PDA

View Full Version : புத்தாண்டு வாழ்த்துக்கள்



muthuvel
30-12-2009, 02:58 PM
"மன அழுத்தம் இல்லாத உறக்கம் வேண்டும் ,
மாசு இல்லாத சுவாசம் வேண்டும் ,
மக்களை காப்பாற்றும் நல் அரசு வேண்டும் ,
மது அருந்தாத குடி மகன் வேண்டும்
பகுத்தறிவு வளரவேண்டும் ,
பசியோடு உறங்குவோர் நிலை குறைய வேண்டும் ,
உதவும் உணர்ச்சி உள்ள மனிதர்கள் வேண்டும்,
கோபுரங்கள் தலை சாய்த்து குடுசைக்கு உதவ வேண்டும் ,
காமம் இல்லாத காதல் வேண்டும் ,
அரவாணிகளை அரவணைக்கும் சமுதாயம் வேண்டும்
ஊழல் இல்லாத அரசியல் வேண்டும் ,
முதுகில் குத்தாத பந்தகள் வேண்டும் ,
வறுமையில் பிறந்தவன் வசதி பெறவேண்டும் ,
குழந்தை தொழிலாளர் முறை ஒழியவேண்டும் ,
கற்றதை கக்கும் கல்வி முறை மாறவேண்டும்
காசுக்கு கல்வியை விற்கும் அவலம் அகலவேண்டும்
வரதட்சணை வாங்காத மணமகன் வேண்டும் ,
தடுக்கி விழுந்தவன் தன்னம்பிக்கை பெறவேண்டும்
சூது வாது இல்லாத உலகம் வேண்டும்
சுயநலம் இல்லாத மனிதர்கள் வேண்டும் ,
தீவிரவாதம் களையவேண்டும் ,
குற்றங்கள் குறையவேண்டும் ,
பிரிவினைவாதம் தூர எறியவேண்டும் ,
அணு ஆயுதங்கள் ஒழிய வேண்டும்,
அன்பு மலர்ச்சி பெருகவேண்டும் ,
படித்தவனுக்கு பணி கிடைக்கவேண்டும் ,
விவாகரத்தை, விட்டுகொடுத்து தடுக்க வேண்டும் ,
வன்முறை இல்லாத போராட்டங்கள் வேண்டும் ,
மதியோடு மக்கள் செல்வம் பெற்றிட வேண்டும்,
மக்கள் தொகை குறைத்திட வேண்டும் ,
ஓட்டுக்கு ,விலை பேசாத தேர்தல் வேண்டும் ,
மொத்தத்தில் , மக்களிடையே மனித நேயம் மலரவேண்டும்.......

உதயசூரியன்
31-12-2009, 07:00 PM
கவிதைக்கு வாழ்த்துக்கள்..
கடவுளை வழி படுவதை விட இவ்வார்த்தைகளை நடை முறை படுத்தலாம்
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்