PDA

View Full Version : நான் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவனாய்!

கீதம்
17-12-2009, 07:38 AM
பழுதடைந்த பாட்டுப்பெட்டி உபயத்தால்
பழுதடையாக் காதுகளுக்கு உத்திரவாதத்துடன்
நெடியப் பேருந்துப் பயணம் ஒன்றில்
நிறைவாய் சன்னல் ஓரம் நான்!

யாத்திரை புறப்படக் காத்திருந்ததுபோல்
நித்திரை தேடியலைந்தன சில விழிகள்!
நொறுக்குத்தீனிப் பொட்டலத்தைப்
பரபரவெனப் பிரித்தன சில கரங்கள்!

கதைப் புத்தகத்துக்குள் புதைந்து
தொலைந்துபோயின சில முகங்கள்!
கத்திக் கதை பேசிச் சிரித்தன,
வெற்றிலைச் சிவப்பேறிய சில வாய்கள்!

கடந்து செல்லும் பாதையெங்கும்
கொஞ்சிய இயற்கையின் கோலாட்டத்தை
ரசித்தபடி நான்....
நான் மட்டும்!

பார்வைபிடுங்கும்
பளீர் மின்னலென
கண்ணாமூச்சிக் காட்டியது
மலைகளுக்கப்பால்
மாலைச்சூரியன்!

பச்சைக் கம்பளத்தைப்
பரவலாய் விரித்திட்டு அது
பறந்துவிடாதிருக்க,
நட்டுவைத்த கம்பமென
நாற்புறமும் மரங்கள்!

சலசலக்கும் சிற்றோடை
கண்மறைவதற்குள்ளாய்
சட்டென நீரில் மூழ்கிப்
பறந்துவந்து தலைசிலுப்பியது,
என் மனக்காகம்!

அச்சடித்தக் காகிதம் ஒன்று
ஆகாயத்தில் பறப்பதுபோல்
இடவலம் இடம்விட்டு
இணைச்சிறகுகளில் இடிபடாமல்
இயங்கும் நாரைக் கூட்டத்தின் நடுவே
சத்தமின்றிச் சிலதூரம் பயணித்துப்
பின் அரைமனதாய்த் திரும்பிவந்தன,
என் ஒரு சோடிக் கண்கள்!

இயற்கையின் எழிலை ரசித்து,
எண்ணிலா இன்பத்தைத் துய்த்தபடி,
ஆசீர்வதிக்கப்பட்டவனாய் நான்.....
நான் மட்டுமே!

என்ன பிறவிகள் இவர்கள் என்றே
ரசனையறியா சகபயணிகளை
ஏக்கத்துடன் சபித்தவேளை,
சடாரென உலுக்கி நின்றது, பேருந்து!

உள்ளே ஒருவன் ரத்தவாந்தியெடுத்து
உயிருக்குத் துடித்துக்கொண்டிருக்க,
அந்தவிவரம் அறியாமல்
ஆகாயத்திலிருந்து குதித்தவன்போல்,
என்னவாயிற்று என்று
அலட்சிய வினாவெழுப்பிய என்னை
அற்ப உயிரினம் போல் ஏறிட்டன,
அத்தனைப் பார்வைகளும்!!

சிவா.ஜி
17-12-2009, 10:23 AM
”அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா”

உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் பாடல் வரிகள். இந்தக் கவிதை சொல்லும் கருத்தும் அதுவே. நம்மில் நிறையபேர் இப்படித்தான்........தாங்கள் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் தங்களை எண்ணிக் கொள்கிறார்கள்.

ரசிகனாய் ரசிக்க எத்தனையோ உண்டு இந்த உலகத்தில்....மனிதனாய் இருக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் மனிதனாய் இருக்கலாமே...

வாழ்த்துகள் கீதம்.

கீதம்
17-12-2009, 09:03 PM

என் எண்ணத்தை சரியாய்ப் புரிந்துள்ளீர்கள். நன்றி சிவா.ஜி. அவர்களே.

ஜனகன்
17-12-2009, 10:39 PM
கீதம் அவர்களே! மிக தத்துருவமாக எழுதி, அருமையாக முடித்திருக்கிங்க. இது கவிதை வடிவில் வந்த கதையா? நியமா?பாராட்டுக்கள்.:lachen001:

குணமதி
18-12-2009, 01:26 AM
இப்படியும் சூழல் அமைந்து விடுவதுண்டு!

பக்கத்தில் நிகழ்வதைப் பார்க்காமல்,

பல்வேறு காட்சிகளையும் இயற்கையையும்

அழகையும் துய்ப்பதில் ஆழ்ந்து போதல்!

பழுதடைந்த பாட்டுப்பெட்டி உபயத்தால்
பழுதடையாக் காதுகளுக்கு...

பச்சைக் கம்பளத்தைப்
பரவலாய் விரித்திட்டு அது
பறந்துவிடாதிருக்க,
நட்டுவைத்த கம்பமென
நாற்புறமும் மரங்கள்!

அருமை!

கீதம்
18-12-2009, 03:16 AM
கீதம் அவர்களே! மிக தத்துருவமாக எழுதி, அருமையாக முடித்திருக்கிங்க. இது கவிதை வடிவில் வந்த கதையா? நியமா?பாராட்டுக்கள்.:lachen001:

கதை, கவிதை என்று உருவெடுப்பவை எல்லாம் பார்த்தல், கேட்டல், கற்றல், அனுபவித்தல், யூகம், கற்பனை என பல வாயில்களின் வழி வருபவைதானே!

பாராட்டுக்கு நன்றி ஜனகன் அவர்களே!

கீதம்
18-12-2009, 03:18 AM
இப்படியும் சூழல் அமைந்து விடுவதுண்டு!

பக்கத்தில் நிகழ்வதைப் பார்க்காமல்,

பல்வேறு காட்சிகளையும் இயற்கையையும்

அழகையும் துய்ப்பதில் ஆழ்ந்து போதல்!

பழுதடைந்த பாட்டுப்பெட்டி உபயத்தால்
பழுதடையாக் காதுகளுக்கு...

பச்சைக் கம்பளத்தைப்
பரவலாய் விரித்திட்டு அது
பறந்துவிடாதிருக்க,
நட்டுவைத்த கம்பமென
நாற்புறமும் மரங்கள்!

அருமை!

தங்கள் ரசனைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி குணமதி அவர்களே!

செல்வா
18-12-2009, 04:44 PM
நல்ல கவிதை...
கற்பனையும் வார்த்தைகளும்
சிறப்பாய் வசப்படுகின்றன உங்களுக்கு....

கருவில் எனக்குச் சிறுநெருடல் என்றாலும்
மறுத்துரைக்க ஏதுமில்லை...

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

கீதம்
18-12-2009, 10:02 PM
நல்ல கவிதை...
கற்பனையும் வார்த்தைகளும்
சிறப்பாய் வசப்படுகின்றன உங்களுக்கு....

கருவில் எனக்குச் சிறுநெருடல் என்றாலும்
மறுத்துரைக்க ஏதுமில்லை...

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

நெருடலைச் சொல்லியிருந்தால் நேர் செய்ய இயன்றிருக்குமே.
பாராட்டுக்கு நன்றி செல்வா அவர்களே.

பாரதி
29-12-2009, 02:55 PM
ஆஹா...!
அழகான வர்ணனையுடன் அருமையான பயணம்.
சற்றும் எதிர்பார்க்காத சிறுகதையைப் போன்ற முடிவு! உண்மையில் இதை கதையாகவே நீங்கள் படைத்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது.
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள்....
மாறுபட்ட கவிதை! வாழ்த்தி பாராட்டுகிறேன் நண்பரே.

கீதம்
31-12-2009, 09:30 PM

தங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி பாரதி அவர்களே.

கலையரசி
01-01-2010, 04:17 AM
இயற்கையின் வர்ணனை மிகவும் அருமை.
சமயத்தில் நம் கவனம் எங்கோ பதிந்திருக்க, பக்கத்திலோ சுற்றுப்புறத்திலோ நடப்பதை அறியாமலிருக்க வாய்ப்பு அதிகம். வேண்டுமென்று நாம் செய்யவில்லையே! எனவே அற்ப உயிரினம் போல் மற்றவர் நம்மைப் பார்த்தாலும் நமக்குக் குற்றவுணர்ச்சி தேவையில்லை.

கீதம்
01-01-2010, 09:38 PM

விமர்சனப் பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கலையரசி அவர்களே.

இன்பக்கவி
23-01-2010, 04:18 PM
அவரவர் அவசரத்தில் எதையும் கண்டும் காணாமலும் போகின்ற சூழல்....
ரசிக்க வேண்டியவை நிறைய இருக்கு...
நல்ல கவிதை

கீதம்
24-01-2010, 01:50 AM
அவரவர் அவசரத்தில் எதையும் கண்டும் காணாமலும் போகின்ற சூழல்....
ரசிக்க வேண்டியவை நிறைய இருக்கு...
நல்ல கவிதை

நன்றி இன்பக்கவி அவர்களே.

சுகந்தப்ரீதன்
24-01-2010, 09:15 AM
ரசிகனாகவும் மனிதனாகவும் இருப்பதும் இல்லாமலிருப்பதும் அவரவர் விருப்பம் மற்றும் குணம் சார்ந்தது..!! அதை யாரும் குறைகூற முடியாது..!!

ஆனால் தான் மட்டுமே ஆசிர்வதிக்கபட்டவனாய் கர்வம் கொண்டதால்தான் மற்றவர்களின் சாதாரண பார்வைக்கூட அவனுக்கே அற்ப உயிரினத்தை நோக்குவதுபோல் தோன்றுகிறது..!!

பார்வைகள் மட்டும் பலவிதமல்ல உணர்வுகளும்தான்... உணருங்கள்..!!

வாழ்த்துக்கள் கீதம்..!!

கீதம்
26-01-2010, 09:49 PM

நன்றி சுகந்தப்ரீதன் அவர்களே.