PDA

View Full Version : நேத்திக்கடன்



பாரதி
26-12-2009, 07:14 PM
நேத்திக்கடன் (http://ennuley.blogspot.com/2009/10/blog-post_14.html)


வேப்பமரத்துல கட்டிருந்த ‘கறுவாயன்’ யை உத்துப்பார்த்துக்கிட்டு இருந்தான் சரவணன். அங்க வந்த அப்பத்தா கிட்ட கேட்டான்

“நாளைக்கு எனக்கு ஏன் மொட்டை போட போறோம்”

“போன வருசம் நீ மேலுக்கு சுகமில்லாம இருந்தீல அதான் அய்யா... “

“அதுக்கு இப்ப என்ன...”

“சொல்லிமுடிக்குறதுக்குள்ள அவசரக்குடுக்கபயலே” செல்லமாக சொன்னார் அப்பத்தா

“அப்ப உங்க அம்மா நேந்துக்கிட்டாளாம்”

”எந்த கோயிலுக்கு அப்பத்தா”

“நம்ம கொலசாமிடா , நம்ம கிழக்கு வயக்காட்டுக்கு மேற்கால போனா வரும்ல அந்த கோயிலுதான்”

“பெருசா மீசை வச்சிக்கிட்டு இருப்பாரே பயமுறுத்துறாப்ல...”

“டேய் கருப்ப சாமியை அப்படி சொல்லக்கூடாது, நம்ம காவ தெய்வம்”

“நைட்டு ஆனா அந்த பக்கம் விடமாட்டுறாங்களே ஏன்?”

“சாமி நடமாட்டம் இருக்கும்டா குறுக்க போக கூடாது, கோபப்பட்டு கறுப்பு அடிச்சிடும்” வாயை நெளிச்சு சுழிச்சு அப்பத்தா சொல்லும் போதே பய ஆட்டம் கண்டான்.

“சாமிக்கு என்ன அப்பத்தா வேலை”

“கருப்புவை கும்பிடுற நம்ம பங்காளி, சாதி சதனத்தையெல்லாம் குறையில்லாம காக்குறவரே அவருதான்”

”சரி அப்பத்தா, எனக்கு சுகமில்லைனு மொட்டை போடுறது சரி நம்ம கெடாவுக்கு என்ன நடந்துச்சு அத ஏன் பழிகொடுக்க போறோம்?”

அவனே தொடர்ந்தான்...

“சாதி சனத்தையும் சொந்ததையும் மட்டும் காக்குறவரு கடவுள் இல்லை பாரபட்சம் இல்லாமல் காக்குறவர் தான் கடவுள்னு எங்க டீச்சர் சொல்லி தந்தாங்க ,கோபப்பட்டு அடிக்கிறது எப்படி காக்கும் கடவுளா இருக்கும்”

“கருவாயனுக்கும் மொட்டை போட்டு திரும்ப கொண்டு வந்திடுலாம் அப்பத்தா”

“அடப்ப்போடா போக்கத்த பயலே....” திட்டிக்கிட்டே அப்பத்தா ந்கர்ந்தார்

நன்றி: என்னுள்ளே வலைப்பூ.

குணமதி
27-12-2009, 03:04 AM
சரியான கருத்து.

பாராட்டுகிறேன்.

பாரதி
28-12-2009, 03:36 PM
கருத்துக்கு நன்றி குணமதி.

நமக்கொரு நீதி.. நம்மை சார்ந்த உயிருக்கொரு நீதி!
வலிக்காமல் சாட்டை வீசும் அந்த கதை நடை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

பென்ஸ்
28-12-2009, 07:13 PM
நீங்க சொன்ன கருத்து மட்டுமல்லாமல் எனக்கு மற்றும் பல எண்ணங்களை தட்டிவிட்டு சென்றது இந்த சிறு உரைநடை.... பாரதி எங்கயிருந்து இதை எல்லாம் பிடிக்கிறிங்க... மன்னிக்க படிக்கிறிங்க... நல்லாயிருக்கு...

கா.ரமேஷ்
29-12-2009, 04:32 AM
அருமை ...
“கருவாயனுக்கும் மொட்டை போட்டு திரும்ப கொண்டு வந்திடுலாம் அப்பத்தா” ***----எதார்த்தம்

நல்ல பகிர்வு..!

கலையரசி
29-12-2009, 12:06 PM
மனிதனின் சுய லாபத்துக்காக மற்ற உயிர்களைப் பலி கொடுப்பது இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தமானதல்ல. மற்ற உயிர்களை நேசிக்க வேண்டும் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறது இக்கதை.
பகிர்தலுக்கு நன்றி.

பாரதி
29-12-2009, 01:36 PM
கருத்துகளுக்கு நன்றி பென்ஸ், இரமேஷ், கலையரசி.

எத்தனையோ படிக்கிறோம். சிலவே மனதில் நிற்கின்றன; அவற்றிலும் வெகுசிலவே பலரால் படிக்கப்படும் நிலையை அடைகின்றன. தமிழ்மன்றத்தில் இடைவெளி கிடைக்கும் சமயத்தில் இணையத்தில் வலைப்பூக்களில் உலாவும் போது அவ்வப்போது அரிதான விடயங்கள் காணக்கிடைக்கின்றன. வாய்ப்பிருக்கும் சமயத்தில் பகிர்கிறேன். இந்த படைப்பாளிகளுக்கு நாம் செய்யும் உதவி, அக்கருத்துகளை சற்றேனும் நடைமுறைப்படுத்த முயல்வதே.

சிவா.ஜி
30-12-2009, 08:34 AM
என் நண்பர் மணி என்பவர் வெறொரு தளத்தில் பதிந்த கதை இது. அதற்கான முதல் பின்னூட்டமே நான் இட்டதுதான். எனக்கும் பிடித்த கதை. சமூகத்தின் சில கைவிடப்படவேண்டிய மூடப்பழக்கங்களை சாடும் இந்தவகைக் கதைகள் மனதில் நிற்கின்றன.

நன்றி பாரதி.

பாரதி
30-12-2009, 11:37 AM
என் நண்பர் மணி என்பவர் வெறொரு தளத்தில் பதிந்த கதை இது. அதற்கான முதல் பின்னூட்டமே நான் இட்டதுதான். எனக்கும் பிடித்த கதை. சமூகத்தின் சில கைவிடப்படவேண்டிய மூடப்பழக்கங்களை சாடும் இந்தவகைக் கதைகள் மனதில் நிற்கின்றன.


கருத்துக்கு நன்றி சிவா. நான் வலைப்பூவில் பார்த்ததைத்தான் பகிர்ந்தேன். அதை திரியிலேயே நான் குறிப்பிட்டிருக்கிறேன். நான் பார்த்த ’என்னுள்ளே’ வலைப்பூ ஆசிரியரின் பெயரும் ’மணி’தான். ஒரு வேளை அவரே பிற தளங்களிலும் பகிர்ந்திருக்கக்கூடும் என்றெண்ணுகிறேன்.

http://ennuley.blogspot.com/2009/10/blog-post_14.html