PDA

View Full Version : குறள் யாப்போம் - ஈறு தொடங்கி!



Pages : [1] 2 3 4

குணமதி
23-12-2009, 02:42 PM
குறள் யாப்போம்!


அன்பு நண்பர்களே!

யாப்பு அறிந்தவர்கள் எழுதிப் பழகவும் அறிந்து கொள்ள விரும்புவாரை ஊக்கப்படுத்தவும் குறள் எழுதிப் பழகலாம் என்று தொடங்குகிறேன்.

ஈறுதொடங்கி என்றால் அந்தாதி என்று பலருக்கும் தெரிந்திருக்கும்.

முதலில் எழுதப்படும் குறளின் கடைசி எழுத்தையோ, கடைசிச் சொல்லையோ/ சொற்களையோ, ஈற்றடியையோ தொடக்கமாக வைத்து அடுத்தவர் ஒரு குறளை எழுத வேண்டும்.

குறளில் தவறு இருந்தால் தெரிந்தவர்கள் திருத்தலாம்.

இதனால் பயற்சி பெற முடியும் என்று கருதுகிறேன்.

முதலில் நான் எழுதும் குறள் :

நல்ல கருத்தை நனிதேர்ந்து யாத்திடுவோம்

வெல்லும் குறள்நாம் விரைந்து.

அடுத்துத் தொடங்குகிறவர் து- என்ற எழுத்தையோ, விரைந்து என்ற சொல்லையோ, குறளில் விரைந்து எனபதையோ, வெல்லும் குறளில் விரைந்து எனபதையோ தொடக்கமாக வைத்து அடுத்த குறளை எழுதவேண்டும்.

அடிப்படை இலக்கணம் தமிழ்மன்றக் கவிதைப் பட்டறையில் விளக்கமாக அளிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைக் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.

பா.சங்கீதா
28-03-2010, 09:56 AM
எனக்கும் குறள் எழுத ஆசைதான்
அனால் எழுத முடியாமைக்கு மன்னிக்கவும்:(

ஜனகன்
28-03-2010, 10:44 AM
குணமதி.. நல்லதொரு திரி ஆரம்பித்து இருக்கின்றீர்கள். குறள் தெரிந்த எல்லோரும் நிச்சயம் இதை விரும்புவாள்கள்.
தவிர தெரியாதவர் அறிந்து கொள்ளவும்,திருத்தி கொள்ளவும் உதவியாக இருக்கும்.

எனக்கு மிகவும் பிடித்த திரி. என்னால் இயன்றவரை பங்கு கொள்வேன்.

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

அடுத்து தொடர வேண்டுய சொல்< சொல்லு அல்லது வல்லா அல்லது பெறி

KAMAKSHE
28-03-2010, 10:58 AM
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

ஆதி
29-03-2010, 07:23 AM
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

வணக்கம் காமாச்சி அவர்களே, தங்களுடைய ஆர்வம் கண்டு மிக மகிழ்ச்சி..

இந்த திரியை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்..

உங்களுடைய சொந்த குறள் வெண்பாவை நீங்கள் இங்கு இயற்ற வேண்டும்..

அடுத்த முறை முயற்சியுங்கள்.. வாழ்த்துக்கள்..

தாமரையண்ணா, உங்க கண்ணில் இத்திரி பட்டால் நீங்களும் இதற்கு எண்ணையூற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..

M.Jagadeesan
29-09-2010, 10:51 AM
நல்ல முயற்சி.என் பாராட்டுக்கள்.

Nivas.T
29-09-2010, 11:23 AM
குறளை இயற்றி தக்கப் பொருளும் தந்தால்
இன்னும் பயனுள்ளதாய் இருக்கும் என்று நினைகிறேன்

M.Jagadeesan
29-09-2010, 12:28 PM
துன்பங்கள் ஆயிரம் படைகொண்டு வந்தாலும்
இன்புற்று இருக்கப் பழகு.

DURAIAN
17-01-2011, 11:35 AM
பழக இனிக்கும் ; விலகத் துடிக்கும்;
உலகமெங்கும் காதல் இயல்பு

DURAIAN
17-01-2011, 11:38 AM
ஆயிரம் படைகொண்டு .

’தளை’ சந்தேகம் எனக்கு அய்யா

M.Jagadeesan
17-01-2011, 03:30 PM
’தளை’ சந்தேகம் எனக்கு அய்யா

வெண்பா இலக்கணத்தை மனதில் கொண்டு எழுதவில்லை.புதுக்கவிதை என்று
எண்ணிக்கொள்ளுங்கள்

கௌதமன்
17-01-2011, 03:39 PM
குறள் நிரைபு அல்லது நேர்பு (பிறப்பு அல்லது காசு) அசையில் முடியும் என்று படித்திருக்கிறேன். அங்ஙனமெனில் அது அடுத்தக் குறளின் துவக்கமாக அமையுமா? என்க்குத் தெரியவில்லை. தமிழறிஞர்கள் விளக்க முன் வரவும்.

CEN Mark
17-01-2011, 03:48 PM
குறள் நிரைபு அல்லது நேர்பு (பிறப்பு அல்லது காசு) அசையில் முடியும் என்று படித்திருக்கிறேன். அங்ஙனமெனில் அது அடுத்தக் குறளின் துவக்கமாக அமையுமா? என்க்குத் தெரியவில்லை. தமிழறிஞர்கள் விளக்க முன் வரவும்.

இலக்கணப்படி பார்த்தால் நீங்கள் சொல்வது சரிதான். அவர்களும் மரபு மீறுதலை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். எனவே இந்த திரி அணைந்ததாக கருதலாமா?

கௌதமன்
17-01-2011, 04:03 PM
இலக்கணப்படி பார்த்தால் நீங்கள் சொல்வது சரிதான். அவர்களும் மரபு மீறுதலை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். எனவே இந்த திரி அணைந்ததாக கருதலாமா?

மன்றத்தோழர்கள் அணைய விடமாட்டார்கள். அதுதான் கடைசி எழுத்துவரை வாய்ப்பு தந்து இருக்கிறார்களே. நான் யாப்பு கற்றுத் தேர்ந்து, பயிற்சி பெற்று களத்தில் குதிக்கிறேன். அதுதான் அடித்துத் திருத்துவதற்கு மன்றத் தோழர்கள் இருக்கிறார்களே.

DURAIAN
18-01-2011, 04:49 AM
துன்பங்கள் ஆயிரம் படைகொண்டு வந்தாலும்
இன்புற்று இருக்கப் பழகு.

துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்துதான் வந்தாலும்
இன்புற்(று) இருக்கப் பழகு

ஒரு வார்த்தை மாற்றத்தில் வெண்பாவில் குறள் :)

அய்யா........
அனுமதியின்றி மாற்றியமைக்கு மன்னிக்கவும்

M.Jagadeesan
18-01-2011, 05:17 AM
துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்துதான் வந்தாலும்
இன்புற்(று) இருக்கப் பழகு

ஒரு வார்த்தை மாற்றத்தில் வெண்பாவில் குறள் :)

அய்யா........
அனுமதியின்றி மாற்றியமைக்கு மன்னிக்கவும்

நன்றி! இனி இலக்கணப்படி குறள் எழுத முயற்சி செய்கிறேன்.

M.Jagadeesan
18-01-2011, 10:46 AM
காதல் இயல்பு துயரம் தருவது
ஆதலால் காதல் தவிர்.

M.Jagadeesan
19-01-2011, 01:27 AM
காதல் தவிர்த்த திருமணம் எல்லாமே
பாதை விலகுவது இல்.

குணமதி
19-01-2011, 02:45 AM
அருமை!

யாப்பறியும் நோக்கத்திலேயே இதைத் தொடங்கியதால், பிழைகண்டால் தெரிந்தவர்கள் திருத்தி உதவுங்கள்!

தொடர்வது கட்டாயம் பயிற்சிக்கு உதவும்.

ஐயம் எழுந்தால் கேளுங்கள்; தெரிந்தவர்கள் தக்க விடை அளிப்பார்கள்.

இனி, அடுத்த குறள் -

இயல்பாய்த் தமிழை இனிக்க எழுத
முயலற் கிதுவேநல் வாய்ப்பு.

குணமதி
19-01-2011, 02:52 AM
காதல் தவிர்த்த திருமணம் எல்லாமே
பாதை விலகுவது இல்.

அருமையான குறள்!
அடுத்தது -
இல்லறந் தன்னில் எடுப்புற வாழ்ந்திடும்
நல்லபல காதலரிங் குண்டு.

குணமதி
19-01-2011, 02:56 AM
குறள் நிரைபு அல்லது நேர்பு (பிறப்பு அல்லது காசு) அசையில் முடியும் என்று படித்திருக்கிறேன். அங்ஙனமெனில் அது அடுத்தக் குறளின் துவக்கமாக அமையுமா? என்க்குத் தெரியவில்லை. தமிழறிஞர்கள் விளக்க முன் வரவும்.

நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டில்தான் முடியும்.

தொடக்கத்தை மறுபடி ஒருமுறை படியுங்கள் கெளதமன், அடுத்த குறளை எப்படித் தொடங்குவது என்று தெளிவாகும். நன்றி.

M.Jagadeesan
19-01-2011, 02:58 AM
என்னுடைய குறள் "இல்" லில் முடிந்துள்ளது.தங்களது குறள் "இல்"லில்
தொடங்காமல் "இயல்பாய்" என்று தொடங்குகிறதே!என்னுடைய அடுத்த
குறள்

இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளே இல்லின் விளக்கு.

குணமதி
19-01-2011, 03:04 AM
என்னுடைய குறள் "இல்" லில் முடிந்துள்ளது.தங்களது குறள் "இல்"லில்
தொடங்காமல் "இயல்பாய்" என்று தொடங்குகிறதே!என்னுடைய அடுத்த*
குறள்

இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளே இல்லின் விளக்கு.

பொறுத்துக்கொள்க!
உங்கள் குறளைப் பார்ப்பதற்கு முன் எழுதியது அது.

சரி,

இனி, அடுத்தது -

விளக்கமாய்க் கூறி விளக்கமிலாப் பேச்சும்
விளங்கிக் கொளலாம் அறிவு.

M.Jagadeesan
19-01-2011, 03:43 AM
அறிவென்னும் செல்வம் அகத்தே இருக்க
பிறிதொன்றும் வேண்டாம் எனக்கு.

M.Jagadeesan
19-01-2011, 05:15 AM
எனக்கே எனக்கென்று சேர்த்தவை எல்லாம்
உனக்கே கொடுப்பேன் இனி.

குணமதி
19-01-2011, 12:03 PM
இனியுமீ ழத்தமிழர் இன்னல் களையக்
கனிவிலையே உன்மனம் கல்.

M.Jagadeesan
19-01-2011, 12:27 PM
கல்மனம் யாருக்கும் இங்கில்லை டெல்லியின்
சொல்லொன்றே இன்னல் களையும்.

M.Jagadeesan
20-01-2011, 02:44 PM
களையும் பயிரும் ஒருங்கே வளர்ந்தால்
விளையும் பயிருக்குக் கேடு.

M.Jagadeesan
20-01-2011, 02:53 PM
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் நாட்டினிலே
காடுவெட்ட பொய்க்கும் மழை.

M.Jagadeesan
20-01-2011, 03:02 PM
மழையே அமிழ்தம் மழையே கடவுள்
மழையை வணங்குதல் நன்று.

குணமதி
20-01-2011, 03:33 PM
மழையே அமிழ்தம் மழையே கடவுள்
மழையை வணங்குதல் நன்று.

நன்று விளைவதிலை நாட்டில் இலவசத்தால்
என்றும் மடிவளரும் எண்ணு.

M.Jagadeesan
20-01-2011, 03:58 PM
எண்ணுவேன் ஏழைகளின் துன்பத்தை நாடோறும்
உண்ணவே இல்லை உணவு.

M.Jagadeesan
21-01-2011, 10:59 AM
உணவுக்கு ஏங்குபவன் ஏழை தினமும்
பணத்துக்கு ஏங்குபவன் பாவி.

DURAIAN
21-01-2011, 03:34 PM
பாவி பிறரையும் உன்னைப்போல்; செய்யாரை
பாவியெனத் தூற்றும் உலகு

குணமதி
21-01-2011, 04:24 PM
உலகுள மாந்தரிங்(கு) ஓர்நிகர் உணரா
இலகலில் மாக்கள் இகழ்.

M.Jagadeesan
21-01-2011, 09:49 PM
இகழ்ச்சி புகழ்ச்சி இரண்டையும் கண்டு
மகிழ்வதே சான்றோர் குணம்.

DURAIAN
22-01-2011, 12:34 PM
குணமதைக் குப்பையிலும் பாழும் பணமதைப்
பந்தியிலும் வைக்கும் உலகு

குணமதி
22-01-2011, 03:27 PM
உலகிற் கருத்தை உருவாக்கல் ஆகும்
அலகிலா ஆற்றலா ரால்.

M.Jagadeesan
22-01-2011, 04:24 PM
ஆலின் கிளையெடுத்து நித்தமும் தேய்த்திட்டால்
பாலின் நிறம்பெறும் பல்.

குணமதி
23-01-2011, 01:42 AM
ஆலின் கிளையெடுத்து நித்தமும் தேய்த்திட்டால்
பாலின் நிறம்பெறும் பற்கள்.

ஈற்றுச்சீர் ஓரசைச்சீராக மாற்றி அமைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

M.Jagadeesan
23-01-2011, 01:56 AM
ஈற்றுச்சீர் ஓரசைச்சீராக மாற்றி அமைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

தாங்கள் கூறியதுபோல ஓரசைச்சீராக மாற்றி அமைத்துவிட்டேன்.

கீதம்
23-01-2011, 09:28 AM
குணமதி அவர்களும் ஜெகதீசன் அவர்களும் மாறி மாறி குறள் யாப்பது கண்ணுக்கும் கருத்துக்கும் அற்புத விருந்தளிக்கிறது. தொடரட்டும் உங்கள் குறள்களின் அணிவகுப்பு. வசப்படும்போது நானும் கலந்துகொள்கிறேன். இருவருக்கும் என் பாராட்டுகள்.

புதியவர் துரையன் அவர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. அவருக்கும் என் பாராட்டுகள்.

M.Jagadeesan
23-01-2011, 09:36 AM
கீதமும் கலந்து கொள்ளலாமே!

கீதம்
23-01-2011, 09:42 AM
கீதமும் கலந்து கொள்ளலாமே!

தமிழிலக்கணம் அறியாதவள் நான். நான் இன்னும் நிறைய பயிற்சி பெறவேண்டியுள்ளது ஐயா. உங்களைப் போன்றோரிடமிருந்தே ஓரளவு கற்றுக்கொண்டிருக்கிறேன். உங்கள் ஊக்கமிகு வார்த்தைக்கு நன்றி.

குணமதி
23-01-2011, 03:10 PM
தமிழிலக்கணம் அறியாதவள் நான். நான் இன்னும் நிறைய பயிற்சி பெறவேண்டியுள்ளது ஐயா. உங்களைப் போன்றோரிடமிருந்தே ஓரளவு கற்றுக்கொண்டிருக்கிறேன். உங்கள் ஊக்கமிகு வார்த்தைக்கு நன்றி.

அடிப்படையான இலக்கணக் கூறுகளை நீங்கள் அறிவீர்கள்.
தயங்காது எழுதுங்கள்.
பிழை நேர்ந்தால் திருத்திக் கொண்டு எழுதலாம்.
இங்கு எழுதப் பயில்கிறோம். அவ்வளவே.
நன்றி.

குணமதி
23-01-2011, 03:22 PM
ஆலின் கிளையெடுத்து நித்தமும் தேய்த்திட்டால்
பாலின் நிறம்பெறும் பல்.

பல்கிப் பெருகும் ஞெகிழிப் பயன்பாட்டால்
மல்குமுடற் கேடே மதி.

(ஞெகிழி - plastic)

M.Jagadeesan
24-01-2011, 12:25 AM
மதிமுகம் காதலிக்கு என்றுரைத்த சொல்லால்
மதிக்கும் எனக்கும் பகை.

குணமதி
24-01-2011, 01:20 PM
பகையும் புகையும் பழகியார் மாய்க்கும்
தகையழி கேடாம் தவிர்.

கீதம்
24-01-2011, 11:32 PM
தவிர்க்கும் உறவன்று தாய்தந்தை என்றுணர்ந்து
அணைக்கும் அகமொன்றே மகவு.

ஜெகதீசன் அவர்களும் குணமதி அவர்களும் கொடுத்த ஊக்கத்தால் முயன்று எழுதிவிட்டேன். சரியா என்று பார்த்து சொல்லுங்கள். இல்லையெனில் எப்படித் திருத்தவேண்டும் என்பதையும் சொல்லுங்கள். இருவருக்கும் என் அகமார்ந்த நன்றி.

M.Jagadeesan
25-01-2011, 01:55 AM
தவிர்க் கும் உற வன் று தாய் தந் தை என் றுணர்ந் து
நிரை நேர் நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர் நிரை நேர்
புளிமா புளிமாங்காய் தேமாங்காய் கூ விளங் காய்

அணைக்கும் அக மொன்றே மக வு.
நிரை நேர் நிரைநேர்நேர் நிரைநேர்
புளிமா புளிமாங்காய் பிறப்பு

மா முன் நிரை
விள முன் நேர்
காய் முன் நேர் என்று வரவேண்டும்.
வெண்பாவில் கனிச்சீர் வரக்கூடாது.

இறுதிச்சீர் ஓரசைச் சீராகவோ அல்லது ஈரசைச் சீராகவோ இருக்கலாம்.
நாள்,மலர்,காசு,பிறப்பு என்ற வாய்ப்பாடுகளுள் அடங்கியிருக்கவேண்டும்.
தங்களுடைய குறளில் இரண்டாவது அடியில் முதல் சீரும்,இறுதிச்சீரும்
மாற்றி அமைக்கப்படவேண்டும்.அதை மாற்றும்போது பிற சீர்களும் சிறிது
மாற்றம் பெறும்.திருத்திய குறளைக் காண்க.

தவிர்க்கும் உறவன்று தாய்தந்தை என்றே
அவரைப் பணிவோம் தொழுது.

எதுகை,மோனை தொடை நயங்களோடு, கருத்துச் செறிவும் இருப்பின்
குறள் சிறப்பாக அமையும்.தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்.

கீதம்
25-01-2011, 02:25 AM
தவறு செய்த இடத்தைச் சுட்டிக்காட்டியதோடு திருத்தி எழுதிக்காட்டியமைக்கும் மிகவும் நன்றி ஐயா. அடுத்தமுறை இன்னும் சரியாக எழுத முயல்கிறேன்.

பாரதி
26-01-2011, 08:31 AM
இன்றுதான் இத்திரியை பொறுமையாகப்படித்தேன்.
மிகவும் அருமை.
வெண்பாவை மன்ற உறுப்பினர்கள் கற்றுக்கொள்ள அரிய வாய்ப்பாக இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
நன்றி.


பல்கிப் பெருகும் ஞெகிழிப் பயன்பாட்டால்
மல்குமுடற் கேடே மதி.

(ஞெகிழி - plastic)

ஐயா... நெகிழி என்பதுதான் சரியான சொல்லாகத்தோன்றுகிறது.

M.Jagadeesan
26-01-2011, 12:11 PM
தொழுதுண்டு வாழ்தலினும் தூக்கிலிட்டு சாதல்
பழுதன்று என்பார் உயர்ந்தோர்.

M.Jagadeesan
26-01-2011, 03:20 PM
உயர்ந்தோர் எனப்படுவர் யாரெனின் மக்கள்
துயர்களையத் தன்னுயிர் ஈவோர்.

குணமதி
26-01-2011, 03:55 PM
இன்றுதான் இத்திரியை பொறுமையாகப்படித்தேன்.
மிகவும் அருமை.
வெண்பாவை மன்ற உறுப்பினர்கள் கற்றுக்கொள்ள அரிய வாய்ப்பாக இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
நன்றி.



ஐயா... நெகிழி என்பதுதான் சரியான சொல்லாகத்தோன்றுகிறது.

ஞெகிழி சரியான சொல்லே. ('ஞெ' , 'நெ' வாகத் திரிதல் தமிழில் இயல்பென்பர்.)

தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான அருங்கலைச்சொல் அகரமுதலி (Dictoinary of Technical terms) பக்கம் 769-இல்
plastic - ஞெகிழி; ஞெகிழ்மம் (மூலப்.)
என்று கொடுத்திருப்பதைக் காணலாம்.

M.Jagadeesan
26-01-2011, 11:27 PM
ஈவோரும் இல்லை இரப்போரும் இல்லையெனில்
பாவலர்க்கு இங்கென்ன வேலை.

குணமதி
27-01-2011, 01:27 AM
உயர்ந்தோர் எனப்படுவர் யாரெனின் மக்கள்
துயர்களையத் தன்னுயிர் ஈவோர்.

ஈற்றுச்சீர் ஓரசைச் சீராக அமையவேண்டு மென்பதில் கருத்துச் செலுத்தும்படிக் கேட்டுக்கொள்கின்றேன்.

குணமதி
27-01-2011, 01:34 AM
ஈவோரும் இல்லை இரப்போரும் இல்லையெனில்
பாவலர்க்கு இங்கென்ன வேலை.

ஈற்றுச்சீரை ஓரசைச் சீராக மாற்றியமைக்கும்படிக் கேட்டுக்கொள்கின்றேன்.

M.Jagadeesan
27-01-2011, 02:15 AM
ஈற்றுச்சீர் ஓரசைச் சீராக இருக்கவேண்டும் என்று தாங்கள் வலியுறுத்து
வதன் காரணம் விளங்கவில்லை.திருக்குறளிலேயே ஈரசைச் சீரில் முடி
கின்ற குறட்பாக்கள் பல உள்ளன.அது இயல்பாகவே அமைவது.அதை
மாற்றும் பொழுது எல்லாமே மாற்ற வேண்டியுள்ளது.முடிந்தால் என்னு
டைய குறட்பாவை மாற்றி அமைக்கவும்.

குணமதி
27-01-2011, 03:19 AM
வெண்பாவின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டில் ஓரசைச்சீராக அமையவேண்டுமென்றே யாப்பிலக்கணம் கூறுகிறது.
திருக்குறளில் ஈற்றுச்சீர்கள் அனைத்தும் மேற்கூறியவாறே ஓரசைச்சீர்களாகவே உள்ளன.

மிகச்சிறிய மாற்றத்தில் ஓரசைச்சீர்கள் அமைக்கலாம், இவ்வாறும்!

தொழுதுண்டு வாழ்தலினும் தூக்கிலிட்டு சாதல்
பழுதன்று என்பருயர்ந் தோர்.

உயர்ந்தோர் எனப்படுவர் யாரெனின் மக்கள்
துயர்களையத் தன்னுயிரீ வோர்.

ஈவோரும் இல்லை இரப்போரும் இல்லையெனில்
பாவலர்க்கு வேலையிங் கேது?

M.Jagadeesan
27-01-2011, 07:05 AM
குறிலே நெடிலே குறிலிணை குறில்நெடில்
ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி
நேரும் நிரையும் என்றிசிற் பெயரே.

என்பது தொல்காப்பிய நூற்பா.

(எ.கா) கோ,ழி,வேந்,தன் இவை நான்கும் நேரசை.
வெறி,சுறா, நிறம்,குரல் இவை நான்கும் நிரையசை.

தாமரை,புரையுங்,காமர்,சேவடி=ஈரசைகள் வந்தன.
எந்நன்றி,செய்ந்நன்றி=மூவசைகள் வந்தன.

நாள்,மலர்=ஓரசை
காசு,பிறப்பு=ஈரசை

ஈற்றுச்சீர் ஈரசையாக உள்ள சில குறட்பாக்கள்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

வான்நின்று உலகம் வழங்கி வருதலான்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

ஈரசையில் முடிந்துள்ள தாங்கள் இயற்றிய குறட்பாக்கள் வருமாறு:

நல்ல கருத்தை நனிதேர்ந்து யாத்திடுவோம்
வெல்லும் குறள்நாம் விரைந்து.

விளக்கமாய்க் கூறி விளக்கமிலாப் பேச்சும்
விளங்கிக் கொளலாம் அறிவு.

இல்லறந் தன்னில் எடுப்புற வாழ்ந்திடும்
நல்லபல காதலரிங் குண்டு.

இயல்பாய்த் தமிழை இனிக்க எழுத
முயலற் கிதுவேநல் வாய்ப்பு.

நன்று விளைவதிலை நாட்டில் இலவசத்தால்
என்றும் மடிவளரும் எண்ணு.

திரு. துரையன் அவர்கள் எழுதியுள்ள கீழ்க்கண்ட குறட்பாக்கள் ஈரசையில்
முடிந்துள்ளன.

பாவி பிறரையும் உன்னைப்போல் செய்யாரை
பாவியெனத் தூற்றும் உலகு.

குணமதைக் குப்பையிலும் பாழும் பணமதைப்
பந்தியிலும் வைக்கும் உலகு.

பழக இனிக்கும் விலகத் துடிக்கும்
உலகமெங்கும் காதல் இயல்பு.

எனக்குத் தெரிந்தவரையில் வெண்பாவின் ஈற்றுச்சீர் மூவசையில் இருக்கக்
கூடாது என்பதுதான்.

குணமதி
28-01-2011, 04:21 AM
ஐயா,

குறிலே நெடிலே குறிலிணை குறில்நெடில்
ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி
நேரும் நிரையும் என்றிசிற் பெயரே.

- நீங்கள் எடுத்துக்காட்டிய இந்தத் தொல்காப்பிய நூற்பாவிற்கு அடுத்த நூற்பா இது :

இருவகை உகரமொடு இயைந்தவை வரினே
நேர்பும் நிரைபும் ஆகும் என்ப
குறிலிணை உகரம் அல்வழியான.

காது – இதில் ‘கா’ நெடில் தனித்து வந்த நேரசை.
இத்துடன் ‘து’ என்ற குற்றியலுகரம் பொருந்தியதால் நேர்பு அசையாயிற்று.

காற்று – ‘காற்’ நெடில் ஒற்று அடுத்து வந்த நேரசை.
இதனுடன் ‘று’ என்ற குற்றியலுகரம் பொருந்தியதால் நேர்பு அசையாயிற்று.

கன்று – ‘கன்’ குறில் ஒற்று அடுத்து வந்த நேரசை.
இதனுடன் ‘று’ என்ற குற்றியலுகரம் பொருந்தியதால் நேர்பு அசையாயிற்று.

குற்றியலுகரத்திற்கு, மெய்யெழுத்திற்குப் போல அரை மாத்திரையேயாகும்.

குற்றியலுகரம் குறித்து மன்றத்தில் -http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8743 நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, காசு, பிறப்பு என்ற வாய்பாடுகள் நேர்பு, நிரைபு ஆகிய ஓரசைச் சீர்களே.

திருவள்ளுவர் குறளின் ஈற்றசையில் ஓரசைச் சீர் அமையவே எல்லாக் குறள்களையும் தந்துள்ளார்.

உங்கள் ஆர்வத்திற்கும் ஈடுபாட்டிற்கும் நன்றி.

M.Jagadeesan
28-01-2011, 07:31 AM
வீண்வாதம் செய்ததாய் எண்ணாதீர் வித்தகரே
வான்ஆளும் மாமதிக்கும் மாசுண்டு=தேன்போலும்
தித்திக்கும் செந்தமிழின் செய்யுள் இலக்கணத்தை
புத்திக்கு ஏற்றிட்டீர் நன்று.

M.Jagadeesan
28-01-2011, 12:08 PM
ஏதும் அறியாத பிள்ளைப் பருவத்தில்
வேதனைகள் ஏது நமக்கு.

குணமதி
28-01-2011, 03:08 PM
ஏதும் அறியாத பிள்ளைப் பருவத்தில்
வேதனைகள் ஏது நமக்கு.

நமக்கின்பம் நாளும் நனியின்பப் பாக்கள்
அமர்ந்தெழுதல் ஆகும் அறி.

குணமதி
28-01-2011, 03:16 PM
வீண்வாதம் செய்ததாய் எண்ணாதீர் வித்தகரே
வான்ஆளும் மாமதிக்கும் மாசுண்டு=தேன்போலும்
தித்திக்கும் செந்தமிழின் செய்யுள் இலக்கணத்தை
புத்திக்கு ஏற்றிட்டீர் நன்று.

மகிழ்ந்துவந்தேன் அல்லாமல் மற்றேதும் எண்ணவிலை
திகழும்நும் ஆர்வம் தெரிந்து.

M.Jagadeesan
28-01-2011, 10:21 PM
மகிழ்ந்துவந்தேன் அல்லாமல் மற்றேதும் எண்ணவிலை
திகழும்நும் ஆர்வம் தெரிந்து.

நன்றி குணமதி அவர்களே!.

M.Jagadeesan
29-01-2011, 04:12 AM
அறிவற்றார் கண்ணும் உளதாம் அறிவுளோர்க்கு
அச்சாணி அன்னதோர் சொல்.

குணமதி
29-01-2011, 02:31 PM
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே பாரதி
சொல்லிய தெண்ணிச் சுவை.

M.Jagadeesan
30-01-2011, 01:04 AM
சுவையற்ற கூழெனினும் ஏழைக் கமிழ்து
எவர்தரினும் உண்பார் உவந்து.

குணமதி
31-01-2011, 07:01 AM
உவந்தேற்றிப் போற்ற ஒருதலைவ ரேனும்
இவணுண்டோ கட்சிகளில் எண்ணு.

M.Jagadeesan
31-01-2011, 09:44 AM
எண்ணுக நெஞ்சே பெருந்தலைவர் நாடாண்ட
பொற்காலம் போல்வருமா என்று.

குணமதி
31-01-2011, 02:50 PM
என்றுமுள தென்றமிழ் என்றவக் கம்பனின்
பொன்றாப் புகழுரை போற்று.

M.Jagadeesan
31-01-2011, 06:11 PM
போற்றும் புகழுரையும் தூற்றும் இகழுரையும்
காற்றிலே தூக்கி எறி.

குணமதி
01-02-2011, 12:57 PM
எறிகின்ற பந்து எதிர்திரும்பி மீளும்
குறிதீங்கும் அவ்வாறே கொள்.

M.Jagadeesan
01-02-2011, 01:21 PM
கொள்என ஈங்கொருவர் தந்தாலும் ஏற்காது
தள்ளுவதே தக்கோர் செயல்.

குணமதி
01-02-2011, 04:23 PM
செயலென்னும் சொல்லே சிறந்தசொல் செய்யார்
வியல்வாயின் சொல்லெல்லாம் வீண்.

M.Jagadeesan
02-02-2011, 02:37 AM
வீண்பேச்சுப் பேசுகின்ற வீணரைக் காட்டிலும்
பேசாத ஊமையன் மேல்.

குணமதி
02-02-2011, 05:12 PM
மேலிருக்கத் தந்திரமாய் மேல்கீ ழெனப்பிரித்தோர்
போலிகளே மாந்தரெனல் பொய்.

M.Jagadeesan
03-02-2011, 01:51 AM
பொய்யும் களவும் புரியும் கொடியரை
வையம் சுமப்பது வம்பு.

குணமதி
03-02-2011, 03:27 PM
வம்புரைவீண் பேச்சிலுறும் வக்கில் மடியரவர்
தும்பிசுறு சுறுப்புணரார் தூ!

கீதம்
03-02-2011, 08:21 PM
தூற்றுவார் தூற்ற துவளா மனமொன்றே
ஆற்றல் வளர்க்கும் மருந்து.

என் இரண்டாவது முயற்சி. ஏதேனும் முன்னேற்றம் தெரிகிறதா?

M.Jagadeesan
04-02-2011, 03:09 AM
தூற்றுவார் தூற்ற துவளா மனமொன்றே
ஆற்றல் வளர்க்கும் மருந்து.

என் இரண்டாவது முயற்சி. ஏதேனும் முன்னேற்றம் தெரிகிறதா?

வியக்கத்தக்க முன்னேற்றம்! கருத்தும் அருமை! பாராட்டுக்கள்!!
பிழை ஏதும் இல்லை. நண்பர் குணமதி கருத்து சொல்லட்டும்.

கீதம்
04-02-2011, 11:43 PM
வியக்கத்தக்க முன்னேற்றம்! கருத்தும் அருமை! பாராட்டுக்கள்!!
பிழை ஏதும் இல்லை. நண்பர் குணமதி கருத்து சொல்லட்டும்.

தங்கள் பாராட்டும் ஊக்குவிப்பும் என்னை மேலும் ஆர்வத்துடன் பங்குகொள்ளவைக்கிறது. மிக்க நன்றி. குணமதி அவர்களின் கருத்தறியக் காத்திருக்கிறேன்.

குணமதி
05-02-2011, 10:41 AM
தூற்றுவார் தூற்ற துவளா மனமொன்றே
ஆற்றல் வளர்க்கும் மருந்து.

என் இரண்டாவது முயற்சி. ஏதேனும் முன்னேற்றம் தெரிகிறதா?

சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.
அருமையான குறள் வெண்பா.

தொடர்ந்து எழுதிப்பழகினால் எளிதாக இருக்கும்.
பொருள் செறிவோடும், தொடை, அணி நயத்தோடும் எழுத எழுத நமக்கே மகிழ்ச்சி அளிக்கும்.

நல்ல முன்னேற்றம். தொடரும்படிக் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி.

குணமதி
05-02-2011, 10:57 AM
மருந்தாகி மிக்க மகிழ்வளிக்கும் யாண்டும்
பொருந்தின்சொல் போற்றிப் புகல்.

M.Jagadeesan
05-02-2011, 12:06 PM
புகலிடம் நீயன்றி வேறேது கண்ணே
இகழாது ஏற்றுக்கொள் வாய்.

கீதம்
07-02-2011, 07:50 AM
சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.
அருமையான குறள் வெண்பா.

தொடர்ந்து எழுதிப்பழகினால் எளிதாக இருக்கும்.
பொருள் செறிவோடும், தொடை, அணி நயத்தோடும் எழுத எழுத நமக்கே மகிழ்ச்சி அளிக்கும்.

நல்ல முன்னேற்றம். தொடரும்படிக் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி.

உங்கள் ஊக்குவிப்புக்கு மிகவும் நன்றி குணமதி அவர்களே. நிச்சயம் தொடர்ந்து முயற்சி செய்கிறேன்.

குணமதி
08-02-2011, 02:16 AM
புகலிடம் நீயன்றி வேறேது கண்ணே
இகழாது ஏற்றுக்கொள் வாய்.

வாய்ப்பூட்டால் அச்சுறுத்தும் வல்லாண்மை ஆட்சியர்
சாய்தல் உறுதியெனச் சாற்று.

M.Jagadeesan
08-02-2011, 03:38 AM
சாற்றுவேன் எத்திசையும் வள்ளுவரின் நூலொத்த
வேற்றுநூல் இங்கில்லை என்று.

குணமதி
08-02-2011, 03:52 PM
என்று மியற்கை யிகந்த வினைகள்
ஒன்றுஞ் செய்யா தொருவு.

M.Jagadeesan
09-02-2011, 03:40 AM
ஒருஉதவி செய்க எனக்கேட்டு வந்தார்க்கு
ஈருதவி செய்தல் கடன்.

குணமதி
10-02-2011, 07:27 AM
கடனாம் தமிழினக் காளையே ஈழ
நடலை நிலைதீர்க்க நண்ணு.

உமாமீனா
10-02-2011, 07:32 AM
இரும்பு அடிக்கிற பட்டறையில் ஈக்கு என்ன வேலை உடு ஜூட்டு

M.Jagadeesan
10-02-2011, 07:56 AM
நண்ணுவோம் நல்லோரை என்றும் அவருரையை
எண்ணுவதே ஏற்றம் தரும்.

குணமதி
11-02-2011, 01:29 PM
ஏற்றம் தருகின்ற ஈகைக் குணம்போற்றி
நோற்றல் உயர்வாம் நுவல்.

M.Jagadeesan
11-02-2011, 02:05 PM
நுவல்கின்ற சொல்லெல்லாம் சொல்லல்ல நெஞ்சம்
கவலாத சொல்லே சொல்.

குணமதி
12-02-2011, 07:24 AM
நுவல்கின்ற சொல்லெல்லாம் சொல்லல்ல நெஞ்சம்
கவலாத சொல்லே சொல்.


சொல்லே சொல் - திருத்தம் செய்யும்படிக் கேட்டுக்கொள்கின்றேன்.

M.Jagadeesan
21-02-2011, 04:20 AM
சொல்லே சொல் - திருத்தம் செய்யும்படிக் கேட்டுக்கொள்கின்றேன்.

நுவல்கின்ற சொல்லெல்லாம் சொல்லல்ல நெஞ்சம்
கவலாத சொல்லே நவில்.

குணமதி
21-02-2011, 03:29 PM
நவில்தொறும் நல்லறிவு நல்கிடும் நூல்கள்
அவிரொளி தீய்க்கும் மடம்.

M.Jagadeesan
21-02-2011, 04:26 PM
மடங்களில் வாழும் கபடத் துறவி
விடங்கொண்ட பாம்புக்கு நேர்.

குணமதி
22-02-2011, 02:51 PM
நேர்மையிலாத் தன்னலத்தார் நின்றாண்டால் தேயத்தின்
சீர்கெடும்பா ழாகுமெனச் செப்பு.

M.Jagadeesan
22-02-2011, 06:11 PM
செப்பிடவே எண்ணுகிறேன் காதலை செப்பினால்
தப்பாக எண்ணுவளோ பெண்.

குணமதி
24-02-2011, 12:24 AM
பெண்மை சிறப்புறுதல் பேரீகத் தாய்மையொடு
திண்மை மனத்தினால் தேர்.

M.Jagadeesan
24-02-2011, 01:50 AM
தேர்கொடுத்தான் வேள்பாரி முல்லைக்கு நந்தியோ
தன்னுயிரீந் தான்தமிழுக் காய்.

குணமதி
25-02-2011, 02:48 PM
காய்கதிரும் தண்ணிலவும் கண்கண்ட சான்றுகளாம்
ஏய்,சிங்க ளா!தப்பல் ஏது?

M.Jagadeesan
26-02-2011, 12:37 AM
ஏதேனும் செய்து இலங்கைத் தமிழருக்கு
ஆதரவாய் நிற்போம் விரைந்து.

குணமதி
26-02-2011, 06:52 AM
விரைந்தாற்ற வேண்டியதை வீண்காலந் தாழ்த்தல்
நிரந்தறிந்து வீழும் நிலை.

M.Jagadeesan
26-02-2011, 01:45 PM
நிலைகெட்ட பெண்டிர் தொடர்பு உனக்கு
உலைவைக்கும் என்றஞ்சி ஓடு.

குணமதி
27-02-2011, 01:54 AM
தொடர்பு உனக்கு - என்பது சேர்த்தெழுதினால் - புணர்ச்சியில் -, தொடர் புனக்கு என்றாகும்.
முதலடி மூன்றாம் சீர் ஓரசையாகிவிடும்.

அவ்வாறே,
உனக்கு உலைவைக்கும் - என்பது உனக் குலைவைக்கும் என்றாகும்.
திருத்தும்படிக் கேட்டுக்கொள்கின்றேன்.

M.Jagadeesan
27-02-2011, 03:18 AM
நிலைகெட்ட பெண்டிர் தொடர் புனக்
குலைவைக்கும் என்றஞ்சி ஓடு.

குணமதி
27-02-2011, 03:14 PM
நிலைகெட்ட பெண்டிர் தொடர் புனக்
குலைவைக்கும் என்றஞ்சி ஓடு.

நிலைகெட்ட பெண்டிர் தொடர்புனக் கென்றும்
உலைவைக்கும் என்றஞ்சி ஓடு.

இப்போது சரியாயிருக்கும் என்று எண்ணுகிறேன்.

குணமதி
27-02-2011, 03:19 PM
ஓடுமீன் ஓட உறுமீனைத் தேர்ந்துகொத்தும்
தேடுபணி கொக்கொக்க தேர்.

M.Jagadeesan
27-02-2011, 08:57 PM
தேரொன் றசைந்து தெருவிலே வந்ததுபோல்
கார்குழலாள் வந்தாள் நடந்து.

குணமதி
02-03-2011, 03:14 AM
துன்பம் அழுத்தித் தொடர்துயரம் தாக்கிடினும்
என்றும் துணிந்தெதிர் கொள்.

M.Jagadeesan
02-03-2011, 06:56 AM
கொள்வான் இலவசமாய் எப்பொருள் தந்தாலும்
தாழ்ந்தான் தமிழ்மகன் இன்று.

குணமதி
09-03-2011, 02:09 AM
அன்றன்றும் நற்புதுமை அன்புள்ளம் ஆமவட்கு
என்றும் இணையுண்டோ எண்ணு.

M.Jagadeesan
09-03-2011, 03:26 AM
எண்ணுங்கால் துள்ளுதே உள்ளம் உவகையால்
பெண்களின் முன்னேற்றம் கண்டு.

குணமதி
10-03-2011, 11:52 AM
கண்டும் இனியா கனியும் சுவையாவே
உண்டானால் காதல் உணர்வு.

M.Jagadeesan
11-03-2011, 02:03 AM
உணர்வுகொள் நெஞ்சே தமிழ்மொழிக்கும் தாய்க்கும்
இணையேதும் இல்லை என.

குணமதி
11-03-2011, 03:33 PM
இல்லையென ஏங்கி இருப்பார்க் கிருகையும்
வெல்லும் முதலாம் விளம்பு.

M.Jagadeesan
13-03-2011, 11:14 PM
புதியன எல்லாமே நல்லவை அல்ல
பழையன தீயதும் இல.

குணமதி
14-03-2011, 12:40 PM
இலமென்றே யெண்ணா திருப்பதை வைத்தே
உலகிலுயர்ந் தோர்பலரும் உண்டு.

M.Jagadeesan
14-03-2011, 03:35 PM
உண்டுண் டெனச்சொல்வார் ஆயிரம்பேர் ஆனாலும்
கண்டவ ருண்டோ உரை.

குணமதி
15-03-2011, 03:08 AM
உரையும் செயலும் ஒருபோதும் ஒப்பாப்
புரையர்சொல் போற்றா தொதுக்கு.

M.Jagadeesan
15-03-2011, 03:37 AM
ஒதுக்கினும் நீங்கா நிழல்போலத் தந்தை
மிதிக்கினும் போகா உறவு.

குணமதி
15-03-2011, 04:04 PM
உறவே இனமழிக்கும் உற்ற பகையாம்
திறமுணர்ந்து தேர்க தெளிந்து.

M.Jagadeesan
16-03-2011, 06:42 AM
தெளிந்தவர் நல்லவர் என்றாய்ந்த பின்னால்
அளித்திடுக உம்முடைய வாக்கு.

குணமதி
17-03-2011, 03:56 AM
குட்டக்குட் டக்குனியும் கொள்கையரே முட்டவே
வெட்டுக அன்னார் தொடர்பு.

M.Jagadeesan
01-04-2011, 10:00 AM
புதுமைகள் ஆயிரம் செய்தலினும் ஆங்கோர்
விதவைக்கு வாழ்வளித்தல் நன்று.

குணமதி
02-04-2011, 07:48 AM
நன்றும் வருகை, நனிமகிழ்ந்தோம் நல்லன்ப!

குன்றா தினிக்குறள் யாப்பு.

M.Jagadeesan
03-04-2011, 12:38 AM
புசிக்கும் உணவாக நோய்க்கு மருந்தாக
வாழ்பவர் தெய்வமென்று செப்பு.

குணமதி
04-04-2011, 03:03 AM
புல்லர் உறுதிமொழி பொய்யாம் இலவயங்கள்

அல்ல நமைஉயர்த்தும் ஆறு.

M.Jagadeesan
04-04-2011, 05:41 AM
ஆற்றின் சுவைநீரும் ஆழ்கடலில் உப்பாகும்
மாற்றார் திறமறிந்து சேர்.

குணமதி
04-04-2011, 11:33 AM
சேர்த்தார் படிக்கவே! சிற்றினஞ்சேர்ந் தூர்சுற்றித்

தீர்ப்பதோ பெற்றோர் பொருள்.

M.Jagadeesan
04-04-2011, 03:30 PM
பொருள்கருதிப் பொல்லாங்கு செய்யற்க செய்யின்
இருள்சூழும் செய்தவன் வாழ்வு.

குணமதி
05-04-2011, 07:28 AM
வாழ்வுநலன் எண்ணியே வஞ்சகத்தில் ஈட்டிடுவார்
தாழ்வுணர்ந்தே நீங்கல் தலை.

M.Jagadeesan
05-04-2011, 01:48 PM
தலைகொடுத்தும் தன்மானம் காத்திடுவார் மேலோர்
விலையேதும் உண்டோ அவர்க்கு.

குணமதி
08-04-2011, 04:23 PM
குற்றம் புரிந்தோரே கோலோச்ச வேட்கின்றார்
உற்றறிந் தன்னார் ஒதுக்கு.

M.Jagadeesan
09-04-2011, 02:19 AM
ஒதுக்குக ஒன்னார் தொடர்பென்றும் வாழ்வில்
மதித்திடுக மாண்புடையார் நட்பு.

குணமதி
10-04-2011, 01:12 PM
மாண்புடையார் நட்பு மகிழ்வூட்டும் மாணார்
காண்பதுவும் தீங்காம் கரை.

M.Jagadeesan
10-04-2011, 01:36 PM
கரைந்துண்ணும் காக்கையின் வாழ்க்கை நமக்கு
உரைத்திடுமே சேர்ந்துண்பீர் என்று.

M.Jagadeesan
10-04-2011, 03:02 PM
மாண்புடையார் நட்பு மகிழ்வூட்டும் மாணார்
காண்பதுவும் தீங்காம் கரை.

"மாணார்" என்பது "மாணாரைக்" என்றிருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்.தாங்கள்
கருத்துரைக்கவும்.

குணமதி
11-04-2011, 08:41 AM
"மாணார்" என்பது "மாணாரைக்" என்றிருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்.தாங்கள்
கருத்துரைக்கவும்.

நீங்கள் குறிப்பிட்டது சரியே!
மாணாரைக் காண்பதுவும் என்று இருத்தலே தளை தட்டாத நிலை.
கவனக் குறைவாக இருந்திருக்கின்றேன். சுட்டியதற்கு நன்றி.

M.Jagadeesan
11-04-2011, 08:44 AM
விளக்கத்திற்கு நன்றி!

குணமதி
11-04-2011, 09:00 AM
கரைந்துண்ணும் காக்கையின் வாழ்க்கை நமக்கு
உரைத்திடுமே சேர்ந்துண்பீர் என்று.

என்றென்றும் அன்பொன்றே இனபந் தருமென்றே
நன்றுணரும் நாளதுவும் என்று?

M.Jagadeesan
11-04-2011, 11:21 AM
என்றுவரும் என்னருமைத் தாய்நாட்டு மீனவரைக்
கொன்றழிக்கும் புல்லருக்குச் சாவு.

குணமதி
12-04-2011, 10:21 AM
புல்லருக்குச் சாவு பொறுத்தே வருமெனினும்
இல்லை அவர்க்குய்தி எண்ணு.

M.Jagadeesan
13-04-2011, 12:48 AM
எண்ணுவது எல்லாமே நடந்திட்டால் யாரேனும்
எண்ணுவரோ ஆண்டவனை சொல்.

குணமதி
13-04-2011, 03:31 AM
சொல்லின் பொருளெதுவும் சொல்லிலிலை நெஞ்சத்தில்
சொல்லுவோன் கொண்டதெனச் சொல்.

M.Jagadeesan
13-04-2011, 06:43 AM
சொல்லென்னும் பூவெடுத்து யாப்பென்னும் நாறெடுத்து
செம்மொழிக்குப் பாமாலை சூட்டு.

குணமதி
14-04-2011, 03:33 AM
பாமாலை சூட்டிப் பணிந்தேற்றும் பத்தருளும்
ஏமாற்றும் மாந்தர் இயல்பு.

கீதம்
14-04-2011, 04:00 AM
பாமாலை சூட்டிப் பணிந்தேற்றும் பத்தருளும்
ஏமாற்றும் மாந்தர் இயல்பு.

குணமதி அவர்களே... . மேற்கண்ட குறளில் பத்தருள்ளும் என்பதன் பொருள் என்ன? பக்தர் என்றிருக்கவேண்டுமோ? ஐயம் எழுந்ததால் கேட்கிறேன். தவறாக நினையாதீர்கள்.

M.Jagadeesan
14-04-2011, 04:51 AM
குணமதி அவர்களே... . மேற்கண்ட குறளில் பத்தருள்ளும் என்பதன் பொருள் என்ன? பக்தர் என்றிருக்கவேண்டுமோ? ஐயம் எழுந்ததால் கேட்கிறேன். தவறாக நினையாதீர்கள்.

பத்தர்= அடியார் (ஆதாரம்: கழகத் தமிழ்க் கையகராதி)

கீதம்
14-04-2011, 06:49 AM
பத்தர்= அடியார் (ஆதாரம்: கழகத் தமிழ்க் கையகராதி)

ஐயம் தெளிவித்ததற்கு நன்றி ஐயா.

M.Jagadeesan
14-04-2011, 03:30 PM
புயல்மழைக்கு நிற்குமே நாணல் சிறுமழை
பெய்தாலும் சாயும் மரம்.

குணமதி
15-04-2011, 08:01 AM
மரமும் உணர்வுடைத்து மாந்தரை வைய
மரமென் றுரைப்பதுவும் மாசு.

கீதம்
21-04-2011, 12:15 AM
மாசுகலந் திவ்வையம் நாசமாக்கும் மாந்தரை
நீசரெனச் சுட்டியே உமிழ்.

ஜானகி
21-04-2011, 02:12 AM
மன்றத்து வள்ளுவர்கள் யாக்கும் குறள் அந்தாதியினை தனி தொகுப்பாக வழங்கலாமே...! அருமையாக இருக்கிறது.

குணமதி
21-04-2011, 12:38 PM
மாசுகலந் திவ்வையம் நாசமாக்கும் மாந்தரை
நீசரெனச் சுட்டி உமிழ்.

அருமை.

அடுத்தது -

உமிழத் தகும்ஊழல் ஊர்க்குத் தலைமை
இமிழுலகை ஏமாற்றல் எண்ணு.

கீதம்
22-04-2011, 07:44 AM
அருமை.

அடுத்தது -

உமிழத் தகும்ஊழல் ஊர்க்குத் தலைமை
இமிழுலகை ஏமாற்றல் எண்ணு.

சுட்டியதற்கும் பாராட்டுக்கும் நன்றி குணமதி அவர்களே.

எண்ணுவதை சொல்வதை சொல்வதையாய் எண்ணுவரோ
எண்ணுவதே உன்னத மெனில்.

(தவறிருந்தால் திருத்தவும். நன்றி)

ஆதவா
22-04-2011, 07:52 AM
சுட்டியதற்கும் பாராட்டுக்கும் நன்றி குணமதி அவர்களே.

எண்ணுவதை சொல்வதை சொல்வதையாய் எண்ணுவரோ
எண்ணுவதே உன்னத மெனில்.

(தவறிருந்தால் திருத்தவும். நன்றி)

உன்னத மெனில்

தவறானது.
கூவிளம் பின் நாள் அல்லது காசு மட்டுமே வரவேண்டும்.. வந்திருப்பது மலர்!

கீதம்
22-04-2011, 10:49 AM
உன்னத மெனில்

தவறானது.
கூவிளம் பின் நாள் அல்லது காசு மட்டுமே வரவேண்டும்.. வந்திருப்பது மலர்!

எண்ணுவதே ஏற்ற மெனில் என்றிருந்தால் சரியாக வருமா, ஆதவா?

ஆதவா
22-04-2011, 11:01 AM
எண்ணுவதே ஏற்ற மெனில் என்றிருந்தால் சரியாக வருமா, ஆதவா?

சரியாக இருக்கும்... எனினும் வெண்பாவில் நன்கு புழக்கமுள்ள குண்மதி, தாமரை போன்றவர்கள் இச்செய்யுளை நன்கு தட்டக்கூடும்!! ஏனெனில் வெண்பாவில் எச்சமாக வார்த்தை முடியாது என்று நினைக்கிறேன்.. மற்றவர்களை கவனித்தால், ”எண்ணு, உமிழ், மாசு, இயல்பு, சூட்டு, சொல்” என்று முடித்திருப்பார்கள்!!

குணமதி
23-04-2011, 01:33 AM
*********
எண்ணுவதைச் சொல்வதைச் சொல்வதையாய் எண்ணுவரோ
எண்ணுவதே மேன்மை யெனில்.

எண்ணுவதைச் சொல்வதைச் சொல்வதையாய் எண்ணுவரோ
எண்ணுவதே மாண்பா மெனில்.

எண்ணுவதைச் சொல்வதைச் சொல்வதையாய் எண்ணுவரோ
எண்ணுவதே ஏற்ற தெனில்.

எண்ணுவதைச் சொல்வதைச் சொல்வதையாய் எண்ணுவரோ
எண்ணுவதே உன்னதமா னால்.

இப்படியும் அமைக்கலாம்!

கலந்துகொண்ட அனைவர்க்கும் நன்றி.

கீதம்
23-04-2011, 08:38 AM
*********
எண்ணுவதைச் சொல்வதைச் சொல்வதையாய் எண்ணுவரோ
எண்ணுவதே மேன்மை யெனில்.

எண்ணுவதைச் சொல்வதைச் சொல்வதையாய் எண்ணுவரோ
எண்ணுவதே மாண்பா மெனில்.

எண்ணுவதைச் சொல்வதைச் சொல்வதையாய் எண்ணுவரோ
எண்ணுவதே ஏற்ற தெனில்.

எண்ணுவதைச் சொல்வதைச் சொல்வதையாய் எண்ணுவரோ
எண்ணுவதே உன்னதமா னால்.

இப்படியும் அமைக்கலாம்!

கலந்துகொண்ட அனைவர்க்கும் நன்றி.

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி குணமதி அவர்களே.

M.Jagadeesan
25-04-2011, 03:16 AM
எண்ணுவதைச் சொல்வதைச் சொல்வதையாய் எண்ணுவரோ
எண்ணுவதே ஏற்ற மெனில்.

என்ற கீதத்தின் குறளைத் தொடர்கிறேன்.

நில்லாய் இளங்காற்றே காதலிக்கு என்நெஞ்சைச்
சொல்லிடவே சென்றிடுவாய் தூது.

குணமதி
26-04-2011, 05:31 PM
துயர்துடைக்க நீண்டிடும் தூயோர்கை தாழா(து)
உயர்ந்தால் உயரும் உலகு.

M.Jagadeesan
27-04-2011, 01:03 AM
குடிகெடுப்பார் கேண்மை மறுத்திடுக அன்னார்
படமெடுத்து ஆடும் அரவு.

கீதம்
28-04-2011, 07:34 AM
ஆடும் அரவுடை நஞ்சினும் தீதாம்
கொடுஞ்சொல் உரைத்திடும் நாவு.

M.Jagadeesan
28-04-2011, 10:10 AM
நாவின் சுவைகருதி நாள்முழுதும் உண்போர்க்கு
நோய்கள் பலவென்று கூறு.

குணமதி
28-04-2011, 12:11 PM
கூறாய் மடநெஞ்சே கொஞ்சமும் கெஞ்சற்கே
மாறேன் மயங்கேன் மதி.

M.Jagadeesan
28-04-2011, 03:11 PM
மதியைப் பழிக்கும் முகமுனக்கு என்றேன்
மதிக்கும் எனக்கும் பகை.

குணமதி
29-04-2011, 08:50 AM
பகைவரென் பார்யார்? பழகி யிருந்தே
தகைமை இழந்தவர் தாம்.

aathma
29-04-2011, 11:20 AM
:aktion033::aktion033::aktion033:

M.Jagadeesan
29-04-2011, 12:56 PM
தாம்வீழ்ந்தும் தாய்மொழிக் காப்பார் அவர்வாயும்
சாம்போதும் சொல்லும் தமிழ்.

குணமதி
02-05-2011, 01:19 AM
தமிழே நிகரில் தனிமொழியே நீயே
இமிழுலகில் எங்கட் குயிர்.

M.Jagadeesan
02-05-2011, 12:54 PM
உயிர்தந்து செந்தமிழ்ப் பாகேட்ட நந்திபோல்
இத்தரையில் யாருளார் இன்று.

குணமதி
02-05-2011, 05:27 PM
இன்றே தொடங்கியது என்றுமினி சிங்களனே
நின்னச்சம் சாவிலறல் நேர்.

M.Jagadeesan
04-05-2011, 04:30 AM
நேர்கொண்ட பார்வை நிமிர்ந்த பெருநடை
பாராளும் வேந்துக் கழகு.

குணமதி
04-05-2011, 04:07 PM
நேர்கொண்ட பார்வை நிமிர்ந்த நன்னடை
பாராளும் வேந்துக் கழகு.

நிமிர்ந்த நன்னடை - மா முன் நேர் வருகிறது. திருத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

குணமதி
04-05-2011, 04:14 PM
குற்றமிலா நெஞ்சு குறைவிலா அன்பிருப்பின்
எற்றைக்கும் மேலென்றே எண்ணு.

M.Jagadeesan
04-05-2011, 05:23 PM
எண்ணும் எழுத்தும் பிழையறக் கற்றவர்கண்
உண்டோ நிலமிசை தாழ்வு.

குணமதி
05-05-2011, 04:38 PM
கற்றோர்க்கு உண்டோ - என்பது புணர்ச்சியில் கற்றோர்க் குண்டோ - என ஆகும்.
மாமுன் நேராகிவிடும். திருத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

குணமதி
05-05-2011, 04:43 PM
தாழ்வறியா நல்ல தகைஞரும் ஊழலுறின்
கீழ்நிலை உற்றிழிவார் கேள்.

M.Jagadeesan
06-05-2011, 02:07 AM
கேட்க இருசெவியும் பேச ஒருவாயும்
தந்த தலைவனைப் போற்று.

குணமதி
07-05-2011, 04:17 PM
ஈற்றுச் சீரை ஓரசைச் சீராக அமைக்கும்படிக் கேட்டுக்கொள்கின்றேன்.

குணமதி
09-05-2011, 03:35 PM
கேட்க இருசெவியும் பேச ஒருவாயும்
தந்த தலைவனைப் போற்று.


உன்னின் உயர்ந்த உளமே உலகினில்
நின்றஉயர் கோவில் நினை.

M.Jagadeesan
10-05-2011, 03:26 PM
நினைவெல்லாம் நீயாக நெஞ்சில் நிறைந்தாய்
கனவிலேனும் வாரா திரு.

குணமதி
11-05-2011, 03:10 AM
திருடியவள் என்னைத் திருடனென்றாள் நெஞ்சே
உருவிலா ஒன்றாம் உணர்.

M.Jagadeesan
11-05-2011, 02:04 PM
உணர்வும் உயிரும் தமிழுக்கு பாழும்
பணமும் உடலும் எதற்கு.

குணமதி
12-05-2011, 10:40 AM
குட்டக் குனிந்திருந்தான் கூருணர்வில் ஏழ்ந்தொருநாள்
எட்டிப் பிடிப்பானென் றெண்ணு.

M.Jagadeesan
13-05-2011, 01:27 AM
எண்ணுக நல்லன பேசு இனியன
உண்டாகும் வாழ்வில் உயர்வு.

குணமதி
13-05-2011, 01:39 AM
உயர்வுள்ளல் நன்றே ஒடுக்குமுறைத் தாக்கின்
இயலாதொன் றென்றே இயம்பு.

M.Jagadeesan
13-05-2011, 02:09 AM
புவியனைத்தும் சேர்ந்தே எதிர்த்தாலும் நெஞ்சம்
குவியா திருக்கப் பழகு.

குணமதி
14-05-2011, 03:37 AM
குள்ளமனக் கேடர் கொடுமைக்கே மக்கள்
உள்ளி முடிவளித்த(து) ஓர்.

M.Jagadeesan
14-05-2011, 04:48 AM
குள்ளமனக் கேடர் கொடுமைக்கே மக்கள்
உள்ளி முடிவளித்த(து) ஓர்.



"மக்கள் உள்ளி" = இங்கு மா முன் நேர் வருகிறது. தளை தட்டுகிறது என்று எண்ணுகிறேன்.

குணமதி
14-05-2011, 10:53 AM
குள்ளமனக் கேடர் கொடுமைக்கே மக்கள்
உள்ளி முடிவளித்த(து) ஓர்.


"மக்கள் உள்ளி" = இங்கு மா முன் நேர் வருகிறது. தளை தட்டுகிறது என்று எண்ணுகிறேன்.

சரியாகக் கண்டுபிடித்தீர்கள்! நன்றி. திருத்திய வடிவம்:

குள்ளமனக் கேடர் கொடுமைக்கின் றேமக்கள்
உள்ளி முடிவளித்த தோர்.

M.Jagadeesan
15-05-2011, 01:54 AM
ஓருதவி இன்றியே ஒப்புரவு செய்வோரை
பாரிலுளோர் பார்ப்பார் வியந்து.

குணமதி
15-05-2011, 11:10 AM
துய்ப்பும் மகிழ்வும் துன்புந் துயரும்
இப்பூ வுலகியற்கை யாம்.

M.Jagadeesan
15-05-2011, 02:04 PM
யாம்கண்ட மன்றத்தில் நம்தமிழ் மன்றம்போல்
பூமிதனில் யாங்கனுமே இல்.

குணமதி
15-05-2011, 04:54 PM
யாம்கண்ட மன்றத்தில் நம்தமிழ் மன்றம்போல்
பூமிதனில் யாங்கணுமே இல்.


இல்லாதார் இன்மை இயல்பாகும் கல்லாதார்
இல்லாத நாட்டில் இயம்பு.

M.Jagadeesan
16-05-2011, 01:46 AM
இயம்புக இன்சொல்லை எவ்விடத்தும் அஃதொன்றே
மாற்றாரும் போற்றுகின்ற மாண்பு.

குணமதி
16-05-2011, 03:00 AM
புத்தெழுச்சி ஊக்கம் புதுஉணர்ச்சி நேர்மையுடன்
நித்தமிரு நேரும் நிவப்பு.

M.Jagadeesan
16-05-2011, 11:25 AM
புன்னகையே பெண்ணுக்கு நன்நகையாம் அஃதன்றி
பொன்நகையால் உண்டோ பயன்.

குணமதி
17-05-2011, 05:16 PM
பயனுண்டே உண்மையாய்ப் பாடுபட்டால் மண்ணும்
நயவிளைச்சல் நல்கிடலே சான்று.

M.Jagadeesan
18-05-2011, 12:59 AM
சான்றொன்று வேண்டுங்கொல் மக்கள் நினைத்திட்டால்
தோன்றுமே மாற்றரசு காண்.

குணமதி
18-05-2011, 04:59 PM
காணிற் குவளையது கண்புதைக்கும் நல்லழகாம்
நாணிற் குவளைவெலல் நன்று.

M.Jagadeesan
21-05-2011, 12:54 AM
நன்றே நினைமின் பிறர்பொருளை வெளவன்மின்
என்றுமே தீண்டாது தீங்கு.

குணமதி
21-05-2011, 02:08 AM
குன்றாத தன்னலத்தர் கொள்கையிலாக் கோலாட்சிச்
சென்றகதை வந்தார்க்கும் செப்பு.

M.Jagadeesan
21-05-2011, 02:06 PM
செப்புங்கால் நாவெல்லாம் தேன்போல் இனிக்கிறதே
செந்தமிழ் நாடெனும் சொல்.

குணமதி
23-05-2011, 03:58 PM
சொல்லும் பொருளும் சுவையும் புதிதெனவே
வெல்லப் படைக்க விழை.

M.Jagadeesan
25-05-2011, 03:15 AM
விழைமின்காள் எல்லோரும் எல்லாம் பெறவே
உழைமின்காள் ஓய்வின்றி நீர்.

குணமதி
10-06-2011, 08:39 AM
நீர்க்குடம் தூக்கி நிலைகுலைந்தும் ஓடிவந்தேன்
ஈர்க்கும் குறளெழுத ஈண்டு.

M.Jagadeesan
10-06-2011, 10:10 AM
ஈண்டுநீர் வந்திடும் வேளைக்குக் காத்திருந்தேன்
மூண்டெழுந்த காதலால் இன்று.

குணமதி
11-06-2011, 12:49 AM
இன்றே செயற்பட ஏற்றநா ளாமென்றே
என்றும் வினைசெய எண்ணு.

M.Jagadeesan
13-06-2011, 01:15 AM
எண்ணுக நெஞ்சே தினமும் பிறர்நலம்
மண்ணுக்குள் போவதன் முன்பு.

குணமதி
14-06-2011, 02:42 AM
புதியன்யான் என்றே பொலிந்திடு நாளும்
புதுக்குக புன்மை தவிர்த்து.

M.Jagadeesan
14-06-2011, 06:27 AM
புன்மை தவிர்த்துப் புவியெங்கும் மக்களுக்கு
நன்மை தருவோம் நயந்து.

குணமதி
14-06-2011, 08:12 AM
துன்பின்பம் வாழ்வில் தொடராத மாந்தரென
என்றும் எவரும் இலர்.

M.Jagadeesan
21-06-2011, 03:43 AM
இலரென்று இன்றிருப்போர் நாளை உளராவார்
என்பது ஊழின் விதி.

குணமதி
22-06-2011, 02:54 AM
திருக்குறள் போற்றித் திருந்த நடந்தால்
ஒருத்துன்பும் இல்லை உணர்.

M.Jagadeesan
22-06-2011, 07:30 AM
உணரார்க்குக் கீதை உயர்வாகும் ஆனால்
இணையில்லா நூலாம் குறள்.

குணமதி
23-06-2011, 02:34 AM
குறளரோ நெடியரோ கூனிலாக் கொள்கை
அறத்தவர் மேலோர் அறி.

கீதம்
23-06-2011, 04:49 AM
அருமையாகத் தொடர்கிறது குறள் சங்கிலி. தொய்யவிடாமல் தொடரும் குணமதி அவர்களுக்கும், ஜகதீசன் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

M.Jagadeesan
23-06-2011, 06:10 AM
அருமையாகத் தொடர்கிறது குறள் சங்கிலி. தொய்யவிடாமல் தொடரும் குணமதி அவர்களுக்கும், ஜகதீசன் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

கீதம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி! தாங்களும் பங்கேற்கலாமே!

M.Jagadeesan
23-06-2011, 06:24 AM
அறிந்தவை மற்றவர்க்குச் சொல்லுக நீவிர்
அறியா எதையும் தவிர்.

குணமதி
23-06-2011, 08:03 AM
அருமையாகத் தொடர்கிறது குறள் சங்கிலி. தொய்யவிடாமல் தொடரும் குணமதி அவர்களுக்கும், ஜகதீசன் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

மிக்க நன்றி.

குணமதி
23-06-2011, 08:08 AM
எதையும் தவிராதே ஈடுபாட் டோடிங்கே
'கீதம்' படித்தேற்றல் பார்!

கீதம்
23-06-2011, 08:17 AM
கீதம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி! தாங்களும் பங்கேற்கலாமே!

என்னால் உங்களிருவரைப் போல் உடனடியாக எழுத இயலவில்லை. எனினும் முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன். தங்கள் ஊக்கத்துக்கு நன்றி.


எதையும் தவிராதே ஈடுபாட் டோடிங்கே
'கீதம்' படித்தேற்றல் பார்!

குறட்கீதம் பாடியமைக்கு மனமார்ந்த நன்றி. இனிதே இன்னும் தொடருங்கள்.

M.Jagadeesan
23-06-2011, 11:54 AM
பாராளும் வேந்துக்கு அஞ்சற்க அஞ்சுக
நேரான நெஞ்சினைக் கண்டு.

பாராளும் வேந்துக் கஞ்சற்க அஞ்சுக
நேரான நெஞ்சினைக் கண்டு.

குணமதி
23-06-2011, 04:20 PM
கண்டவர் விண்டதில்லை காணார் அறிந்ததில்லை
உண்டோ இலையோ உணர்.

குணமதி
23-06-2011, 04:24 PM
பாராளும் வேந்துக்கு அஞ்சற்க அஞ்சுக
நேரான நெஞ்சினைக் கண்டு.

வேந்துக்கு அஞ்சற்க - சேர்த்தெழுதின் வேந்துக் கஞ்சற்க என ஆகும். மா முன் நேராகும். வெண்டளை அமையா நிலையைத் திருத்துக.

M.Jagadeesan
24-06-2011, 12:53 AM
உணரார்கொல் தோழி பிரிவென்னும் செந்தீ
அணையாது வாட்டும் நிலை.

குணமதி
24-06-2011, 03:23 AM
நிலையுணரா மாக்கள் நினைந்தயரேல் முற்றும்
மலைவகற்றி ஆற்றல் வினை.

M.Jagadeesan
24-06-2011, 10:45 AM
வினையொன்றே ஆடவர்க்குப் பீடுதரும் இன்றேல்
மனைவியும் தூற்றுவாள் தூத்து.

குணமதி
25-06-2011, 03:37 AM
துன்பமிலா வாழ்வு சுவையறியா ஊணாமால்
இன்பந் தனிச்சுவைப்ப(து) இல்.

M.Jagadeesan
25-06-2011, 01:26 PM
இல்லாத போது இருந்த மகிழ்வெல்லாம்
நில்லாது போனதிப் போது.

குணமதி
26-06-2011, 02:40 AM
துள்ளித் திரிந்த துயரறியா இன்பிளமை
உள்ளின் உவகை உறும்.

M.Jagadeesan
26-06-2011, 05:41 AM
உறுமும் புலிவாழும் காடும் இனிதே
அறமில்லா நாட்டை விட.

குணமதி
26-06-2011, 03:22 PM
விடலரிதா மென்றாலும் விட்டொழிக்க தீய
உடல்கெடுக்கும் வவ்வும் உயிர்.

M.Jagadeesan
27-06-2011, 01:44 AM
உயிரார் அழியின் உடம்பார் அழிவர்
உயிருடம்பு பேணுதல் கடன்.

குணமதி
27-06-2011, 03:12 AM
கடனென்க யார்க்கும் கடல்சூழ் உலகில்
திடமுடை நன்மை செயல்.

குணமதி
27-06-2011, 03:17 AM
உயிரார் அழியின் உடம்பார் அழிவர்
உயிருடம்பு பேணுதல் கடன்.

பேணுதல் கடன் - விளம் முன் நிரைபு உள்ளது. வெண்டளை அமையவில்லை. 'பேணல் கடன்' - என்று திருத்தலாம்.

M.Jagadeesan
27-06-2011, 03:27 AM
பேணுதல் கடன் - விளம் முன் நிரைபு உள்ளது. வெண்டளை அமையவில்லை. 'பேணல் கடன்' - என்று திருத்தலாம்.

உயிரார் அழியின் உடம்பார் அழிவர்
உயிருடம்பு பேணல் கடன்.

M.Jagadeesan
27-06-2011, 12:02 PM
செயலொன்றே செல்வம்தரும் வீண்பேச்சால் என்றும்
துயரமும் துன்பமும் உண்டு.

குணமதி
28-06-2011, 01:14 AM
செயலொன்றே செல்வம்தரும் வீண்பேச்சால் என்றும்
துயரமும் துன்பமும் உண்டு.

செல்வம்தரும்

M.Jagadeesan
28-06-2011, 03:55 AM
செயலொன்றே செல்வமாக்கும் வீண்பேச்சால் என்றும்
துயரமும் துன்பமும் உண்டு.

குணமதி
29-06-2011, 07:55 AM
உண்டுடுத்தல் காணுங்கீழ் ஓரா வடுக்காணும்
கண்டறிஞர் கூறியதைக் காண்.

M.Jagadeesan
30-06-2011, 07:10 AM
காண்பதற்கோர் ஆயிரங்கண் வேண்டும் அவளுடைய
நாணமோ கோடி பெறும்.