PDA

View Full Version : எனக்கும்...!

குணமதி
17-12-2009, 04:15 PM
எனக்கும்...!

தேர்தல் கூட்டத்தில்... :-

எங்கு பார்த்தாலும், திருட்டு, கொள்ளை,

கொலை, வழிப்பறி!

அமைதியினமை, முறைகேடு!

சட்டம், ஒழுங்கு -

கெட்டுவிட்டது!

எந்த வேலையாக

எங்கு போனாலும் -

வேண்டியவர்க்காக...

வளைகிறது நெறிமுறை!

ஊழல் பெருகி

உச்சத்தில் உள்ளது!

எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள்!

*

கீதம்
17-12-2009, 09:01 PM
கவிதை மிக யதார்த்தம். கடைசி வரியில் எனக்கும் என்று இருந்திருந்தால் இன்னும் சிறப்பு. வாழ்த்துகள் குணமதி அவர்களே.

அமரன்
17-12-2009, 09:29 PM
தலைப்பும் முடிவும் அப்பாவி மக்களை ஏமாற்றும் அரசியல்வாதியின் பேச்சுப் போலவே.

எல்லாரும் கீதத்தைப் போலிருந்து விட்டால் நாடு உருப்பட்டு விடும்.

வாழ்த்துகள்.

ஜனகன்
17-12-2009, 10:34 PM
அரசியல் வாதிகளின் எதார்த்தமான உண்மைகளை எளிய நடையில் தந்தமைக்கு நன்றி.

குணமதி
18-12-2009, 01:34 AM
கவிதை மிக யதார்த்தம். கடைசி வரியில் எனக்கும் என்று இருந்திருந்தால் இன்னும் சிறப்பு. வாழ்த்துகள் குணமதி அவர்களே.

நன்றி.

உண்மைதான். "ம்" சேர்த்திருக்கலாம்தான்! தலைப்பில் இருப்பது உள்ளே எழுதும்போது விடுபட்டுவிட்டது.

மீண்டும் நன்றி.

குணமதி
18-12-2009, 01:37 AM
தலைப்பும் முடிவும் அப்பாவி மக்களை ஏமாற்றும் அரசியல்வாதியின் பேச்சுப் போலவே.

எல்லாரும் கீதத்தைப் போலிருந்து விட்டால் நாடு உருப்பட்டு விடும்.

வாழ்த்துகள்.

நன்றி அமரன்!

குணமதி
18-12-2009, 01:39 AM
அரசியல் வாதிகளின் எதார்த்தமான உண்மைகளை எளிய நடையில் தந்தமைக்கு நன்றி.

நன்றிநண்பரே.

கீதம்
18-12-2009, 03:12 AM
தலைப்பும் முடிவும் அப்பாவி மக்களை ஏமாற்றும் அரசியல்வாதியின் பேச்சுப் போலவே.

எல்லாரும் கீதத்தைப் போலிருந்து விட்டால் நாடு உருப்பட்டு விடும்.

வாழ்த்துகள்.

இதென்ன, கேலியா? பாராட்டா? ஒன்றுமே புரியவில்லையே!:confused:

கா.ரமேஷ்
18-12-2009, 05:54 AM
அரசியல்வாதியின் தந்திரம் அரசனையில் ஏறும் வரைக்கும்தான் .... நன்றாக கவிதையில் சொல்லி உள்ளீர்கள்..

குணமதி
18-12-2009, 12:22 PM
அரசியல்வாதியின் தந்திரம் அரியணையில் ஏறும் வரைக்கும்தான் .... நன்றாக கவிதையில் சொல்லி உள்ளீர்கள்..

நன்றி நண்பரே.

அமரன்
27-03-2010, 11:34 AM
இதென்ன, கேலியா? பாராட்டா? ஒன்றுமே புரியவில்லையே!:confused:

அட.. இன்றைக்குத்தான் பார்க்கிறேன் இதை..

நிச்சயமாக பாராட்டுத்தான் கீதம்.

தவற விட்ட ம் ஐக் கண்டு பிடித்து, அரசியல்வாதியின் உள்நோக்கத்தை நீங்கள் புரிந்துகொண்டாற் போல் எல்லா மக்களும் இருந்திட்டால்..

சிவா.ஜி
27-03-2010, 11:47 AM
எனக்கும் ஒரு வாய்ப்புக் கொடுங்கள் இந்த சேற்றில் உழன்று சீக்கிரம் பணக்காரனாகிறேன் எனக் கேட்கிறாரோ....!!

அமரன்
27-03-2010, 11:48 AM
எனக்கும் ஒரு வாய்ப்புக் கொடுங்கள் இந்த சேற்றில் உழன்று சீக்கிரம் பணக்காரனாகிறேன் எனக் கேட்கிறாரோ....!!

சேற்றில் அவர் செந்தாமைரையாய் (பழைய வில்லன் நடிகர்) மலர்வேன் என்கிறார் பாஸ்.

சிவா.ஜி
27-03-2010, 11:52 AM
அப்படியும் வில்லனாய்த்தான் ஆவேன் என்கிறாரா....???(ஹி...ஹி....ச்சும்மா)

பா.ராஜேஷ்
27-03-2010, 11:58 AM
வாய்ப்பு எதற்கு? திருத்தவா இல்லை இந்த கவலைகள் கொள்வதை விட்டு திருந்தவா!?

குணமதி
27-03-2010, 04:38 PM
வாய்ப்பு எதற்கு? திருத்தவா இல்லை இந்த கவலைகள் கொள்வதை விட்டு திருந்தவா!?

வேறெதற்கு, அவர்கள் செய்ததைத் தானும் செய்வதற்குத்தான்.

பின்னூட்டமிட்டமைக்கு நன்றி.

குணமதி
27-03-2010, 04:41 PM
எனக்கும் ஒரு வாய்ப்புக் கொடுங்கள் இந்த சேற்றில் உழன்று சீக்கிரம் பணக்காரனாகிறேன் எனக் கேட்கிறாரோ....!!

அதேதான்.

ஏமாறுகிறவர்களை நம்பி, தானும் ஏமாற்றவே!

பின்னூட்டத்திற்கு நன்றி.

அக்னி
30-03-2010, 06:55 AM
“தவறுகளைத் தைரியமாய்ச் சொல்லுவோம்.
யாருக்கும் பயப்படமாட்டோம்.”

அவர்கள் தெளிவாய்த்தான் சொல்லுகின்றார்கள்.
தவறாய் விளங்கிக் கொள்ளுவது நாம்தானோ...

குணமதி
31-03-2010, 06:00 AM
ஆமாம். உண்மை அதுவே.

நன்றி.