PDA

View Full Version : மழலையின் சிரிப்பு



சரண்யா
28-12-2009, 01:18 AM
மழலையின் சிரிப்பு

http://magespathy.com/web/wp-content/uploads/2009/06/azbl5y1ca7o0ju7ca4dy5hhcaz3ytl5caqsx17yca066forcacwdnkycaqfca09cacskiq6caf9g6dvcav41ppdcact2t20ca29quhcca5p4l2ecaxvkgkocaba9cehcaswblqjcaki0zql1.jpg

மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச்

செல்வக் குழந்தையின் சிரிப்பு, நல்ல

இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ

அறஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ

குளிர்வாழைப்பூக் கொப்பூழ் போன்ற

ஒளிஇமை விலக்கி வெளிப்படும் கண்ணால்

முதுவை யத்தின் புதுமை கண்டதோ?

என்னவோ அதனை எவர்தாம் அறிவார்?

தங்க மாதுளைச் செங்கனி பிளந்த

மாணிக்கம் அந்த மதலையின் சிர்ப்பு.

வாரீர், அணைத்து மகிழவே ண்டாமோ?

பாரீர் அள்ளிப் பருகிடமாட் டோமோ?

செம்பவ ழத்துச் சிமிழ் சாய்ந்த அமுதாய்ச்

சிரித்தது, பிள்ளை சிரிக்கையில்

சிரித்தது வையம், சிரித்தது வானமே.
நன்றிகள்:magespathy.com

குணமதி
28-12-2009, 03:32 AM
மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. -குறள்65.

நல்ல கருத்து.

அழகிய படம்.

சரண்யா
29-12-2009, 02:54 AM
மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. -குறள்65.

நல்ல கருத்து.

அழகிய படம்.

நன்றிகள் குணமதி அவர்களே...

உமாமீனா
01-02-2011, 09:33 AM
படிக்க படிக்க மனம் லேசானது நன்றி

நாஞ்சில் த.க.ஜெய்
02-02-2011, 11:57 AM
மழலையின் இன்பத்தில் ஒரு மழலையாக .......