PDA

View Full Version : எனக்கான கவி நீ *1*



யாழ்_அகத்தியன்
23-12-2009, 08:02 PM
இறந்தால் சொர்க்கம் எப்படி
இருக்கும் என்பதை
வாழும்போது
தந்து கொண்டிருப்பவள் நீ

*

யார் சொன்னது
கண்பட்டால்
வாழமுடியாது என்று

என்னவள் கண்
பட்டதால்தானே

வாழ்கிறது
என் கவிதைகள்

*

உன் மூக்குத்தி மின்னுவதில்
தெரிகிறது வானவில்லின்
அழகு

*

உன் பாதச்சுவடெங்கும்
தேங்கிய மழை நீரில்
உன் முகம்
காட்டுகிறது நிலா

*
வாடாத உன் புன்னகை
கண்டு பொறாமைப்படுகிறது
பூக்கள் எல்லாம்

*

உன் வருடலுக்காய்
ஏங்குகிறது
என் நரைமுடிகள்

-யாழ்_அகத்தியன்

ஜனகன்
23-12-2009, 08:22 PM
"எனக்காக கவி நீ"என்கின்ற கவிதை வரிகள் அற்புதம். இந்த சம்பவம் மனைவியை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும் உண்மை உணர்வு. கவிதையை படிக்கும் போது வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள்.

ஆதி
24-12-2009, 02:47 AM
வாங்க யாழ்_அகத்தின், தங்களின் மீள் வருகை மகிழ்ச்சியை அளிக்கிறது, உங்க காதல் கவிதைகளை ரொம்ப மிஸ் பண்ண நபர்களில் நானும் ஒருவன்..

யார் சொன்னது
கண்பட்டால்
வாழமுடியாது என்று

என்னவள் கண்
பட்டதால்தானே

வாழ்கிறது
என் கவிதைகள்

இந்த வரி மிக அழகான வரி, அட உண்மைதானில்ல என்று யோசிக்க வைத்த வரி..

பாராட்டுக்கள், தொடர்ந்து இணைந்திருங்கள்..

குணமதி
24-12-2009, 03:24 AM
அகவை மூத்தாலும் அன்புக்கு மாற்றமில்லை!

என்று கூறும் உணர்வு வெளிப்பாட்டு வீச்சு!

நன்று.

கா.ரமேஷ்
24-12-2009, 06:11 AM
அருமையான கவிதைகள்... வாழ்த்துக்கள்..

muthuvel
24-12-2009, 07:09 AM
இறந்தால் சொர்க்கம் எப்படி
இருக்கும் என்பதை
வாழும்போது
தந்து கொண்டிருப்பவள் நீ

*

யார் சொன்னது
கண்பட்டால்
வாழமுடியாது என்று

என்னவள் கண்
பட்டதால்தானே

வாழ்கிறது
என் கவிதைகள்

*

உன் மூக்குத்தி மின்னுவதில்
தெரிகிறது வானவில்லின்
அழகு

*

உன் பாதச்சுவடெங்கும்
தேங்கிய மழை நீரில்
உன் முகம்
காட்டுகிறது நிலா

*
வாடாத உன் புன்னகை
கண்டு பொறாமைப்படுகிறது
பூக்கள் எல்லாம்

*

உன் வருடலுக்காய்
ஏங்குகிறது
என் நரைமுடிகள்

-யாழ்_அகத்தியன்

மிக அருமையான கவிதை

யாழ்_அகத்தியன்
24-12-2009, 07:02 PM
வாழ்த்துக்கள் கூறிய அத்தனை அன்பு உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் நத்தார் புதுவருட வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

செல்வா
05-01-2010, 10:03 AM
அருமையான கவிதை வாழ்த்துக்கள் கவிஞரே...