PDA

View Full Version : ஈழமக்கட் குதவுவோம்!

குணமதி
27-12-2009, 05:45 AM
ஈழமக்கட் குதவுவோம்!

சிறுகுழவி முதற்கொண்டு பெரியோர் ஈறாய்

சின்னபின்ன உடலோடும் உளத்தோ டங்கே

உறுதுன்பம் கொஞ்சமிலை! உற்றார் சுற்றம்

உள்ளனரா மாண்டனரா உறுதி செய்ய

தொறும்பர்க்கே வழியேது? தொல்லீ ழத்தில்

துணையற்றே துன்பத்தில் உழலு வார்க்கே

நிறுவலுற நற்றுணையாய் நெஞ்சம் நீவி

நேர்மையுற உதவுதற்கே நிற்போம் முன்னே!

ஓவியன்
29-12-2009, 08:26 AM
உதவிக்கரம் நீட்டும் அழகு தமிழ் கவிதைக்கு ஒரு ஈழத்துவனாக என் நன்றிகள்...

இந்த நிலை பெருகட்டும், அதற்கு நம்மாலியன்றதை சேர்ந்தே செய்வோம்...

விகடன்
29-12-2009, 09:23 AM
ஈழமக்கற்கு உதவும் எண்ணத்துடன் எழுதப்பட்ட கவிதைக்கு ஈழத்தவன் எனது நன்றிகளும் உரித்தாகுக.

குணமதி
29-12-2009, 09:56 AM
ஈழமக்கற்கு உதவும் எண்ணத்துடன் எழுதப்பட்ட கவிதைக்கு ஈழத்தவன் எனது நன்றிகளும் உரித்தாகுக.

நன்றி விராடன்.

மிவும் வருந்தியிருந்தேன்.

யாரும் பின்னூட்டமிட முன்வரவில்லை என.

நன்றி.

குணமதி
29-12-2009, 09:59 AM
உதவிக்கரம் நீட்டும் அழகு தமிழ் கவிதைக்கு ஒரு ஈழத்துவனாக என் நன்றிகள்...

இந்த நிலை பெருகட்டும், அதற்கு நம்மாலியன்றதை சேர்ந்தே செய்வோம்...

நீங்களே முதலில் இங்குப் பின்னூட்டமிட்டீர்கள்!

என் வருத்தம் குறைந்தது.

நன்றி. மிகவும் நன்றி.

பாரதி
29-12-2009, 02:02 PM
மிகவும் நல்ல மனதுடன் படைக்கப்பட்ட கவிதை.
இயன்ற வழியில் உதவுவோம்; முடிந்தது என்று மறந்து விடாமல், இதயத்தை மரத்துவிடாமல் இன்னும் இருக்கிறது வாழ்க்கை என்று தன்னம்பிக்கையை ஊட்டுவோம்.
அழகுத்தமிழ் கவிதைக்கு நன்றி நண்பரே.

குணமதி
29-12-2009, 02:09 PM

மிக்க நன்றி.