PDA

View Full Version : வெளி நாட்டில் வேலை இழந்து நாடு திரும்புவோருகாக



muthuvel
13-12-2009, 08:17 AM
திறமை இருந்தும் , திறவுகோல் தெரியாதோர் பல பேர்,

வழி தெரிந்தும் , வாய் ப்பு கீடைகாதோர் பல பேர்,

சிறகுகள் இருந்தும் , பறக்க முடியாதோர் பல பேர்,

உதவ கைகள் இருந்தும் , தன கையை நீட்ட முடியாதோர் பல பேர்,


எண்ணம் இருந்தும் , எழுத முடியாதோர் பல பேர்

உளி இருந்தும் , கல் கீடைகாதோர் பல பேர்,

பகட்டு வாழ்க்கைக்கு பணம் கொடுத்து ஏமாந்தோர் பல பேர்

இப்பொழுது இதுவரை உன்னை யோசி !





இன்றைய பதற்றம் ,கடந்த ஆண்டு நடந்திருந்தால் ..........

இன்றைய நிலை ,கடந்த ஆண்டு நடந்திருந்தால் ...........

இன்றைய சோகம் , கடந்த ஆண்டு நடந்திருந்தால் ...........

இன்றைய வெளியேற்றம் ,கடந்த ஆண்டு நடந்திருந்தால் ........

.கிடைத்த வரை நன்றி ,

கிடைக்கும் வரை சிந்தி ,

வாய்ப்பு கொடுதொருகு நன்றி,

கடந்து வந்த பாதையை மறக்காமல் இருப்பதற்கு நன்றி.........




மூடிய கதவு திறக்கத்தான் ,........
விழுவது எழத்தான் ........

வருத்தப்பட ஒன்றும் இல்லை ...........

rajesh2008
13-12-2009, 08:43 AM
மனதுக்கு ஆறுதல் தருகிற வார்த்தைகள்.குத்திக் காயப்படுத்தும் நகங்களுக்கு நடுவே காயங்களுக்கு ஒத்தடமா சில தடவல்கள். மனம் விரும்பிச் சிலிர்க்கிறது. நன்றி நண்பரே

அமரன்
13-12-2009, 09:24 AM
அறுகம்புல் சாறு.

நன்று!