PDA

View Full Version : எல்லை மாவட்டங்கள்...!!சிவா.ஜி
29-12-2009, 04:59 AM
கால ஓட்டத்தில்
கவனிப்பாரற்று போன
பாவப்பட்ட பிரஜைகளாய்
எம் மாவட்ட மக்கள்

இந்த புத்தாண்டாவது
குடிநீரைக் கொடுக்குமா என
பல்லாண்டுகளாய் பரிதவிக்கும்
எல்லை மாவட்டங்கள்....

கனடாக்காரர்களாவது
குழாய்போட்டு
குடிநீர் கொடுத்துவிடுவார்கள்
நல் இதயத்தோடு, இந்த
கன்னடாக்காரர்கள்
இப்பவும் இல்லையென்கிறார்கள்
ILL இதயத்தோடு...
இல்லா இதயத்தோடு...

அறிக்கையில் மட்டும் யுத்தம் நடத்திவிட்டு....
திரைக்கு மறைவில் கட்டிப் பிடிக்கும்
களவானிகளாய்,
எங்களூர் ஓட்டுப் பொறுக்கிகளும்
பெங்களூர் ஓட்டுப் பொறுக்கிகளும்
பன்னாட்டு நிறுவனம்
பாட்டிலில் கொடுக்கும்
கனிம நீரைக் குடிக்கிறார்கள்...

தர்மபுரித் தமிழனும்
கிருட்டிணகிரி தமிழனும்
தண்ணீரின்றி தவிக்கிறார்கள்...
தமிழினத் தலைவரெல்லாம்
செம்மொழி மாநாட்டில்
தமிழை வளர்க்கிறார்கள்....!!
முதலில் தமிழனை வளர்க்கட்டும்...
தமிழ் தானே வளரும்....

சப்பை மூக்குக் காரர்கள் நிதியளித்தும்
குப்பை மனதுக்காரர்களால்
காவிரி கைது செய்யப்படுகிறாள்
'நிதி' உதவி இல்லையாயினும்
சதியேதும் செய்யாதிருந்தால்
நதி வந்து சேரும்....
நல் நீர் எங்களுக்கும் ஊறும்...!

வழக்கம்போல் வந்துபோகும்
புத்தாண்டைப் போல்
இந்த ஆண்டும் இரு(ற)ந்துவிடாமல்
எல்லை மாவட்ட மக்களுக்கு
இல்லையெனாது தரட்டும் தண்ணீரை....!!

பாரதி
29-12-2009, 01:54 PM
அப்பகுதி மக்கள் எவ்வளவு தூரம் எதிர்பார்ப்புடனும், ஏமாற்றத்துடனும் காத்திருக்கிறார்கள் என்பதை வார்த்தைகளின் கடுமை உணர்த்துகிறது.

வற்றாத ஜீவநதியாய் வாய்களை வைத்திருக்கும் மனிதர்கள் ஆட்சிக்கட்டிலுக்காக ஆயிரம்முறை வேண்டுமானாலும் வாக்குறுதி தருவார்கள்.
முடிக்க வேண்டும் என்ற நினைப்பிருந்தால், எப்போதே கொண்டு வந்திருக்க முடியும்.

எதிர்பார்த்திருந்தே வாழப்பழகி விட்ட சராசரி மனிதனாக இன்னும் நம்பிக்கையோடு காத்திருப்போம்.ஹும்...

உணர்வை உள்ளபடியே வடித்த விதம் நன்று சிவா.

குணமதி
29-12-2009, 02:18 PM
எவ்வளவு கடுமை காட்டினும், அவர்கள் நினைத்ததைத் தானே நடத்துகிறார்கள்!

மக்களைப் பற்றிய உண்மையான கவலை இருக்கிறதா எனபது ஐயப்பாடே!

சிவா.ஜி
30-12-2009, 04:38 AM
உண்மைதான் பாரதி. அறிவித்த நாளில் ஆனந்தக்கூத்தாடினோம்.....அதுவே காலம் கடக்கக் கடக்க கண்ணீரில் தள்ளாடினோம். தங்களது அரசியல் ஆதாயத்துக்காக, அப்பாவி மக்களின் ஜீவாதாரமான தண்ணீர் விஷயத்தில் விஷ விளையாட்டு விளையாடுகிறார்கள்.

இலவச தொலைக்காட்சியும், எரிவாயு அடுப்பும், என எந்த பிச்சையும் வேண்டாம். தாகம் தீர்க்க தண்ணீர் கிடைக்க வழி செய்தால் போதும், காசும், பிரியாணியும் இல்லாமலேயே அவர்களுக்கு ஓட்டு போடுவோம்.

உணர்வுகளைப் புரிந்தமைக்கு நன்றி பாரதி.

சிவா.ஜி
30-12-2009, 04:40 AM
ஆம் குணமதி. தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்துக் கொள்கிறோமென்று சொன்னாலும், தவித்து செத்தாலும் பரவாயில்லை....தண்ணீரில்லையெனும் 'நல்ல' மனசு அரசியல்வியாதிகள் அவர்கள் காரியத்தில்தான் குறியாய் இருப்பார்கள்.

நன்றி குணமதி.

கா.ரமேஷ்
30-12-2009, 04:45 AM
நல்லது நடந்தால் சரிதான்....
இல்லையென்றால் அடுத்த தேர்தலுக்கு வருவார்கள் அதே வாக்குறுதியை தருவார்கள்... வேறென்ன செய்வது கேட்டுக்கொள்ள வேண்டியதுதான்...

சிவா.ஜி
30-12-2009, 05:02 AM
இலவசங்களில் தன்மானமிழந்த தமிழனுக்கு தண்ணீர் ஒரு கேடா எனக் கேட்டாலும் மறுப்பதற்கில்லை. பிச்சைக்காகக் கையேந்தும் ஆயிரம் கைகள் இருந்தாலும், உரிமைக்காக உயர்த்தும் ஓரிரு கைகளுக்கு தட்டிக் கேட்கும் அருகதை இருக்கிறது. கேட்போம்....நம்பிக்கையுடன் இருப்போம்.

நன்றி ரமேஷ்.

அமரன்
01-01-2010, 09:48 PM
சரியான சுடுநீர்க் கவிதை..

எதிர்பார்ப்புகளோடும் நம்பிக்கையோடும் கரைந்து விடுகின்றன நாட்கள்.

வேலிச்சண்டை, குழாயடிச்சண்டை என பழகிவிட்ட வாழ்க்கை தமிழனுக்கு.

நான் இப்போதும் நம்புவது தமிழனுக்கு தலைவலி தமிழனே!

சிவா.ஜி
02-01-2010, 04:50 AM
மிக மிக சத்தியம் அமரன். தமிழனுக்கு தலைவலி, திருகுவலி எல்லாமே தமிழன்தான் அதிலும் வித்தக தமிழன் விஷ தமிழன்.

ரொம்ப நன்றி பாஸ்.

சுகந்தப்ரீதன்
02-01-2010, 07:07 AM
அரசியல் சித்து விளையாட்டில் அவ்வப்போது பலிகடாவாக்கப்படுவது பாவப்பட்ட மக்கள்தான்..!! என்னதான் மக்களாட்ச்சி மண்ணாங்கட்டி என்று வாய்கிழிய பேசினாலும் கையாலாகத நிலையில்தான் இன்றைக்கும் மக்கள் இருக்கிறார்கள் என்பதற்க்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு தாசாப்தங்களாய் நீளும் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் கோரிக்கை..!!

காவிரி பிரச்சனை அரசியலாகும் முன்பே அதை தீர்க்கும் வாய்ப்பிருந்தும் தங்களின் சுயநலனுக்காக சுப்ரீம் கோர்ட்டிலிருந்து வழக்கை வாபஸ் வாங்கி காவிரியை இருமாநில அரசியலாக்கி தமிழகத்தை பாலைவனமாக்க வழிகோலியவர்கள்... இப்போது தமிழுக்கு விழா எடுக்க போகிறார்களாம்... மறவாமல் வந்து தமிழ் வாழ்க; தமிழன் வாழ்க என்று கோசமிடுங்கள் தமிழக மக்களே..?!

ஆட்சியாளர்களுக்கு எல்லைபுறத்தை விட கொல்(ளை)லை புறத்தில்தான் கூடுதல் வருமானம் என்பதை சுட்டியவிதம் நன்று அண்ணா..!!

என்றுதீரும் எங்களின் தாகம்...?!

சிவா.ஜி
02-01-2010, 08:33 AM
மிக உண்மையான கருத்து சுபி. எப்போதோ தொடங்கியிருக்க வேண்டிய அந்தத் திட்டம், பொக்ரான் குண்டு வெடிப்பு சோதனையால், ஜப்பானின் நிதி கிடைக்க தாமதமாகியது.

எல்லாம் முடிந்து நிதி கிடைத்தும், அரசியல் மதியாளர்கள் தங்கள் சுய லாபத்துக்காக மக்களின் சொம்பு நீரை தட்டிவிடுகிறார்கள். கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமல் போய்விடும் நிலையைக் கொண்டு வந்துவிட்டார்கள்.

தாகம் தீரத்தான் டாஸ்மாக் இருக்கிறதே....!!! அதுவும் அரசாங்கம் கொடுக்கும் தண்ணீர்தானே.....!!

உணர்வுகளின் புரிதலுக்கு நன்றி சுபி.

செல்வா
05-01-2010, 08:56 AM
முதல் நாளே இந்தப் பக்கம் வந்துட்டு அடிச்ச
அனல் தாங்க போய் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திட்டு வந்தேன்...

தண்ணீராய் பாய வேண்டிய காவிரியோ..
மக்களின் கண்ணீராய் பாய்கிறாள்.
சிவனின் ரெளத்திரப் பார்வையில்
கவிதாதேவி வென்னீராய் கொதிக்கிறாள்...

சசிதரன்
05-01-2010, 02:12 PM
//தர்மபுரித் தமிழனும்
கிருட்டிணகிரி தமிழனும்
தண்ணீரின்றி தவிக்கிறார்கள்...
தமிழினத் தலைவரெல்லாம்
செம்மொழி மாநாட்டில்
தமிழை வளர்க்கிறார்கள்....!!
முதலில் தமிழனை வளர்க்கட்டும்...
தமிழ் தானே வளரும்....//

ரொம்ப உண்மை அண்ணா... நம் அரசியல் இயக்கங்களை என்னவென்று சொல்ல...

சிவா.ஜி
07-01-2010, 11:55 AM
பரிதாப*மாய் ஒத்துக்கொள்ள வேண்டிய வரிகள் "தண்ணீராய் பாயவேண்டிய காவிரி கண்ணீராய் பாய்கிறாள்"

உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கும் கனலுக்கு தண்ணீர் கிடைக்குவரை வெப்பம் வீசிக்கொண்டுதானே இருக்கும் செல்வா?

மிக்க நன்றி இளவலே.

சிவா.ஜி
07-01-2010, 11:57 AM
வாங்க சசி. ரொம்ப நாளைக்குப் பிறகு உங்களை மன்றத்தில் பார்ப்பது மகிழ்ச்சி.

அரசியல் இயக்கங்களெல்லாம் ஒன்றுகூடி, மக்களை இயங்காதவாறு செய்துவிடுவார்கள் இன்னும் சில காலங்களில். ஏற்கனவே இலவசங்களைப் பெற்றுக்கொண்டு இடுப்பொடிந்து கிடக்கும் சில இழிதமிழர்கள் இன்னும் பெருகும்போது சாகும்போது கூட தண்ணீர் கிடைக்காது.

நன்றி சசிதரன்.

Ravee
12-01-2010, 03:39 PM
உண்மைதான் பாரதி. அறிவித்த நாளில் ஆனந்தக்கூத்தாடினோம்.....அதுவே காலம் கடக்கக் கடக்க கண்ணீரில் தள்ளாடினோம். தங்களது அரசியல் ஆதாயத்துக்காக, அப்பாவி மக்களின் ஜீவாதாரமான தண்ணீர் விஷயத்தில் விஷ விளையாட்டு விளையாடுகிறார்கள்.

இலவச தொலைக்காட்சியும், எரிவாயு அடுப்பும், என எந்த பிச்சையும் வேண்டாம். தாகம் தீர்க்க தண்ணீர் கிடைக்க வழி செய்தால் போதும், காசும், பிரியாணியும் இல்லாமலேயே அவர்களுக்கு ஓட்டு போடுவோம்.

உணர்வுகளைப் புரிந்தமைக்கு நன்றி பாரதி.

தவறான கணக்கு சிவா, நம் மக்கள் எல்லோரும் சிற்றின்ப பிரியர்கள், பேரின்ப பிரியர்கள் இல்லை. எனவே அவர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை சிந்திப்பதில்லை. வாழும் வரை வாழு என்பதே அவர்களின் சித்தாந்தம் .

ஒரு ரூபாய் அரிசியும் ,உழைக்காமல் கிடைக்கும் பணமும் டிவியும் நம் மக்களை மாக்களாகித்தான் இருக்கிறது.

சிவா.ஜி
13-01-2010, 08:14 AM
தற்போதைய சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது நீங்கள் சொல்வதுதான் சரி என்றாலும், இலவசங்களுக்காக ஓட்டுப் போடுபவர்களை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. தன் கடமையை சரியாகச் செய்யும் பலர் குடிநீர் கிடைக்க வழி செய்தால், காசும், பிரியாணியும் இல்லாமலே ஓட்டுப் போடுவார்கள் எனச் சொன்னேன் ரவீ.

பா.ராஜேஷ்
15-01-2010, 09:31 AM
நாளைய மக்களுக்கு
நன்னீர் கிடைக்க
நாளும் போராட
நாமும் தயாராவோம்

இன்று இங்கிருக்கும் நிலை
நாளை அங்கும் வரும்
அதற்கு முன்னமே
விழிப்போம் தோழர்களே ..

சிவா.ஜி
15-01-2010, 10:53 AM
உண்மைதான் ராஜேஷ். அந்த விழிதெழுதல்தான் அவசியம்.

நன்றி ராஜேஷ்.

இன்பக்கவி
23-01-2010, 02:56 PM
ரொம்ப நல்ல இருக்கு....:icon_b:
இது தானே நிஜம்..
திரைக்கு முன் சண்டை
திரைக்கு பின் கள்ள உறவு...
இவர்கள் பெயர் நிஜத்தில் என்ன என்று புரியவில்லை???:confused::confused:
எல்லோரையும் மறைமுகமாக தாக்கி விட்டர்கள் உங்கள் வரிகளால்..:D
இப்படி எல்லாம் நான் எப்போது கவிதை எழுதுவது???:traurig001:

சிவா.ஜி
25-01-2010, 11:57 AM
பாராட்டுக்கு ரொம்ப நன்றி இன்பக்கவி.

அடிப்படைத் தேவைகளுக்குக் கூட கையேந்த வேண்டிய நிலையை சொல்லும்போது, வார்த்தைகளில் கொஞ்சம் கூடுதலாகவே அனலிருக்கும். பச்சோந்திகளைப் பற்றி பேசும்போது, வரிகளும் வயிற்றைப்போல பற்றியெரியும்.

நீங்களும் நல்ல சமூகப் பார்வைக் கவிதைகளைக் கொடுத்துக்கொண்டுதானே இருக்கிறீர்கள்.