PDA

View Full Version : மரங்களின் சமாதி



ஆதி
21-12-2009, 10:01 AM
இந்த தெருவின்
ஒவ்வொரு வீடும்
எழுந்து நிற்கின்றது
ஒரு மரத்தின் சமாதியாய்..

ஓங்கியுயர்ந்த அடுக்குமாடிகளின்
அடிப்பரப்புகளில்
உலவித்திரியலாம்
வெட்டப்பட்ட மரங்களின் நிழலும்
மரணக்குரலும்..

ஒளிக்கு கூட
வழிவிடாத வெளியின்
ஓர் மூலையில்
விறைத்து கிடக்கிறது காற்று
தூசுப்படிந்து..

இப்போதெல்லாம்..
காங்ரீட் சுவர்களில்
காய்ந்து கிடைக்கிற
எச்சங்களை கண்டுதான்
அறிய இயல்கிறது
பக்கத்தில் எங்கோ மரம் இருப்பதையும்
பறவைகள் வாழ்வதையும்..

சரண்யா
21-12-2009, 11:04 AM
ஆம்...உண்மையே..யதார்த்தமான கவி..
வாழ்த்துகள்...தொடருங்கள்..

இளசு
21-12-2009, 07:39 PM
மனிதன் சில மில்லியன் ஆண்டுகளாய்..

மிருகம் சார்ந்த உயிரிகள் சில பில்லியன் ஆண்டுகளாய்..

மரங்கள்.... ஏனைய தாவரங்கள்?

பல பில்லியன் ஆண்டுகளாய்..!!

உப்பு நீரிலும், பாலையிலும்
மலையிலும் அருவியிலும்
எங்கும் எங்கும் விரவிப்பரவி
ஓங்கி நின்று..
எந்த விலங்கும் எட்டாத நூற்றாண்டுகள் ஆயுள் கண்டு...

பரிணாம விளையாட்டின் மூத்த அண்ணன்..
வெற்றிகளைத் தொட்டுத் தொடர்ந்த சாசுவத மன்னன்..

மரம்!

இன்று சில ஆயிரம் ஆண்டுகளாய்
''அழிச்சாட்டம்'' ஆடும் சிறுதம்பிகள் நாம்..

சக்கரம் சுழலும்..

அண்ணன்கள் மகிமை புரியும்..

அந்தப் புவிவெப்பத்தடுப்புப்
பதாகைகளை பாதுகைகளாய்த் தாங்கும்
பரதன்களாவோம் ...மீண்டும்!




-------------

ஆதனுக்கு என் அன்பு!

rajarajacholan
22-12-2009, 08:53 AM
அடடே நல்லா இருக்குங்க

கலையரசி
22-12-2009, 09:40 AM
மரக்காடுகள் எல்லாம் கான்கிரீட் காடுகளானதன் விளைவைத் தான் தற்போது உணர்கிறோமே! கரியமில வெளியேற்றத்தைக் குறைக்க மரங்கள் வளர்க்க வேண்டியதின் அவசியத்தை இப்போதாவது நாம் புரிந்து கொண்டால் சரி.

செல்வா
22-12-2009, 05:34 PM
பலமுறை பின்னூட்ட வந்தும்
வார்த்தையில்லாமல் பரிதவிக்கிறேனடா...
.....................

வாழ்த்துக்கள் நண்பா...

பாரதி
29-12-2009, 02:45 PM
கோபன்ஹேகன் மாநாடும் கோபத்தைத்தான் தருகிறது.
மனிதனுக்கு மட்டுமா இருக்க இருப்பிடம்? மரங்களுக்கில்லையா வாழ்விடம்?
மரத்தை மறந்தால் மண்ணுக்கு உரமாகும் காலத்தை நெருங்குகிறோம் என்றுதானே பொருள்?
..................
கொஞ்சமாவது சிந்திப்போமா...?
நல்ல கவிதைக்கு நன்றி நண்பரே.

கா.ரமேஷ்
30-12-2009, 04:48 AM
நல்லதொரு கவிதை தோழரே...

ஆனால் மாற்றம் கொண்டு வர என்ன செய்ய போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை... உலக நாடுகளே ஒன்றுபட மாட்டேன் என்கிறார்கள்... அறிவு(வியல்) வளர வளர இயற்க்கையை அழிப்பது மிகவும் வருந்தகூடிய ஒரு செய்தி...

சிவா.ஜி
30-12-2009, 05:13 AM
அருமையான, ஆழமான, அர்த்தமுள்ள....கூடவே வலியுமுள்ள வலிமையான வரிகள்.

இளசு சொன்னதைப் போல இந்த மூத்த அண்ணனின் அருமை அறியாவிடில், அவசரத் தம்பிகள் நாம் அழிந்துபோய்விடுவோம்.

மதம் வளர்ப்பதினும் மேலானது மரம் வளர்ப்பது.

வாழ்த்துகள் ஆதன்.

அமரன்
01-01-2010, 10:12 PM
கனத்த கைதட்டு ஆதி!

என் வரையில் கருத்தியல் குறைந்தது இருவகை.

கருப்பொருள்.. தொனிப்பொருள்..

கவிதையின் கருப்பொருளுடன் எப்போதும் எதிர்ப்பில்லை.

கவிதையின் தொனிப்பொருளுடன் கருத்து வேரறுபடுகிறேன்.

அந்தக் காலவீடுகள் முழுதும் மரத்தால்..

கொஞ்சம் பிந்திய காலவீடுகள் கூரையுடன் சில பாகங்கள் மரத்தால்..

சற்று முந்திவரை கதவுகள் சாளரங்கள் மட்டும் மரத்தால்..

இக் காலவீடுகளில்..

மரங்களின் அழுகை எப்போதிருந்தே..

மரத்த மனங்கள் உணர்வது சமீபத்திலேயே..

மனிதன் மாறவில்லை..


பாவம் அடுக்கு மாடிகள்..
பாவங்களை அவர்கள் மேல் அ(டு)டிக்காதீர்கள்..
பறவைகளின் வசிப்பிடங்களாகவும் அவை..

உயிரைக் கொடுத்து வீடு கட்டினோம் எனக் காலங்காலமாய்ச் சொல்வதன் அர்த்தம் இதுதானோ..;)

!

இன்பக்கவி
23-01-2010, 04:11 PM
மரங்களை அழித்து தான் பல மாளிகைகள்..
நல்லா இருக்கு கவிதை வாழ்த்துகள்

muthuvel
24-01-2010, 06:06 AM
அடக்கம் செய் ,
பூமியின் ஆயுள் மிஞ்சும் ,
மரங்களின் விதை ..