PDA

View Full Version : ஹை கூ



muthuvel
28-12-2009, 09:15 AM
உங்கள் அன்பால் நான் இன்புற்றேன் நித்தம் ,
அந்த அன்பு ,
பெருகவேண்டும் ,
தொடரவேண்டும்,
இரண்டாயிரத்துபத்தும் (2010)

குணமதி
28-12-2009, 10:28 AM
உங்கள் அன்பால் நான் இன்புற்றேன் நித்தம் ,
அந்த அன்பு ,
பெருகவேண்டும் ,
தொடரவேண்டும்,
இரண்டாயிரத்துபத்தும் (2010)

அனைவரின் நல்ல விழைவை எழுதியிருக்கிறீர்கள், முத்துவேல்.
பாராட்டு.
நன்றி.
அடுத்து, ஒரு வேண்டுகோள் :
உங்களுக்கு நன்கு தெரியுமானால், ஐகூ பாடல் எழுதும் முறையை விளக்கிக் கூறுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

muthuvel
28-12-2009, 04:05 PM
அனைவரின் நல்ல விழைவை எழுதியிருக்கிறீர்கள், முத்துவேல்.
பாராட்டு.
நன்றி.
அடுத்து, ஒரு வேண்டுகோள் :
உங்களுக்கு நன்கு தெரியுமானால், ஐகூ பாடல் எழுதும் முறையை விளக்கிக் கூறுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

எனக்கு தெரியாது சகோதரி ...மன்னிக்கவும்

பென்ஸ்
28-12-2009, 07:06 PM
எனக்கு தெரியாது சகோதரி ...மன்னிக்கவும்

சிறியதாயினும்.. நல்ல வாழ்த்து...

முத்துவேல்... பழைய திரிகளை தோன்டினால் ஹைக்கு எழுதுவதை பற்றி பல திரிகள் உள்ளன... கவிதா, இளசு, தாமரை, நண்பன் போன்ற கவி ஆசான்கள் விளாசி இருப்பார்கள்... அதாவது.. விளக்கியிருப்பார்கள்...

muthuvel
29-12-2009, 05:38 PM
தலை முட்ட குடித்தான் இரவில்,
வாந்தி எடுத்தான் பகலில் ,
...

rajarajacholan
30-12-2009, 03:46 AM
அநேகமா இது ஐகூ இல்லைன்னு நினைக்கிறேன். அது மூணுவரியில இருக்கும்.

அமரன்
02-01-2010, 08:47 AM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=1150

இந்த இழையின் ஏழாவது முத்தில் சிறிதான, சிறந்த ஹைக்கூ விளக்கம்.

இன்னும் தொடர வாழ்த்துகள் முத்து.

அரசன்
08-01-2010, 01:02 PM
ஹைக்கூ என்பது ஜப்பான் நாட்டு கவிதை நடை. ஹைக்கூவிற்கு ஒரு சிறிய இலக்கணம் இருக்கிறது. அதாவது, ஹைக்கூ என்பது மூன்று வரியில் இருக்குமாறு எழுத வேண்டும்(ஐந்து வரிகூட இருக்கலாம்). அதில் முதல் இரண்டு வரியில் உங்கள் கற்பனையும், கடைசி வரியில் நீங்கள் சொல்ல நினைப்பதையும் சொல்லி முடிக்க வேண்டும். இது தான் ஹைக்கூ!

ஹைக்கூ நடை எல்லோராலும் விரும்பப்படக் காரணம், எளிய நடையில் சொல்ல வேண்டிய விசயத்தை மற்றவர்களுக்கு எளிதாக சொல்ல முடியும் என்பதால்தான். ஹைக்கூ நடை நாம் வரவேற்க்கத்தக்க ஒரு கவிதை நடை. (ஏதோ என் அறிவிற்கு எட்டியதை சொல்லிருக்கிறேன்.)

மேலும்....www.karuvai.blogspot.com

muthuvel
16-03-2010, 03:25 PM
விளக்கத்திற்கு நன்றி

muthuvel
17-03-2010, 06:50 AM
மாமனாரின் உழைப்பு ,
மருமகனுக்கு சம்பளம்,
வரதட்சணை

ஆதி
17-03-2010, 07:24 AM
மாமனாரின் உழைப்பு ,
மருமகனுக்கு சம்பளம்,
வரதட்சணை

இது ஹைகூவே இல்லை முத்துவேல்.. உங்களின் குறுங்கவிதைகள் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்..

முழு இலக்கணம் பொருந்தவில்லை என்றாலும் குறைந்த பட்ச இலக்கணமாவது பொருந்த வேண்டும் இல்லையா, எதுவும் பொருந்தாத ஒன்றை ஹைகூ என்று எப்படி ஏற்பது.. இந்த கவிதையை நீங்கள் எந்த அடிப்படையில் ஹைகூ என்று சொல்குறீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா ?

muthuvel
17-03-2010, 07:59 AM
குரங்கு கையில் ,
பூமாலை ,
கல்லாதவன் கல்வி மந்திரி ..

muthuvel
17-03-2010, 10:18 AM
நம் கல்லூரி வாசல் முன்,
ஆனந்த கண்ணிற் ,
பழைய மாணவன்

சிவா.ஜி
17-03-2010, 04:20 PM
ஏன் கல்வி கற்காத காமராசர் முதல் மந்திரியாவே இல்லையா...? எத்தனையோ பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடம் கட்டலையா?

அதே மாதிரி ஆனந்தக் கண்ணீர் மாணவனுக்கு மட்டுமா வரும்....மாணவிக்கு வராதா....

இதெல்லாம் ஹைக்கூன்னு சொல்றீங்களே அது எப்புடீங்கோ முத்துவேல்.

muthuvel
18-03-2010, 10:23 AM
ஏன் கல்வி கற்காத காமராசர் முதல் மந்திரியாவே இல்லையா...? எத்தனையோ பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடம் கட்டலையா?

அதே மாதிரி ஆனந்தக் கண்ணீர் மாணவனுக்கு மட்டுமா வரும்....மாணவிக்கு வராதா....

இதெல்லாம் ஹைக்கூன்னு சொல்றீங்களே அது எப்புடீங்கோ முத்துவேல்.

பொதுவாக சொன்னேன்

ஆர்.ஈஸ்வரன்
18-03-2010, 10:28 AM
அறிவே இல்லை
பூக்களுக்கு
எப்போதும் சிரிப்பு

இது அமுதபாரதியின் ஹைக்கூ

muthuvel
18-03-2010, 10:35 AM
காம்பில் ஒட்டிகொண்டிருக்கும் வரைதான்

ஆதி
19-03-2010, 06:59 AM
அறிவே இல்லை
பூக்களுக்கு
எப்போதும் சிரிப்பு

இது அமுதபாரதியின் ஹைக்கூ

இதை ஹைகூ என்று நீங்க எப்படி ஏற்று கொள்குறீர்கள் முத்துவேல் ? அதை சொல்லுங்க..


காம்பில் ஒட்டிகொண்டிருக்கும் வரைதான்

இந்த கருத்தை வைத்தா ?

யாப்பே தெரியாமல் மரபு கவிதை எழுதுவது மாதிரிதான் இலக்கணம் தெரியாமல் ஹைகூ எழுதுவது.. இதை சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன்.. மன்னிக்கவும், நீங்க* எழுதுறது ஹைகூ இல்லை முத்துவேல்.. குறும்பாக்கள் என்று வேண்டுமானால் வைத்துக்கலாம்.. ஹைகூவுக்கும் உவமை உறுபுக்கும் என்ன சம்பந்தம்..

இது போலது என்று சொலவது ஹைகூ என்றால், கபிலன், கம்பன், காளமேகன், கண்ண்தாசன் போன்ற கவிச்சக்கரவர்த்திகள் எல்லாம் ஹைகூ தமிழுக்கு வருவதற்கு முன்பே அதை எழுதிட்டாங்க..