PDA

View Full Version : வியப்பு!

குணமதி
15-12-2009, 02:58 AM
வியப்பு!

பெரும் வியப்பு!

கல்லாரையும் கற்றாரையும்...

செல்வரையும் வறியரையும்...

மாபெரு வலிவுடன் -

பிரித்து வைத்திருக்கிறதே...

தன்னியக்க உணர்வாக -

ஒன்ற விடாமல் -

கற்பனைக்கு எட்டாத

ஒரு மாயக் கட்டுதலில்...

கரவுருவான...

சாதி.

(பொதுவான உலகியல் நோக்கில் எழுதப்பட்டது; யாரையும் குறித்து எழுதவில்லை; பொது உணர்வாளர் புரிந்து கொள்வர் என்று நம்புகின்றேன்.)

கா.ரமேஷ்
15-12-2009, 05:41 AM
அருமையான கவிதை...

உண்மையைத்தான் எழுதியிருக்கிறீர்கள்.... ஜாதி எனும் வன்மம் படிந்த படித்த மனிதர்களும் அதிகம் இருப்பதும் அது விளையாடாத இடங்களே இல்லை என்பது உண்மைதான்...

வாழ்த்துக்கள்..

குணமதி
15-12-2009, 11:12 AM
அருமையான கவிதை...

உண்மையைத்தான் எழுதியிருக்கிறீர்கள்.... ஜாதி எனும் வன்மம் படிந்த படித்த மனிதர்களும் அதிகம் இருப்பதும் அது விளையாடாத இடங்களே இல்லை என்பது உண்மைதான்...

வாழ்த்துக்கள்..

மிக்க நன்றி.

செல்வா
18-12-2009, 05:07 PM
கல்லாயினும்
முள்ளாயினும்
மலராயினும்
மரமாயினும்
பள்ளியாயினும்
கோயிலாயினும்
எங்கும் படியும் தூசு போல்
எல்லா மனங்களிலும் படிந்து கிடக்கும் மாசு சாதி
துடைக்க இது போன்ற இன்னும் பல்லாயிரக் கை(கவி)கள் அவசியம் தான்.

வாழ்த்துக்கள்.

குணமதி
19-12-2009, 11:35 AM

நான் எழுதினேன்.

நீங்களும் எழுதினீர்கள்.

உண்மையை எழுதினோம்.

எல்லா மனங்களிலும் படிந்து கிடக்கும் மாசு சாதி

இதைப் படிக்கையில் வலிக்கிறது.

நன்றி நண்பரே.

அமரன்
20-12-2009, 09:02 AM
சாதி பேதம் இல்லாத உலகில் வாழ்ந்த சில நாட்களின் நிம்மதி நினைவுகளில் நிமிடத்தில் நிழலாட வைத்த கவிதை!

பாராட்டுகள் படைத்தவருக்கும் ஊட்டியவர்களுக்கும்.

குணமதி
21-12-2009, 02:15 AM
சாதி பேதம் இல்லாத உலகில் வாழ்ந்த சில நாட்களின் நிம்மதி நினைவுகளில் நிமிடத்தில் நிழலாட வைத்த கவிதை!

பாராட்டுகள் படைத்தவருக்கும் ஊட்டியவர்களுக்கும்.

நன்றி அமரன்.