவ்வாறு இணைக்கப்படும் போது அவைகள் பொதுவாக “अगर, तो” என்ற இரு சொற்களோடு பிணைக்கப்படுகின்றன. சில வேளைகளில் ‘अगर’ வெளிப்படையாகக் கூறப்படுவதில்லை.

இந்த வாக்கியங்களின் வினைச்சொல் உருவங்களை எவ்வாறு அமைப்பது என்று பார்ப்போம். நிகழ்கால வாக்கிய அமைப்பில் வாக்கியங்களை அமைத்துக்கொண்டு அவைகளில் உள்ள துணை வினைச்சொல்லை இழந்த இரு வாக்கியங்களையும் “अगर, तो” என்ற சொற்களால் இணைத்தால் Conditional Past Tense வாக்கியம் கிடைக்கும்.

எடுத்துக்காட்டுகள்:
वह नहीं आया । मैंने उसको नहीं देखा ।
அவன் வரவில்லை; நான் அவனைப் பார்க்கவில்லை.

अगर वह आता तो मैं उसको देखता ।
அவன் வந்திருந்தால் நான் அவனை பார்த்திருப்பேன்.

இந்த வாக்கியங்களை அமைப்பதற்கு தனித்தனியாக இருக்கின்ற இரு வாக்கியங்களின் நிலை ஒரு முக்கியமான அடிப்படை ஆகும்.

1. கொடுக்கப்பட்ட இரு வாக்கியங்களும் Negative ஆக இருக்கும் போது Conditional Past Tense வாக்கிய அமைப்பில் உள்ள இரு பகுதிகளும் Affirmative ஆக அமையும்.
எடுத்துக்காட்டு:
आपने मुझे नहीं बुलाया । इसलिए मैं शादी को नहीं आया ।
अगर आप मुझे बलाते तो मैं शादी को आता ।

2. இரு வாக்கியங்களில் ஒன்று Affirmative ஆகவும் மற்றது Negative ஆகவும் இருந்தால் அப்போது Conditional Past Tense வாக்கிய அமைப்பில் அவைகள் இடம் மாற்றமடையும்.
எடுத்துக்காட்டு:
गायों में मिल्लत नहीं थी। इसलिए शेर ने उन्हें मारकर खाया ।
अगर गायों में मिल्लत होती तो शेर उन्हें मारकर नहीं खाता ।

3. இரு வாக்கியங்களும் Affirmative ஆக வரும் போது Conditional Past Tense உள்ள இரு பகுதிகளும் Negative ஆக அமையும்.
எடுத்துக்காட்டு:
मैंने उसको देखा । इसलिये मुझे काम मिला ।
अगर उन्को नहीं देखता तो मुझे काम नहीं मिलता ।

குறிப்பு:
தனித்தனியாக கொடுக்கப்பட்ட இரு வாக்கியங்களில் “ ने का प्रयोग ” இருந்தாலும் கூட Conditional Past Tense வாக்கிய அமைப்பில் “ ने का प्रयोग ” கிடையாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாரதி
15-10-2010, 10:36 AM
HABITUAL TENSEவழக்கத்தைக்குறிக்கும் காலம்.


ஏற்கனவே நாம் இறந்தகால வழக்கத்தைக் குறிப்பதற்காக Past Imperfect Tense –ஐ பயன்படுத்துவது உண்டு என்று படித்திருக்கிறோம்.

எடுத்துக்காட்டு:
जब मैं मद्रास में था तब रोज मेरीना बीच जाता था ।
நான் சென்னையில் இருந்த போது மெரீனா பீச்சுக்கு செல்வது வழக்கம்.

மேலே குறிப்பிட்ட வாக்கிய அமைப்பு ஒரு கடந்த கால வழக்கத்தைக்குறிப்பதற்காக மட்டுமே பயன்படும். இப்போது படிக்க இருக்கும் வாக்கிய அமைப்பு முக்கால வழக்கங்களையும் குறிக்கப்பயன்படும்.
இந்த வாக்கிய அமைப்புகளில் இறந்த காலத்திற்கு past imperfect tense வாக்கிய அமைப்பு வராது. பதிலாக past imperfect tense வாக்கிய அமைப்பே பயன்படுத்தப்படும். எனவே “ ने का प्रयोग “ கிடையாது.

வினைச்சொல்லின் உருவம்:
வழக்கத்தைக்காட்டும் வினைச்சொல்லை உருவாக்க முக்கிய வினைச்சொல்லின் இறந்தகால ஆண்பால் ஒருமை உருவத்தை அமைத்துக்கொண்டு ‘ करना ’ – வை துணை வினைச்சொல்லாக சேர்க்க வேண்டும். முக்கிய வினைச்சொல் ஒரு போதும் உருவமாற்றம் அடையாது. ‘ करना ’ மட்டுமே காலத்திற்கும் subject- னுடைய number-க்கும் person-க்கும் ஏற்ப மாற்றம் அடையும்.

எடுத்துக்காட்டுகள்:
राम रोज मंदिर जाया करता है।
सीता रोज अपना पाठ लिखा करती है ।
भरत कल से स्कूल जाया करेगा ।
राम और भरत परसों से कालेज जाया करेंगे ।
मेरे भाई पिछले महिने में रोज मंदिर जाया करते थे ।

குறிப்பு: இந்த வாக்கிய அமைப்பில் மட்டும் जा - வின் உருவம் जाया என்றே அமைவதைக் கவனிக்கவும்.

பாரதி
16-10-2010, 10:56 AM
होना, पडना – வின் பயன்பாடு.


होना, पडना ஆகிய இரண்டு வினைச்சொற்களும் ” चाहिए ”என்ற வினைச்சொல்லைப் போலவே, அதனுடைய விதிமுறைகளுக்கு ஏற்பவே பயன்படுத்தப்படுகிறது. முக்கியமான வேறுபாடு என்னவென்றால் இந்த இரண்டு வினைச்சொற்களுக்கும் ஒரு பெயர்ச்சொல் நேரடியான ஆக வரமுடியாது என்பதாகும்.

எடுத்துக்காட்டு:
मुझे एक फल चाहिए ।
இதற்கு பதிலாக இதே பொருளைத்தரக்கூடியதாக “ मुझे एक फल है “ என்றோ “ मुझे एक फल पडता है “ என்றோ எழுத முடியாது. இந்த இரண்டு வினைச்சொற்களுக்கும் முன்பாக ஒரு “ ना “விகுதிச்சொல் வர வேண்டும்.

எடுத்துக்காட்டுகள்:
मुझे आज दपतर जाना है ।
நான் இன்று அலுவலகம் போக வேண்டியதிருக்கிறது.
मुझे आज दपतर जाना पडता है ।

இன்று எனக்கு அலுவலகம் போக வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. [ “ होना “ பயன்படுத்தினால் “போக வேண்டிய அவசியம் இருக்கிறது” என்று பொருள் கொள்ள வேண்டும்.] மேற்கூறிய எடுத்துக்காட்டுகளிலிருந்து होना- வையும் पडना - வையும் எந்தெந்த சந்தர்ப்பங்களில் பயன்படுத்த வேண்டும் என்று நமக்கு நன்கு தெளிவாகிறது.

இனி இந்த வினைச்சொற்களுக்கு முன்னால் வருகின்ற ‘ ना ‘ விகுதிச்சொற்கள் Transitive ஆக அமையலாம். அப்போழுது அவைகள் object – ஐ ஏற்கக்கூடும். இதில் மூன்று நிலைகள் உண்டு.

I. Object வெளிப்படையாக கூறப்படாத நிலை.
எடுத்துக்காட்டுகள்:
1. मुझे आज खाना है ।
2. मुझे आज खाना पडता है ।

II . Object வெளிப்படையாக கூறப்பட்டு இரண்டாம் வேற்றுமை உருபான को வராத நிலை.

எடுத்துக்காட்டுகள்:
1. मुझे आज एक फल खाना है ।
2. मुझे आज फल खाना पडता है ।
3. मुझे आज दो फल खानेहैं।
4. मुझे आज दो फल खाने पडतेहैं।

III. object வெளிப்படையாக கூறப்பட்டு இரண்டாம் வேற்றுமை உருபான को வந்த நிலை.

எடுத்துக்காட்டுகள்:
1. मुझे आज राम को देखता है ।
2. मुझे आज सीता को देखता है ।
3. मुझे आज राम और भरत को देखता है ।
4.मुझे आज सीता और कमला को देखता है ।

குறிப்பு:
“ है” என்பதற்கு பதிலாக “ पडता है “ என்பதை நிர்பந்தத்தைக் குறிப்பதற்காக அமைக்கலாம்.

எடுத்துக்காட்டுகள்:
1. मुझे आज एक रोटी खानी है ।
2. मुझे आज एक रोटी खानी पडती है ।
3. मुझे आज दो रोटीयाँ खानी पडती हैं।
4. मुझे आज दो रोटीयाँ खानी हैं।

இதுவரை “ होना ” மற்றும் “ पडना ”வின் உபயோகத்தில் நிகழ்கால வாக்கிய அமைப்புகளை மட்டுமே பார்த்தோம். இவைகள் எதிர்கால மற்றும் இறந்தகால அமைப்புகளிலும் வரும்.

எடுத்துக்காட்டுகள்:
1. मुझे कल दपतर जाना पडेगा।
2. मुझे कल दपतर जाना होगा।
3. मुझे कल दपतर जाना था।
4. मुझे कल दपतर जाना पडा।
5. मुझे कल एक रोटी खानी थी।
6. मुझे कल एक रोटी खानी पडी।
7. मुझे कल दो रोटीयाँ खानी थीं।
8. मुझे कल दो रोटीयाँ खानी पडीं।
9. मुझे कल दो रोटीयाँ खानी होंगी।

பாரதி
20-10-2010, 07:00 AM
COMPARISION OF ADJECTIVESபெயர் உரிச்சொற்களின் ஒப்புமைविशेषणों की तुलना


ஆங்கில மொழியில் Comparision of Adjective-களுக்காக தனி உருவ அமைப்புகள் உண்டு.

எடுத்துக்காட்டுகள்:
Good – Better – Best
Long – longer – Longest

இவைகளை முறையே Positive, Comparative, Superlative degrees என்று சொல்வது வழக்கம். இப்படிப்பட்ட உருவ அமைப்புகள் இந்திய மொழிகளில் பொதுவாக இல்லை.

Adjective-னுடைய அடிப்படை உருவம் positive degree ஆகவும், Adjective - க்கு முன்னால் ”से” சேர்த்து Comparative degree ஆகவும், அதற்கு முன்னால் “ सब से “ சேர்த்து Superlative degree ஆகவும் பயன்படுத்துகிறோம்.

எடுத்துக்காட்டுகள்:
1. रम बडा लडका है । [Positive]
2. रम रहीम से बडा लडका है । [Comparative]
3. रम सब से बडा लडका है । [Superlative]

குறிப்பு:
இதைத்தவிர சமஸ்கிருத மொழியின் அடிப்படையில் Adjective-வோடு “तर, तम” ஆகிய suffix-களையும் சேர்த்து Comparision of Adjectives உருவாக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டுகள்:
प्रिय - Affexanate
प्रियतर - More affexanate
प्रियतम - Most affexanate

கீதம்
20-10-2010, 08:33 AM
பலதரப்பட்ட சூழலில் உபயோகப்படுத்தப்படும் இலக்கணங்களை மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் விளக்கி கற்பிக்கிறீர்கள். நன்றி பாரதி அவர்களே!

பாரதி
20-10-2010, 03:42 PM
உங்கள் பின்னூட்டம் ஊக்கத்தைத் தருகிறது. மிக்க நன்றி.

இன்னும் 12 அல்லது 13 பாடங்களே உள்ளன. நேரம் கிடைக்கும் போது தட்டச்சி பதிவு செய்து விட்டால் இந்தத்திரியின் நோக்கம் நிறைவடைந்து விடும்.

பாரதி
21-10-2010, 06:51 AM
PRESENT PARTICIPLEநிகழ்கால பெயரெச்சம்वर्तमानकालिक क्रंदत


ஆங்கிலத்தில் Present Participle வினைச்சொல்லின் அடிப்படை உருவத்தோடு ‘ing’ சேர்க்கப்பட்டு உருவாக்கப்படுவதை அறிவோம்.

எடுத்துக்காட்டுகள்:
Sleep – Sleeping
Run – Running

இவைகள் ஆங்கிலத்தைப் பொறுத்த மட்டில் தொடர்காலங்களின் (Continuous Tense)
முக்கிய வினைச்சொற்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதைத்தவிர Adjectiveகளாகவும், Adverbகளாகவும், Nounகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

எடுத்துக்காட்டுகள்:
He is sleeping (Main verb).
Sleeping late in the morning is bad for health (Noun)
He fell from the running train (Adjective)
He came running (Adverb)

ஹிந்தியைப் பொறுத்த மட்டில் நிகழ்காலப் பெயரெச்சம் Adjective ஆகவும் Adverb ஆகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நிகழ்கால வினைச்சொல் உருவத்தோடு “हुआ” சேர்ப்பதன் மூலம் அடிப்படை நிகழ்காலப் பெயரெச்சம் உருவாகிறது. இது ‘आ, ए, ई ‘ விதிக்கு உட்பட்டது.
எடுத்துக்காட்டுகள்:
दौड
- दौडता हुआ
- दौडते हुए
- दौडती हुई

நிகழ்காலப் பெயரெச்சங்களை Adjective களாக பயன்படுத்தும் முறைகள்:
दौडता हुआलडका
दौडते हुए लडके
दौडती हुई लडकियाँ

दौडता हुआलडका खाता है ।
दौडते हुए लडके खाते हैं ।
दौडती हुई लडकियाँ खाती हैं ।

दौडते हुए लडके ने खाया ।
दौडते हुए लडकों ने खाया ।
दौडती हुई लडकी ने खाया ।
दौडती हुई लडकियाँ ने खाया ।

राम दौडते हुए लडके को देखता है ।
राम दौडती हुई लडकी को देखता है ।
राम दौडते हुए लडकों को देखता है ।
राम दौडती हुई लडकियाँ को देखता है ।

राम ने लडके को दौडते हुए देखा ।
राम ने लडकों को दौडते हुए देखा ।
राम ने लडकी को दौडते हुए देखा ।
राम ने लडकियों को दौडते हुए देखा ।
கடைசி நான்கு வாக்கியங்களின் விளக்கம் பின்னர் தரப்படும்.

நிகழ்காலப்பெயரெச்சங்களை Adverbகளாக பயன்படுத்தும் முறைகள்:
राम दौडता हुआ खाता है । ராமன் ஓடிக்கொண்டே சாப்பிடுகிறான்.
सीता दौडती हुई खाती है । சீதா ஓடிக்கொண்டே சாப்பிடுகிறாள்.
राम और भरत दौडते हुए खाते हैं । ராமும் பரத்தும் ஓடிக்கொண்டே சாப்பிடுகிறார்கள்.
सीता और कमला दौडती हुई खाती हैं । சீதாவும் கமலாவும் ஓடிக்கொண்டே சாப்பிடுகிறார்கள்.

இந்த வாக்கியங்களை Past Indefinite Tense-ல் பயன்படுத்த வேண்டுமானால் ‘ने का प्रयोग ’ உண்டு என்பது தெரியும். அப்படி ‘ ने ‘வரும் போது ‘ने’ க்கு பின்னால் வரும் Adverb ஆக பயன்படுத்தப்படும். நிகழ்காலப் பெயரெச்சம் ஆண்பால் பன்மையில்தான் இருக்க வேண்டும் என்பது விதி.

राम ने दौडते हुएखाया ।
सीता ने दौडते हुएखाया ।
राम और भरत ने दौडते हुएखाया ।
सीता और कमला ने दौडते हुएखाया ।
இவ்வித பயன்பாட்டில் ஒரு குறிப்பிட்ட சிக்கல் எழுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம்.

எடுத்துக்காட்டுகள்:
ராம் ஓடிக்கொண்டே பார்த்தான்.
राम ने दौडते हुए देखा ।
ராம் ஓடிக்கொண்டிருக்கிற ரவியைப் பார்த்தான்.
राम ने दौडते हुए रवि को देखा ।

மேற்கூறியவாறு எழுதும் போது ‘दौडते हुए ‘ என்ற நிகழ்காலப் பெயரெச்சம் Subject – ஆகிய ராமைக் குறிக்கிறதா (அதாவது Adverbial use ஆக) அல்லது Object ஆகிய ரவியைக்குறிக்கிறதா (அதாவது Adjectivial use ஆக) என்ற சந்தேகம் எழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே இவ்விதமான சந்தேகம் எழாமல் இருப்பதற்கு கீழ்க்கண்ட முறையில்தான் எழுதுவதைக் கைக்கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டுகள்:
ராம் ஓடிக்கொண்டே ரவியைப் பார்த்தான்.
राम ने दौडते हुए रवि को देखा ।
ராம் ஓடிக்கொண்டிருக்கிற ரவியைப் பார்த்தான்.
राम ने रवि को दौडते हुए देखा ।

இதன் மூலம் ने का प्रयोग க்குப் பின்னால் நிகழ்காலப் பெயரெச்சம் ஆண்பால் பன்மை உருவில் வந்தால் அது Subject-ஐத்தான் சார்ந்த்து என்ற மரபை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

குறிப்பு:
राम ने , दौडते हुए रवि को देखा ।
ராம் ஓடிக்கொண்டிருக்கிற ரவியைப் பார்த்தான் – இதுவும் சரி.
ஏனெனில் ‘,’ புள்ளியைப் பயன்படுத்துவதால் இதுவும் சரி.

பாரதி
23-10-2010, 07:50 AM
PAST PARTICIPLEஇறந்த கால பெயரெச்சம்


ஒரு வினைச்சொல்லின் இறந்த கால ஆண்பால் ஒருமை உருவத்துடன் ‘हुआ’ என்பதை சேர்த்தால் அது இறந்தகால பெயரெச்ச உருவமாகும்.

गया हुआ – சென்ற – Gone
देखा हुआ – பார்த்த – Seen

இந்த பெயரெச்ச உருவம் ஆண்பால் ஒருமையாகும். இதை Adjective ஆகத்தான் பயன்படுத்துகிறோம். எனவே இது அதற்கு பின்னால் வரும் பெயர்ச்சொல்லின் எண்ணுக்கும் பாலுக்கும் ஏற்ப ‘आ, ए, ई ‘ விதிப்படி மாறுபாடு அடையும்.

देखा हुआ चित्र
देखी हुई दसवीर
देखे हुए चित्र
देखी हुई दसवीरें
गया हुआ लडका
गयी हुई लडकी
गये हुए लडके
गयी हुई लडकियाँ

Transitive verb ஆக இருக்கும் போது இந்த இறந்த கால பெயரெச்சம் ‘passive form’-ல் இருப்பதை கவனிக்கவும். அதனால்தான் இதற்கு முன்னால் ஒரு பெயரெச்சம் அல்லது பிரதிபெயர்ச்சொல் வந்தால் அது ஆறாம் வேற்றுமை உருபு நிலையில்தான் இருக்க வேண்டும்.

मेरा खरीदा हुआ चित्र
मेरी खरीदी हुई दस्वीर

சில வேளைகளில் हुआ என்பதை விட்டு விட்டு பயன்படுத்துவதும் உண்டு.
देखा लडका – பார்க்கப்பட்ட பையன்.

பாரதி
24-10-2010, 10:32 AM
இரட்டிக்கப்பட்ட நிகழ்காலப் பெயரெச்சம்
वर्तमानकालिक क्र्दनत की दिवरुक्तिநிகழ்கால பெயரெச்சத்தின் பன்மை உருவத்தில் ‘हुए’ என்பதை நீக்கி விட்டு மீதியுள்ள முக்கிய வினைச்சொல்லை இருமுறை உச்சரிப்பதன் மூலம் இரட்டிக்கப்பட்ட நிகழ்காலப் பெயரெச்சம் உருவாக்கப்படுகிறது.

நிகழ்காலப்பெயரெச்சம் - இரட்டிக்கப்பட்ட நிகழ்காலப் பெயரெச்சம்
देखते हुए - देखते देखते
चलते हुए - चलते चलते

இந்த இரட்டிக்கப்பட்ட நிகழ்கால பெயரெச்சத்திற்கு மூன்று அர்த்தங்கள் உண்டு.
देखते देखते
1-பார்த்து பார்த்து
2-பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே
3-பார்ப்பதற்குள்

இது வாக்கியங்களில் இரு வகையாக பயன்படுத்தப்படுகிறது.
1. இரட்டிக்கப்பட்ட நிகழ்கால பெயரெச்சத்தினால் ஏற்படுகின்ற செயலுக்கும் வாக்கியத்தின் verb-னால் ஏற்படுகின்ற செயலுக்கும் உரியவராக அந்த வாக்கியத்தின் எழுவாயே அமைந்திருப்பது.
पढते पढते मैं थक गया ।
படித்து படித்து நான் சோர்ந்து போனேன்.

இந்த உதாரணத்தில் படிக்கின்ற செயலை செய்கிறவரும் சோர்ந்து போனவரும் ஒருவரே.

2. இரட்டிக்கப்பட்ட நிகழ்கால பெயரெச்சத்திற்கு உரியவராக ஒருவரும் வாக்கியத்தின் verbக்கு உரிய எழுவாய் வேறொருவராக இருக்கும் போது இரட்டிக்கப்பட்ட நிகழ்கால பெயரெச்சத்திற்கு முன்னால் ‘ के ‘ என்ற ஆறாம் வேற்றுமை உருபு வர வேண்டும். அவ்வாறு வராமல் தமிழ்மொழி போல் எழுதுவது தவறு.
मेरे देखते चोर भाग गया ।
நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதே திருடன் ஓடிவிட்டான்.

குறிப்பு:
’நான் ‘ என்று எழுதிய போதிலும் ஹிந்தியில் मेरे என்ற ஆறாம் வேற்றுமை நிலையிலிருப்பதைக் காண்க.

நாஞ்சில் த.க.ஜெய்
03-12-2010, 03:13 PM
நானும் கலந்து கொள்கிறேன் உங்களோடு .நானும் பல புத்தகங்கள் வாங்கி ஹிந்தி படிக்க முயற்சி செய்தேன் ஆனால் அதன் இலக்கணம் எவ்விடத்தில் வார்த்தைகளை பயன்படுத்தவேண்டும் என்று தெரியாததால் அதனை இடையிலே விட்டு விட்டேன் .இந்த திரியை கண்டதும் மிகவும் மகிழ்ந்தேன் . தொடருங்கள் இதனை
உங்கள் மாணவன்
த.க.ஜெய்

ஆன்டனி ஜானி
03-12-2010, 05:04 PM
ஹிந்தி படிக்கும் முறையை விளக்கமாக தந்து எழுதும் திறமையை
எங்களுக்குள் வளர்த்ததுக்கு நன்றி நண்பரே ,,,,,,,,

நானும் உங்களுடன் முயற்சிக்கிறேன் .........

வாழ்த்துக்கள் !!!!!

பாரதி
03-04-2011, 05:37 PM
ஊக்கம் தரும் சொற்களுக்கு நன்றிகள் ஜெய், ஜானி.

பாரதி
03-04-2011, 05:41 PM
दे, लग - ன் உபயோகம்

दे, लग ஆகிய இரண்டும் தங்களுக்கு முன்னால் ஒரு " ना " விகுதிச்சொல்லின் பன்மை உருவத்தோடு உபயோகப்படுத்தப்படும் போது முறையே அனுமதி கொடுத்தல், தொடங்குதல் என்ற பொருளைத்தருகின்றன. இந்த இரு வினைகளுக்கும் முன்னால் வருகின்ற " ने " விகுதிச்சொல் உருவமாற்றம் அடையாது. இந்த இரு வினைச்சொற்களும்தான் person-க்கும் number-க்கும் gender-க்கும் காலத்திற்கும் ஏற்ற நியமங்களின்படி மாறுதல்களை ஏற்கும்.

இவை இரண்டில் " दे " என்பது Transitive verb என்ற காரணத்தால் அதற்கு " ने का प्रयोग " உண்டு. நாம் ஏற்கனவே அறிந்த படி "लग " என்பது Transitive verb ஆக இருந்தாலும் இங்கும் " ने का प्रयोग " விதிக்கு விலக்கு என்பதை மறத்தலாகாது.

எடுத்துக்காட்டுகள் :
दे
मुझे जाने दो । - முஜே ஜானே தோ - கட்டளை வினை
राम मुझे जाने देता है । - ராம் முஜே ஜானே தேத்தா ஹை - நிகழ்காலம்
राम मुझे खाने देगा । - ராம் முஜே கானே தேகா - எதிர்காலம்
राम ने मुझे खाने दिया । - ராம்னே முஜே கானே தியா - முற்றுப்பெறாத இறந்தகாலம்
राम ने मुझे एक फल खाने दिया । - ராம்னே முஜே ஏக் ஃபல் கானே தியா - முற்றுப்பெறாத இறந்தகாலம்
राम ने मुझे दो फल खाने दिये । - ராம்னே முஜே தோ ஃபல் கானே தியே - முற்றுப்பெறாத இறந்தகாலம்
राम ने मुझे एक फल खाने दिया होगा । - ராம்னே முஜே ஏக் ஃபல் கானே தியா ஹோகா - சந்தேகத்தைக்காட்டும் இறந்த காலம்
राम ने मुझे एक रोटी खाने दी । ராம்னே முஜே ஏக் ரோட்டி கானே தீ - முற்றுப்பெறாத இறந்தகாலம்


लग
राम जंगल जाने लगा । - ராம் ஜங்கள் ஜானே லகா - முற்றுப்பெறாத இறந்தகாலம்
राम जंगल जाने लगता है । - ராம் ஜங்கள் ஜானே லக்தா ஹை - நிகழ்காலம்
राम जंगल जाने लगेगा । - ராம் ஜங்கள் ஜானே லகேகா - எதிர்காலம்
राम एक फल खाने लगता है । - ராம் ஏக் ஃபல் கானே லக்தா ஹை
राम दो रोटियाँ खाने लगता है । - ராம் தோ ரோட்டீயா(ங்) கானே லக்தா ஹை

குறிப்பு:
" लग " - க்கு முன்னால் வரும் " न " விகுதிச்சொல் ஆண்பால் பன்மையில் இருப்பதை கவனிக்கவும்.

பாரதி
04-04-2011, 10:00 AM
कि -ன் உபயோகம்

कि-க்கு “என்று” அல்லது “that" என்பது பொருள். ஒரு வாக்கியத்தில் இந்த “कि" வரும் போது அந்த வாக்கிய அமைப்பு ஆங்கில வாக்கிய அமைப்பைப் போல அமைகிறது. எனவே தமிழில் மொழி பெயர்க்கும் போது “कि" க்குப்பின்னால் இருக்கும் வாக்கியத்தை முதலிலும், முன்னால் இருக்கும் வாக்கியத்தை பின்னரும் மொழி பெயர்க்க வேண்டும்.

எடுத்துக்காட்டு:
Ram told that he would come next day.
राम ने कहा कि मैं कल जाऊँगा ।
நான் நாளை வருவேன் என்று ராம் சொன்னான்.

குறிப்பு:
ஆங்கில மொழியில் indirect speech வரும் போது சொல்லப்பட்ட வாக்கியத்தின் அமைப்பு மாறுபாடு அடையும். எனவேதான் Ram said, " I will come tomorrow" என்பது மேலே குறிப்பிட்டதைப் போல மாறுபாடு அடைந்திருக்கிறது. ஆனால் இந்திய மொழிகளில் இத்தகைய மாறுபாடு தேவையில்லை.

உபயோகம்:
1. "अथवा" அல்லது "या" என்ற பொருளிலும் இந்த குறில் कि உபயோகப்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு:
आप मेरे साथ आते हैं या नहीं ?
आप मेरे साथ आते हैं कि नहीं ?

2. ஒரு காரணத்தை வலியுறுத்துவதற்காகவும் குறில் कि உபயோகப்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு:
मुझे बडा आनंद है कि तुम मेरे घर आये ।

பாரதி
05-04-2011, 04:06 AM
जाना - पडना வின் உபயோகம் (கூட்டுவினை அமைப்பில்)

கூட்டு வினைகள்:
இவை வாக்கியங்களில் ஒரு அழுத்தத்தைக் குறிப்பதற்காக உபயோகப்படுத்தப்படுகின்றன. இவைகளில் “जाना" வும் “पडना"வும் intransitive verb-களுக்குப் பினால இணைக்கப்பட்டு கூட்டுவினைகள் உருவாகின்றன. எனவே இந்த கூட்டு வினைகளும் intransitive ஆகத்தான் கருதப்பட வேண்டும்.

கூட்டு வினைகளில் முன்னால் வருகின்ற முக்கிய வினைச்சொல் எப்போதும் அடிப்படை உருவத்தில்தான் இருக்க வேண்டும். பின்னால் இணைக்கப்படுகின்ற “जाना"வும் “पडना"வும்தான் subject-னுடைய எண்ணுக்கும், பாலுக்கும், person-க்கும் மற்றும் காலத்திற்கும் ஏற்ப மாற்றமடையும்.

எடுத்துக்காட்டுகள்:
पुलिस को देखकर चोर भाग गया ।
दीपा को बच्छा रो पडता है ।
नळ महाराज देखे बिना दमयंदी रो पडी ।

விதிவிலக்கு:
இந்த அமைப்பிற்கு “चल"மட்டும் விதிவிலக்காகும்.
जा - வுக்கு முன்னால் வருகின்ற “चल" அடிப்படை உருவத்தில் இல்லாமல் चला, चले, चली என்று அமையும்.

எடுத்துக்காட்டுகள்:
राम चला जाता है।
सीता चली गयी ।
लडके चले जाएँगे ।

पडக்கு முன்னால் चल அடிப்படை உருவத்தில்தான் இருக்கும்.

எடுத்துக்காட்டு:
वह सहसा चल पडा ।

இப்படிப்பட்ட உபயோகங்கள் அரிதாக வருவதுண்டு.

sakthim
05-04-2011, 10:03 AM
நமக்காக இல்லாவிட்டாலும் நம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கவாவது ஹிந்தி படித்தே ஆகவேண்டிய சூழ்நிலை. எழுத்துக்களை மட்டுமே ஓரளவிற்கு எழுத படிக்க தெரிந்த எனக்கு நிச்சயம் தங்களுடைய (எழுத்துக்களை உபயோகிக்கும் முறையும், இலக்கணமும்) திரி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

M.Jagadeesan
05-04-2011, 11:47 AM
இந்தி வாக்கியங்களை எப்படி உச்சரிப்பது என்பதைத் தமிழில் எழுதிக்காட்டினால் என்னைப்போன்ற இந்தி தெரியாதவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

பாரதி
05-04-2011, 12:50 PM
பின்னூட்டத்திற்கு நன்றி சக்தி.

ஜெகதீசன் ஐயா அவர்களுக்கு,
இத்திரியின் முதல் பதிவில் கொடுத்த சுட்டிகளை மீண்டும் இங்கே தருகிறேன்.

தமிழ்மன்றத்தில் ஹிந்தியை கற்றுக்கொடுப்பதற்காக நண்பர் லியோ மோகனால் ஆரம்பிக்கப்பட்ட திரி : (முழுமை பெறவில்லை)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10370 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10370)

தமிழ்மன்றத்தில் சமஸ்கிருதத்தை கற்றுக்கொடுப்பதற்காக நண்பர் லியோ மோகனால் ஆரம்பிக்கப்பட்ட திரி : (ஹிந்தி எழுத்துகளையும் உச்சரிப்பையும் காண உதவும்)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10137 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10137)

ஹிந்தியில் உச்சரிப்பது எப்படி என்பதை தமிழில் எழுதிக்காட்டுவது கடினமான வேலை. காரணம் தமிழைப்போலன்றி ஹிந்தியில் உச்சரித்தல் வேறுபட்டது. எடுத்துக்காட்டாக தமிழில் “க” என்பது ஒரு எழுத்து மட்டுமே. ஆனால் ஹிந்தியில் ka, kha, ga, gha என பல வகையாக உச்சரிக்கப்படுகிறது. இதே போன்றே ச, ட, த, ப போன்ற எழுத்துக்களும் பல வகையாக உச்சரிக்கப்படுகின்றன. இதன் பொருட்டு தமிழில் தட்டச்சி விளக்குவது என்பது சற்று கடினம்.

உங்கள் வேண்டுகோளை இப்போதைக்கு ஏற்க முடியாமைக்கு வருந்துகிறேன்.

பாரதி
05-04-2011, 08:14 PM
दे, ले, डाल - ன் உபயோகம் (கூட்டு வினையில்)


दे, ले, डाल ஆகிய மூன்றும் Transitive verb - களாகும். இவைகள் பொதுவாக Transitive முக்கிய வினைச்சொற்களோடு இணைந்து Transitive கூட்டு வினைகளை உருவாக்குகின்றன. இம்மூன்றுக்கும் முன்னால் வருகின்ற முக்கிய வினைச்சொல் எப்போதும் அடிப்படை உருவத்தில்தான் இருக்க வேண்டும்.

இவைகளில் देना என்பதை ஒரு வாக்கியத்தின் எழுவாயிடமிருந்து ஒரு பொருள் பிரியப்படுகின்ற நேரத்திலும் लेना என்பது அந்த எழுவாயினால அடையப்படுகின்ற நேரத்திலும் உபயோகப்படுத்தப்படுகின்றன.

எடுத்துக்காட்டுகள்:
मैं अपनी कलम राम को दे दूँगा ।
मैंने अपनी कलम राम को दे दी ।
मैंने राम से एक कलम ले ली ।
मेरी पतनी अपनी पाकट से दस रुपये ले लेती है ।

"डालना"ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது. लेना மற்றும் देना உபயோகப்படுத்தப்பட முடியாத இடங்களில் डालना உபயோகப்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டுகள்:
राम ने सामप को मार डाला ।
बच्छा किलौने को थोड डालता है ।
बच्छे किलौने को थोड डालेंगे ।

கீதம்
05-04-2011, 10:46 PM
எளிமையான விளக்கங்களுடன் இனிதே தொடர்வது குறித்து மகிழ்ச்சி பாரதி அவர்களே. இத்திரியால் பலரும் பயனடைவர் என்பதில் ஐயமில்லை. உங்களுக்கு என் உளங்கனிந்த நன்றி.

பாரதி
06-04-2011, 05:01 PM
பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றி கீதம் அவர்களே.
--------------------------------------------------------


वाच्य - வினை - VOICE

कर्तृवाच्य - Active Voice - செய்வினை
कर्म वाच्य - Passive Voice - செயப்பாட்டு வினை


Passive voice அமைப்பதற்கு அந்த வாக்கியங்களில் சில மாற்றங்களை செய்வது அவசியம். அந்த மாற்றங்களை கீழே காணலாம்.

ராமன் கிருஷ்ணனைப் பார்த்தான் - Active voice
ராமனால் கிருஷ்ணன் பார்க்கப்பட்டான் - Passive voice

இதிலிருந்து கீழ்க்கண்ட விபரங்கள் தெரியவருகின்றன.
1. Active voice-ல் முதலாம் வேற்றுமையிலிருக்கும் Subject, Passive voice-ல் மூன்றாம் நிலையை அடைகிறது.
2. Active voice வாக்கியத்தில் இரண்டாம் வேற்றுமை உருபு நிலையிலிருந்த object, passive voice-ல் வாக்கியத்தில் முதலாம் வேற்றுமை நிலைக்கு
மாறுகிறது.
3. வினைச்சொல்லின் உருவத்தில் மாற்றம் ஏற்படுகிறது.
ஹிந்தி மொழிக்கும் இதே விதிகள் பொருந்தும்.

Verb-ன் Passive உருவத்தை அமைத்தல் :
முக்கிய verb-ன் ஆண்பால் ஒருமை இறந்த கால உருவத்தை அமைத்துக்கொண்டு அதனோடு जाना என்ற கூட்டு வினைச்சொல்லை இணைக்க
வேண்டும். அப்போது Passive voice-ன் உருவம் கீழ்க்கண்டவாறு அமையும்.

खाया जाना = சாப்பிடப்பட
लिखना जाना = எழுதப்பட
पढा जाना = படிக்கப்பட

Passive verb- ன் உருவத்தில் உள்ள முக்கிய வினைச்சொல் வாக்கியத்தில் Object - னுடைய எண்ணுக்கும் பாலுக்கும் ஏற்ப மாறுபாடு அடையும்.
जाना என்ற கூட்டு வினைச்சொல் Object -னுடைய Number, gender மற்றும் tense -க்கு ஏற்ப மாறுபாடு அடையும்.

நிகழ்காலம் :
1. मैं राम को देखता हूँ । நான் ராமனைப் பார்க்கிறேன்.
मुझसे राम देखा जाता है । என்னால் ராம் பார்க்கப்படுகிறான்.
2. मैं सीता को देखता हूँ । நான் சீதாவைப் பார்க்கிறேன்.
मुझसे सीता देखी जाती है । என்னால் சீதை பார்க்கப்படுகிறாள்.
3. मैं राम और भरत को देखता हूँ । நான் ராமனையும் பரதனையும் பார்க்கிறேன்.
मुझसे राम और भरत देखे जाते हैं । என்னால் ராமனும் பரதனும் பார்க்கப்படுகிறார்கள்.
4. मैं सीता और कमला को देखता हूँ । நான் சீதாவையும் கமலாவையும் பார்க்கிறேன்.
मुझसे सीता और कमला देखी जाती हैं । என்னால் சீதையும் கமலாவும் பார்க்கப்படுகிறார்கள்.

எதிர்காலம் :
1. मैं राम को देखूँगा । நான் ராமனைப் பார்ப்பேன்.
मुझसे राम देखा जाएगा । என்னால் ராம் பார்க்கப்படுவான்.
2. मैं सीता को देखूँगा । நான் சீதாவைப் பார்ப்பேன்.
मुझसे सीता देखी जाएगी । என்னால் சீதை பார்க்கப்படுவாள்.
3. मैं राम और भरत को देखूँगा । நான் ராமனையும் பரதனையும் பார்ப்பேன்.
मुझसे राम और भरत देखे जाएँगे । என்னால் ராமனும் பரதனும் பார்க்கப்படுவார்கள்.
4. मैं सीता और कमला को देखूँगा । நான் சீதாவையும் கமலாவையும் பார்ப்பேன்.
मुझसे सीता और कमला देखी जाएँगी । என்னால் சீதையும் கமலாவும் பார்க்கப்படுவார்கள்.

இறந்தகாலம்:
1. मैं राम को देखा । நான் ராமனைப் பார்த்தேன்.
मुझसे राम देखा गया । என்னால் ராம் பார்க்கப்பட்டான்.
2. मैं सीता को देखा । நான் சீதாவைப் பார்த்தேன்.
मुझसे सीता देखी गयी । என்னால் சீதை பார்க்கப்பட்டாள்.
3. मैं राम और भरत को देखा । நான் ராமனையும் பரதனையும் பார்த்தேன்.
मुझसे राम और भरत देखे गये । என்னால் ராமனும் பரதனும் பார்க்கப்பட்டார்கள்.
4. मैं सीता और कमला को देखा । நான் சீதாவையும் கமலாவையும் பார்த்தேன்.
मुझसे सीता और कमला देखी गयीं । என்னால் சீதையும் கமலாவும் பார்க்கப்பட்டார்கள்.

பாரதி
07-04-2011, 01:27 PM
जो - வின் உபயோகம்


जो எனும் சொல் அடிப்படையில் ஒரு Pronoun ஆகும். இதை தொடர்பைக் குறிப்பதற்காக உபயோகிப்பதால் Relative Pronoun [ सबंधं वाचक सर्वनाम ] என்று கூறுகிறோம்.

இந்த जो அல்லது இதனுடைய ஏதாவது ஒரு உருவத்தை உபயோகிக்கும் வாக்கியம் இரு பகுதிகளாக அமையும். ஒரு பகுதியில் எழுவாயாக जो அல்லது அதன் ஏதாவது ஒரு உருவமும் மற்றொரு பகுதியில் ஏதாவது ஒரு Pronoun அல்லது அதனுடைய ஏதாவது உரிய வருவமோ அமைய வேண்டும்.

எடுத்துக்காட்டு:

जो वहाँ बैठा (हुआ) है, उसको एक रुपया दो ।
எவன் அங்கே உட்கார்ந்திருக்கிறானோ அவனுக்கு ஒரு ரூபாய் கொடு.

மேலே குறிப்பிட்ட தமிழ் வாக்கியம் “அங்கே உட்கார்ந்திருக்கிறவனுக்கு ஒரு ரூபாய் கொடு “ என்றும் அமையலாம். இவ்வாறு அமையும் போது जो வை பயன்படுத்த வேண்டும் என்று தோன்ற வேண்டும்.

தமிழில் உள்ளது போல் அமைக்க வேண்டுமென்றால் நிகழ்கால பெயரெச்சத்தை உபயோகிக்க வேண்டும்.
वहाँ बैठते हुए आदमी को एक रुपया दो ।

இந்த நிகழ்கால பெயரெச்சத்தை जो வுக்கு பதிலாக உபயோகிப்பதில் சில எல்லைகள் இருக்கின்றன. जो வருகின்ற பகுதியில் அதை சுட்டுரிப்பெயர்ச்சொல் [demonstrative adjective]- லாகக் கொண்டு ஒரு noun வந்திருந்தால் இந்த உபயோகம் சாத்தியமாகும்.

எடுத்துக்காட்டுகள்:
जो आदमी वहाँ बैठता है, उसको पानी दो ।
वहाँ बैठते हुए आदमी को पानी दो ।
जो वहाँ बैठता है, उसको पानी दो ।

இலக்கண வரம்பிற்குட்பட்டு “ बैठते हुए उसको पानी दो " என்று எழுதலாம். என்றாலும் கூட அது மொழிக்கு அழகூட்டாது.

நாஞ்சில் த.க.ஜெய்
07-04-2011, 05:35 PM
அவசியம் எனக்கு உதவும் இந்த அருமையான பதிவு மீண்டும் தொடர்வதில் பெரு மகிழ்ச்சி ...தொடருங்கள் நண்பரே ...

பாரதி
08-04-2011, 12:57 PM
ஊக்கத்திற்கு நன்றி ஜெய்.

---------------------------------------------------------------------


के बाद, के पहले ஆகிய post positionகளின் உபயோகம்.


के बाद, के पहले இரண்டும் preposition of time ஆகும். இவற்றிற்கு முன்னால் ஒரு பெயர்ச்சொல்லோ அல்லது ஒரு பிரதி பெயர்ச்சொல்லோ வரலாம். வேற்றுமை உருபினால் ஏற்படும் பாதிப்பைப் போலவே இந்த postposition-களிலும் பாதிப்பு ஏற்படுகிறது.

எடுத்துக்காட்டுகள்:
लडका + के बाद = लडके के बाद
मैं + के बाद = मेरे बाद

இதைத்தவிர ஒரு தொழிற்பெயர் அல்லது ना விகுதிச்சொல் இவற்றிற்கு முன்னால் வரலாம். அதுவும் கூட இவற்றினால் பாதிக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டுகள்:
जाना + के बाद = जाने के बाद (வருகைக்குப்பின்)
जाना + के पहले = जाने के पहले (வருகைக்கு முன்)

के बाद, के पहले ஆகிய இரண்டுக்கும் முன்னால் ना விகுதிச்சொல் வரும் போது இரு வகையான வாக்கிய அமைப்புகள் ஏற்படுகின்றன.

எடுத்துக்காட்டு:
खाने के पहले मैं नहाता हूँ ।
சாப்பிடுவதற்கு முன்னால் நான் குளிக்கிறேன்.

இந்த வாக்கிய அமைப்பில் ना விகுதிச்சொல்லால் குறியிடப்படுகின்ற செயலை செய்கிறவரும், முக்கிய வினைச்சொல்லால் குறியிடப்படுகின்ற நபரும் ஒருவரே என்பதை கவனிக்கவும்.

राम के आने के पहले भरत चला गया ।
ராமனுடைய வருகைக்கு முன் பரதன் போய் விட்டான்.

மேலே குறிப்பிட்ட வாக்கியத்தில் இருவேறு நபர்கள் இருக்கின்ற காரணத்தினால் ना விகுதிச்சொல்லோடு சம்பந்தப்பட்ட நபர் ஆறாம் வேற்றுமை நிலையில் இருக்கிறார் என்பதை கவனிக்கவும்.

மேலும் இங்கு ஆறாம் வேற்றுமை உருபான के ( ஆண்பால் பன்மை ) மட்டுமே வருமானால் का, की ஒரு போதும் வராது. இந்த வேற்றுமை உருபு இல்லாமல் தமிழ் போல் எழுதுவது தவறாகும்.

எடுத்துக்காட்டுகள்:
ராமன் வருவதற்கு முன் பரதன் சென்று விட்டான்.
राम आने के पहले भरत चला गया । = தவறு
राम के आने के पहले भरत चला गया । = சரி

பாரதி
09-04-2011, 02:19 AM
जितना, जैसा, जब, जहाँ, जो ஆகியவற்றின் உபயோகம்.

जितना, जैसा, जब, जहाँ, जो ஆகியன relative pronoun களாகும். இவை தங்கள் தங்கள் இணைச்சொற்களுடன் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகின்றன.
அவை பின் வருமாறு :

जब - तब
जितना - उतना
जहाँ - वहाँ
जैसा - वैसा
जो (अगर) - तो

மேற்கூறியவற்றில் जैसा என்பது மட்டும் adjective ஆக உபயோகப்படுத்தப்படும் போது आ, ए, ई விதிக்கு உட்பட்டு மாறுபாடு அடையும். அதைப் போலவே जितना என்பதும் adjective ஆக உபயோகப்படுத்தப்பட முடியும். அப்போது அது எண்ணிக்கையை குறிப்பதாக அமையும்.

மேலே கூறிய வார்த்தை சேர்க்கைகளில்லாமல் இவற்றை வைத்து வாக்கியங்களை அமைக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாரதி
09-04-2011, 08:25 AM
सिवा, बिना, अलावा இவைகளின் உபயோகம்


सिवा என்பதற்கு ‘தவிர’ [except] என்றும் , अलावा என்பதற்கு ‘தவிரவும்’ என்றும் பொருள்.

ஆங்கிலத்தில் இவற்றை கையாளுகின்ற முறையிலேயே ஹிந்தியிலும் கையாள வேண்டும்.

[B]எடுத்துக்காட்டுகள்:
आपके सिवा कोई और यह काम नहीं कर सकता ।
आपके अलावा आपके घर में कौन - कौन हैं ?

இந்த இரண்டு வார்த்தைகளையும் இடம் மாற்றியும் உபயோகிக்கலாம்.

1. सिवा आपके कोई और यह काम नहीं कर सकता ।
2. अलावा आपके, आपके घर मैं कौन - कौन हैं ?

के बिना :
பெயர்ச்சொல்லோடு வரும் போது के बिना (இல்லாமல் ) என்பது முழுமையாக வரும்.

எடுத்துக்காட்டுகள்:
शक्कर के बिना मैं काफी नहीं पीता हूँ । அல்லது
बिना शक्कर के मैं काफी नहीं पीता हूँ ।

வினைச்சொல்லோடு வரும் போது வினைச்சொல் ஆண்பால் இறந்தகால பன்மை உருவில் இருக்க வேண்டும். के என்ற உருபு மறைந்து விடும்.

எடுத்துக்காட்டுகள் :
काफी पिये बिना पिताजी चले गये ।
அல்லது
बिना काफी पिये पिताजी चले गये ।

பாரதி
09-04-2011, 08:38 AM
இத்துடன் இத்தொடர் நிறைவு பெறுகிறது. இந்தத்திரி ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக ஆகி விட்டது என்பதை எண்ணும் போது வியப்பும், இவ்வளவு காலம் ஆகிவிட்டதே என்ற வெட்கமும், இப்போதாவது நோக்கம் நிறைவு பெற்றதே என்ற மகிழ்ச்சியும் ஒருங்கே வருகின்றன.

இந்த இலக்கணத்தொடர் முழுமையானது என்று யாரும் எண்ணி விட வேண்டாம்.
பாடங்களை நடத்தும் போது ஹிந்தி ஆசிரியர் கூறியதை குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தேன். அக்குறிப்பேடு ஒரு வேளை அழிந்தாலும் கூட மன்றத்தில் தட்டச்சி பதிவிட்டால் நிலைத்து இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது.

கணினியில் ஹிந்தி மொழியில் தட்டச்சுவதை அறிந்து கொள்ள முடிந்ததின் மூலமும், பாடங்களை தட்டச்சி நிறைவு செய்து விட்டேன் என்பதிலும், தனிப்பட்ட வகையிலும் எனக்கும் உவகையே. தமிழ் மொழியைப் போன்றே ஹிந்தியில் தட்டச்சுவதும் பழகினால் எளிதானதே.

இந்த வாய்ப்பினை எனக்களித்த மதிப்பிற்குரிய ஹிந்தி ஆசிரியர் அவர்களுக்கும், இனிய தமிழ்மன்றத்திற்கும், பார்த்த, படித்து பின்னூட்டமிட்டு ஊக்குவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

M.Jagadeesan
09-04-2011, 08:51 AM
என்னால் புரிந்துகொள்ள இயலாவிட்டாலும்,ஒரு தேர்ந்த ஆசிரியரைப் போலத் தாங்கள் பயிற்றுவித்த முறை பாராட்டிற்கு உரியது. நன்றி பாரதி அவர்களே! தமிழ் இலக்கணத்திலும் கட்டுரைகளை எழுத வேண்டுகிறேன்.

கீதம்
09-04-2011, 09:00 AM
பல அலுவல்களுக்கு மத்தியில் இந்தியிலும் தட்டச்சில் தேர்ந்து உங்கள் நேரத்தைச் செலவிட்டு மன்றம் பயன்பெற உழைத்த உங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது பாரதி அவர்களே. உங்கள் எண்ணத்தைச் செயலாக்கியதற்கு நன்றியும் பாராட்டும்.

பாரதி
09-04-2011, 03:23 PM
என்னால் புரிந்துகொள்ள இயலாவிட்டாலும்,ஒரு தேர்ந்த ஆசிரியரைப் போலத் தாங்கள் பயிற்றுவித்த முறை பாராட்டிற்கு உரியது. நன்றி பாரதி அவர்களே! தமிழ் இலக்கணத்திலும் கட்டுரைகளை எழுத வேண்டுகிறேன்.
அன்புள்ள ஐயா,
ஊக்கம் தரும் சொற்களுக்கு மிக்க நன்றி. இதில் நான் பயிற்றுவித்த முறை எதுவும் இல்லை. முற்றிலும் எனது ஆசிரியரின் சொற்களே இங்கே தட்டச்சு செய்யப்பட்டிருக்கின்றன. உங்கள் பாராட்டிற்கு முற்றிலும் உரிமையானவர் எனது ஆசிரியரே.

தமிழ் இலக்கணத்தில் கட்டுரையா...? கவிக்கோ ஞானச்செல்வன் தினமணிக்கதிரில் எழுதிய தமிழ் குறித்த கட்டுரைகளை சேகரிக்கத் தொடங்கி இருக்கிறேன். அதை மன்றத்தில் பதிக்கிறேன்.


பல அலுவல்களுக்கு மத்தியில் இந்தியிலும் தட்டச்சில் தேர்ந்து உங்கள் நேரத்தைச் செலவிட்டு மன்றம் பயன்பெற உழைத்த உங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது பாரதி அவர்களே. உங்கள் எண்ணத்தைச் செயலாக்கியதற்கு நன்றியும் பாராட்டும்.
தொடர்ந்து ஊக்கம் நல்கிய உங்களுக்கும் என் நன்றி.

ravikrishnan
07-04-2012, 09:32 AM
என்ன படித்தாலும்அங்கு நீங்கள் கஷ்டபடுபோதுதான் தண்ணீர்க்கு பாணி என்பிற்கள்,அப்பொதுதான் இலக்கணதோடு பாத் காரெகா! மன்னிக்க உம், நான் பயன்றபாடம்.