PDA

View Full Version : கடைசிக் கவிதை



கலையரசி
24-12-2009, 12:33 PM
'பிரெஞ்சு இலக்கிய வரலாறு' என்ற புத்தகத்திலிருந்து எனக்குப் பிடித்தவற்றுள் ஒரு சிறு பகுதியைக் கீழே எழுதியுள்ளேன்.
'பிரெஞ்சு இலக்கிய வரலாற்றைத் தமிழில் கூறும் முதல் நூல்' எனும் சிறப்புப் பெற்ற இந்நூலின் ஆசிரியர்:- சொ.ஞானசம்பந்தன்.
வெளியீடு:- மெய்யப்பன் பதிப்பகம்

இனி புத்தகத்திலிருந்து:-
பக்கம்:- 162

கான்ஸ்டாண்டிநோப்பிள் நகரில் பிரெஞ்சுத் தூதருக்கும் கல்வியிற் சிறந்த கிரேக்கப் பெண்மணி ஒருவருக்கும் புதல்வராய்த் தோன்றிய ஷெனிஏ சிறு வயதிலேயே பெற்றோருடன் பாரீசை அடைந்தார்.
பாரீசைப் பெரும்புரட்சி அல்லோலகல்லோலப்படுத்திய போது பணியை விடுத்து வந்து புரட்சியாளருடன் ஒத்துழைத்தார். ஆனால் மிதவாதி என்பதால் தீவிரவாதிகளால் கைது செய்யப்பட்டு 1794இல் கொலையுண்டார்.
எந்த நேரமும் தலை வெட்டும் மேடைக்கு அழைக்கப்படலாம் என்ற நிலையில் அவர் பாடிய 88 அடி கொண்ட ஒரு கவிதையின் முதல் 24 அடிகளின் தமிழாக்கத்தைப் படித்துப் பாருங்கள்.


'கடைசிக் கதிரைப் போல்'




"அழகிய தொருபகலின் அந்தத்துக்கு உயிரூட்டும்

கடைசிக் கதிரொளியும் கடைசிமென் காற்றும்போல்

கொலைமேடைக் கீழிருந்து கவிதைதனைப் புனைவதற்கு

இன்னமும் நான் முயல்கின்றேன்.

விரைவில் என்முறை வந்து விடலாம்.

பளபளக்கும் எனாமல் டயலின் மேலே

அறுபது சுவடுகளே அமைந்துள்ள பாதையில்

வட்டமாக உலாவும் மணிமுள்

ஒலியெழுப்பும் தன்னுடைய காலடியை வைக்குமுன்

கல்லறை உறக்கம் என்இமை தம்மை

அழுத்தக் கூடும்.

இந்தப்பயங்கரச் சுவர்களுக்கு இடையில்

ஆவிகளைத் திரட்டும் கொடுங்கூற் றுவனின்

செய்தியைத் தாங்கித் தூதன் ஒருவன்

பழிப்புக்கு ஆளான படைவீரர் புடைசூழ

வந்தென் பெயரைக் கூவியே இந்த

நீண்ட ஒளியற்ற நடைப்பா தைகளை

நடுங்க வைக்கலாம்,

நானெழுதத் தொடங்கும் இந்தக் கவிதையடி

தன்னிறுதி அசையை அடைவதற் குள்ளே."

பாரதி
26-12-2009, 02:52 PM
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.
நமது மன்ற உறுப்பினர் ஞான சம்பந்தனும், இந்த நூலாசிரியர் ஞான சம்பந்தனும் ஒருவரா...?

கலையரசி
27-12-2009, 03:00 PM
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.
நமது மன்ற உறுப்பினர் ஞான சம்பந்தனும், இந்த நூலாசிரியர் ஞான சம்பந்தனும் ஒருவரா...?

பின்னூட்டத்திற்கு நன்றி பாரதி அவர்களே!
ஆமாம். இருவரும் ஒருவரே!

பாரதி
28-12-2009, 03:34 PM
ஆஹா....! என் வினாவிற்கு விடையளித்தமைக்கு நன்றி.

படிக்க எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது!
இத்தகைய திற்மைசாலிகள் நம் மன்றத்தில் இணைந்திருப்பது பெருமைக்குரிய விடயமாகும்.