PDA

View Full Version : வகை வகையாய் கோடு அமைக்க.



நூர்
22-12-2009, 12:27 PM
வகை வகையாய் கோடு அமைக்க

வேர்டில் கட்டம் கட்டுதல், பல அழகான கோடுகள் அமைத்தல் போன்றவை நம் டாகுமெண்ட்டிற்கு அழகூட்டும். வேர்டைப் பொறுத்தவரை பல அழகான கோடுகளை அமைக்கப் பல வழிகள் உள்ளன.

சில சுருக்கு வழிகளை இங்கு பார்க்கலாம்.


இடது பக்கமிருந்து வலது பக்கத்திற்குஎளிமையான ஒரு கோடுஅமைக்க மூன்று மைனஸ் (–) அடையாளங்களை அமைத்து என்டர் தட்டுங்கள்.

கோடு ஒன்று வரையப்படும். மூன்று ஈக்குவல் (=)அடையாளங்களை அமைத்து என்டர் தட்டினால் இரட்டைக் கோடு கிடைக்கும்.

இதே போல டில்டே (~) அடையாளம் அலை அலையாய் ஒரு கோட்டினை அமைக்கும்.

இதே போல (x) மற்றும் வேறு அடையாளங்களை அமைத்து பரீட்சித்துப் பார்க்கவும்.

இந்த கோடுகளை வேண்டாம் என எண்ணினால் எப்படி நீக்குவது?

கோட்டுக்கு மேலாக கர்சரைக் கொண்டு வரவும். பின் கண்ட்ரோல் + க்யூ அழுத்தவும். கோடு வரைவதில் இந்த ஏற்பாடு உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வேர்ட் தொகுப்பில் கிடைக்கவில்லை என்றால் உள்ளே செட்டிங்ஸ் மாறி இருக்கலாம்.

இதனை மாற்ற Tools மெனு திறக்கவும். பின் அதில் Auto correctionsஎன்ற பிரிவைத் திறக்கவும். கிடைக்கும் டயலாக் பாக்ஸில் Auto format as you type என்ற பிரிவில் Border Lines பாக்ஸுக்கு எதிராக டிக் அடையாளத்தை அமைக்கவும்.


வேர்ட் மெனுவில் பட்டன்களை மாற்ற நாம் அன்றாடம் வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்துகிறோம். அதில் மேலாக உள்ல மெனு பட்டன்களை அவற்றின் வழக்கமான இடங்களில் வைத்துப் பார்த்து தேர்தெடுக்கிறோம்.

சில வேளைகளில் இவை இடம் மாறி, வேறு ஒரு இடத்தில் இருந்தால் நல்லது என்று எண்ணுவோம். ஆனால் அதற்கு என்ன செய்வது என்று எண்ணாமல் விட்டுவிடுவோம். இதற்கான வழியை இங்கு காண்போம்.


இதற்கு முதலில் Alt யை அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் இடம் மாற்ற விரும்பும் மெனு பட்டனை உங்கள் மவுஸால் கிளிக் செய்து அப்படியே இழுத்து நீங்கள் விரும்பும் புதிய இடத்திற்குச் செல்லுங்கள்.

அப்போது பாய்ண்ட்டர் ஒரு நான்கு முனை சக்கர அம்பாக மாறி இருப்பதனைப் பார்ப்பீர்கள். புதிய இடத்திற்குச் சென்றவுடன் மவுஸை விட்டுவிடுங்கள். நீங்கள் விரும்பிய வகையில் மெனு பாரில் பட்டன்கள் அமைந்திருக்கும்.

தேவையற்ற கோடுகளைத் தவிர்க்க
--------------------------------------

வேர்ட் தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான்.

அதாவது ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே வேர்ட் அதனை அந்த அளவிற்கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும்.

இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ஏனென்றால் இது வேர்ட் ஏற்படுத்திய பார்டர் லைனாகும்.


தற்போது பயன்படுத்தப்படும் வேர்ட் தொகுப்புகளில் இதற்கு ஒரு வழி தரப்பட்டுள்ளது.

கர்சரை எந்த கோட்டினை அழிக்க வேண்டுமோ அந்த கோட்டின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்லவும்.

பின் Format மெனு சென்று Borders and Shading என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள None பிரிவைக் கிளிக் செய்திடவும்.

இந்த பிரச்னை தொடர்ந்து வராமல் இருக்க வேண்டும் என்றால் Tools மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் Auto Correct Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள்.

பின் அதில் AutoFormat As You Type என்ற டேபிற்குச் செல்லுங்கள். Apply as you type என்ற இடத்தைத் தேடிக் கண்டு பிடியுங்கள். அதில் Border Lines என்ற இடத்திற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விட்டு அனைத்திற்கும் ஓகே டிக் செய்து மூடுங்கள்.

நன்றி. தினமலர் டிசம்பர் 20,2009,

ரவிசங்கர்
22-12-2009, 04:41 PM
நன்றி.....நன்றி......நன்றி.

குணமதி
22-12-2009, 05:18 PM
நன்றி.

ஜனகன்
22-12-2009, 08:25 PM
பயனுள்ள தகவல் நன்றி.

சரண்யா
23-12-2009, 02:46 AM
நல்ல பதிவிற்கு நன்றிகள்..

மகுடம் மோகன்
24-12-2009, 07:29 PM
பலருக்கும் பயன்படும் தகவல் நூர்,பதிவிற்கு நன்றி!!!


அன்புடன்,மகுடம் மோகன்.