PDA

View Full Version : ஒரு நிமிடக் கதை- 'தீர்ப்பு'கலையரசி
25-12-2009, 03:06 PM
அவசரமாகக் கிளம்பிக் கொண்டு இருந்த நீதிபதி கணேசனை, மகனுடைய அலறல் 'டென்ஷன்'படுத்தியது. தன் அக்காவின் கையிலிருந்த பொம்மை தான் வேண்டும் எனறு அடம் பிடித்து அழுது கொண்டு இருந்தான் அவன்.

"தம்பிக்கு அந்தப் பொம்மையைக் கொடுத்துத் தொலைச்சா தான் என்ன?"
என்று தம் பெண்ணின் முதுகில் ஓங்கி ஓர் அறை வைத்தார் அவர்.

"அந்தப் பொம்மை ஒடைஞ்சிருக்குப்பா! ஆணி, தம்பி கையைக் கிழிச்சுடும்னு தான் கொடுக்கலே. அதைப் புரிஞ்சுக்காம என்னை அடிச்சிட்டீங்க. பரவாயில்ல...கோர்ட்டிலேயும் இது மாதிரி என்ன ஏதுன்னு விசாரிக்காம, யாராவது நல்லவருக்குத் தண்டனை கொடுத்திடாதீங்க!" என்று விசும்பினாள் அவள்.

தம் பெண் முன் குற்றவாளியாகத் தலைகுனிந்து நின்றார் நீதிபதி கணேசன்!

நன்றி:- ஆனந்த விகடன்.

aren
25-12-2009, 04:13 PM
ஒரு நீதிபதி பொம்மையை கொடுக்கவில்லை என்பதால் போட்டு அடிப்பாரா? நம்ம முடியாத கதை.

இது ஆனந்தவிகடனில் வந்ததா?

குணமதி
26-12-2009, 05:34 AM
இப்படியும் நடக்கக்கூடும்!

கலையரசி
26-12-2009, 10:02 AM
ஒரு நீதிபதி பொம்மையை கொடுக்கவில்லை என்பதால் போட்டு அடிப்பாரா? நம்ம முடியாத கதை.

இது ஆனந்தவிகடனில் வந்ததா?

பின்னூட்டம் எழுதிய ஆரென் அவர்களுக்கு நன்றி.
இது நான் எழுதி ஆனந்த விகடனில் வெளிவந்தது. அதனால் கதை பகுதியில் இதைப் பதிந்ததாக ஞாபகம். ஆனால் வேறு யாரோ எழுதியது இது என்று நினைத்துப் 'படித்ததில் பிடித்தது' பகுதிக்கு மாற்றியிருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
நீதிபதியாக இருந்தாலும் வேறு யாராக யிருந்தாலும் காலை நேரத்தில் கிளம்பும் அவசரத்தில் குழந்தைகள் அடம் செய்து அழும் போது எதையும் விசாரிக்காமல் ஓர் அடி கொடுப்பதுண்டு.
அவரும் ஒரு மனிதர் தானே. எனவே பெரும்பாலான வீடுகளில் இது நடக்கக் கூடியதே.

கலையரசி
26-12-2009, 10:04 AM
இப்படியும் நடக்கக்கூடும்!

பின்னூட்டம் எழுதிய குணமதி அவர்களுக்கு நன்றி.

பாரதி
26-12-2009, 03:47 PM
பக்கம் பக்கமாய் எழுதி இருப்பதைக் காட்டிலும், இது போன்ற சில வரிக்கதைகள் மனதில் நன்றாகவே தைக்கின்றன; மனதையும் தைக்கின்றன.
நீதிபதி என்றாலும் கூட எல்லா நேரங்களிலும் நீதியை கடைபிடிப்பதில்லை என்பது முற்றிலும் உண்மை. எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு என்ற குறளாக அம்மகளின் குரல் ஒலிக்கிறது. பாராட்டுகிறேன் நண்பரே.

மஞ்சுபாஷிணி
27-12-2009, 04:39 AM
காலை நேர டென்ஷனில் இது ரொம்பவே சகஜம்.. சோ ஸ்வீட் குட்டிப்பெண் அழகா அப்பாவுக்கு அறிவுரை சொன்னது. இப்ப ஆபிசுக்கு கிளம்பிட்டு இருக்கும்போது மகனின் ஸ்கூல் பேக்ல எல்லாம் இருக்கான்னு செக் பண்ணும்போது ரப்பர் மிஸ்ஸிங். புக் ஒன்னு எடுத்துவைக்கலை. பென்சில் ஷார்ப் செய்யலை... அவசர நேரத்தில் மகன் கஞ்சி குடிச்சிட்டு இருக்கும்போது எங்க ரப்பர் தேடுன்னு அவனையும் டென்ஷன் செய்து அவன் கஞ்சியை கீழ கொட்டி அம்மாவுக்கு கோபம் வந்து குழந்தையை அடித்து அழவெச்சு எல்லாரும் டென்ஷன் ஆகி.....

கதை குட்டி ஆனால் அர்த்தம் பொதிந்தது. வாழ்த்துக்கள்...

சிவா.ஜி
27-12-2009, 05:25 AM
ஒவ்வொரு முறையும் தீர்ப்பை எழுதும்போது நிச்சயம் மகளின் இந்த வார்த்தை அந்த நீதிபதியின் மனதில் நிச்சயம் வந்து போகும். நிரபராதிகளுக்குத் தங்கள் பக்கத்து நியாயத்தை விளக்க சந்தர்ப்பம் கிடைக்கும்.

நல்ல கதை. வாழ்த்துகள் கலையரசி.

கலையரசி
27-12-2009, 03:37 PM
பக்கம் பக்கமாய் எழுதி இருப்பதைக் காட்டிலும், இது போன்ற சில வரிக்கதைகள் மனதில் நன்றாகவே தைக்கின்றன; மனதையும் தைக்கின்றன.
நீதிபதி என்றாலும் கூட எல்லா நேரங்களிலும் நீதியை கடைபிடிப்பதில்லை என்பது முற்றிலும் உண்மை. எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு என்ற குறளாக அம்மகளின் குரல் ஒலிக்கிறது. பாராட்டுகிறேன் நண்பரே.

பாரதி அவர்களின் பாராட்டுக்கு நன்றி

கலையரசி
27-12-2009, 03:39 PM
காலை நேர டென்ஷனில் இது ரொம்பவே சகஜம்.. சோ ஸ்வீட் குட்டிப்பெண் அழகா அப்பாவுக்கு அறிவுரை சொன்னது. இப்ப ஆபிசுக்கு கிளம்பிட்டு இருக்கும்போது மகனின் ஸ்கூல் பேக்ல எல்லாம் இருக்கான்னு செக் பண்ணும்போது ரப்பர் மிஸ்ஸிங். புக் ஒன்னு எடுத்துவைக்கலை. பென்சில் ஷார்ப் செய்யலை... அவசர நேரத்தில் மகன் கஞ்சி குடிச்சிட்டு இருக்கும்போது எங்க ரப்பர் தேடுன்னு அவனையும் டென்ஷன் செய்து அவன் கஞ்சியை கீழ கொட்டி அம்மாவுக்கு கோபம் வந்து குழந்தையை அடித்து அழவெச்சு எல்லாரும் டென்ஷன் ஆகி.....

கதை குட்டி ஆனால் அர்த்தம் பொதிந்தது. வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்கு நன்றி மஞ்சுபாஷினி.

கலையரசி
27-12-2009, 03:55 PM
ஒவ்வொரு முறையும் தீர்ப்பை எழுதும்போது நிச்சயம் மகளின் இந்த வார்த்தை அந்த நீதிபதியின் மனதில் நிச்சயம் வந்து போகும். நிரபராதிகளுக்குத் தங்கள் பக்கத்து நியாயத்தை விளக்க சந்தர்ப்பம் கிடைக்கும்.

நல்ல கதை. வாழ்த்துகள் கலையரசி.

முன்பெல்லாம் குழந்தைகளுக்குள் சண்டை என்றால் என்ன பிரச்சினை என்றெல்லாம் விசாரிக்காமல், 'ஏன் தம்பியை அழ உடுறே?' என்று மட்டும் கேட்டு மூத்த குழந்தைக்குத் தான் அடிகொடுப்பார்கள். பெரிய குழந்தை அடியை வாங்கிக் கொண்டு அழும். பெற்றோரை எதிர்த்துப் பேசாது. ஆனால் இப்போதோ தவறு செய்யாத குழந்தையைத் தண்டித்தால் பெற்றோரின் தவறைச் சுட்டிக்காட்டி அறிவுரை சொல்லும் அளவிற்குக் குழந்தைகளுக்கு வயதுக்கு மீறிய அறிவு இருக்கிறது.
வாழ்த்துக்கு சிவா.ஜி அவர்களுக்கு நன்றி.

சுகந்தப்ரீதன்
10-01-2010, 08:04 AM
மனிதர்கள் சிறியவர்களாக இருந்து பெரியவர்கள் ஆனாலும் காலம் முழுக்க குழந்தைகளிடம் கத்துக்க இன்னும் நிறைய விடயங்கள் இருக்கு..!!

அதில் ஒரு விடயத்தை கொண்டு ஒரு நிமிட கதையை தந்த கதாசிரியரின் திறமைக்கு பாராட்டுக்கள்..!!:icon_b:

செல்வா
10-01-2010, 07:21 PM
கதையைப் படித்துவிட்டு அடுத்த மின்னிதழுக்கு ஆச்சுண்ணு பார்த்தா...
ஆனந்த விகடன்ல வந்துடுச்சுண்ணுட்டீங்க...

நச்சுனு சொல்லிச் சென்ற கதை...
நல்லாருக்கு.