PDA

View Full Version : குறள் யாப்போம் - ஈறு தொடங்கி!Pages : 1 2 3 [4]

தாமரை
06-07-2012, 10:49 AM
வெறுப்ப தனைத்தான் வெறுப்ப துவேகாண்
சிறப்ப திலேமாச் சிறப்பு

M.Jagadeesan
06-07-2012, 12:06 PM
சிறப்பு வருவது செல்வத்தால் அல்ல
அறிவால் வருவதென்று கூறு.

தாமரை
06-07-2012, 12:22 PM
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.

M.Jagadeesan
06-07-2012, 02:45 PM
கூறும்சொல் உன்குணத்தைக் காட்டுகின்ற காரணத்தால்
தேர்ந்தெடுத்த சொற்களைப் பேசு.

Dr.சுந்தரராஜ் தயாளன்
06-07-2012, 02:46 PM
கூறுகின்ற கூற்றைநீ கூறிடுவாய் கூறாமால்
கூறிடுவான் கூற்றுவன்தன் கூற்று

கலைவேந்தன்
07-07-2012, 07:45 AM
கூற்றுவன் வந்தக்கால் கூவிப் பயனேது
போற்றுதற் கேற்றபடி வாழ்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
07-07-2012, 08:50 AM
வாழ்வதற்கே வாழ்க்கை வளமாய் வசதியுடன்
வீழ்வதற்கோ மேதினியில்... வீண்

கலைவேந்தன்
07-07-2012, 04:23 PM
வீண்பழியும் பொல்லாங்கும் நேர்பகையும் இம்மூன்றும்
நாணெனக் கொல்லும் எமன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
07-07-2012, 04:52 PM
எமனாம் எருமைமேல் ஏறிவரும் காலன்
நமனுமாம் நானென்பேன் நான்

கலைவேந்தன்
07-07-2012, 05:28 PM
நானென்னும் மாயையினை நீங்கியே தாழ்ந்திடில்
மானுடன் காண்ப துயர்வு.

Dr.சுந்தரராஜ் தயாளன்
07-07-2012, 06:26 PM
உயர்வென்றும் தாழ்வென்றும் ஊர்சொல்வார் ஈழத்
துயரம் துடைக்கா தவர்

கலைவேந்தன்
08-07-2012, 02:36 PM
துடைக்கா தவர்துயரம் பொங்கிப் பெருகும்
உடைந்தணை ஏரிநீ ரற்று.

:)

Dr.சுந்தரராஜ் தயாளன்
08-07-2012, 03:31 PM
நீரற்ற ஏரியென நிர்மூல மாயீழம்
வேரற்றுப் போமோ விரைந்து

:traurig001:

கலைவேந்தன்
08-07-2012, 04:09 PM
விரைந்துதவா நட்பு வினயமிலாக் காதல்
உரைத்திடின் பூஉலகில் பாழ்.


;)

Dr.சுந்தரராஜ் தயாளன்
09-07-2012, 04:41 PM
பாழ்பட்டுப் கெட்டதொரு பாழ்கந்தை போலானோர்
ஈழத்தின் எங்கள் உறவு

M.Jagadeesan
10-07-2012, 02:48 AM
உறவாம் மனைவி உயிரை எடுத்தால்
துறவே உயர்வெனக் கொள்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
10-07-2012, 03:08 AM
கொள்க துறவுதனை கொல்லுக நல்லுறவை
கள்ளர்கள் நித்திகளாம் காண்

M.Jagadeesan
10-07-2012, 04:42 AM
காண்டங்கள் ஏழினும் பேரழகு வாய்ந்தது
சுந்தர காண்டமெனச் செப்பு.

கலைவேந்தன்
10-07-2012, 06:03 AM
செப்புமொழி ஆயிரம் செவ்வியன ஆயினும்
ஒப்பில் தமிழதுவே காண்.

கீதம்
10-07-2012, 09:01 AM
காணும் உருவெல்லாம் காதலர்போல் தோன்றிட
நாணிச் சிவப்பாள் முகம்.

M.Jagadeesan
10-07-2012, 09:04 AM
காணும் உருவெல்லாம் காதலர்போல் தோன்றிட
நாணிச் சிவப்பாள் முகம்.


நல்ல கற்பனை !

M.Jagadeesan
10-07-2012, 09:13 AM
முகம்கொடுத்துப் பேசாள் தலையை நிமிராள்
பகைஎதுவும் செய்யலையே நான்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
10-07-2012, 12:52 PM
நானென்றேன் நங்கையவள் நாமென்றாள் நான்தருவேன்
தேனென்றாள் சென்றேன்தந் தாள்

M.Jagadeesan
10-07-2012, 01:17 PM
தாள்கொண்டு செய்யும் கவிதையை வெல்லுமோ
வாள்கொண்டு செய்கின்ற போர்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
10-07-2012, 02:38 PM
போரென்றால் போரிடும்போர் போரென்றால் போர்வைக்கோல்
பேரொன்றாம் ஆங்கிலத்தில் போர்

தாமரை
10-07-2012, 05:23 PM
போரே புகுவோரே புண்ணின்றி மீளாரே
ஆரே எனினும் அவர்.

கலைவேந்தன்
10-07-2012, 06:12 PM
அவர்முகங் காண்பின் அகங்குளிரக் கண்டேன்
எவர்முகமும் ஈர்ப்பில்லை காண்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
11-07-2012, 03:00 AM
காணென்று காண்பித்தீர் கண்டேன் கலைவேந்தே
வீணன்று யாப்பின் விருந்து

M.Jagadeesan
11-07-2012, 03:26 AM
விருந்துக்கு முன்பாக ஜில்லென்று மோரை
அருந்தக் கொடுப்பது நன்று.

தாமரை
11-07-2012, 04:19 AM
நன்றென் றுரைப்பதும் தீதென் றுரைப்பதும்
நின்றங் கவர்பட் டறிவு

Dr.சுந்தரராஜ் தயாளன்
11-07-2012, 04:45 AM
அறிவுடையோர் உம்முடன்யான் இத்திரியில் சேர்ந்தே
பிறவிப் பயனடைந்தேன் பேறு

M.Jagadeesan
11-07-2012, 05:03 AM
பேறுகாலம் பெண்ணுக்கு மீள்பிறவி அக்காலம்
ஊறேதும் வாராமல் கா.

தாமரை
11-07-2012, 05:14 AM
காகா வெனத்தான் கரைகிறதே என்மனை
ஆகாரம் உண்ட அது.

என் இல்லாள் சமைத்த ஆகாரத்தை உண்ட காக்கை காப்பாத்துங்க காப்பாத்துங்க என அழுகிறதே!!! :icon_ush:

M.Jagadeesan
11-07-2012, 05:27 AM
அதுபாவம் அல்ல அனுதினமும் உண்ணும்
உமைநினைத்தே ஏங்குகிறேன் யான்.

தாமரை
11-07-2012, 05:48 AM
யானெனத் தானறி யானென்றேத் தானறி
யானெனும் தானும் அறி!

Dr.சுந்தரராஜ் தயாளன்
11-07-2012, 12:30 PM
அறிந்தும் அறியா அகவை அதனில்
அறிந்ததோ அம்மாவின் அன்பு

கலைவேந்தன்
11-07-2012, 12:50 PM
அன்பெனும் ஆயுதம் ஆற்றாத தொன்றுண்டோ
மன்னும் புகழீட் டுமது.

அமீனுதீன்
11-07-2012, 01:14 PM
"டை" கட்டி வாழ்வரே வாழ்வார்: மற்றவர்
கை கட்டி பின் செல்பவர்.

_தெருக்குரல் (சும்மா தமாசுக்கு ...)

அமீனுதீன்
11-07-2012, 01:27 PM
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.

நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்.

தாமரை
11-07-2012, 01:29 PM
அதுவொன்று மாகாத தில்லை குறளில்
இதுவொன்று என்றே அது!

Dr.சுந்தரராஜ் தயாளன்
11-07-2012, 01:56 PM
அதுவே அனைத்துக்கும் ஆரம்பம் அஃதில்
மதுவுடன் மங்கையரைச் சேரு

கலைவேந்தன்
11-07-2012, 02:03 PM
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.

நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்.


நண்பரே.. முந்தைய குறளின் இறுதிச் சொல்லில் தான் குறள் தொடங்கவேண்டும். அதுவும் சொந்தமாக இயற்றியவை மட்டுமே இங்கே பதியவேண்டும்.

புரிதலுக்கு நன்றி.

கலைவேந்தன்
11-07-2012, 02:10 PM
சேருவோர் தன்குணம் சேறுடன் சேர்ந்திட்ட
நீரன்ன என்றே உணர்.

M.Jagadeesan
11-07-2012, 02:32 PM
உணர்வு தமிழுக்கு இல்லா மனிதன்
பிணத்திற்கு நேரென்று கூறு.

கலைவேந்தன்
11-07-2012, 04:10 PM
கூறிய கூரிய சொற்கள் இருபுறம்
கூரிய வாளுக்கு நேர்.

M.Jagadeesan
11-07-2012, 04:50 PM
நேருக்கு நேர்நின்று போர்செய்யா ஆண்மகன்
பாருக்குப் பாரமென்று செப்பு.

Dr.சுந்தரராஜ் தயாளன்
11-07-2012, 04:58 PM
நேருக்கு நேராய் நிரைவந்து நிற்பதினால்
பாருக்குள் நற்குறளாம் பாரு

கலைவேந்தன்
11-07-2012, 05:05 PM
செப்பிடு வித்தையினில் செல்லுமோர் மாந்தனுக்கு
செப்பிடு நல்லுரை நீ.

Dr.சுந்தரராஜ் தயாளன்
11-07-2012, 05:07 PM
அடடே...ஜெகதீசன் ஐயா முந்தி விட்டீர்களா...கவனிக்கவில்லை. சரி இதோ செப்புவில் துவங்குகிறேன்.
கலைவேந்தனும் பதிந்து விட்டீரா ...இன்று எனது இணைப்பின் வேகம் மிகவும் குறைவாக உள்ளது. சரி...நீயில் துவங்குகிறேன்.

கலைவேந்தன்
11-07-2012, 05:12 PM
பாருட னொத்து பாவனை காவாக்கால்
யாருமே மதியார் போ.

Dr.சுந்தரராஜ் தயாளன்
11-07-2012, 05:18 PM
நீங்களும் நானுமே நீங்காமல் யாத்திடுவோம்
தாயும்நம் தந்தைபோல்மன் றம்

கீதம்
11-07-2012, 10:36 PM
மன்றமா மேதையர் தந்திட்ட ஊக்கத்தால்
இன்றுநான் யாத்தேன் குறள்.

M.Jagadeesan
12-07-2012, 12:51 AM
குறளைப்போல் நூலொன்று யாம்கண்ட தில்லை
இறக்கும் வரைபடிக்கும் நூல்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
12-07-2012, 02:20 AM
நூலென்றால் நூலென்றேன் நோக்கினால் என்மனைவி
கோலின்று என்றாள்நூல் கோல்

நூல்கோல் = Turnip

கீதம்
12-07-2012, 02:59 AM
கோலெடுக்க ஆடிடும் மந்திபோல் கூர்விழி
வேலெடுக்கக் கூத்தாடும் நெஞ்சு.

M.Jagadeesan
12-07-2012, 03:07 AM
நெஞ்சுக்கு ஒவ்வா செயல்களைச் செய்வதற்கு
அஞ்சுவதே சான்றோர் தொழில்.

கீதம்
12-07-2012, 04:44 AM
தொழிலும் அழிவிலாக் கல்வியும் என்றும்
வழித்துணை யாகிவரு மாம்.

தாமரை
12-07-2012, 04:45 AM
தொழிலென்ப தாக்கலும் காத்த லழித்தே
வழிமூன்றும் சேர்த்தலு மட்டு

தொழில்களை இப்படி பிரிக்கலாம்.

ஆக்கல் : விளைவித்தல் கருவிகள் செய்தல் போன்ற ஆக்குதல் சார்ந்த உலகினருக்குத் தேவையானதை தருபவை
காத்தல் : பாதுகாப்பு, அரசியல், காவல்துறை, இப்படி மக்களையும் ஆக்கிய பொருளையும் உலகையும் பாதுகாத்தல்
அழித்தல் : களையெடுப்பு, தீங்கு செய்பவற்றை அழித்தல் இப்படியாகப் பட்ட தொழில்கள்..

எந்த ஒரு தொழிலை எடுத்தாலும் இவை மூன்றில் ஒன்றில் அடங்கி விடும். ஆனால் சில தொழில்கள் இதில் அடங்காதது போல் தோன்றும்.

அவை இவை மூன்றை ஒன்றுக்கொன்றும் மற்றும் உலகிற்கும் சேர்ப்பவையாகவும் இருக்கும். உதாரணமாகப் பேராசிரியர் மாணவர்களை இத்தொழில்களில் பயிற்றுவிக்கிறார். பேருந்து ஓட்டுனர், மக்களை இப்பணிகளுக்கு அழைத்துச் செல்கிறார். இப்படி அவை இவை ஒன்றில் அடங்கா விட்டாலும் இந்த மூன்று வழிகளையும் உலகையும் சேர்ப்பவையாகவே இருக்கும்.

M.Jagadeesan
12-07-2012, 07:25 AM
மாம்பழம் முக்கனியில் ஒன்றென்பார் அக்கனியின்
தீஞ்சுவை உண்ண அமிழ்து.

தாமரை
12-07-2012, 08:06 AM
அமிழ்து அருந்தேனே அமிழ்ந்து பெறுந்தேனே
தமிழின் அமிழ்தமே தாழ்வு

Dr.சுந்தரராஜ் தயாளன்
12-07-2012, 08:23 AM
அமிழ்தென்றால் அஃதென்பார் அல்லவே ரென்பார்
தமிழென்று சொல்வேன்நான் தாழ்ந்து

தாமரை
12-07-2012, 08:56 AM
தாழ்ந்து உயர்வராம் சான்றோரே தாழாதோர்
வாழ்ந்து உதிரும் மயிர்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
12-07-2012, 09:25 AM
மயிர்வளரு மென்றே மயில்பீலி தன்னை
பயிர்போல் வளர்த்தோம்யாம் பண்டு

கீதம்
12-07-2012, 11:13 PM
பண்டுதமிழ்ப் பாட்டும் பழஞ்சொற் பெருமையும்
பண்பாடும் பைந்தமிழர் மூச்சு.

Dr.சுந்தரராஜ் தயாளன்
13-07-2012, 02:42 AM
மூச்சுமுட்ட உண்டிடுவீர் மூன்றுபடம் பார்த்திடுவீர்
பேச்சில்ம காத்தொடரைப் பேசு

கலைவேந்தன்
13-07-2012, 03:57 AM
பேச்சினில் பேதையாய் வேடமிட்டே நாடோறும்
மூச்சினைக் கொல்பவள் பெண்.

தாமரை
13-07-2012, 06:25 AM
பெண்ணெனும் பேராண்மைக் கீடாய் உளதோ
மண்ணினில் ஓராண்மை மாண்பு

கீதம்
13-07-2012, 06:52 AM
பெண்ணெனும் பேராண்மைக் கிணையாய் உளதோ
மண்ணினில் ஓராண்மை மாண்பு

மாண்புமிகு பெண்பாவாய் பூத்ததொரு வெண்பா
தளைதட்டக் கண்டு வியப்பு.

கலைவேந்தன்
13-07-2012, 07:17 AM
வியப்பினைத் தந்து விவேகமும் மாய்த்துப்
பயனறச் செய்யுமாம் சூது.

Dr.சுந்தரராஜ் தயாளன்
13-07-2012, 10:49 AM
சூதென்றும் வாதென்றும் தோதென்றும் சொல்கின்றார்
ஏதொன்றும் நானறியேன் இங்கு

M.Jagadeesan
13-07-2012, 12:22 PM
மூச்சுமுட்ட உண்டிடுவீர் மூனுஸோ பார்த்திடுவீர்
பேச்சுமெகா சீரியலைப் பேசு


ஆங்கிலத்தில் சொற்களைப் பெய்தல் தவிர்த்திடுக
பாங்குடனே செந்தமிழில் செய்.

"செய் " எனக் கட்டளையிடுவதாக எண்ணவேண்டாம். வேண்டுகோளாக எடுத்துக் கொள்ளவும்.

கலைவேந்தன்
13-07-2012, 01:30 PM
இங்குளன் இல்லையில்லை அங்குளன் என்றின்றி
நெஞ்சுளனை நாளும் நினை.

Dr.சுந்தரராஜ் தயாளன்
13-07-2012, 03:12 PM
ஆங்கிலத்தில் சொற்களைப் பெய்தல் தவிர்த்திடுக
பாங்குடனே செந்தமிழில் செய்.

"செய் " எனக் கட்டளையிடுவதாக எண்ணவேண்டாம். வேண்டுகோளாக எடுத்துக் கொள்ளவும்.

மாற்றியுள்ளேன். பாருங்கள் :)

கலைவேந்தன்
13-07-2012, 03:58 PM
சபாஷ் ஐயா.. !

தாமரை
13-07-2012, 08:16 PM
நினைவில் பிறழும் மனைவி பிறந்தநாள்
நின்றாலும் வீழ்ந்தாலும் ஏச்சு!

கீதம்
13-07-2012, 10:28 PM
ஏச்சும் இளக்காரப் பேச்சும் இளைத்தோர்மேல்
பாய்ச்சலும் கீழோர் குணம்.

M.Jagadeesan
14-07-2012, 12:55 AM
ஏச்சும் இளக்காரப் பேச்சும் இளைத்தோர்மேல்
பாய்ச்சல் இழிந்தோர் குணம்.

"ஏச்சும் , இளக்காரப் பேச்சும்" என்று வந்த பிறகு " பாய்ச்சலும் " என்று வருவதுதான் பொருத்தமாக இருக்கும்.


ஏச்சும் இளக்காரப் பேச்சும் இளைத்தோர்மேல்
பாய்ச்சலும் கீழோர் குணம்.

என்று இருந்தால் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.

M.Jagadeesan
14-07-2012, 01:03 AM
குணத்தையெல்லாம் குப்பையிலே வீசுவார் என்றும்
பணத்தையே கொள்வார் பதர்.

தாமரை
14-07-2012, 01:53 AM
பதரும் உதவும் பசும்பொன் சுடவே
எதுவும் பயனாம் இடத்து

கீதம்
14-07-2012, 06:22 AM
"ஏச்சும் , இளக்காரப் பேச்சும்" என்று வந்த பிறகு " பாய்ச்சலும் " என்று வருவதுதான் பொருத்தமாக இருக்கும்.


ஏச்சும் இளக்காரப் பேச்சும் இளைத்தோர்மேல்
பாய்ச்சலும் கீழோர் குணம்.

என்று இருந்தால் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.


சுட்டியமைக்கும் திருத்தியமைக்கும் மிகவும் நன்றி ஐயா.

Dr.சுந்தரராஜ் தயாளன்
14-07-2012, 09:02 AM
இடத்துக் கிடமாறும், இங்கிருக்கும், அங்கே
படரும், பதுங்கும் பணம்

கலைவேந்தன்
14-07-2012, 12:10 PM
பணமென்றால் பத்தும் மறந்திடு வோரில்
குணமொன் றமைவது ஏது.

Dr.சுந்தரராஜ் தயாளன்
14-07-2012, 02:20 PM
ஏதுமில்லை எப்பொழுதும் ஏதமொன்றே என்போர்க்கு
பேதமில்லை பேரிடியால் சாவு

கலைவேந்தன்
15-07-2012, 05:25 AM
சாவும் பிணியுடன் சார்ந்துவரும் மூதுமையும்
மேவிய மானிடரில் இல்.

M.Jagadeesan
15-07-2012, 09:29 AM
இல்லாள் அகத்தே இருக்க பொருள்விரும்பும்
பொல்லாள் முயக்கம் தவிர்.

கலைவேந்தன்
15-07-2012, 10:12 AM
தவிர்க்குஞ் செயல்களை நீக்காது ஆற்றின்
தவிக்கும் நிலைவரும் காண்.

கலைவேந்தன்
19-07-2012, 02:15 PM
காணெனத் தந்ததோர் ஈற்றினில் ஓர்குறள்
மாண்புடன் ஏனில்லை சொல்.

M.Jagadeesan
19-07-2012, 05:22 PM
காணெனத் தந்ததோர் ஈற்றினில் ஓர்குறள்
மாண்புடன் ஏனில்லை சொல்.

இலக்கணப்படி " ஓர்குறள் " என்று வரலாமா ? " ஒருகுறள் " என்றுதானே வரவேண்டும். ஐயம் தீர்க்கவும்.

கலைவேந்தன்
20-07-2012, 04:05 AM
இலக்கணப்படி வராது தான் ஐயா.. ஆயினும் தளை தட்டாமல் இருக்க பல சமயம் இவ்வாறு பல்வேறு புலவர்கள் கையாண்டிருக்கின்றனர். சீர் குறள் என எழுத எண்ணினேன். ஆயினும் எடுத்துக்கொண்ட சொல்ல வந்த கருத்துக்கு ஓர்குறள் என எடுத்துக் கொண்டேன்.

கீதம்
20-07-2012, 08:25 AM
சொல்லென்றும் தள்ளென்றும் திண்டாடி மூளும்
இளங்காதல் உள்ளத்துப் போர்.

கலைவேந்தன்
22-07-2012, 05:32 PM
உள்ளத்துப் போர்மூளும் ஊனுருகும் ஆங்கொரு
கள்ளமனம் கொண்டோர் நிலை.

M.Jagadeesan
23-07-2012, 01:16 AM
நிலைமாறிப் போகாதே தீச்செயல் என்றும்
உலைவைக்கும் என்றஞ்சி வாழ்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
24-07-2012, 06:16 AM
அஞ்சியே வாழ்வதுதான் அல்லல்தீர் நல்வழியாம்
கெஞ்சியே வாழ்வதுதான் கேடு

M.Jagadeesan
24-07-2012, 06:30 AM
கேடு பயக்கின்ற கள்ளுடனே சூதினையும்
ஓட விரட்டிடவே ஓது.

கலைவேந்தன்
24-07-2012, 10:40 AM
ஓதுகின்ற நான்மறை ஓர்நாளும் காவாதே
தீதுடன் நின்ற மனம்.

M.Jagadeesan
25-07-2012, 03:02 AM
மனமென்னும் மந்தியைக் கட்டத் தினமும்
இறைவன் திருவடி நாடு.

Dr.சுந்தரராஜ் தயாளன்
26-07-2012, 04:57 AM
திருவடியை நாடுவதால் சீர்படுமா மந்தி
உருக்கமுடன் உண்மைசெய் உய்வு

M.Jagadeesan
26-07-2012, 05:48 AM
உய்வு உழைப்பில் இறைவன் திருவடியைத்
தொய்வின்றி எண்ணுதலில் உண்டு.

Dr.சுந்தரராஜ் தயாளன்
26-07-2012, 07:18 AM
உண்டு கொழுத்தே உயிர்வளர்ப் போரையே
கண்டுகொள் வானிறைவன் காண்

கீதம்
26-07-2012, 08:32 AM
காணும் அனைத்தையும் வாங்கத் துடித்திடின்
வீண்விரய மாகும் பணம்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
26-07-2012, 10:02 AM
பணம்பாயும் பாதாளம் பார்த்தோம்ஆ சையால்
குணம்போகும் குற்றம்கூ டும்

M.Jagadeesan
26-07-2012, 10:49 AM
டும்டும் திருமணம் தொல்லையாம் ஆதலினால்
வம்பெதற்கு? காதலே மேல்.

கலைவேந்தன்
26-07-2012, 05:19 PM
காதலே மேலென்று காய்ந்தே கிடந்திடுவோர்
மாய்தலே காண்பர் அறி.

M.Jagadeesan
27-07-2012, 01:56 AM
அறிந்தோம் அனைத்துமென்று ஆணவம் வேண்டாம்
சறுக்குமே யானைக்கும் கால்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
27-07-2012, 04:57 AM
கால்சறுக்கும் கையொடியும் கண்ணவியும் கூனாகும்
மேல்செல்லும் நேரமதே வீழ்ந்து

M.Jagadeesan
27-07-2012, 02:26 PM
கால்சறுக்கும் கையொடியும் கண்ணவியும் கூனாகும்
மேல்ச்செல்லும் நேரமதே வீழ்ந்துமேல்ச்செல்லும் என்ற சொல்லில் "ச் " மிகாது.

Dr.சுந்தரராஜ் தயாளன்
27-07-2012, 02:32 PM
மேல்ச்செல்லும் என்ற சொல்லில் "ச் " மிகாது.
மாற்றியுள்ளேன் ஜெகதீசன் அவர்களே...தவறு சுட்டியமைக்கு நன்றி :aktion033:

M.Jagadeesan
27-07-2012, 02:44 PM
வீழ்வது குற்றமல்ல எஞ்ஞான்றும் வீழ்ந்தே
கிடப்பதுதான் குற்றமென்று கூறு.

கலைவேந்தன்
27-07-2012, 02:45 PM
வீழ்ந்துப்பின் ஏற்றம் விடிவுபெற்றோன் வாழ்வதனில்
ஊழ்வதுவும் தோற்கும் சமர்.

கலைவேந்தன்
27-07-2012, 02:48 PM
சற்றே பிந்திவிட்டேன் ஐயா.. இனி என்ன செய்வது..? மாற்றிவிடவா..?

M.Jagadeesan
27-07-2012, 03:03 PM
சற்றே பிந்திவிட்டேன் ஐயா.. இனி என்ன செய்வது..? மாற்றிவிடவா..?


மாற்றிவிடுங்கள்.

கலைவேந்தன்
27-07-2012, 03:33 PM
வீழ்வது குற்றமல்ல எஞ்ஞான்றும் வீழ்ந்தே
கிடப்பதுதான் குற்றமென்று கூறு.

கூறுஞ்சொல் குற்றமின்றி நேர்வழியில் சேர்ந்திடில்
வேறெதுவும் தீங்கில்லை காண்.

M.Jagadeesan
27-07-2012, 03:55 PM
காண்எனும் ஈற்றுச்சீர் கொண்டு குறள்யாத்தல்
வேண்டுமோ சிந்தனை செய்.

கீதம்
28-07-2012, 10:14 AM
செய்யும் உதவியை சொல்லியே மாய்ந்திருந்தால்
சீயென்றே எள்ளிநகைப் பர்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
28-07-2012, 12:07 PM
எள்ளிநகைப் பார்கள் எனவெண்ணி மன்றத்தில்
தள்ளிநிற் கின்றேன்நான் தாழ்ந்து

கலைவேந்தன்
28-07-2012, 02:32 PM
தாழ்ந்துசெல் எந்நாளும் தீதொன்றும் வாராது
வாழ்ந்திடும் ஆறென் றறி.

M.Jagadeesan
29-07-2012, 11:56 AM
அறிஞர் எழுத்தாளர் அண்ணாவின் சொற்பொழிவை
நாளெல்லாம் கேட்போம் நயந்து.

கலைவேந்தன்
29-07-2012, 12:21 PM
நயந்து தெளிதலே நட்புக் கணியாம்
பயனில் பதருடன் நட்பு.

M.Jagadeesan
29-07-2012, 12:45 PM
நட்புக்குச் சோழனும் ஆந்தையும் என்பதுபோல்
காதலுக்கு யாரென்று கூறு.

கலைவேந்தன்
29-07-2012, 12:54 PM
யாரென்று கூறினால் காதலுக்கு ஆட்டனத்தி
யாருமாதி மந்தியும் காண்.

M.Jagadeesan
29-07-2012, 01:09 PM
காணத் தெவிட்டாதே காரிகையாள் பேரழகு
வீணாகும் காணாத கண்.

கலைவேந்தன்
29-07-2012, 01:39 PM
கண்ணிரண்டு பெற்றும் பயனென்கொல் மாலவன்
கண்ணன்தாள் காணா தவன்.

கீதம்
31-07-2012, 03:13 AM
அவனுருக் கண்டநாளாய் தன்னுரு கெட்டு
தவித்திருக்கும் பேதை மனம்.

M.Jagadeesan
31-07-2012, 03:19 AM
மனமே தினமும் மறவேன் அவளைக்
கனவிலும் காண்பேன் இனி.

கீதம்
31-07-2012, 03:51 AM
இனிதென்று காதலை ஏத்துதலும் வேண்டாம்
இனிப்பும் திகட்டுமொரு நாள்.

கலைவேந்தன்
31-07-2012, 03:28 PM
நாளொன்றில் எண்ணிடா நாழிகை யேதுமில்லை
வாளாய்ப் பிளக்கும்முன் சொல்.

M.Jagadeesan
31-07-2012, 04:42 PM
சொல்ல இனிக்கும் தமிழ்மொழியை இப்புவியில்
வெல்ல ஒருமொழி சொல்.

கலைவேந்தன்
31-07-2012, 06:35 PM
ஒருமொழிச் சொல்லில் உளறிக் குளறின்
வருமந்தக் காதல் அறி.

:)

M.Jagadeesan
01-08-2012, 01:28 AM
காதல் அறிந்திலேன் காமம் அறிந்திலேன்
பேதைநான் தோன்றியது வீண்.

கீதம்
01-08-2012, 06:04 AM
வீண்பேச்சு வெட்டிவாதம் செய்தே புலம்புவார்
காணேன் செயல்வீரர் என்று.

M.Jagadeesan
01-08-2012, 09:26 AM
என்று வருவான் எமன்கொல்? அதன்முன்னே
நின்றுநிற்கும் நல்லறம் செய்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
01-08-2012, 11:05 AM
நல்லறம் செய்திடுக நல்லதுவே ஆயினும்
இல்லறத்தை நன்றாய் இயக்கு

கலைவேந்தன்
01-08-2012, 02:57 PM
இயக்குவா னிச்சையில் இச்சகம் என்றும்
இயக்குனன் ஈசன் அறி.

M.Jagadeesan
01-08-2012, 04:33 PM
அறிவிலார் கண்ணும் உளதாம் அறிந்தார்க்கு
அச்சாணி அன்னதோர் சொல்.

கலைவேந்தன்
02-08-2012, 09:18 AM
சொற்சுவை யாங்கே சுயமாய் நிறைந்ததாய்
பொற்குவையாய் சொக்கும் கவி.

கீதம்
12-08-2012, 10:28 AM
கவித்திறம் தேர்ந்த கருத்தாக்கம் தாயின்
மொழித்திறம் தோய்ந்தகவித் தேன்.

M.Jagadeesan
12-08-2012, 01:57 PM
தேன்மொழியே! வான்மழையே! கூன்பிறையே! நீயிலையேல்
நானிலையே நற்றுணையே வா!

Dr.சுந்தரராஜ் தயாளன்
14-08-2012, 04:48 PM
வாவென்று வந்தோரை வாழ்த்தினோம் வந்தனமாய்
தாவென்றார் தந்தோம்நாம் தாழ்ந்து

M.Jagadeesan
15-08-2012, 11:40 AM
தாழ்ந்தது போதும் தருக்கிஎழு எந்நாளும்
வீழ்ந்து கிடப்பது வீண்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
15-08-2012, 01:15 PM
தாழ்ந்தது போதும் தருக்கிஎழு எந்நாளும்
வீழ்ந்து கிடப்பது வீண்.
கனிச்சீர் வந்துள்ளதே, ஜெகதீசன் ஐயா..சரி செய்யுங்கள் ?

M.Jagadeesan
15-08-2012, 01:35 PM
தருக்கிஎழு= தருக் / கிஎ / ழு = நிரை,நிரை,நேர் = கருவிளங்காய்

இது தவறு எனில் , விளக்கவும்; திருத்திக்கொள்கிறேன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
15-08-2012, 01:36 PM
தாழ்ந்தது போதும் தருக்கிஎழு எந்நாளும்
வீழ்ந்து கிடப்பது வீண்.
தாழ்ந்ததோ போதும் தருக்கி--- எந்நாளும்
வீழ்ந்தே கிடப்பதோ வீண்
உகரம் குறைந்து ஒலிப்பதால் இவ்வாறு செய்வதே சரி என்று தோன்றுகிறது ஐயா

M.Jagadeesan
15-08-2012, 01:44 PM
தாழ்ந்ததோ போதும் தருக்கி--- எந்நாளும்
வீழ்ந்தே கிடப்பதோ வீண்
உகரம் குறைந்து ஒலிப்பதால் இவ்வாறு செய்வதே சரி என்று தோன்றுகிறது ஐயாதருக்கி - எந்நாளும் = மாமுன் நேர் வருகிறதே.

Dr.சுந்தரராஜ் தயாளன்
15-08-2012, 01:49 PM
தருக்கிஎழு= தருக் / கிஎ / ழு = நிரை,நிரை,நேர் = கருவிளங்காய்

இது தவறு எனில் , விளக்கவும்; திருத்திக்கொள்கிறேன்.

தருக்/கி/எழு = நிரை/நேர்/நிரை = புளிமாங்கனி (கிஎ...என வராது என்பது என் கருத்து ஐயா )
தருக்/கியெ/ழு = நிரை/நிரை/நேர் = கருவிளங்காய் , எனவே தருக்கியெழு என்று இருந்தால் சரி எனப்படுகிறது ஐயா

M.Jagadeesan
15-08-2012, 02:16 PM
சரி . நீங்கள் சொன்னதை ஏற்றுக் கொள்கிறேன். திருத்திக் கொண்டேன்.

தாழ்ந்தது போதும் தருக்கியெழு எந்நாளும்
வீழ்ந்து கிடப்பது வீண்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
15-08-2012, 02:51 PM
வீணாகச் செல்வத்தை வீண்விரயம் செய்கின்றார்
காணாத காட்சிகளைக் கண்டு

கலைவேந்தன்
18-08-2012, 05:00 PM
கண்டுயிர்த்தேன் காரிகையின் கண்ணிரண்டை அல்லாது
பண்டே மடிந்தேன் அறி.

M.Jagadeesan
19-08-2012, 02:36 AM
அறிந்தவன் எல்லாம் அறிந்தவன் அல்ல
முறிக்குமே தீம்பாலை உப்பு.

Dr.சுந்தரராஜ் தயாளன்
20-08-2012, 03:03 PM
உப்புக்கல் கொண்டொருவன் ஓர்சிற்பம் செய்ததனை
தப்பாய்த் தரைமீது வைத்து

கலைவேந்தன்
23-08-2012, 03:25 PM
உப்புக்கல் கொண்டொருவன் ஓர்சிற்பம் செய்ததனை
தப்பாய்த் தரைமீது வைத்து

முற்றுப்பெறாதது போல் ஓர் உணர்வு ஐயா. பலமுறை யோசித்தும் விளங்க இயலவில்லை. அதனாலேயே தொடரவும் தயக்கம்.

A Thainis
23-08-2012, 07:45 PM
குரல் யாப்போம் - ஈருதொடங்கி நன்று, வாழ்த்துக்கள்.

கீதம்
23-08-2012, 10:34 PM
குரல் யாப்போம் - ஈருதொடங்கி நன்று, வாழ்த்துக்கள்.

என்னாச்சு தைனிஸ்?

Dr.சுந்தரராஜ் தயாளன்
09-09-2012, 04:38 PM
முற்றுப்பெறாதது போல் ஓர் உணர்வு ஐயா. பலமுறை யோசித்தும் விளங்க இயலவில்லை. அதனாலேயே தொடரவும் தயக்கம்.

மன்னிக்கவும், நீண்ட நாட்கள் வர இயலவில்லை. விவிலியத்தில் உள்ள ஒரு வசனத்தை மனதில் வைத்து இதை எழுதினேன். எனக்கும் இதில் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. அவசரத்தில் எழுதிவிட்டு சென்றுவிட்டேன். சரி இப்போது மாற்றிவிடுகிறேன்:)

Dr.சுந்தரராஜ் தயாளன்
09-09-2012, 04:41 PM
உப்பின்றி ஊணினை உண்பதற்கு ஒவ்வாதே
சப்பென்ற தாக்கம்...சலிப்பு

A Thainis
09-09-2012, 06:55 PM
வருகைக்கு நன்று, தொடரட்டும் உங்களது குறள் யாப்போம் - ஈறு தொடங்கி

M.Jagadeesan
10-09-2012, 01:38 AM
சலிப்பும், வெறுப்பும் தடைசெய்யும் கற்கள்
வலிசெய்யும் வாழ்க்கை தரும்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
07-10-2012, 02:10 AM
தருமென்று பார்த்தால் தருமோநற்ப் பீலி
வருமென்றால் வாராநல் வாழ்வு

குணமதி
01-11-2012, 03:12 PM
வாழ்வில் வளர்ச்சி வருவதும் தாழ்வதும்
ஊழ்வினை அன்றென்(று) உரை.

குணமதி
01-11-2012, 03:14 PM
வருகைக்கு நன்று, தொடரட்டும் உங்களது குறள் யாப்போம் - ஈறு தொடங்கி

நன்றி நண்ப! இதோ அடுத்த குறள் காண்க.

கீதம்
01-11-2012, 10:17 PM
உரைத்திடும் சொல்லை உணர்ந்துரைப்பின் சூழும்
உறவோடு தேரும்நல் வாழ்வு.நன்றி நண்ப! இதோ அடுத்த குறள் காண்க.

தங்கள் வருகைக்கு நன்றியும் வரவேற்பும் குணமதி அவர்களே.

கலைவேந்தன்
02-11-2012, 03:00 AM
வாழ்வும் வருந்தாழ்வு மாங்கே யொருவனின்
ஊழ்வினை என்பது வீண்.

M.Jagadeesan
02-11-2012, 04:32 AM
வீணென்று சொல்லாதீர் வள்ளுவனின் ஊழினைக்
காணென்று சொல்வேன் உமக்கு.

(ஊழினை= ஊழ் அதிகாரத்தை )

குணமதி
02-11-2012, 03:51 PM
குருவுமொரு மாந்தர் குறைகாணின் கற்றே
உருவாக ஒல்லாதென்(று) ஓர்.(வரவேற்ற கீதம் அவர்களுக்கு மனங்கனிந்த நன்றி !)

M.Jagadeesan
02-11-2012, 05:17 PM
ஓர்இல் ஒருவில் ஒருசொல் தசரத
ராமனின் வாழ்வென்று ஓது.

குணமதி அவர்களின் மீள்வரவுக்கு நன்றி!

குணமதி
03-11-2012, 04:44 PM
துன்பமும் இன்பமும் தோல்வியும் வெற்றியும்
இன்றியோர் வாழ்வுண்டோ இல்.

M.Jagadeesan
07-11-2012, 11:22 AM
இல்லாள் இரக்கமற்ற பேயென்றால் மானிடனே!
சொல்லாமல் சந்நியாசம் கொள்.

ந.க
07-11-2012, 02:59 PM
பிள்ளைக் கில்லை சொல்லும் சொற் தேடல்
கேள் சொல்லை சொல்லி செய்யும் தமிழ்

ந.க
07-11-2012, 03:11 PM
குறள் குரலில் ஒலிப்போம்......நன்றி.

M.Jagadeesan
07-11-2012, 03:15 PM
பிள்ளைக் கில்லை சொல்லும் சொற் தேடல்
கேள் சொல்லை சொல்லி செய்யும் தமிழ்

கண்ணப்பு அவர்களுக்கு,

இத்திரியில் உள்ள அனைத்துக் குறட்பாக்களும், குறள்வெண்பா இலக்கணத்தில் உள்ளன. இத்திரியை முதலிலிருந்து படித்து வரவும். குறள்வெண்பா இலக்கணம் அறிந்தபின் , குறட்பாக்களை எளிதில் இயற்றலாம். தங்களின் முயற்சிக்கு நன்றி.

குணமதி
08-11-2012, 02:41 AM
கொள்கையில்லா மாந்தன் குறைமாந்தன் வாழ்வினில்
கொள்க குறிக்கோளைக் கூர்ந்து.

M.Jagadeesan
08-11-2012, 03:13 AM
துள்ளற்க செல்வம் வருங்கால் அதுஎன்றும்
நில்லாது ஓரிடத்தில் காண்.

குணமதி
09-11-2012, 09:31 AM
காண்க கவினுறும் காட்கிகளை! காண்பதால்
மாண்பில் மகிழும் மனம்.

M.Jagadeesan
09-11-2012, 10:01 AM
மனத்தை அடக்கு சினத்தை அடக்கு
உனக்கடிமை யாகும் உலகு.

குணமதி
10-11-2012, 03:25 AM
குள்ள மனத்தார் குறையுரை குப்பையாம்
தள்ளிமேற் செல்லல் தகை.

M.Jagadeesan
10-11-2012, 03:44 AM
கையிரண்டும் காலிரண்டும் உன்னுடைய மூலதனம்
மெய்வருத்தம் வெற்றி தரும்.

குணமதி
11-11-2012, 02:55 PM
வெற்றிதரும் என்றாலும் வேண்டாமே எப்போரும்
பற்றிடுவோம் அன்பைப் பரிந்து.

M.Jagadeesan
11-11-2012, 11:56 PM
துன்பம் வருங்கால் துவளற்க எஞ்ஞான்றும்
இன்பமே வாராது கொல்.

குணமதி
12-11-2012, 01:36 PM
'கொல்'லென் சிரிப்பும் குமிழ்வாயின் புன்னகையும்
நல்லுடற் கூறென்றார் நம்பு.

M.Jagadeesan
13-11-2012, 01:11 AM
நம்புக நல்லோர்தம் வாய்மொழியை நம்பற்க
வம்பரின் வாய்வழிச் சொல்.

குணமதி
14-11-2012, 04:58 PM
சொல்லும் பொருளும் சுவையுமிக பாடல்கள்
நில்லும் உலகில் நிலைத்து.

குணமதி
18-11-2012, 11:43 PM
துணிவு திறத்தொடு தூய உளமும்
பணிவும் உலகுவெலும் பார்.

M.Jagadeesan
19-11-2012, 12:35 AM
பார்வையில் காதல் உருவாகும் காதலியின்
கூர்விழிக்கு ஒக்குமோ வேல்.

குணமதி
19-11-2012, 03:59 PM
வேலும் பிறையும் விளங்கும்கண் நன்னுதலே
நாலும்கை வேயாம் நவில்.

இதன் பொருள்:
(அவளுக்கு) வேலும், பிறைநிலவும் கண்ணாகவும் நல்ல நெற்றியாகவும் விளங்குகின்றன; தொங்குகின்ற கையோ மூங்கிலில் செய்ததைப் போன்றதென்று சொல்.

குணமதி
22-11-2012, 10:42 AM
வில்லே ருழவர் விழைவெல்லாம் வெற்றியே
சொல்லே ருழவர்க்கேற் றம்.

குணமதி
27-11-2012, 12:53 AM
எழுதப்படும் குறள்களில் பிழைகண்டால் யாரும் சுட்டிக்காட்டலாம்; ஐயமெழுந்தால் உடனே கேட்கலாம்.
தொடர்ந்து ஈறு தொடங்கி எழுதுமாறு அனைவரையும் அழைக்கின்றேன்.

M.Jagadeesan
27-11-2012, 02:11 AM
அம்மி உரலெல்லாம் வீட்டிற்கு வந்ததற்கு
வம்புசெய்யும் மின்னாற்றல் ஆம்.

குணமதி
28-11-2012, 01:13 AM
ஆமாமாம் என்றெல்லாம் ஆராயா(து) ஏற்றொப்பல்
ஏமாற்றம் இன்னற்கே ஏது.

M.Jagadeesan
28-11-2012, 02:45 AM
துணிவும் பணிவும் அழகிய சொல்லும்
அணியென்று ஆணுக்கு ஓது.

குணமதி
29-11-2012, 12:48 PM
துடியிடை வேல்விழி தோள்வேயாம் தேரே
நடிநடை நங்கைக்(கு) உரை.

கீதம்
29-11-2012, 09:44 PM
துடியிடை வேல்விழி தோள்வேயாம் தேரே
நடிநடை நங்கைக்(கு) உரை.


இக்குறளின் பொருளறிய விரும்புகிறேன் ஐயா.

குணமதி
30-11-2012, 12:10 AM
இக்குறளின் பொருளறிய விரும்புகிறேன் ஐயா.

துடியிடை வேல்விழி தோள்வேயாம் தேரே
நடிநடை நங்கைக்(கு) உரை.

நங்கைக்கு - பெண்ணிற் சிறந்த இவளுக்கு
துடியிடை - இடை துடி (உடுக்கை) போன்றது
வேல்விழி - விழி வேல்போன்றதாம்
தோள்வேயாம் - தோள்கள் மூங்கிலைப்போன்றவையாம்
தேரே நடிநடை - பெருமையான நடை தேரே நடப்பது போன்றதாகும்
உரை - (என்று) சோல்வாயாக!

M.Jagadeesan
30-11-2012, 12:46 AM
துடியிடை வேல்விழி தோள்வேயாம் தேரே
நடிநடை நங்கைக்(கு) உரை.

தங்களின் இந்தக் குறளைப் படித்தவுடன் என் நினைவுக்கு வந்தது

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. ( நலம் புனைந்துரைத்தல் - 1113 )

என்ற குறள். ஒரே குறளில் ஐந்து உவமைகளைக் கையாண்ட வள்ளுவரின் திறம் பாராட்டற்குரியது.

கீதம்
30-11-2012, 02:46 AM
துடியிடை வேல்விழி தோள்வேயாம் தேரே
நடிநடை நங்கைக்(கு) உரை.

நங்கைக்கு - பெண்ணிற் சிறந்த இவளுக்கு
துடியிடை - இடை துடி (உடுக்கை) போன்றது
வேல்விழி - விழி வேல்போன்றதாம்
தோள்வேயாம் - தோள்கள் மூங்கிலைப்போன்றவையாம்
தேரே நடிநடை - பெருமையான நடை தேரே நடப்பது போன்றதாகும்
உரை - (என்று) சோல்வாயாக!

விளக்கத்துக்கு மிகவும் நன்றி ஐயா.

குணமதி
30-11-2012, 04:15 AM
தங்களின் இந்தக் குறளைப் படித்தவுடன் என் நினைவுக்கு வந்தது

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. ( நலம் புனைந்துரைத்தல் - 1113 )

என்ற குறள். ஒரே குறளில் ஐந்து உவமைகளைக் கையாண்ட வள்ளுவரின் திறம் பாராட்டற்குரியது.

நன்றி ஐயா.

M.Jagadeesan
01-12-2012, 03:51 AM
உரைக்குப் பரிமேல் அழகனே நல்வழிக்கும்
மூதுரைக்கும் அவ்வையென் றோது.

குணமதி
04-12-2012, 10:13 AM
தங்களின் இந்தக் குறளைப் படித்தவுடன் என் நினைவுக்கு வந்தது

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. ( நலம் புனைந்துரைத்தல் - 1113 )

என்ற குறள். ஒரே குறளில் ஐந்து உவமைகளைக் கையாண்ட வள்ளுவரின் திறம் பாராட்டற்குரியது.

நன்றி ஐயா.

குணமதி
04-12-2012, 10:34 AM
உரைக்குப் பரிமேல் அழகனே நல்வழிக்கும்
மூதுரைக்கும் அவ்வையென் றோது.

துன்னர் எனில்தையற் காரர்;நன் னர்பொருளோ
நன்மை, நலம்,மேன்மை யாம்.

M.Jagadeesan
04-12-2012, 01:59 PM
யாமறிந்த நூலிலே வள்ளுவரின் நூல்போல
பூமிதனில் யாங்கணுமே இல்.

குணமதி
06-12-2012, 02:26 PM
இல்லாத தில்லை இருந்தும்இந் நாட்டினில்
அல்லல் அரசியலா ரால்.

குணமதி
09-12-2012, 08:05 AM
ஆலின்கீழ் ஆகா மரமென்பார் ஆயினும்
ஆலின்மேல் ஆகும் அரசு.

குணமதி
19-12-2012, 01:57 PM
அரசுடனே ஆல்வளரும் அஃதிறையென்(று) இங்கே
பரசுமறி யாமையினைப் பார்.

M.Jagadeesan
25-12-2012, 07:34 AM
பாரெல்லாம் கொள்ளாத் தகைத்தே உனையீன்று
மார்சுமந்த தாயின் புகழ்.

குணமதி
25-12-2012, 12:49 PM
புகழும் இகழும் பொருட்படுத்தா உள்ளம்
திகழும் உயர்வெனவே தேர்.

தாமரை
28-12-2012, 02:45 PM
தேர்வினில் தோற்றிடினும் வாழ்வில் உயரலாம்
சோர்வினில் தோற்கா தவர்

குணமதி
28-12-2012, 03:44 PM
தோற்கா தவரொடு தோற்றாரும் வென்றவரே
ஆற்றலுறு காத லதில்.

குணமதி
08-01-2013, 02:16 AM
தில்லை மதுரையெனத் தீரப் புரிந்துகொண்டால்
இல்லைக்கே(டு) இல்லறத்திற் கெண்ணு.

கும்பகோணத்துப்பிள்ளை
10-01-2013, 07:26 PM
இல்லறமும் சொல்லறமும் தாங்கிச்செயல்வழி கொண்டு
நல்லறம்புரிந்தார்க் கென்றுனடாம் உய்வு

குணமதி
11-01-2013, 01:17 AM
இல்லறமும் சொல்லறமும் தாங்கிச்செயல்வழி கொண்டு
நல்லறம்புரிந்தார்க் கென்றுனடாம் உய்வு

இல்லறமும் சொல்லறமும் தாங்கிச் செயல்வழியில்
நல்லறம்காண் பார்க்குண்டாம் உய்வு.

சிறிய திருத்தம். அருமையான முயற்சி!
தொடர்ந்து எழுதுங்கள்.
ஐயம் தோன்றினால் உடனே கேளுங்கள்.

குணமதி
11-01-2013, 01:24 AM
உள்ளும் புறமும் ஒழுக்கத்தைத் கொள்வாரைக்
கொள்ளும் உலகுயர்வாய்க் கூறு.

கும்பகோணத்துப்பிள்ளை
11-01-2013, 02:05 AM
இல்லறமும் சொல்லறமும் தாங்கிச் செயல்வழியில்
நல்லறம்காண் பார்க்குண்டாம் உய்வு.

சிறிய திருத்தம். அருமையான முயற்சி!
தொடர்ந்து எழுதுங்கள்.
ஐயம் தோன்றினால் உடனே கேளுங்கள்.

முதல் முயற்சியிது இலக்கணப்பயிற்சி குறைவு
திருத்தியமைக்கு நன்றி ஜயா.

கும்பகோணத்துப்பிள்ளை
11-01-2013, 02:06 AM
இல்லறமும் சொல்லறமும் தாங்கிச் செயல்வழியில்
நல்லறம்காண் பார்க்குண்டாம் உய்வு.

சிறிய திருத்தம். அருமையான முயற்சி!
தொடர்ந்து எழுதுங்கள்.
ஐயம் தோன்றினால் உடனே கேளுங்கள்.

முதல் முயற்சியிது இலக்கணப்பயிற்சி குறைவு
திருத்தியமைக்கு நன்றி ஜயா.

M.Jagadeesan
11-01-2013, 07:36 AM
கூறுகட்டி விற்கின்ற பண்டங்கள் என்றுமே
ஊறுசெய்யும் என்றே அறி.

குணமதி
17-01-2013, 08:15 AM
அறிதொறும் தோன்றும் அகமகிழ்ச்சி மண்ணில்
அறியாமை மிக்கென்(று) அறி.

குணமதி
02-02-2013, 03:04 AM
அறிஞர் உரைமதி ஆனாலும் ஆய்ந்தே
பிறிதுரையும் கண்டபின் பேசு.

M.Jagadeesan
02-02-2013, 04:22 AM
பேசுக இன்சொல்லை அச்சொல்லே கோடையிலே
வீசுகின்ற தென்றலுக்கு நேர்.

ரமணி
02-02-2013, 04:26 AM
பேசுவது யோசித்துப் பேசுக பேசியபின்
யாசித்தல் ஆகும் இழுக்கு.


அறிஞர் உரைமதி ஆனாலும் ஆய்ந்தே
பிறிதுரையும் கண்டபின் பேசு.

M.Jagadeesan
02-02-2013, 09:45 AM
இழுக்குற்ற வன்சொல்லைப் பேசுகின்ற சான்றோர்
அழுக்கடைந்த ஆடைக்கு நேர்.

குணமதி
04-02-2013, 02:56 AM
நேர்நிமிர் பெண்ணே நினைப்பை உறுதிசெய்
ஊர்போற்றும் உன்பின் வரும்.

M.Jagadeesan
04-02-2013, 12:30 PM
வருகவே மக்காள் ! தமிழ்த்தேனை மன்றில்
பருக வருவீர் விரைந்து.

குணமதி
05-02-2013, 01:43 AM
துனபந் துயர்வரினும் தூய்மைப் பணியாற்றின்
இன்பந் தொடரும் இயைந்து.

prakash01
05-02-2013, 05:02 PM
குணமதி அவர்களே என்னக்கு ஒரு சந்தேகம் ஜெகதீசன் ஐயா அவர்கள் விரைந்து என்று முடித்திருக்கிறார். நீங்கள் விரைந்து அல்லது பருக, வருவீர் என்று தொடங்கும் குறள் இங்கு பதிந்திருக்க வேண்டும் அல்லவா ?. ஆனால் நீங்கள் 'துன்பந்' என்ற குறளை இங்கு பதிந்துள்ளீர்கள்?..

குணமதி
06-02-2013, 02:24 AM
குணமதி அவர்களே என்னக்கு ஒரு சந்தேகம் ஜெகதீசன் ஐயா அவர்கள் விரைந்து என்று முடித்திருக்கிறார். நீங்கள் விரைந்து அல்லது பருக, வருவீர் என்று தொடங்கும் குறள் இங்கு பதிந்திருக்க வேண்டும் அல்லவா ?. ஆனால் நீங்கள் 'துன்பந்' என்ற குறளை இங்கு பதிந்துள்ளீர்கள்?..

ஈறுதொடங்கி (அந்தாதி)ப் பாடல் எழுதும்போது, கடைசி எழுத்தையோ, கடைசி எழுத்துக்களையோ, கடைசிச் சீரையோ (சொல்லையோ) கடைசிச் சீர்களையோ, கடைசி அடியையோ தொடக்கமாக வைத்து அடுத்த பாடலை இயற்ற வேண்டும்.

வருகவே மக்காள் ! தமிழ்த்தேனை மன்றில்
பருக வருவீர் விரைந்து

- இதில் கடைசி எழுத்து 'து' அன்றோ? எனவே 'து' எனத் தொடங்கி என் பாடலை அமைத்திருக்கிறேன்.

துனபந் துயர்வரினும் தூய்மைப் பணியாற்றின்
இன்பந் தொடரும் இயைந்து.

இப்போது புரியும் என்று எண்ணுகிறேன்.

prakash01
06-02-2013, 04:33 PM
நன்றி.முயற்சி செய்கிறேன் குணமதி அவர்களே.

குணமதி
07-02-2013, 02:09 AM
துனபந் துயர்வரினும் தூய்மைப் பணியாற்றின்
இன்பந் தொடரும் இயைந்து.

துடிப்பும் இளமையும் தூங்கா உணர்வும்
விடியல் அளிக்கும் விளம்பு

M.Jagadeesan
10-02-2013, 02:25 AM
புவிக்குச் சுமையாய் இருக்காதே என்றும்
புவியைச் சுமந்தே இரு.

குணமதி
10-02-2013, 08:34 AM
இருவர் உலகில் இருப்பதிலை எல்லா
அரும்உணர்வும் ஒன்றி அறி.

குணமதி
18-02-2013, 01:57 AM
அறிக அறிதக்க மற்றவை வாழ்வில்
அறியாமை கேடில்லை யாம்.

M.Jagadeesan
18-02-2013, 03:05 AM
யாமறிந்த மன்றத்தில் நம்தமிழ் மன்றம்போல்

பூமிதனில் இல்லை அறி.

குணமதி
18-02-2013, 02:22 PM
அறிதற் கரிய தறிந்தவஞ் ஞான்றே
அறியாமை காண லுறும்.

M.Jagadeesan
19-02-2013, 02:05 PM
உறுமும் புலியினும் தீதே திருடும்
கொலையும் புரிவார் தொடர்பு.

குணமதி
20-02-2013, 02:01 AM
புலமை பலபெரினும் புன்மையிலா நெஞ்சம்
நிலவல் பெரிதாம் நினை.

M.Jagadeesan
20-02-2013, 02:48 AM
நினைக்குங்கால் நெஞ்செல்லாம் புண்ணாகும் ஈழத்தில்
பாலகனைக் கொன்ற செயல்.

குணமதி
21-02-2013, 01:51 AM
பாலகனைக் கொன்றசெயற் பார்த்துமச் சிங்களர்க்கே
ஆலவட்டம் அன்பழைப்பா கூறு!

M.Jagadeesan
21-02-2013, 03:59 AM
கூறுவதைத் திண்ணமாய் யோசித்து உன்னோடு
மாறுபட்டார் ஏற்றிடவே கூறு.

ஷக்தி
21-02-2013, 10:47 AM
கூறுகெட்ட தமிழாஉன் “விஸ்வரூப”க் கூச்சலை
விட்டு வெளியிலே வா ..!!


( நமக்கும் கவிதைக்கு்ம் ரொம்ம்ம்ம்ம்ப தூரமுங்கோ. அதுவும் வெண்பா.... அப்பப்பா... அது வேம்பு பா. அதோட வம்பே நமக்கு வேண்டாம்பா -னு அது பக்கம் கூட தல வச்சி படுக்கறது இல்லீங்கோ.
அப்படியும் மேற்படி பிதற்றல் வெண்பா வகையறாக்கு ஒத்து போகும் பட்சத்துல அதோட ஒட்டு மொத்த பெருமையும் ( அப்படின்னு ஒன்னு இருந்தா...) அது திரு. ரமணி அவரோட ”கவிதையில் யாப்பு” பயிற்சி திரிக்கு தான் சேரோணுமுங்கோ.

அப்படி இல்லாம தளை தட்டினா, அதுக்கு இருக்கவே இருக்கு என்னோட தலை.... தட்டிடுங்கோ. )

பின் குறிப்பு: கமலின் காற்றாடிகள் யாரும் அடிக்க வராதீங்னா... எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்களாமுங்கோ .. !!

குணமதி
21-02-2013, 03:29 PM
வாருங்கள் வந்திங்கே வக்கணையாய் வண்டமிழில்
தாருங்கள் தக்க கருத்து.

ஷக்தி
23-02-2013, 03:28 PM
கருத்தொண்ணு சொல்லணும்னு உள்மனசு சொல்லுச்சு
உளறாம "சும்மா இரு"

குணமதி
24-02-2013, 01:40 AM
கருத்தொண்ணு சொல்லணும்னு உள்மனசு சொல்லுச்சு
உளறாம "சும்மா இரு"

புதுப்பா எழுதுவது போல் கொச்சை வழக்கில் மரபுப்பா எழுதுவது விரும்பத் தக்கதன்று.

இனி அடுத்தது -

இருள்சேர் வினைநீக்கி இன்பம் விளைப்போம்
மருள்நீக்கி மாண்புறு வோம்.

ஷக்தி
24-02-2013, 05:46 PM
( கொச்சைத் வழக்கு...??

"படிப்பு வளருது பாவம் தொலையுது
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான் போவான் ஐயோ என்று"

"சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது
தொப்பை சுருங்குது சுறுசுறுப்பு விளையுது
எட்டு லச்சுமியும் ஏறி வளருது"

இந்த வரிகள் யாருக்குச் சொந்தமானவைனு தெரியுதுங்களா...??
சாக்ஷாத் மஹாகவி சுப்ரமணிய பாரதியாருடையது.

"காலா காலருகே வாடா
சற்றே உன்னை மிதிக்கிறேன்"
இதுவும் பாரதி தானுங்னா.

"மாடு மேய்க்கும் கண்ணே
நீ போக வேண்டாம் சொன்னேன்
காய்ச்சின பாலு தாரேன்
கல்கண்டு சீனி தாரேன்
கை நெறைய வெண்ண தாரேன் "
- கர்னாடக சங்கீத கட்சேரிகள்-ல ஆருணா சாய்ராமோட குரல்-ல இந்த பாட்ட கேக்கணுமே...


"கொல்லையில தென்ன வெச்சி
குருத்தோல பெட்டி செஞ்சி
சீனி போட்டு நீ திங்க
செல்லமாய் பிறந்தவளோ"
-ஏ ஆர் ரஹுமானின் இசையில் மண்ணின் மணம் கமழும் தாலாட்டு.

"தண்ணி தொட்டி தேடி வந்த
கன்னு குட்டி நான்"
- மதுவாலும் மாதுவாலும் திசை மாறிப் போன ஒரு கலைங்ஞனின் நிலை இளையராஜாவோட இசையில்

"தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணி தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்ம"

"அம்மி அரைச்சவ கும்மி அடிச்சவ
நாட்டுப்புறத்துல சொன்னதப்பா "

இப்படி சொன்னா தப்பா... ??

இதெல்லாம் கொச்சை தமிழ்னு சொல்ல வர்ரீங்களா..??

அப்படி பார்த்தா "நாட்டுப்புற பாடல்கள்"னு சொல்ற நடவு பாட்டு, தெம்மாங்கு, ஏற்றப்பாட்டு, தாலாட்டு ஒப்பாரி எல்லாமே கொச்சை தானுங்க்ளா...??

இல்லீங்னா இதெல்லாமே வழக்கு தமிழ் - பேச்சுத் தமிழ் - பாமரத் தமிழ்.

இப்படி பாமர தமிழ்-ல வெண்பா வடிச்சா குத்தமுங்களா...??

எந்த ஒரு படைப்பும் எல்லோரையும் - பாமரனையும் போய் சேரனும்னு தானேங்னா படைக்கப் படுது.

அவ்ளோ ஏனுங்க, இந்த திரியையும் நீங்க அந்த நோக்கத்தோட தானே தொடங்கி இருப்பீங்க ?

பாமர வழக்குல ஒரு விஷயம் சொல்ற போது அது மக்கள்கிட்ட சுலபமா போய் சேராதுங்களா...??

மரபுக்கவிதையா வேண்டவே வேண்டாம்னு சொல்றவங்களும் படிக்க வருவாங்க தானே

அப்படி படிக்க வர்றவங்களுக்கு, பேச்சு வழக்கில் உபயோகிற வார்த்தைகள வச்சும் வெண்பா வடிக்கலாம்னு தெரிய வரும்போது நாமும் முயற்சி பண்ண வாய்ப்பு நெறைய இருக்கு இல்லீங்களா...??

வெண்பா எழுத "வரும் ஆனா வராது" அப்படின்னு தவிக்கிற எத்தனையோ நெங்சங்களுக்கு அந்த "வரும் ஆனா வராது" அப்படிங்கற வாக்கியத்துல சின்ன மாற்றம் பண்ணினாலே போதும் ( "எழுதவரும் ஆனா வராது") அது வெண்பாவொட இலக்கணத்துக்குள்ள வந்துடும், நடைமுறையில் பயன்படித்துற வார்த்தைகளையும் வாக்கியங்களையும் வெச்சும் எட்டாக்கனியா இருக்கற வெண்பாவ எட்டிட முடியும்னு தெரிய வர்ற போது, படிப்பவர்களும், படைப்பவர்களும் அதிகரிக்க மாட்டாங்களோ...!!


இன்னமும் உங்களுக்கு,இதெல்லாம் கொச்சைத் தமிழ் இதுகளுக்கு உங்களொட திரியில் இடம் இல்லைனு தோன்றினால் , "இது சுத்தமான வெண்பாவினால் செய்யப்பட்டது இல்லை" அப்படின்னு சொல்லி, இந்த பதிலையும், இதற்கு காரணமான அந்தக் கவிதை?? உளறல்?? ஏதோ ஒன்னு, அந்தப் பதிவையும், நீக்கி விடப் பரித்துரைக்குறேனுங்கோ....!!!

பின் குறிப்பு:
சொல்லுல குத்தமில்ல பொருள்ல தான் குத்தமிருக்குனு சொல்றீங்களா..?

அந்த பாட்டு, வழக்கு சொல்லாடலில், பாமரத்தனமாக தோன்றினாலும்., அதுல ஒரு ஆழ்ந்த கருத்து இருக்குங்னா. ( என்னோட கவிதைய பத்தி நானே சொல்லிக்க வேண்டி இருக்கு. என்ன கொடும சரவணா இது... !! )

வாழ்க்கையை வெறுத்து, கோபுரத்து மேல இருந்து குதிக்கப் போன அருணகிரிநாதருக்கு, நம்ம தமிழ் கடவுள் முருகரு தடுத்தாட்கொண்டப்போ சொன்னதுங்ன அது.

" சும்மா இரு " - " சொல்லற ".

கந்தர் அநுபூதி-லயும் கந்தரலங்காரத்துலயும், அருணகிரிநாதரே,
"அம் மாப்பொருள்" என்னன்னு புரியாம குழம்பி தவிச்ச விஷயமுங்கோ. நமக்கு அம்புட்டு சீக்கிரம் கை வந்துடுமா என்ன....

கண்டிப்பா ஒரு தனி இழை தொடங்கி ரூம் போட்டு டிஸ்கஸ் பண்ண வேண்டிய சப்ஜெக்டுங்னா. .

இப்போவே இது பரிமேலழகர் உரையை விட ரொம்ப பெரிய விளக்கமா போய்ட்டதால தேவைப்பட்டால் இன்னொரு பதிவில் பார்த்துக்கலாமுங்கோ.

=ஷக்தி.

M.Jagadeesan
28-02-2013, 01:41 AM
மாண்புறுவோம் தெய்வப் புலவர்தம் நூல்படித்தால்
வீணே பிறநூல் படிப்பு.

ஷக்தி
28-02-2013, 12:53 PM
படிச்சதெல்லாம் வீணாவேப் போயிடுமா கண்டதையும்
நீர்படிச்சா பண்டிதன் தான்.

M.Jagadeesan
06-03-2013, 02:44 AM
பண்டிதன்தான் நற்றமிழைப் போற்றியதாய் எண்ணாதீர்
நொண்டியும் அந்தகனும் உண்டு.