PDA

View Full Version : தம் பார்ட்டியா மச்சி



அறிஞர்
15-12-2009, 07:09 PM
'தம்' வினை தன்னைச் சுடும்!

நீங்க தம் பார்ட்டியா... ச்சும்மா புஸ்புஸ்னு ஊதித் தள்ளு-வீங்களா? நீங்க நெனைக்--குறது ஒண்ணு... நெசத்துல நடக்குறது ஒண்ணு கண்ணு!

நெனப்பு: 'தம் அடிக்கிறதை எப்போ வேணும்னாலும் நிறுத்து-வேன். எனக்கு அது வெரி சிம்பிள்!'

நெசம்: ஆண்டுக்கு 3.5 கோடி பேர் சிகரெட் பழக்கத்தை நிறுத்த முயற்சித்து, அதில் 7 சதவிகிதத்தினர் மட்டுமே வெற்றி அடைகிறார்கள்!

நெனப்பு: 'என் வாய், என் காசு.நான் தம்மடிக்கிறேன். மத்தவனுக்கு என்ன?'

நெசம்: ஆண்டுக்கு 49 ஆயிரம் பேர் பாசிவ் ஸ்மோக்கிங்கால் (புகை பிடிப் பவரின் அருகில் இருப்பவரும் அந்தப் புகையைச் சுவாசிப்பது) பாதிக்-கப்பட்டு இறக்கிறார்கள். நீங்க தம் அடிச்சா, உங்க குழந்தை, உங்க குடும்பம் எல்லாருக்கும் பாதிப்பு!

நெனப்பு: 'தம் அடிக்கிறதை நிறுத்தினா வெயிட் போடுவோம்!'

நெசம்: உண்மைதான். ஆனால் அது நல்ல அறிகுறி. 'உங்கள் செரி-மானம் அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக மாறுகிறது' என்று அர்த்தம்!

நெனப்பு: 'தம் அடிக் கிறது மேன்லி கம் செக்ஸி! அது ஆண்மை-யின் அடை--யாளம்!'

நெசம்: அதெல்லாம் அந்தக் காலம். '86 சத விகிதம் பெண்கள் தம் அடிக்காத ஆண்களையே விரும்புகிறார்கள்' என்கிறது ஒரு சர்வே!

நெனப்பு: 'போதையை விடணும்னா எப்போ தேவையோ அப்போ போய் டிரீட்மென்ட் எடுத்துக் குணமாகலாம். என்ன அவசரம்?'

நெசம்: போதைக்கான சிகிச்சையை நீண்ட நாள் தொடர்ச்சியாக எடுக்க வேண்டியிருக்கும். தாமதிக்கும் ஒவ்வொரு கணமும், தவணை முறை யில் மரணம் நெருங்கும்!

நன்றி - விகடன்

என்னவன் விஜய்
15-12-2009, 08:42 PM
//'86 சத விகிதம் பெண்கள் தம் அடிக்காத ஆண்களையே விரும்புகிறார்கள்' // பலே. :icon_b:

'smokers lung' என்று கூகலாண்டவரை கேட்டு அதன் படங்களை பாருங்கள், அடுத்த பிறவியிலும் தம்மடிக்க மாட்டீர்கள்.

அருமையான பகிர்வு.

நன்றி: விகடன்.
நன்றி: அறிஞர்.

அமரன்
15-12-2009, 09:09 PM
அருமை..

கடந்த மாதம் தொடர்வண்டி நாளிதழில் ஒருபுதினம். கடந்த வருடங்களில் விலையேற்றம் செய்யப்பட்டதுக்கு எதிராகக் குறைந்து சென்ற புகைப்போர் எண்ணிக்கை வரைபைக் காட்டி விலையேற்ற அறிவித்தலை அரசு விடுத்திருந்தது.

கா.ரமேஷ்
16-12-2009, 03:18 AM
நல்ல ஆராய்ச்சிதான்...

குணமதி
16-12-2009, 03:39 AM
விகடனுக்கும் அறிஞர்க்கும் நன்றி.

பா.ராஜேஷ்
16-12-2009, 03:30 PM
நல்லதொரு தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அறிஞரே!

இளசு
16-12-2009, 05:20 PM
மிக அவசியமான பகிர்வு.

புகை பிடித்தலை நிறுத்தச் சொல்லிதான் என் முதல் க(வி)தையே!

நன்றி அறிஞரே!

ஜனகன்
16-12-2009, 09:20 PM
தாங்கள் படித்த தகவலை மன்றத்தில் உள்ளவர்களும் படித்து பயன் பெற தந்தமைக்கு நன்றி

arun
17-12-2009, 04:40 AM
நல்ல ஒரு பகிர்வு தம் அடிக்கறவங்க கண்டிப்பா இதை எல்லாம் தெரிஞ்சுகங்கப்பா

rajarajacholan
17-12-2009, 05:56 AM
//'86 சத விகிதம் பெண்கள் தம் அடிக்காத ஆண்களையே விரும்புகிறார்கள்' // பலே.

'smokers lung' என்று கூகலாண்டவரை கேட்டு அதன் படங்களை பாருங்கள், அடுத்த பிறவியிலும் தம்மடிக்க மாட்டீர்கள்.

அருமையான பகிர்வு.

நன்றி: விகடன்.
நன்றி: அறிஞர்.

ஆமாம் நானும் பார்த்தேன். பயங்கரமா இருந்தது

அன்புரசிகன்
17-12-2009, 07:46 AM
அவுஸ்திரேலியாவில சிகரட் ரகங்களில் 1-16 என்று பல வகையில அசத்துறாங்களாம்...

ஆனா இந்த விசயத்துல இலங்கைய பாராட்டவேணும். முன்பு போல் இல்லை... நன்றாகவே கட்டுப்படுத்திவிட்டார்கள். பிக்குமார் செய்த ஒரே ஒரு நல்ல விடையம். இதற்காக போராடி சட்டம் கொண்டுவந்தது...

ஸ்ரீதர்
17-12-2009, 10:07 AM
யப்பா!!!!! படங்கள் பயமுறுத்துவது போல் உள்ளது.

சிகரட் அட்டைப்பெட்டிகளில் மண்டை ஓட்டுக்கு பதில் இப்படங்களை போடலாம்.

அப்படியாவது திருந்துவாங்களான்னு பாப்போம்.

நேசம்
17-12-2009, 11:33 AM
விடனுமுன்னு நினைக்கும் போது தான் அதிகமாக அடிக்க தோணுமமில்ல.... உண்மையா

மன்மதன்
17-12-2009, 01:37 PM
நல்ல விழிப்புணர்ச்சி பதிவு. பகிர்தலுக்கு நன்றி அறிஞரே..

கலையரசி
20-12-2009, 11:56 AM
நல்லதொரு பதிவைப் பகிர்ந்து கொண்டதற்கு அறிஞர் அவர்களுக்கு நன்றி.

trifriends
06-04-2010, 12:17 PM
நன்றி அறிஞரே....