PDA

View Full Version : கணிபொறி பொறியாளன் மறுபக்கம் ..



muthuvel
13-12-2009, 10:48 AM
நுனி நாக்கு ஆங்கிலமும் , கஞ்சி போட்ட சட்டையும் ,
மூடிய பாத அணிகளும் ,
மாருதியில் பயணமும் ,
மிடுக்கான தோற்றமும் ,
கம்பிரமான நடையும் ,
மீசை அரும்பாத வயதில் ,
பிறர் வாய் பிளக்கும் ஊதியமும் ,
வ்யர்வை சிந்தாத வேலையும் ,
பெண் கொடுக்க பந்தய போட்டியும் ,
நட்சத்திர ஹோட்டேல் லில் நடனமும் ,,
சக தோழியை மணந்து விவாகரத்து பெற்ற தோழனும், .........
ஆடம்பரத்தின் மறு பெயர் என்றும் .........வசை பாடியோர் பலர்

சமுதாயம் அறிந்தது எங்களை இப்படி என்று ............

எங்களின் மறுபக்கம் பாருங்கள் .......



தமிழ் மொழி தெரிந்து ,பால் பௌடரை குட விற்கமுடியாது பக்கத்து மாநிலத்தில் ,
ஆங்கிலேயனின் PROGRAMMAI விற்பது எப்படி ?

அகத்தின் அழகு முகத்தில் அல்ல ,
ஆங்கிலேயன் காண்பது எங்கள் உடுபிளும்தான் .....



வ்யர்வை சிந்தாத வேலை ,
ஆம்,
ஆனால் ,
எங்களையும் , கண்களையும் ,
மூளையை கசக்கி பிழியும் வேலை,
மறந்து விடாதீர் ,
நிதமும் ஆந்தை யை எளுபவது நாங்கள் தான் .......


நாங்கள் திருப்பி பார்க்க நேரம் இல்லை,
மனைவியை யோசிக்க நேரமில்லை,
மகனை சிந்திக்க நேரமில்லை,
பெத்தவர்களுடன் இருக்க நேரம் இல்லை ....

ஆனால், நாட்டில் ,
காவல் நிலையத்தில் கற்பழிப்பு ,
பள்ளியில் பாலியல் கொடுமை ,



வாய் பிளக்கும் ஊதியந்தான் ,
ஆம்,
மறந்து விடாதீர் ,
சினிமா நடிகனை விட ,
அரசியல் வாதியை விட ,
அரசாங்க பணியில் உள்ளவனை விட,
உலகில் அதிகம் உளைபவன் ,ஏர் பிடிக்கும் விவசாயீ , , அவன் பெரும் தினக்கூலி -நூறு ரூபாய் ...

எங்கள் ஊதியம் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் அல்ல,
வியாபாரதிர்கேட்ற ஊதியம் ,
மூளைக்கு ஏற்ற ஊதியம் ,
திறமைக்கு ஏற்ற ஊதியம் ,
நாட்டில் அதிகமாக வரி செலுத்தும் ஊதியம் .........

அரிசியில் கல்லை ஒதிகினால்,
வயலில் களையை ஒதிகினால்,
நன்றாக வாழ்பவர்களுக்கு இடையே , விவாகரத்து பெற்றோரை ஒதிகினால் ....
யோசித்து பாருங்கள் .எங்கள் வாழ்வை, சொர்கம்தான் ............ .......


மறந்துவிடாதீர்,
எங்களின் வரிபணம் தான் கிராமங்களில் கை பேசி ,
எங்களின் வரவுதான் நகத்தில் விண்ணை தொடும் கட்டடங்கள் .......
இன்று , எள்ளி நகையாடுகின்றனர் எங்களை கண்டு ,
நம்பிக்கை உண்டு எங்களுக்கு ,வாழ்கை ஒரு சக்கரம் என்று ..........