PDA

View Full Version : எங்கே போகிறோம் நாம்?



கலையரசி
20-12-2009, 12:59 PM
வன்முறை! வன்முறை!
எங்குப் பார்த்தாலும் வன்முறை
குண்டு வெடிக்காத நாளில்லை
கொலை, கொள்ளை
செய்தியில்லா நாளேடுகளில்லை
குழந்தைகளின் கணிணி
விளையாட்டில் கூட
துப்பாக்கிகள் வெடிக்கின்றன
'டுமீல், டுமீல் என எதிரிகளைச்
சுட்டு வீழ்த்தி வெற்றி வாகை
சூடுகின்றனர் சின்னஞ்சிட்டுகள்
படு உற்சாகத்துடன்!

தமிழ் சினிமாவிலோ
வில்லனுக்கு வேலையில்லை
கதாநாயகனே 'டூ இன் ஒன்'
'பழிக்குப் பழி', இரத்ததிற்கு இரத்தம்'
என்ற முழக்கத்தோடு
வீச்சரிவாளும் வெட்டரிவாளும்
படம் முழுக்க உலா வந்து
குருதி மழை பொழிய
கைதட்டி ரசிக்கின்ற
மக்கள் கூட்டம்!
எங்கே போகிறோம் நாம்!

நன்றி:- பதிவுகள்

ஜனகன்
20-12-2009, 07:07 PM
உங்கள் எழுத்து என் மனதை தொட்டு விட்டது.உணர்வுகளை தூண்டும் கவிதைவரிகள்.இதை கவிதைஎன்று படித்துவிட்டு போக முடியாது.நடக்கும் சம்பவத்தை, சமூகத்தின் இழிவை சொல்வதாகத்தான் நான் நினைக்கின்றேன்.நல்ல கவிதை கலையரசி.

குணமதி
21-12-2009, 01:21 AM
வேறங்கே?

தொடங்கிய இடத்திற்கே -

காட்டு விலங்காண்டிகளாக!

கலப்பற்ற உண்மை வெளிப்பாட்டுக்கு நன்றி!

கா.ரமேஷ்
21-12-2009, 03:29 AM
மனிதன் பல நேரங்களில் மனிதனாக இருப்பதில்லை அதுதான் காரணம்..எதை தேடுகிறோம் என்று தெரியாமலே அலைந்து கொண்டிருக்கிறான்...

அருமையான கவிதை.... வாழ்த்துக்க*ள்..

கீதம்
21-12-2009, 03:38 AM
நல்லதொரு சாட்டையடிக் கவிதை! போகிற வழி தெரிந்தால்தான் பயணம் சுகப்பட்டுவிடுமே!

வன்முறையின் வசீகரத்துக்குள் ஈர்க்கப்பட்டுவிடாமல் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதே பெற்றோரின் முதல் கடமை.

arun
21-12-2009, 09:51 AM
ஆம் எங்கே செல்கிறோம் நாம்? எப்படி இதை எல்லாம் தடுப்பது? ஒன்றுக்கும் பதில் இல்லை

அக்னி
21-12-2009, 09:59 AM
ஒருநாள்..,

வன்முறைகள் யாவும்
அடங்கிவிடும்...
அமானுஷ்ய அமைதி
எங்கும் நிலவும்...

மனித மனம்,
மனிதனைத் தேடி ஏங்கும்.

அன்று,
உலகம் மரணித்திருக்கும்...

அதன் சடலத்தில்
எஞ்சிநிற்கும் சில மனிதர்களிடையில்,
நாம் இன்று எதிர்பார்க்கும்,
மனிதாபிமானம்
அபரிமிதமாக விஞ்சி இருக்கும்...

நல்லதொரு கவிதை... இன்னும் வளர்த்திருக்க்கலாம்...
பாராட்டுக்கள்...

கலையரசி
21-12-2009, 12:36 PM
உங்கள் எழுத்து என் மனதை தொட்டு விட்டது.உணர்வுகளை தூண்டும் கவிதைவரிகள்.இதை கவிதைஎன்று படித்துவிட்டு போக முடியாது.நடக்கும் சம்பவத்தை, சமூகத்தின் இழிவை சொல்வதாகத்தான் நான் நினைக்கின்றேன்.நல்ல கவிதை கலையரசி.
உணர்வு பூர்வமாகப் பாராட்டு தெரிவித்து ஊக்கப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஜனகன் அவர்களே!

கலையரசி
21-12-2009, 12:39 PM
வேறங்கே?

தொடங்கிய இடத்திற்கே -

காட்டு விலங்காண்டிகளாக!

கலப்பற்ற உண்மை வெளிப்பாட்டுக்கு நன்றி!

குணமதி அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி. இந்த முறை உங்களது பெயரைச் சரியாகத் தட்டச்சு செய்து விட்டேன்.

கலையரசி
21-12-2009, 12:40 PM
மனிதன் பல நேரங்களில் மனிதனாக இருப்பதில்லை அதுதான் காரணம்..எதை தேடுகிறோம் என்று தெரியாமலே அலைந்து கொண்டிருக்கிறான்...

அருமையான கவிதை.... வாழ்த்துக்க*ள்..
வாழ்த்து தெரிவித்த ரமேஷ் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.

கலையரசி
21-12-2009, 12:42 PM
நல்லதொரு சாட்டையடிக் கவிதை! போகிற வழி தெரிந்தால்தான் பயணம் சுகப்பட்டுவிடுமே!

வன்முறையின் வசீகரத்துக்குள் ஈர்க்கப்பட்டுவிடாமல் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதே பெற்றோரின் முதல் கடமை.
உண்மை தான் கீதம். நம் பிள்ளைகளுக்கு எதைச் சொல்லிக் கொடுக்கிறோமோ இல்லையோ மனித நேயத்தைக் கட்டாயம் சொல்லிக் கொடுக்கவேண்டும். பாராட்டுக்கு நன்றி.

கலையரசி
21-12-2009, 12:45 PM
ஆம் எங்கே செல்கிறோம் நாம்? எப்படி இதை எல்லாம் தடுப்பது? ஒன்றுக்கும் பதில் இல்லை

முயன்றால் முடியாதது இல்லை. மனித நேயத்தை வளர்க்க நம்மால் முடிந்ததைச் செய்வோம். பின்னூட்டத்திற்கு நன்றி அருண் அவர்களே.

கலையரசி
21-12-2009, 12:47 PM
ஒருநாள்..,

வன்முறைகள் யாவும்
அடங்கிவிடும்...
அமானுஷ்ய அமைதி
எங்கும் நிலவும்...

மனித மனம்,
மனிதனைத் தேடி ஏங்கும்.

அன்று,
உலகம் மரணித்திருக்கும்...

அதன் சடலத்தில்
எஞ்சிநிற்கும் சில மனிதர்களிடையில்,
நாம் இன்று எதிர்பார்க்கும்,
மனிதாபிமானம்
அபரிமிதமாக விஞ்சி இருக்கும்...

நல்லதொரு கவிதை... இன்னும் வளர்த்திருக்க்கலாம்...
பாராட்டுக்கள்...
அக்னி அவர்களே! அழகான கவிதை எழுதி என்னுடையதை முடித்து விட்டீர்கள். இதே நிலைமை நீடித்தால் நீங்கள் எழுதியபடி தான் போய் முடியும். பாராட்டுக்கு நன்றி.

muthuvel
21-12-2009, 03:12 PM
வன்முறை! வன்முறை!
எங்குப் பார்த்தாலும் வன்முறை
குண்டு வெடிக்காத நாளில்லை
கொலை, கொள்ளை
செய்தியில்லா நாளேடுகளில்லை
குழந்தைகளின் கணிணி
விளையாட்டில் கூட
துப்பாக்கிகள் வெடிக்கின்றன
'டுமீல், டுமீல் என எதிரிகளைச்
சுட்டு வீழ்த்தி வெற்றி வாகை
சூடுகின்றனர் சின்னஞ்சிட்டுகள்
படு உற்சாகத்துடன்!

தமிழ் சினிமாவிலோ
வில்லனுக்கு வேலையில்லை
கதாநாயகனே 'டூ இன் ஒன்'
'பழிக்குப் பழி', இரத்ததிற்கு இரத்தம்'
என்ற முழக்கத்தோடு
வீச்சரிவாளும் வெட்டரிவாளும்
படம் முழுக்க உலா வந்து
குருதி மழை பொழிய
கைதட்டி ரசிக்கின்ற
மக்கள் கூட்டம்!
எங்கே போகிறோம் நாம்!

நன்றி:- பதிவுகள்

வாழ்த்துக்கள் அருமை ,
நாட்டில் நடப்பவை ..,

கலையரசி
22-12-2009, 09:34 AM
முத்து வேல் அவர்களின் வாழ்த்துக்கு நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
25-12-2009, 03:02 AM
மாந்த நேயம் இல்லா நிலைமை கண்டு வேதனையை வெளிப்படுத்துகிற கவி. பாராட்டு.
சொ.ஞானசம்பந்தன்

பாரதி
29-12-2009, 02:32 PM
எல்லாம் வேண்டும், இப்போதே வேண்டும் என்ற எண்ணத்திற்கு இன்றைய சமூகம் ஆட்பட்டிருக்கிறது. யார் எப்படிப்போனால் எனக்கென்ன... என்ற சிந்தனையுடன் வாழும் மாந்தர்கள் சற்றேனும் சிந்திப்பார்களா..?
கருத்தை விதைக்கும் கவி நன்று நண்பரே.

அமரன்
02-01-2010, 08:39 AM
இந்த வெளிப்படை மன மாற்றங்களின் அடிப்படை.

நீங்களும் பார்த்திருக்கீங்க படத்தை..
ஒரு படம் மட்டும்தான் என்ற நினைப்பில்
மறுபடியும் புத்துப்படம் பார்த்திருக்கீங்க..
அந்தப்படம் அப்படியே..
அதுவே உங்கள் விருப்பமாகிட
விடவும் முடியாமல் தொடரவும் முடியாமல்..
அவ்வப்போ இப்படிக் கண்சிவந்து.

இதுதான் எதார்த்தம்..

இதில் எனக்கொன்று தோன்றும்.

எல்லா உயிரும் ஒன்றுதான் என்பது எங்கள் அடிமனப்பதிவு.
எனவேதான்,
உணவுக்காக வேட்டையாடியவனிடம் இப்படியொரு மனப்பிறழ்வு..

இன்பக்கவி
23-01-2010, 03:52 PM
வன்முறை இல்லாத உலகம் வரும் போது நாம் இருப்போமா???
வாழ்த்துக்கள்