PDA

View Full Version : புத்தாண்டு வாழ்த்துக்கள்



ஆ.ஜெயஸ்ரீ
31-12-2009, 05:31 AM
போகின்ற பாதை
முள்ளா மலரா?
நாளைய உலகம்
அமைதியின் இருப்பிடமா
அழிவின் உரைவிடமா ?
அறியவில்லை யாரும்
நம்பிக்கை வைப்போம்
பிறக்கின்ற வருடம்
இணைக்கட்டும் இதயங்களை
தேசம் தாண்டி நீளட்டும்
நேசக்கரம்
அழியட்டும் ஏழ்மை
பொழியட்டும் செழுமை
பெண்மையை மதிப்போம்
உண்மையை உரைப்போம்
மக்களின் நலன் கருதும்
அரசு அமையட்டும்
அநியாய ஊழல் ஒழியட்டும்
அவலங்கள் மறைந்து
அன்பு பூக்கட்டும்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

அமரன்
31-12-2009, 05:41 AM
புத்தாண்டை முன்னிட்டுக் கவிதை வாழ்த்து.

இருக்க வேண்டிய இடத்தில் இருந்திட்டால் எல்லாம் சிறப்பு.

வாழ்த்துகள்.

சிவா.ஜி
31-12-2009, 10:54 AM
மக்களின் நலன் கருதும்
அரசு அமையட்டும்
அநியாய ஊழல் ஒழியட்டும்


கவிதையில் ஆசைப்பட்ட அனைத்தும் நடந்தேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...ஆனால் மக்கள் நலன் கருதும் அரசு அமைவதும், அநியாய ஊழல் ஒழிவதும்...............ம்ஹீம்.....இந்த பூமியின் சுழற்சி நிற்பதற்குள் அது நடக்குமென்ற நம்பிக்கை இல்லவேயில்லை.

அழகான ஆசைகளுடன் புத்தாண்டை கவிதையில் கொண்டாடும் ஜெயஸ்ரீக்கு வாழ்த்துகள்.

நேசம்
31-12-2009, 11:20 AM
கொஞ்சம் (மக்கள் நலன் விரும்பும்) பேராசையாக இருக்கிறது.கிண்டலுக்கு சொல்லவில்லை.வருத்ததில் சொல்கிறேன். நல்லதை நினைக்கும் சகோதரிக்கு வாழ்த்திகள் ஜெயஸ்ரீ

சரண்யா
01-01-2010, 06:27 AM
நன்றிகள் ஆ.ஜெயஸ்ரீ அவர்களே..வாழ்த்துகள்...
எனக்கு வந்த இ_ மெயில் கவியையும் இங்கே பதிக்கிறேன்...

பிறக்கின்ற இந்த இனிய புத்தாண்டு
பன்னீர் மணக்கும் பாரிஜாதமாக
புத்துணர்ச்சியுடன் மலரட்டும்..

கடந்த காலத்தின்
கண்ணீரின் காயங்களை
காய வைக்கட்டும்...

குற்றாலமாய் அல்லாமல்
நயாகராவாய்..
சந்தோஷ அருவி கொட்டட்டும்...

இன்பம் மட்டுமே எங்கும் நிறைந்திருக்க
அன்புடன் வாழ்த்துகிறேன்...

அன்பால் இணைந்த வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த
புத்தாண்டு வாழ்த்துக்கள்...
என்றும் அன்புடன்

--
Mrs.Faizakader

http://faizakader.blogspot.com/
http://mail.google.com/mail/?ui=2&ik=cacbbb96a0&view=att&th=125e81cfc4ffdc3c&attid=0.1&disp=thd&realattid=file0&zw