PDA

View Full Version : குழந்தைகள்... கோப்பைகள்...



M.Rishan Shareef
01-01-2010, 03:21 PM
குழந்தைகள்... கோப்பைகள்... (http://mrishanshareef.blogspot.com/2010/01/blog-post.html)
(உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை)

அறைகள் தோறும்
தரை முழுதும்
இரைந்துகிடந்தன கோப்பைகள்
ஊர்வன ஜந்தொன்றைப் போல
வயிற்று மேட்டினால்
ஊர்ந்துவந்த குழந்தை
முதலெடுத்த கோப்பையினை
வாயிலிட்டு நக்கிப் பின்னர்
பிடிக்காத பாண்டமெனத் தூக்கியெறிந்தது
கண்ணாடிச் சன்னலில் பட்டுச்
சிதறியன இரண்டும்
குழந்தைக் காப்பாளி வந்தாள்
சபிக்கப்பட்ட அசுத்த வார்த்தைகளை
எஞ்சிய கோப்பைகளில் நிறைத்துக்
குழந்தை முன் நீட்ட
புது மொழியொன்றினைக் கற்றுக்கொண்டது
காப்பரணில் விடப்பட்ட தூய குழந்தை

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

அமரன்
01-01-2010, 09:57 PM
குழந்தைகள் பசுமரம்.

நம் செயல்கள் ஆணிகள்..

ஆறாவது அறிவின் விருத்தியை அப்பட்டமாக்கிய விதத்தில் கவிதை பளிச்சிடுகிறது.

கா.ரமேஷ்
02-01-2010, 03:44 AM
நல்லொதுரு கவிதை தோழரே...

குழந்தைகள் கெட்டிக்காரர்கள் அவர்களை நல்லவழியில் கெட்டிக்காரர்களாக்குவது மிகவும் அவசியம்...

M.Rishan Shareef
13-01-2010, 06:10 AM
அன்பின் அமரன்,

//குழந்தைகள் பசுமரம்.

நம் செயல்கள் ஆணிகள்.. //

நிச்சயமாக நண்பரே. அவர்கள் நம்மிலிருந்துதான் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறார்கள்.

//ஆறாவது அறிவின் விருத்தியை அப்பட்டமாக்கிய விதத்தில் கவிதை பளிச்சிடுகிறது.//

:)
கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef
13-01-2010, 06:13 AM
அன்பின் கா.ரமேஷ்,

//நல்லதொரு கவிதை தோழரே...

குழந்தைகள் கெட்டிக்காரர்கள் அவர்களை நல்லவழியில் கெட்டிக்காரர்களாக்குவது மிகவும் அவசியம்...//

நிச்சயமாக நண்பரே.
கருத்துக்கு நன்றி !

சுகந்தப்ரீதன்
13-01-2010, 08:31 AM
நம் கடமையை மற்றவர்கள் பொறுப்பில் விடும்போது அவர்கள் மட்டும் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்..?!

அவர்களுக்கு தேவை பொருள்.. பொறுப்பல்ல..!! இது இக்கவிதையில் வருபவரை போன்றவர்களுக்குதான்.. எல்லா காப்பாளர்களுக்கும் பொருந்தாது..!!

நல்லதொரு கவிதை ஷெரீப்..!! வாழ்த்துக்கள்..!!

பா.ராஜேஷ்
15-01-2010, 09:42 AM
போட்டியில் வென்றீர்கள் தானே!? நல்ல கவிதை. குழந்தைகளை வளர்ப்பதும் பாதுகாப்பதும் வேறு, பாதுகாப்பவர்கள் வளர்ப்பதில்லை...

M.Rishan Shareef
15-01-2010, 01:47 PM
அன்பின் சுகந்தப்ரீதன்,

//நம் கடமையை மற்றவர்கள் பொறுப்பில் விடும்போது அவர்கள் மட்டும் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்..?!

அவர்களுக்கு தேவை பொருள்.. பொறுப்பல்ல..!! இது இக்கவிதையில் வருபவரை போன்றவர்களுக்குதான்.. எல்லா காப்பாளர்களுக்கும் பொருந்தாது..!!

நல்லதொரு கவிதை ஷெரீப்..!! வாழ்த்துக்கள்..!! //

கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef
15-01-2010, 02:04 PM
அன்பின் பா.ராஜேஷ்,

//போட்டியில் வென்றீர்கள் தானே!?//

இது உரையாடல் கவிதைப் போட்டிக்கு (http://tamil.blogkut.com/uraiyaadal.php).
இதற்கு ஆக்கங்கள் சமர்ப்பிக்க இன்றுதான் இறுதித் தினம் நண்பரே.

//நல்ல கவிதை. குழந்தைகளை வளர்ப்பதும் பாதுகாப்பதும் வேறு, பாதுகாப்பவர்கள் வளர்ப்பதில்லை... //

நிச்சயமாக நண்பரே.
கருத்துக்கு நன்றி !

பாரதி
15-01-2010, 03:27 PM
மேலுமொரு ஜென் கவிதையைப் போல இருக்கிறது நண்பரே...!!

சிவா.ஜி
15-01-2010, 03:41 PM
விஷ வார்த்தைகள் கோப்பையில் கொடுக்கப்பட்டக் குழந்தை...

தான் செய்வதின் தாக்கம் அறியா காப்பக பொறுப்பாளர்...

எதிர்கால தூண்கள் இற்றுப்போவதற்கான செல்களாய் சொல்கள்.

அழகான கவிதை ரிஷான். போட்டியிலும் வெற்றிபெற வாழத்துகள்.

M.Rishan Shareef
20-01-2010, 04:41 AM
அன்பின் பாரதி,

//மேலுமொரு ஜென் கவிதையைப் போல இருக்கிறது நண்பரே...!! //

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef
20-01-2010, 04:44 AM
அன்பின் சிவா.ஜி,

//விஷ வார்த்தைகள் கோப்பையில் கொடுக்கப்பட்டக் குழந்தை...

தான் செய்வதின் தாக்கம் அறியா காப்பக பொறுப்பாளர்...

எதிர்கால தூண்கள் இற்றுப்போவதற்கான செல்களாய் சொல்கள்.

அழகான கவிதை ரிஷான். போட்டியிலும் வெற்றிபெற வாழத்துகள். //

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

இன்பக்கவி
23-01-2010, 02:20 PM
குழந்தைகள் கற்பூரம் போல சட்டேன்று பற்றி கொள்ளும் அறிவாற்றல் படைத்தவர்கள்
சில காப்பகங்களில் நடக்கும் கொடுமை சொல்லி மாளாது..
சிறு வயதில் சில நினைவுகள் மாறாமல் இருக்கும்...
நன்றாக இருக்கு உங்கள் கவிதை வாழ்த்துக்கள்

M.Rishan Shareef
26-01-2010, 01:00 AM
அன்பின் இன்பக்கவி,

//குழந்தைகள் கற்பூரம் போல சட்டேன்று பற்றி கொள்ளும் அறிவாற்றல் படைத்தவர்கள்
சில காப்பகங்களில் நடக்கும் கொடுமை சொல்லி மாளாது..
சிறு வயதில் சில நினைவுகள் மாறாமல் இருக்கும்...
நன்றாக இருக்கு உங்கள் கவிதை வாழ்த்துக்கள் //

நிச்சயமாக குழந்தைகளின் இளவயதில் ஏற்படும் நிகழ்வுகள் அவர்கள் மனதில் என்றும் அழியாத ஒரு தழும்பாக நிற்கும்.

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !