PDA

View Full Version : ?



ஆதி
15-12-2009, 10:49 AM
விரிகிற விடியல் அத்தனையிலும்
திறக்கப்படுகிறது
ஒரு புது வெளி
எதையோ பெற..
எதையோ தர..
என்றாலும், இன்றைக்கும் விளங்கவில்லை..
எட்டு வருடத்திற்கு முந்தைய விடியல்
உன்னை மரணிக்க வைத்தது
எதற்கென்று..

குணமதி
15-12-2009, 11:04 AM
விரிகிற விடியல் அத்தனையிலும்
திறக்கப்படுகிறது
ஒரு புது வெளி
எதையோ பெற..
எதையோ தர..
என்றாலும், இன்றைக்கும் விளங்கவில்லை..
எட்டு வருடத்திற்கு முந்தைய விடியல்
உன்னை மரணிக்க வைத்தது
எதற்கென்று..

மேலே உள்ள ஐந்து வரிகளும் புரிகிறது.
அருமையான வெளிப்படுத்தம்!

அடுத்த நான்கு வரிகள்...
கொஞ்சம் விளக்குவீர்களா?

கீதம்
15-12-2009, 11:06 AM
இன்றைய விடியல் தந்த பழம்நினைவுகளைப் போல் ஒவ்வொரு விடியலும் எதையேனும் தரவும் பெறவும் மட்டும் செய்வதில்லை; மறுக்கவும், பிரிக்கவும் செய்கின்றன. அறிந்திருந்தும் கேள்விக்குறி ஏனோ?

ஆதி
15-12-2009, 12:49 PM
மேலே உள்ள ஐந்து வரிகளும் புரிகிறது.
அருமையான வெளிப்படுத்தம்!

அடுத்த நான்கு வரிகள்...
கொஞ்சம் விளக்குவீர்களா?

நிச்சயமாய் வீளக்குகிறேன், அதற்கு முன் நீங்கள் எப்படி இந்த வரிகளை புரிந்து கொண்டீர்கள் என்று சொல்லுங்கள்.. ;)

ஆதி
15-12-2009, 12:54 PM
இன்றைய விடியல் தந்த பழம்நினைவுகளைப் போல் ஒவ்வொரு விடியலும் எதையேனும் தரவும் பெறவும் மட்டும் செய்வதில்லை; மறுக்கவும், பிரிக்கவும் செய்கின்றன. அறிந்திருந்தும் கேள்விக்குறி ஏனோ?


//விரிகிற விடியல் அத்தனையிலும்
திறக்கப்படுகிறது
ஒரு புது வெளி
எதையோ பெற..
எதையோ தர..//

எதையோ பெற, எதையோ தர .. இந்த வரிகளில் இரு வித பொருள் உண்டு..

விடியலிடம் இருந்து நாம் எதையோ பெற, விடியல் நம்மிடம் இருந்து எதையோ பெற(எடுத்துக்கொள்ள).. விடியல் நமக்கு எதையோ தர, நாம் விடியலுக்கு எதையோ தர(விட்டு தர)

"?"

ஏன் என்று கேள்வி கேட்காமல் யாருமில்லை

இந்த வரிகளைத்தான் என் கவிதையும், உங்கள் பின்னூட்டம் நினைவு படுத்துகிறது..

ஆனால், கவிதையை யதார்த்தமாய் பார்த்தால் அப்படித்தான் பொருள் புலனாகும்..

இந்த கவிதை நான்கு இயல்களில் பயணிக்கிறது..

துன்பியல், அன்பியல், மெய்யியல், ஆன்மீக இயல் என..

பா.ராஜேஷ்
15-12-2009, 01:50 PM
இறந்தவர் அனைவரும் இருந்திருந்தால் இன்று நமக்கு இடமேது! (எந்த பட பாடல் வரிகள் என்று ஞாபகம் இல்லை)... இவ்வரிகள் உங்கள் கேள்விக்கு விடையளிக்குமே ஆதி... அருமையான வரிகளின் வெளிப்பாடு... பாராட்டுக்கள் !

இளசு
15-12-2009, 06:09 PM
அன்பு ஆதன்

கீதத்தின் பார்வையே என் பார்வையாகவும்..

பல அடுக்குகளில் இக்கவிதையின் வேர்கள் என்றதால்
ஆழ அடுக்குகளை நீ விளக்கி நான் அறிய ஆவல்..

பாராட்டுகள்.

குணமதி
16-12-2009, 03:54 AM
நிச்சயமாய் வீளக்குகிறேன், அதற்கு முன் நீங்கள் எப்படி இந்த வரிகளை புரிந்து கொண்டீர்கள் என்று சொல்லுங்கள்.. ;)

விரிகிற விடியல் அத்தனையிலும்
திறக்கப்படுகிறது
ஒரு புது வெளி
எதையோ பெற..
எதையோ தர..

நான் புரிந்து கொண்டது இந்த ஐந்து வரிகளைத்தான்!
இது பொதுவான கருத்து வெளிப்பாடாகவே உள்ளது.

இதில் புரிந்துகொள்ள இயலாதது ஏதும் இல்லை அல்லவா?

அடுத்து எழுதியுள்ள வரிகள்...
எல்லாருக்கும் புரியும் பொதுக் கருத்தையன்றி வேறு செய்திகளை உள்ளடக்கியதாக உள்ளன என்று கருதித்தான் கேட்டேன்!

தனிப்பட்ட வாழ்க்கைத் தாக்க வெளிப்பாடாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன். விளக்க விரும்பினால் கூறலாம், இல்லையேல் வேண்டா.

அன்பார்ந்த நன்றி.

ஆதி
16-12-2009, 07:00 AM
இறந்தவர் அனைவரும் இருந்திருந்தால் இன்று நமக்கு இடமேது! (எந்த பட பாடல் வரிகள் என்று ஞாபகம் இல்லை)... இவ்வரிகள் உங்கள் கேள்விக்கு விடையளிக்குமே ஆதி... அருமையான வரிகளின் வெளிப்பாடு... பாராட்டுக்கள் !

நன்றி ராஜேஷ்.. இந்த பாட்டு பாலும் பழமும் படத்தில் இடம் பெற்ற போனால் போகட்டும் போடா, என் பேராசான் கண்ணதாசனால் எழுதப்பட்டது..

நீங்கள் சொன்ன வரி இப்படி வரும்..

வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது ?

இதை என் கவிதையின் முதல் ஐந்து வரி சொல்லிவிடும்.. அதவாது எனக்கு இது புரியாமல் இல்லை..

என்றாலும்...........


என்றாலும் என்கிற இந்த வார்த்தையை நாம் எங்கெல்லாம் பயன்படுத்துவோம் என்று யோசித்துப்பாருங்கள்..


"நீங்க சொல்ற புரியுது, என்றாலும் ஏத்துக்க முடியல"

இந்த என்றாலும் என்கிற வார்த்தையின் பின்னால் ஒளிந்திருப்பது ஆயிரம் ஆயிரம் ஏக்கங்கள், அர்த்தங்கள், ஆற்றாமைகள், சோகங்கள், வேதனைகள், கேள்விகள், இன்னும் இத்யாதி இத்யாதி..

என்றாலும்.. என்று ஒருமுறைச் சொல்லிப்பாருங்கள் அதற்குள் ஒரு இனமறியாத உணர்வு அமர்ந்திருப்பதை உணர்வீர்கள்..

இந்த என்றாலும் எனும் கேள்வியில் இருந்து தான் ஒரு ஞான வேள்விக்கான தீப்பொறி உகுகிறது.. ஞானம் அடைந்தவர்கள் கூட என்றாலும் என்று ஏங்காமல் இல்லை என்பதை தன் அன்னை இறந்த போது பாடிய பட்டினத்தாரின் பாடல்களில் காணமுடியும்..


நீங்கள் சொன்ன வரி.. தத்துவம்.. அதாவது வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும் அதை வாழ்ந்து பழகி கொள் என்று சொல்லுவது..

என் கவிதை சொல்ல முயல்வது இந்தத்துவத்தை புரிந்து கொண்டேன்,ஆனால் நான் இதனை புரிந்து கொண்டு வாழ்வதுதான் சரியான வாழ்க்கையா, நாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறோமா, நாம் சரியாகத்தான் புரிந்து கொந்திருக்கிறோமா என்று எனக்குள் நானே எழுப்பிக் கொள்ளும் கேள்வி.. இதுதான் ஆன்மீகத் தேடலுக்கான முதல் விதை..


நம் வாழ்க்கிற வாழ்வின் தத்துவமானது, பூக்கிற மலரெல்லாம் உதிரத்தான் செய்யும், உலர்ந்த மலருக்காக வருத்தப்படாதே, அடுத்த மலரை தேடிப்பற என்பது..

கவிதையின் முதல் தளம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது..

ஒரு இறப்பை தாள முடியாமல் அழுவதாய்.. ஆனால் அந்த இறப்பு நிகழ்ந்ததோ எட்டு வருடத்திற்கு முன், ஆதாவது காலந்தின் விரல்கள் பட்ட ரணத்தில் மருந்திட்டு ஆற்றி அதன் வடு கூட இல்லாமல் செய்துவிடுகிற அளவுக்கு கால அவகாசம் கொண்ட காலத்துக்கு முன், ஆனால் அவரின் மீதூற்ற அன்பு இன்னும் அழியாமல், எந்த மருந்திலும் கரையாமல் இருப்பதை சொல்கிறது, இந்த அன்பானது, மெய்யியல் தளத்துக்கு நம்மை இட்டு செல்கிறது, இங்குதான் வந்தவர் எல்லாம் போய்தான் ஆகனுமா ? என்னும் கேள்வி பிறக்கிறது, இந்த கேள்விக்கான பதில் இரு விதமாக கிடைக்கும் ஒன்று இதுதான் வாழ்க்கை என்ற தத்துவம், மற்றொன்று இறப்புக்கு பின்புலத்தில் இருக்கிற ரகசியத்தை அறிய முயலும் தேடலின் ஆரம்ப ஞானம்..

கவிதையின் தலைப்பை "?" கேள்வி குறியாக போட்டதும் அதனால்தான், எது மாறினாலும் "?"களும் அதற்குண்டான தேடலும் மட்டும் மாறுவதில்லை..

சிவா.ஜி
16-12-2009, 07:14 AM
உண்மைதான் ஆதி.......இந்த ? யில்லாத வாழ்க்கை ஏது? நீங்கள் சொன்ன அந்த ‘என்றாலும்' நிஜமாகவே பல உணர்வுகளை தனக்குள் அடக்கி வைத்திருக்கும் சொல்தான்.

தினம் விடிவதைப் போலத்தான் அந்த கறுப்பு விடியலும் விடிந்தது, ஆனால் எதையும் தராமல் ஒரு உயிரை பறித்துக்கொண்டது.

ஆனால்.....எதையும் தராமல் ஒரு விடியலால் இருக்கவே முடியாது அல்லவா...ஒரு இறப்பை பார்க்கவைத்த அந்த விடியல்தான் ஒரு தேடலை கவி நாயகனுக்குள் விதைத்துவிட்டுப் போயிருக்கிறது.

எட்டு வருடங்கள் உள்ளுக்குள் ஊறிய அந்த விதை இப்போதுதான் விழித்திருக்கிறது. இதுவும் நல்லதே.

நல்ல வரிகள், நல்ல கவிதை. அனுபவித்து வாசிக்க இயல்கிறது. வாழ்த்துகள் ஆதி.

rajarajacholan
17-12-2009, 06:09 AM
முன்னை இட்ட தீ முப்புறத்திலே - பின்னை இட்ட தீ தென்னிலங்கையிலே - பெண்ணும் இட்ட தீ என்னுயிரினிலே - இன்னும் மூளுதே என்னை தின்னுதே

இது யார் எழுதியது. ரொம்ப நல்லா இருக்கு

ஆதி
17-12-2009, 06:51 AM
அன்பு ஆதன்

கீதத்தின் பார்வையே என் பார்வையாகவும்..

பல அடுக்குகளில் இக்கவிதையின் வேர்கள் என்றதால்
ஆழ அடுக்குகளை நீ விளக்கி நான் அறிய ஆவல்..

பாராட்டுகள்.

அண்ணா கொஞ்சம் விளக்கிருக்கேன்.. பிழை இருப்பின் கூறுங்கள் அண்ணா..

பாராட்டுக்கும் பின்னூட்டத்திர்க்கும் நன்றிகள் அண்ணா..

**************************

குணமதி தங்களுக்கும் நான் சொல்ல முயன்றது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்..

குணமதி
17-12-2009, 07:19 AM
புரிகிறது.

நன்றி.

ஆதி
17-12-2009, 10:37 AM
உண்மைதான் ஆதி.......இந்த ? யில்லாத வாழ்க்கை ஏது? நீங்கள் சொன்ன அந்த ‘என்றாலும்' நிஜமாகவே பல உணர்வுகளை தனக்குள் அடக்கி வைத்திருக்கும் சொல்தான்.

தினம் விடிவதைப் போலத்தான் அந்த கறுப்பு விடியலும் விடிந்தது, ஆனால் எதையும் தராமல் ஒரு உயிரை பறித்துக்கொண்டது.

ஆனால்.....எதையும் தராமல் ஒரு விடியலால் இருக்கவே முடியாது அல்லவா...ஒரு இறப்பை பார்க்கவைத்த அந்த விடியல்தான் ஒரு தேடலை கவி நாயகனுக்குள் விதைத்துவிட்டுப் போயிருக்கிறது.

எட்டு வருடங்கள் உள்ளுக்குள் ஊறிய அந்த விதை இப்போதுதான் விழித்திருக்கிறது. இதுவும் நல்லதே.

நல்ல வரிகள், நல்ல கவிதை. அனுபவித்து வாசிக்க இயல்கிறது. வாழ்த்துகள் ஆதி.

ரொம்ப நாளைக்கப்புரம் உங்கப் பின்னூட்டம் கிடைத்ததில் மிக மகிழ்ச்சி அண்ணா..

கவியரசர் சொல்லுவார் அல்லவா..

நம்மை நாமே கேட்கும் கேள்விகளும், நம் முன் விரிந்து கிடைக்கும் கேள்விகளும் தான் நம்மை அடுத்த அடுக்குக்கு அழைத்து செல்லும்..

பின்னூட்டத்திக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் அண்ணா...

ஆதி
17-12-2009, 12:07 PM
முன்னை இட்ட தீ முப்புறத்திலே - பின்னை இட்ட தீ தென்னிலங்கையிலே - பெண்ணும் இட்ட தீ என்னுயிரினிலே - இன்னும் மூளுதே என்னை தின்னுதே

இது யார் எழுதியது. ரொம்ப நல்லா இருக்கு

இந்த கவிதை இரண்டு பேர் எழுதினது..

முதல் பாதி பட்டினத்தார், மீதி பாதி நானு.. :)

நன்றி..

rajarajacholan
17-12-2009, 12:24 PM
நன்றி