PDA

View Full Version : முயலும் ஆமையும் புதுக்கதை



கலையரசி
23-12-2009, 11:36 AM
முயல், ஆமை கதை இப்போது நிறுவனங்களில் நான்கு விதமாகச் சொல்லப்படுகிறது. முதலாவது நமக்கு ஏற்கெனவே தெரிந்த கதை. இதில் வேகமாக ஓடி வந்த முயல், ஆமை
மிகவும் பின்னாடி வருவதைக் கண்டு, ஒரு தூக்கம் போடவே, ஆமை மெதுவாக வந்தாலும், தொடர்ச்சியாக நடந்து வந்து வெற்றியடைந்து விட்டது. பொறுமையாகவும் நிதானமாகவும்
சென்று ஆமை இதில் வென்று விட்டது.

ஆனால் இந்த அவசர உலகத்தில், வேகமாகவும் வரவேண்டும்; பந்தயத்தையும் வெல்ல வேண்டும். எனவே இரண்டாவது கதையில் முயலும் ஆமையும் போட்டியில் கலந்து
கொள்கின்றன. ஆனால் இம்முறை முயல் விரைவாகயும், தொடர்ச்சியாகவும் ஓடி ஆமையை எளிதாக வெல்கிறது.

மூன்றாவது கதையில், வெற்றிக் களிப்பில் நீந்திய முயல், மறுபடியும் ஆமையை வெறுப்பேற்ற அதை ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள அழைக்கிறது. ஆமை சமயோசிதமாக
ஒரு நிபந்தனையுடன் போட்டியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவிக்கிறது. 'ஓட்டத்துக்கான பாதையை நானே தேர்வு செய்வேன்' என்கிறது ஆமை. 'எந்தப் பாதையாய் இருந்தாலென்ன?
கண்டிப்பாய் நாம் தான் வெல்வோம்' என்ற மமதையுடன் சிறிது கூட யோசிக்காமல் சரி என்று முயல் சம்மதம் தெரிவிக்கிறது. போட்டி துவங்கிய பிறகு, வழியில் ஆறு ஒன்று குறுக்கிட,
முயல் ஆற்றைக் கடக்க முடியாமல் தோல்வியைத் தழுவுகிறது.

நான்காவது கதையில் முயலும் ஆமையும் தம் பலம், பலவீனம் இரண்டையும் அலசிப்பார்த்து கூட்டாகச் செயல்படுகின்றன. நிலத்தில் முயல் ஆமையை தூக்கிக் கொண்டு வேகமாக
ஓட, நீரில் ஆமை முயலைத் தன் முதுகில் தூக்கிக் கொண்டு பயணம் செய்ய, மிகவும் குறைந்த நேரத்தில் இரண்டுமே தம் இலக்கை எட்டுகின்றன.
ஒவ்வொருவரும் தம் பலம், பலவீனம் இரண்டையும் அலசி ஆராய்ந்து, குழுவில் உள்ள மற்றவர்களுடன் சேர்ந்து குழு மனப்பான்மையுடன் செயல்பட்டால், விரைவாகவும்
எளிதாகவும் தம் இலக்கை எட்ட முடியும் என்பதற்கு இந்த கதையைச் சொல்கிறார்கள். தற்போது நிறுவனங்கள் இந்தக்கதையையே தம் பணியாளர்களுக்குச் சிபாரிசு செய்கின்றன.
இந்தக்கதைகளை எங்கள் அலுவலகத்திற்கான இதழில் (in-house magazine) படித்தேன். எழுதியவர் யார் என்று தெரியாது.

அறிஞர்
23-12-2009, 02:00 PM
நல்ல கதை...
குழுவில் ஒவ்வொருவரின் பலம், பலவீனத்தை ஆராய்ந்து செயல்பட்டால் என்று வெற்றியே...

நன்றி கலையரசி

சிவா.ஜி
23-12-2009, 02:54 PM
டீம் வொர்க் எனும் குழுவாய் செயல்படுதல் எப்போதுமே வெற்றியைத் தரும். அதை விளக்க பழைய கதைக்கு புது மெருகு இட்டுள்ளது நன்றாக இருக்கிறது.

பகிர்வுக்கு நன்றி கலையரசி.

anna
23-12-2009, 03:59 PM
கூட்டு முயற்சி வெற்றி தரும் என்பதற்காக சொல்லப்பட்டது தான் இந்த கதை. பழைய கதையை கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கலையரசி
24-12-2009, 10:23 AM
நல்ல கதை...
குழுவில் ஒவ்வொருவரின் பலம், பலவீனத்தை ஆராய்ந்து செயல்பட்டால் என்று வெற்றியே...

நன்றி கலையரசி

பின்னூட்டம் எழுதி என்னை ஊக்குவித்த அறிஞர் அவர்களுக்கு நன்றி.

கலையரசி
24-12-2009, 10:25 AM
டீம் வொர்க் எனும் குழுவாய் செயல்படுதல் எப்போதுமே வெற்றியைத் தரும். அதை விளக்க பழைய கதைக்கு புது மெருகு இட்டுள்ளது நன்றாக இருக்கிறது.

பகிர்வுக்கு நன்றி கலையரசி.

ஆங்கிலத்தில் படித்ததை நான் மொழியாக்கம் செய்தேன். மூலத்தைப் படித்திருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
நன்றி சிவா.ஜி அவர்களே!

கலையரசி
24-12-2009, 11:54 AM
கூட்டு முயற்சி வெற்றி தரும் என்பதற்காக சொல்லப்பட்டது தான் இந்த கதை. பழைய கதையை கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கூட்டு முயற்சி வெற்றி பெறும் என்பது மட்டுமல்ல; குழுவுடன் ஒத்திசைந்து
இயங்கும் போது வெற்றியை எளிதில் எல்லோருமே பெறுவதோடு. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னதாக முடிக்கவும் முடியும் என்பதை வலியுறுத்துகிறது இக்கதை.
வாழ்த்துக்கு நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
12-01-2010, 11:48 PM
இந்தக்கதையைக் கேட்டிருக்கிறேன். பாதி மறந்து போயிற்று. இப்போது நினைவுக்கு வந்தது. நன்றி.
சொ.ஞானசம்பந்தன்

சரண்யா
13-01-2010, 12:57 AM
முதல் இரண்டு கதை அறிந்தது..பின் வந்த 3 மற்றும் 4ஆம் கதையை தங்கள் மூலம் அறிந்தேன்..பகிர்வுக்கு நன்றிகள் கலையரசி அவர்களே...

aren
13-01-2010, 06:37 AM
நான் ஏற்கெனவே இதைப் படித்திருந்தாலும் இங்கே பதித்து அந்த விஷயத்தை மறுபடியும் எனக்கு ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.

நல்ல படிப்பினை.