PDA

View Full Version : தேவன் மகனாக இருந்தாலும் ...



Ravee
25-12-2009, 03:18 PM
தேவன் மகனாக இருந்தாலும் ...

http://www.skyzaa.com/gallery/out.php/i759_jesussmall.JPG


தேவன் மகனாக இருந்தாலும்

மனிதனாக பிறக்கும் போது

எம்மை போலவே பிறந்தீர்

எமக்கு உண்டான துயரங்கள்

யாவும் தாங்கி கொண்டிர்

அநீதியை கண்டு காணாமல் போகும்

சாதாரண வாழ்க்கை வாழவில்லை

அன்பு என்றால் என்ன என்று

சொல்லி போகாமல் வாழ்ந்தும் காட்டினீர்

அவர் பாவங்களை

தாங்கள் ஏற்று நல்வழி தந்தீர்

இருந்தும் என் செய்ய

எங்கள் மக்கள் மாறவில்லை

சிலுவையில் அறைந்தார் உம்மை

உம்மை மட்டும் இல்லை

உம் தத்துவங்களையும்

படித்தவன் முதல் பாமரன் வரை

ஏற்றுக்கொள்ளவில்லை

சமுதாய பிரச்சனையை

வாழும் உரிமையும் இழந்த மனிதர்

நீதி கேட்டு புதைந்து போனார்கள்

உண்மைகளை மறைத்து

உரிமைகளை பறித்து

கொள்ளை அடித்து

கொலைகள் செய்தது ஒரு கூட்டம்

கூட்டணிக்கு சில பேர்

வாய் மூடி பல பேர்

இப்படி மக்களுக்கு நீர்

சிலுவையில் இருந்து என்ன செய்வீர்

உடைத்து எறியுங்கள் உங்கள் சிலுவைகளை

உலகத்துக்கு புரிய வையுங்கள்

அன்பாலே இனிசாதிக்க

அடிப்படையாக ஒன்றும் இல்லை

வலிமையோடு சேர்ந்த வாய்மையே

வாழும் வழி என்று

நாதியற்ற மக்களுக்கு

காட்டுங்கள் ஒரு வழி.

பாரதி
29-12-2009, 02:28 PM
பொறுமை கடலினும் பெரிது என்பது உண்மைதான்.
ஆனால் நாட்டில் நடப்பவை எல்லாம் நாடகம் என்பதையே காட்டுகிறது.
இப்போதைய தேவை உடனடி தீர்வு என்ற மக்களின் ஆதங்கம் உங்கள் கவிதையில் பளிச்சிடுகிறது.
தொடர்ந்தெழுதுங்கள் நண்பரே.