PDA

View Full Version : சென்னையில் புத்தகத்திருவிழா - 2010



பாரதி
01-01-2010, 10:37 AM
அன்பு நண்பர்களே,

இந்த விபரம் உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். தெரியாத உறவுகளுக்காக இத்தகவல் தரப்படுகிறது.



33வது புத்தக்கண்காட்சி - 2010

இடம்: செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப்பள்ளி (பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில்) சென்னை - 30

நடைபெறும் நாட்கள்: 30:12:2009 to 10:01:2010

நேரம் :
வேலை நாட்களில்: 2.00 P.M. to 8.30 P.M.
விடுமுறை நாட்களில்: 11.00 A.M to 8.30 P.M. (சனி, ஞாயிறு விடுமுறை உட்பட)

மேற்கொண்டு விபரங்கள் தேவைப்படுவோர் http://www.bapasi.com சுட்டியைத்தட்டுங்கள்.

வாய்ப்பிருப்போர் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வீர்.

ஆதி
01-01-2010, 11:26 AM
நாளை, நாளை அங்கு செலவழிப்பதாகத்தான் திட்டம் அண்ணா..

பகிர்பவுக்கு நன்றி அண்ணா..

mania
01-01-2010, 02:03 PM
நம் டாக்ஸ் இதை பற்றி ஒரு 2 நிமிடம் பேசியதை நான் பாலிமர் டீவியில் பார்த்தேனே......:D:D
அன்புடன்
மணியா...:D

பாரதி
02-01-2010, 02:27 PM
கருத்துகளுக்கு நன்றி ஆதன், அண்ணா.
அண்ணா... பாலிமர் தொலைக்காட்சி எங்கள் பகுதியில் எப்போது தெரியும் என்று அவரிடம் விசாரித்து சொல்லுங்களேன்.

ஆதி
08-01-2010, 11:28 AM
ஜனவரி 2 - புத்தக கண்காட்சிக்கு சென்று வந்தேன்..

வருகிறேன் என்று சொன்ன நண்பர்கள் எல்லோரும் இன்னொரு நாள் போகலாம் என்று தள்ளிப்போட, இதுவும் நல்லதுக்குதான், புத்தகங்களோடு இன்னும் கொஞ்ச நேரம் அதிகமாய் அளவளாவலாம் என்று தோன்ற தனியே சென்றேன்..

வெறும் ஐந்து ரூபாய்த்தான் நுழைவுக் கட்டணம்.. ஐந்து ரூபாய்க்கு ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்றால் அது பெரிய விஷயம் தானே..

இம்முறை நிறைய புதுப் பதிப்பகங்கள் பங்கு கொண்டிருந்தன, நிறைய புதுப்புத்தகங்கள் வந்திருந்தன, தாகூரின், செக்ஷ்பியரின் பெரும்பாலான படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு வந்திருந்தன.. காளிதாசனின் படைப்புகளை தேடினேன் கிடைக்கவில்லை, கொஞ்சம் வருத்தமாக இருந்தது..

நவீன, பின்னவீனதுவ இலக்கியங்கள் அதிகம் ஆக்ரமித்து இருந்தன..

புதுக்கவிதை கவிஞர்கள் பலர் காணாமல் போய் இருந்ததை கணா முடிந்தது.. அப்துல் ரகுமான், வைரமுத்து, நா.முத்துக்குமார் இவர்களின் புத்தகம் அதிகமாய் இருந்தது..

தேன்மொழி, யுகபாரதி கண்களிலேயே படவில்லை..

புதுக்கவிதை காலம் முடிந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றியது..

அந்த தருணத்தில் புதுக்கவிதைக் குறித்த ஆராய்ச்சி நூல் ஒன்று பட்டது.. எடுத்து பார்த்தேன், 1960-களில் எழுதிய கவிதைகளுக்கான விமர்சனமும் ஆய்வு கட்டுரையுமாய் அந்த புத்தகம் இருந்தது.. வானம்பாடி கவிஞர்களின் கவிதைகளை கூட அந்த புத்தகம் விமர்சனம் செய்யவில்லை.. நவீனம், பின்னவீனதுவம் தாண்டி இன்னும் பல இயங்கள் தமிழ் கவிதை உலகில் நுழைந்து கொண்டிருக்கும் போது, புதுக்கவிதைகளுக்கான ஆய்வுகட்டுரைகள் வானம் பாடிகளைய்யே தொடாமல் இருப்பது ஆட்சயர்யமாகவும், நெருடலாகவும் இருந்தது..

ஆண்டாள் ப்ரியதர்ஷினி, தமிழச்சி போன்ற பெண்கவிஞர்களின் கவிதைகள் கிடைக்கின்றன, தாமரை, கலாப்ரியா, சல்மா, புதிய மாதவி, உமா மகேஸ்வரி போன்றோரின் கவிதை நூல்கள் கிடைக்கவில்லை..

உயிர்மெய் பதிப்பகத்தில் சுஜாத்தாவின் நூல்களே அதிகமாய் இருந்தன.. மனுஷப்பத்திரன் நூல்கள் கூட இல்லை.. சுஜாத்தாவின் நூல்களை எங்கும் பெறலாம், மற்றவர்களின் நூல்களுக்கு கொஞ்சம் அதிக முக்கியத்துவம் தந்திருக்கலாம் என்று தோன்றியது..

உயிர்மெய், கண்ணதாசன் பதிப்பகம், நர்மதா பதிப்பகம், வானதி, மணிமேகலை போன்ற பதிப்பகங்களிலேயே அதிகமாக கூட்டம் காண முடிந்தது, சில ஆங்கிலப் புத்தக பதிப்பகங்களும் வந்திருந்தன, கணினி சம்பந்தமான புத்தகங்களே அதிகம் காணப்பட்டன அவற்றில்.. அங்கும் கூட்டம் கொஞ்சம் கனிசமாகத்தான் இருந்தது.. குழந்தைகளுக்கான புத்தகங்கள் குறுவட்டுகள் கொண்ட கடைகளும் இருந்தன.. தாமரை பதிப்பகத்தில் 18 சித்தர்கள் அருளிய அத்தனை நூல்களும் காணக்கிடைத்தன, ஆனால் அதிகமானவர்கள் பார்வையிடா பதிப்பங்களில் ஒன்றாகவே தாமரை பதிப்பகம் இருந்தது, புதியப் புணல் பதிப்பகம் அதிகமாக பின்நவீனத்துவ இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் தரும் பதிப்பகம் அந்த பதிப்பகத்திலும் பார்வையாளர்கள் சுத்தமாக இல்லை..

இம்முறை நான் அங்கு செலவிட்டது ஏறக்குறைய 4:30 மணி நேரமே, காலையில் போயிருந்தால் இன்னும் பொறுமையாய் எல்லாப் பதிப்பகங்களையும் சுற்றிப் பார்த்திருக்கலாம்.. இருபது புத்தகங்கள் வாங்கினேன், பெரும்பாலும் எல்லாம் பின்னவீனத்துவம், நவீனத்துவம், சர்யலிஸம், ஹைகூ, போன்ற இலக்கியங்களை பற்றிய ஆய்வுக் கட்டுரைகளே அதிகம் வாங்கினேன்..

மூன்று கவிதை நூல் வாங்கினேன், சி.மோகனின் தண்ணீர் சிற்பம், கல்யாண்ஜி அவர்களின் நவீணதுவ கவிதை நூல் ஒன்று, மற்றும் தமிழச்சியின் எஞ்சோட்டு பெண் எனும் கவிதை நூல் என மூன்று அவை..

தண்ணீர் சிற்பம் வாங்கும் போது சி.மோகன் அங்கிருந்தார், அவருடன் கொஞ்சம் உரையாடினேன், பிறகு அவரின் கையெழுத்தையும் அந்த நூலில் வாங்கினேன்.. எழுத்தாளர், எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, கொஞ்சம் நேரம் அவரிடமும் உரையாடினேன்.. இறுதியில் சொல்வேந்தர் சுகி சிவத்தின் உரையை நேரில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது, "தீதும் நன்றும் பிறர் தர வாரா" எனும் தலைப்பில் பேசினார்.. அன்று சில பிரச்சனைகளால் என் மனம் சோர்வுற்றிருந்தது, அவரின் அந்த உரை மனசை லேசாக்கியது.. பிறகு டாக்டர் ருத்ரன் பேச வந்தார், "இலக்கியமும் உளவியலும்" எனும் தலைப்பில், அந்த மன நிலையில் அவருடைய பேச்சு கேட்ட இயலவில்லை, ஆரம்பிக்கும் போதே மிக தடுமாற்றத்துடன் தான் ஆரம்பித்தார், ஒரு 20 நிமிடம் அவரின் பேச்சை கேட்டேன், ரொம்ப ரொம்ப ஆயாசமாக இருந்தது, அதனால் கிளம்பிவிட்டேன்..

இன்னொரு முறை செல்லலாம் என்று இருந்தேன், வாய்ப்பு கிட்டவில்லை.. 10 தேதி புத்தக திருவிழா முடிகிறது, நாளை வரைத்தான் எல்லா பதிப்பகங்களும் இருக்கும், 10-ஆம் தேதி மதியமே பாதி பதிப்பகங்கள் காலி செய்துவிடுவார்கள்.. அடுத்த திருவிழா எதிர்ப்பாத்து ஆசையையும் எண்ணத்தையும் கட்டுப்படுத்தி கொள்ள் வேண்டியதுதான்..