PDA

View Full Version : விடாதது...!

குணமதி
16-12-2009, 11:09 AM
விடாதது...!

குடும்பம்

மனைவி மக்கள்

அது, இது...

போதும், போதும்!

போதும்...

இந்தப் பந்தமும் பாசமும்!

இனி,

துறவுதான்!

வெளியேறியவன் -

உரக்கச் சொன்னான்...

அடியே,

மோர் சொம்பு வெளியே கிடக்கிறது!

சரண்யா
16-12-2009, 11:23 AM
யதார்த்தமாக உள்ளது..வாழ்த்துகள்...நீங்களும் உங்களின் கவிகளை தொகுப்பாக ஒரு திரியில் போடுங்கள்..சிறந்த தலைப்பின் கீழ்...நன்றிகள்..

ஜனகன்
16-12-2009, 03:12 PM
இப்படித்தான் சிலர் வரட்டு பிடிவாதம் பிடிப்பார்கள், ஆனால் எதோ ஒன்று தடை போடும்.
நல்லது குணமதி.
சரண்யா சொன்னமாதிரி உங்கள் கவிதைகள் எல்லாவற்றையும் ஒரு தொகுப்பாக போடலாமே.

குணமதி
16-12-2009, 05:01 PM
இருவர்க்கும் நன்றி.

****உங்கள் கவிதைகள் எல்லாவற்றையும் ஒரு தொகுப்பாகப் போடலாமே. ****

போடலாம். எப்படிப் போடுவது என்று விளக்கி யாராவது உதவுக.

இளசு
16-12-2009, 05:38 PM
இறுதி வரியில் இறுக்கம் தளர்த்தி முறுவலிக்க வைத்தீர்கள் குணமதி..

பாராட்டுகள்.

( சாகப்போகுமுன் தண்டவாளம் சுடுதென, கழுத்தணைக்குத் துணி வைக்கும்
பாக்யராஜ் ( ஒரு கை ஓசை?) படக்காட்சி நினைவுக்கு வந்தது..)

குணமதி
17-12-2009, 02:32 AM
இறுதி வரியில் இறுக்கம் தளர்த்தி முறுவலிக்க வைத்தீர்கள் குணமதி..

பாராட்டுகள்.

( சாகப்போகுமுன் தண்டவாளம் சுடுதென, கழுத்தணைக்குத் துணி வைக்கும்
பாக்யராஜ் ( ஒரு கை ஓசை?) படக்காட்சி நினைவுக்கு வந்தது..)

சரியான எடுத்துக்காட்டோடு பாராட்டிப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

கா.ரமேஷ்
17-12-2009, 03:27 AM
நகைச்சுவை யான கடைசி வரி... இவைதான் யதார்த்தம்..
வாழ்த்துக்கள்...

குணமதி
17-12-2009, 07:21 AM
நன்றி நண்பரே.

கலையரசி
18-12-2009, 12:40 PM
துறவறத்தை நாடி ஓடுபவன், தன் வீட்டுப் பொருளின் மீதுள்ள பற்றை இன்னும் இழக்காமலிருக்கிறான் என்பதை நகைச்சுவை இழையோட சொல்லியிருக்கும் விதம் நன்று.

செல்வா
18-12-2009, 04:27 PM
சிறு துரும்பால் குத்தி எறியப்படும்
பல நாள் பல்லிடுக்கில்
துருத்திக் கொண்டிருந்த
உண(ர்)வுத் துணுக்கு

வாழ்த்துக்கள்..... நல்ல கவிதை

குணமதி
18-12-2009, 04:40 PM
சிறு துரும்பால் குத்தி எறியப்படும்
பல நாள் பல்லிடுக்கில்
துருத்திக் கொண்டிருந்த
உண(ர்)வுத் துணுக்கு

வாழ்த்துக்கள்..... நல்ல கவிதை

நன்றி.

குணமதி
18-12-2009, 04:41 PM
துறவறத்தை நாடி ஓடுபவன், தன் வீட்டுப் பொருளின் மீதுள்ள பற்றை இன்னும் இழக்காமலிருக்கிறான் என்பதை நகைச்சுவை இழையோட சொல்லியிருக்கும் விதம் நன்று.

நன்றி.